http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



தீர்ப்பளியுங்கள்

     என் நண்பர், மாஜிஸ்ட்ரேட் மருதவாணம் பிள்ளை, கோர்ட்டிலே மட்டுந்தான் கோபமாகக் காணப்படுவார். அதைக்கூட அவர் கோபமென்று ஒப்புக்கொள்வதில்லை. நீதியின் உருவம்! - என்று கூறுவார். "என்னமோ மருது! நீதி இப்படி மிரட்டும் உருவிலே இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை" என்று நான் கூறுவதுண்டு - கோர்ட்டு நேரத்தில் அல்ல.

     அன்று மாலை, மருதவாணம் பிள்ளை, என்னைக் கண்டதும் "வா, வா! உன்னைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். நாளைக்கு ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்க வேண்டும். உன்னிடம் அதைக் கூறி, உன் தீர்ப்பு என்ன என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.

     "இதுதானா எனக்கு வேலை! உனக்குத்தான் சர்க்காரிலே சம்பளம் தருகிறார்கள். சட்டத்தைப் படித்துச் சம்பவங்களை அலசி, துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்ய. எனக்கேன் அந்த வேலை?" என்று நான் கேலியாகக் கூறினேன்.

     "உனக்கே மாஜிஸ்ட்ரேட் வேலை கிடைத்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளேன்" என்றார் மருதவாணம். மாலை வேளையிலே அவருக்கு இயல்பாகவே மலரும் மகிழ்ச்சியுடன்.

     "எனக்கு அந்த வேலை கிடைத்தால் தானே!" என்று நான் கொஞ்சம் கம்பீரமாகக் கூறினேன். மருதவாணர் மாஜிஸ்ட்ரேட் குரலிலே ஆரம்பித்தார்.

     "பெயர் மகாலிங்கம்; வயது முப்பது. தொழில் நிலையாக ஒன்றுமில்லை; குற்றச்சாட்டு, பித்தளைச் சங்கிலியைத் தங்கச் சங்கிலி என்று ஏமாற்றி விற்றான் - இதுதான் வழக்கு, இதிலே தீர்ப்புக் கூற வேண்டும்."

     "சரி! மகாலிங்கத்தின் வாக்குமூலம் என்ன?" என்று கேட்டேன், ஒரு அதிகாரி போலவே.

     "அதிலே சிக்கல் ஒன்றும் இல்லை. அவன் ஒப்புக் கொள்ளுகிறான்" என்றார் மருதவாணம்.

     "இவ்வளவுதானா? இதிலே யோசனைக்கு என்ன இடமிருக்கிறது? குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறான். உடனே சட்டப் புத்தகத்திலே, அந்தக் குற்றத்திற்காகச் செக்ஷன் என்ன, அதற்கான தண்டனை என்ன என்று பார்க்க வேண்டியது தானே. இதற்கு என்னைப் பரீட்சிக்க என்ன இருக்கிறது?" என்று நான் கூறினேன்.

     "தங்கச் சங்கிலி என்று முலாம் பூசியதை விற்றிருக்கிறான்; ஒப்புக்கொண்டுமிருக்கிறான். சாட்சியங்களும், அதே போல அப்பழுக்கு இல்லை என்றாலும் இது சிக்கலான பிரச்சனை" என்றார் மருதவாணர்.

     "வேடிக்கையாகவன்றோ நீர் பேசுகிறீர்" என்று நான் கொஞ்சம் மரியாதையாகவே சொன்னேன், நண்பரின் முகத்திலே, கோர்ட்டுக்களை தட்டுவது கண்டு. கொஞ்ச நேரம் மௌனமாகவே இருந்தார் மருதவாணர். கவலையுடன் காணப்பட்டார். எனக்கு ஏதாவது பேசி வைப்போம் என்ற எண்ணம் உண்டாயிற்று.

     "மகாலிங்கம் என்ற ஆள் தெரிந்தவனா!" என்றேன் நான். உடனே மருதவாணரின் உடல் குலுங்கிற்று. முள் தைத்தவர் அலறுவது போன்ற குரலிலே, "தெரிந்தவனானால் என்ன, தெரியாவிட்டால் என்ன? நீதியின் கண்களுக்குச் சிநேகிதன், பந்து, இவைகள் உண்டா? பைத்தியக்காரா! எனக்கு எப்போதும் அம்மாதிரி எண்ணம் வருவதே கிடையாது. யாருக்கும் வரக்கூடாது. நீதியின் சக்கரம் சாமான்யமானதல்ல" என்று கூறினார். இதேது, இன்று இரவு நெடு நேரம் வரையிலே இவருடைய உபதேசத்தைக் கேட்கவேண்டும் போலிருக்கிறதே" என்று நான் சற்று பயந்தேன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/annadurai/story/theerppaliyungal.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs