http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சுடுமூஞ்சி

     "சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே!" - கணக்கப்பிள்ளை.

     "சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது" - மாலை விற்பவன்.

     "ஒருநாள் கூடத் தவறமாட்டார், பெரிய பக்திமானல்லவோ அவர். மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்து விடுவார்" - குருக்கள்.

     "நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது" - வேதம்.

     "மணி ஆறா? சரிதான், இப்பதான் பைத்தியம், கோயிலுக்குக் கிளம்பி இருக்கும்" - இராமி.

*****

     சனியன், உருத்திராட்சப் பூனை, பக்திமான், கிழக்குரங்கு, பைத்தியம்! இந்தப் "பஞ்சாட்சர" அர்ச்சனை, ஒரே நேரத்தில் ஒரே ஆசாமிக்கு, ஐந்து வேறு வேறு ஆசாமிகள் மூலம் நடந்தது. இன்னமும் எங்கெங்கு அவரைப்பற்றி என்னென்ன விதமான அர்ச்சனை நடந்தது என்று விசாரித்தால் சஹஸ்ர நாமத்துக்குப் போகும். அவர் பெயர் ஆறுமுக முதலியார்.

     இந்த அர்ச்சனையைப் பெற்றுக் கொண்டு, ஆறுமுக முதலியார், சும்மா இருந்தாரா? இருப்பாரா? அவர் கையில் என்னமோ, கணக்குப் புத்தகந்தான் இருந்தது. மனம்?

     "சனியன் இன்னும் போய்த்தொலையவில்லையே" என்று மௌன பூஜை செய்துகொண்டிருந்த கணக்கெழுதுபவனை, ஆறுமுக முதலியார், "ஏண்டா தின்னுகூலி", என்று திட்டினார். "அந்த சோம்பேறி இன்னும் மாலையைக் கட்டினானோ இல்லையோ" என்று, அதே நேரத்தில் எந்த மாலை விற்பவன் தன் தாயாரிடம் முதலியாரை "உருத்திராட்ச பூனை" என்று அர்ச்சித்துக் கொண்டிருந்தானோ, அந்த மாலை விற்பவனைப் பற்றிச் சொன்னார்; ஒரு வினாடி ஓய்வெடுத்துக் கொண்டார். "போய் ஆகணும், போகலைன்னா விடப்போறானா அந்தப் பணம்பிடுங்கி" என்று முணுமுணுத்தார். கோயிலிலே அதே நேரத்தில்தான் குருக்கள் வேறோர் 'பக்தரிடம்', முதலியாரை "பெரிய பக்திமான்" என்று அர்ச்சித்தது. அழகான 'பதத்தை' ஆனந்தமாகப் பாடிக் காட்டிய 'வித்வானை' விட்டுப் பிரிய மனமில்லாத வேதம், முதலியார் வருகிற வேளையாகிறது என்று கூறின நேரமும் அதுதான். அவள் தந்த அர்ச்சனை, அந்தக் "கிழக்குரங்கு" என்பது. அவளுக்கு முதலியார் அர்ச்சனை செய்யாமல் விட்டாரா? நாலைந்து பத்து ரூபாய் நோட்டுக்களை மணிபர்சில் எடுத்துத் திணித்துக்கொண்டே, 'மானசீக பூஜை' செய்தார். "இன்று தராவிட்டா, அந்த அல்லி தர்பார் பெரிசா இருக்கும்" என்று. "பைத்தியம்" கோயிலுக்குப் போகிற நேரமாகுது என்று, முதலியாரின் இரண்டாந்தாரம் இராமி சொல்லிக்கொண்டிருந்தது போலவே, முதலியாரும் மனதுக்குள் தன் மனைவியைப்பற்றி, "அந்தச் 'சுடுமூஞ்சி' கஷாயம் போட்டு வைக்குதோ, இல்லைனா சினிமாவுக்குக் கிளம்பிவிட்டதோ?" என்று சொல்லிக் கொண்டார். இவ்வளவு அர்ச்சனைகளும், அன்று மாலை 6 மணிக்கு நடந்தேறிய பிறகு, "தின்னுக்கூலி"யைக் கடையைப் பூட்டிக்கொண்டு போகச்சொல்லிவிட்டுச் "சோம்பேறி" கட்டிவைத்திருந்த மாலையை வாங்கிக் கொண்டு, "பணம் பிடுங்கி" நின்று கொண்டிருந்த கோயிலுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் முடித்துக்கொண்டு, "அல்லி"க்குச் செலுத்த வேண்டிய காணிக்கையைக் கொடுத்துவிட்டு, அவள் அடிவயிறு வலி என்று அலறியது கேட்டு, அதற்கு வைத்ய முறை கூறிவிட்டு, வீட்டுக்குள் புகுந்து "சுடுமூஞ்சி" தந்த கஷாயத்தைக் குடித்துவிட்டு, "அப்பனே! முருகா" என்று கொட்டாவி கலந்த குரலால் பஜித்துக்கொண்டே படுக்கையில் புரண்டுக்கொண்டிருந்தார், அரிசி மண்டி ஆறுமுக முதலியார்.

     ஒவ்வொரு நாளும் அவர் கடையில், 'அரிசி' வாங்கிக் கொண்டு போகிறவர்கள் தரும் 'அர்ச்சனை'யையும், அவர்களுக்கு இவர் தரும் 'அர்ச்சனை'யையும், தொகுத்துக் கூறினால், அகராதி ஆகிவிடும்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/annadurai/story/sudumoonchi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs