http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
   
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி? (விலை ரூ.50) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - உலக சினிமா - ஓர் பார்வை (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - ஊசியும் நூலும் (விலை ரூ.40) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (விலை ரூ.40) - பிரபலங்கள் சொன்ன குட்டிக் கதைகள் - 1 (விலை ரூ.35) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - மகளிருக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - இனிப்பு நோயின் கசப்பு முகம் (விலை ரூ.50) - பரவசப்படுத்தும் பரிகாரத் திருத்தலங்கள் (விலை ரூ.50) - பூவும் பிஞ்சும் (விலை ரூ.60) - சீனாவில் இன்ப உலா (விலை ரூ.60) - பொது அறிவுத் துளிகள் (விலை ரூ.30) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40) - திருநீலகண்டர் (2), இயற்பகையார் (3), இளையான்குடி மாறன் (4) (விலை ரூ.10) - ஏனாதிநாதர் (9), கண்ணப்பர் (10), குங்கிலியக்கலயர் (11) (விலை ரூ.10) - கதம்ப மலர்கள் (விலை ரூ.50) - மௌன வெளி (விலை ரூ.40) - சிந்தைகளின் சிதறல் (விலை ரூ.35) - சரணாகதி (விலை ரூ.125) - நந்தவனம் (விலை ரூ.70) - வழி விடுங்கள் (விலை ரூ.40) - தேவதை உலா (விலை ரூ.40) - வேணு கானம் (விலை ரூ.40) - கரையான் அரித்த கடிதங்கள் (விலை ரூ.60) - திருநாவுக்கரசர் (அப்பர்), சிறுத்தொண்டர் (விலை ரூ.10) - கடவுளின் வாசி இரகசியம் (விலை ரூ.20) - சங்கமம் (விலை ரூ.30)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.

உறுப்பினராக சேர விரும்புவோர், கட்டணத்தொகை ரூ.100 மட்டும் எமது ஏதாவதொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு, கட்டணம் அனுப்பிய விவரம், உங்கள் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை எமக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

தொடர்புக்கு: பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com

உறுப்பினர் பட்டியல்  -   உறுப்பினர் சலுகைகள்



வெள்ளை மாளிகையில் - 9

சதிக்குள் சதி - 3

     தன்னலத்தின் பல வடிவங்கள்

     பெருமைக்கு உரிய நன்மகன்

     புகழுரையில் பாதி பொய்யுரை

     இனம் வெள்ளை - உள்ளம் தூயது

     விந்தையான மாறுதல்

     'மனிதன்' என்ற தலைப்பிட்டு இந்த ஏடு எழுதப்பட்டிருப்பதன் நோக்கம் மனிதத் தன்மை இன, மத, குலப்பற்று வெறியாகிடும்போதும், சுகபோகத்தில் நாட்டம், சுயநலத்தில் விருப்பம் எழும்போதும், மாய்க்கப்பட்டுவிடுகிறது; அத்தகைய நிலையிலும் வீழாமல், நிமிர்ந்து நின்று, நேர்மையுடன் யார் நடந்து கொள்கிறார்களோ, 'இதயசுத்தி'யுடன் நடந்து கொள்கிறார்களோ, அவர்களையே 'மனிதன்' என்ற பட்டியலில் சேர்க்க முடியும்; 'மனிதன்' என்ற தகுதியை அவர்களே பெறுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் தூய நோக்கமே காரணமாக அமைந்திருக்கிறது. இந்த ஏட்டின் தனிச் சிறப்புக்கு இதுவே காரணமாகவும் அமைகிறது.

     தன்னலம் தலை காட்டவே செய்யாது என்று கூறிவிடுவதோ, என்னிடம் தன்னல உணர்ச்சி வெற்றி கொள்ளவே செய்யாது என்று இறுமாந்து கூறிவிடுவதோ பொருளற்றதாகும்.

     தன்னலம் என்பதற்கே வடிவங்கள் பலப்பல.

     தன்னலத்தை ஊட்டிடும் நிலைகளும் பலப்பல.

     தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முறைகளும் பலப்பல.

     தன்னலத்தைத் துளியும் கருதாதவன் என்றோ, தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ ஒருவரைப் பற்றிக் கூறி, பெருமைப்படுத்துவதைக் காட்டிலும், உண்மையான பெருமை, தன்னலத்தை வென்றவன், தன்னல உணர்ச்சியால் தாக்கப்பட்டும் தாழ்ந்துவிட மறுத்தவன், தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு வெற்றி கண்டவன் என்பதிலேதான் இருக்கிறது.

     தன் வாழ்க்கை, அதிலே குளிர்ச்சி; தன் குடும்பம், அதிலே ஏற்றம்; தன் நிலை, அதிலே பெருமிதம் பெற்றிட வேண்டும் என்ற உணர்ச்சி, கெட்டவர்களுக்கு மட்டுமே தோன்றிடக் கூடியது என்று கூறிவிடுவதும் முற்றிலும் உண்மையாகிவிடாது. இயற்கையாகவே அனைவருக்கும் எழக்கூடிய உணர்ச்சியே அது.

     அவ்விதமான உணர்ச்சியே இல்லை, கற்சிலை போன்ற உறுதி இவருக்கு என்று பெருமைப்படுத்தக் கூறிடலாம்; அது கேட்டுச் சிலர் பெருமகிழ்ச்சியும் கொண்டிடலாம். ஆனால் உண்மையான பெருமை, தன்னல உணர்ச்சி எழவே எழாது என்ற நிலையில் இல்லை; தன்னல உணர்ச்சி எழுகிறது; எதைச் செய்தாகிலும், எவரைக் கெடுத்தாகிலும், நேர்மையை மறந்தாகிலும் தன்னலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று கருதிவிடாமல், தன்னல உணர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், பொது நன்மைக்காக விட்டுக் கொடுக்கவும், நீதியாக நடப்பதன் மூலம் தன்னலம் பெற்றிட முடியாது என்ற நிலை ஏற்படின் நீதி பெரிது, தன்னலம் அல்ல என்ற உறுதி கொள்வதும், அதன்படி ஒழுகி இன்னலை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதுமாகிய நிலைமை இருக்கிறதே, அதிலே தான் உண்மையான, நிலையான பெருமை இருக்க முடியும்.

     அதிலும், அடிப்படைத் தேவைகளைப் பெறும் முயற்சியிலேயே அநீதிக்கு அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறபோது, யார் அடிப்படைத் தேவைகளையும் கூட இழந்திடுவேன், இன்னலை ஏற்பேன், வாழ்வதற்காக நீதியை இழந்திட மாட்டேன் என்று கூறுகிறானோ, கூறியபடி செயல் படுகிறானோ, அவனே எல்லாப் பெருமைக்கும் உரியவனாகிறான்.

     தம்பி! நமது செவிகளிலே விழுகிறதல்லவா, பெரிய இடத்தைப் பிடித்துக்கொண்டவர்களைப் பற்றிய புகழுரை; அவற்றிலே மிகப்பெரும் அளவு வெற்றுரையே; அல்லது பலன்பெற விழைந்து செய்யப்படும் அர்ச்சனையேயாகும்.

     அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா! தன்னலம் துளியும் அற்றவர்! தன் குடும்பம், தன் குழந்தைகள் இதைப் பெறவேண்டும் அதைப் பெறவேண்டும் என்று அலைபவர் அல்ல, குடும்பம் அல்ல அவருடைய கண்முன் தெரிவது; நாடு, மக்கள்; அத்தகைய தியாகி அவர் என்று ஒருவரைப் பற்றிப் புகழ் சொரிவது எப்போது பொருளுள்ள பேச்சாக முடியும்? அவருக்குக் குடும்பம் இருந்து, அதனைக் காத்திடவும், ஏற்றம் பெறச் செய்திடவும் அவர் தமது முழுநேரத்தையும் நினைப்பையும், ஆற்றலையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டிருந்துவிடும் போக்கிலே செல்லாமல், தன் குடும்பம் நாட்டு மக்கள் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற அளவிலே கருதி, பொதுநலனைப் புறக்கணிக்காமல் தமது பணியினை நாடாத்திச் செல்லும்போது; குடும்பத்துடன் இயற்கையாக ஏற்படும் பாசத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு விடாமல், சமுதாயத்தை மனதிலே கொண்டு பணியாற்றும்போது; தன் குடும்ப நலனை மட்டுமே கவனித்துக் கொண்டு பிறர் நலனைப் பேணிடத் தவறாமல், பொது நலனுக்காக உழைத்திடும் போது. அவ்விதமின்றி, குழந்தை குட்டிகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போக்கு கொண்டவரல்ல அவர்; எப்போதும் பொதுத் தொண்டிலே நாட்டம் காட்டுபவர் என்று ஒருவரைக் குறித்துப் புகழ்ந்துவிட்டு அவருக்கு எத்தனைக் குழந்தைகள்? என்று கேட்கும் போது, அவருக்குத் திருமணமே ஆகவில்லையே! என்று பதிலளித்தால், தியாகி என்றும், தன்னலம் மறுத்தவர் என்றும் புகழ்ந்து பேசியது என்ன பொருளைத் தரும்?

     அவர் தன் குழந்தைகளைக் கவனிப்பதிலே காலத்தைத் தள்ளிவிடவில்லை! ஏனென்றால், அவருக்குக் குழந்தைகளே இல்லை!! ஏனென்றால் அவருக்குத் திருமணமே ஆகவில்லை!!

     இந்த நிலையிலே அவரைப் புகழ்ந்து பேசுவதிலே பொருளோ பொருத்தமோ எப்படி இருக்கமுடியும்!

     அவருடன் நீச்சல் போட்டியிலே எவனும் வெற்றி காண முடியாது; ஆனால் அவருக்கு நீச்சலே தெரியாது.

     அவள் மலரைத் தொடுத்துத் தன் கொண்டையில் செருகிக் கொள்ளவே மாட்டாள்; ஏனெனில் அவள் தலை மொட்டை.

     அவன் பசும்பாலே சாப்பிடமாட்டான்; ஏனெனில் அவன் இருக்கும் இடத்தில் உள்ளவை அவ்வளவும் எருமைகள்?

     அவன் எந்த அழகியையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்; ஏனெனில் அவன் பிறவிக் குருடன்!

     தம்பி! இந்த வரிசையிலேதான் சேர்க்க வேண்டும், திருமணம் செய்து கொள்ளாத ஒருவரைப் பற்றிப் பேசும் போது அவர் தமது குழந்தை குட்டிகளின் நலனுக்காகப் பாடுபடுபவர் அல்ல என்று புகழ்வது! இல்லை ஆகவே தேவை இல்லை! குழந்தைகள் இருந்து, அவை காகூவெனக் கூவி, அவைகளுக்காகப் பாடுபடாமல், நாட்டுத் தொண்டுக்கே என் நேரம் முழுவதும் என்று கூறிச் செயலாற்றினவரா? இல்லையே! குழந்தைகள் இல்லை, ஆகவே குழந்தைகளைக் கவனிப்பதா சமுதாயத்தைக் கவனிப்பதா என்ற சிக்கல் எழவே காரணம் இல்லை.

     என்றாலும் புகழ்கிறார்களே! ஏன்? மகிழச் செய்திடலாம் என்ற எண்ணம். அந்த எண்ணம் எழக்காரணம்? ஏதாவது கிடைக்காதா என்ற ஆசைதான்!

     தம்பி! தன்னலத்துக்கும் பொதுநலனுக்கும் இடையிலே சிக்கி, தத்தளித்து இறுதியில் பொதுநலனுக்காகத் தன்னலத்தை இழந்திட உறுதிகொள்பவனே, மனிதன்!

     நிறம் கருப்பு என்ற போதிலும், குடியரசுத் தலைவர் நிலை என்ற போதிலும், நான் ஓர் மனிதன் என்பதை எத்தனையோ இடர்பாடுகள் இடித்தபோதும் கலங்காது எடுத்துக் காட்டினாரே டக்ளஸ் டில்மன், அவருக்கு மற்றோர் 'மனிதன்' துணை நிற்க முன்வருகிறான்.

     ஓர் வழக்கறிஞன்; டில்மனுக்கு நெடுநாளைய நண்பன்; வெள்ளை இனம்; ஆனாலும் தூய உள்ளம்.

     திறமை மிக்க வழக்கறிஞர்! ஆனால் வருவாய் அதிகம் இல்லை! காரணம் அவர் ஏழை எளியோருக்காகவே வாழ்ந்து வந்தார்.

     குடும்பம் இல்லாதவர் அல்ல! வாழத் தெரியாதவர் அல்ல, வாழ்ந்திட வேண்டிய அவசியமே அற்றவர் அல்ல! ஒண்டிக் கட்டை அல்ல; நான் எதற்காகவும் எவரிடமும் தயவு கேட்கத் தேவையில்லை; நாலு முழத் துண்டு போதும் இடுப்புக்கு; நாளைக்கு ஒரு வேளை சோறு போதும்; படுத்து உறங்க எந்தத் தெருத்திண்னை கிடைத்தாலும் போதும் என்று 'வக்கணை' பேச.

     தன்னையொத்த வழக்கறிஞர்கள், தன்னிலும் திறமை குறைவானவர்கள் பொருள் திரட்டி, தனவானாகி, கனவானாகி, மாளிகையிலே வாழ்ந்திடக் காணும்போது கூட, நாம் ஏன் பணம் திரட்டக் கூடாது என்ற எண்ணம் கொள்ளவில்லை.

     "உழைப்பு அதிகம். இதயம் பலகீனமாக இருக்கிறது. இதே அளவிலும் வேகத்திலும் வேலை செய்து கொண்டிருந்தால், நல்லதல்ல; ஆபத்தாகிடக் கூடும்."

     மருத்துவர் கூறுகிறார் இதுபோல. இது கேட்ட துணைவர் தன் துணைவியின் கண்களைக் காண்கிறார்; சோகம் கப்பிக் கொண்டிருக்கிறது! ஆகவே ஒரு புது முடிவுக்கு வருகிறார், நல்ல வருவாய் தரத்தக்க முறையில் தொழிலை அமைத்து நடத்தி, பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். சிற்றூரில் ஒரு வசதியான வீடு அமைத்துக் கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் தனது முதுமையைக் கழித்திட வேண்டும் என்று விரும்புகிறார். இந்த எண்ணத்தை, அனுமதிக்கப்பட முடியாத தன்னலம் என்றோ பொறுத்துக் கொள்ளக்கூடாத கெடு நினைப்பு என்றோ பேதையும் கூறிடான்.

     நாலுமுழத் துண்டு போதும் என்று 'தன்னலமற்றவர்' பேசுகிறாரே, அவருக்கு நாளைக்கு மூன்று வேளை குளியல்! ஒவ்வொரு குளிப்பாட்டுக்குப் பிறகும் புதிதாக வெளுக்கப்பட்ட ஆடை! என்றால் அவர் நாலு முழத்துண்டு போதும் என்று பேசியது, தன்னலமற்ற தன்மையா அல்லது ஏழையைத் தடவிக் கொடுக்கும் தந்திரமா என்பது பற்றிய விளக்கம் கூற வேண்டும்.

     பெரியதோர் மாளிகையில், திண்டு மீது சாய்ந்தபடி பேசலாம், எனக்கென்னய்யா? படுத்துத் தூங்கத் தெருத் திண்ணை போதும்! என்று. தந்திரப் பேச்சன்றி வேறென்னவாக அது இருக்க முடியும்?

     கடினமாகப் பல ஆண்டுகள் ஏழைகளுக்காக உழைத்தான் பிறகு, மேலும் அதுபோலவே உழைத்துக் கொண்டிருக்க உடல் இடம் தராது என்று மருத்துவர் எச்சரிக்கை தந்தான பிறகு, வாழ்க்கையை இனிச் சற்று நிம்மதியாக நடத்திச் செல்ல வழி தேடிக்கொள்ள வேண்டும் என்ற நிலையினைக் கொள்வது - 'தன்னலம்' என்று இழிவாகக் கூறப்பட வேண்டியதாகிவிடுமா! பேதையும் அங்ஙனம் கூறிடக் கூசுவான்.

     ஒரு வாய்ப்பும் தன்னாலே வந்தது, அந்த வழக்கறிஞருக்கு.

     செல்வாக்கு மிக்க ஒரு வணிக நிறுவனம், குறிப்பிட்ட சில ஆண்டுகள், சட்ட ஆலோசகராக இருக்க அழைத்தது, ஊதியம் அதிக அளவில்! கட்டு திட்டங்கள் குறைவு, கண்ணியமாக நடத்துவார்கள்! இந்த வணிக அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சில ஆண்டுகள் வேலை பார்த்தால், பிறகு பலப்பல ஆண்டுகள் இன்னலற்ற வாழ்க்கை நடத்திச் செல்வதற்கு ஏற்ற பொருள் கிடைத்துவிடும். சிங்காரச் சிற்றூர்! வயல் வெளி! இயற்கை அழகு! ஓய்வு தரும் மகிழ்ச்சி!

     வழக்கறிஞர் இசைவு தருகிறார்! துணைவியார் மெத்தவும் மகிழ்ச்சி கொள்கிறார்கள்; வணிக அமைப்பின் பொறுப்பாளர் வேலை சம்பந்தமான ஒப்பந்தம் அச்சடித்துத் தருகிறார்; படித்துப் பார்க்கிறார் வழக்கறிஞர்; திருப்தியாகவே இருக்கிறது; கையொப்பமிட முனைகிறார்; தொலைபேசி மணி அடிக்கிறது.

     இன்ப நிகழ்ச்சிகள் காண்கிறாள் வழக்கறிஞரின் மனைவி, வணிகக் கோட்டத்துப் பொறுப்பாளன், விழா நடத்த விரும்புகிறான்; உயர்தரமான உணவு விடுதியில்! இனி அவர் உடலுக்கு ஆபத்தின்றி வாழ்க்கை நடத்தலாம்; நிம்மதி பெறலாம் என்பதிலே அவளுக்கு மகிழ்ச்சி; சிற்றூரும் சிங்காரச் சிற்றிலும் மனக் கண்ணால் காணுகின்றாள்; இதழ்களில் புன்னகை தவழ்கிறது.

     கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுகிறார் வழக்கறிஞர்.

     என்ன! என்ன! தொலைபேசியில் யார்? என்ன திடுக்கிடத்தக்க செய்தி? ஏன் இந்தக் கலக்கம்?

     யார் பேசினார்கள் தொலைபேசி மூலம்.

     என் நண்பர் டக்ளஸ் டில்மன் குடியரசுத் தலைவர்.

     என்ன சொல்கிறார் உங்கள் நண்பர்?

     அவர் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்களல்லவா...?

     ஆமாம்! பயங்கரமான குற்றச்சாட்டுக்கள், கடினமான வழக்கு!

     அந்த வழக்கில், அவர் சார்பாக வாதாட அழைக்கிறார், என்னை; நம்பிக்கையுடன்; நட்பு உரிமையுடன்...

     என்ன! என்ன! டில்மனுக்காக நீர் வாதாடுவதா? நன்றாய் இருக்கிறது வேடிக்கை. வேடிக்கைகூட அல்ல; இது விபரீதம்! நமது கம்பெனி, டில்மன் வீழ்த்தப்பட வேண்டும் இந்த வழக்கின் மூலம் என்று விரும்புகிறது; திட்டமிட்டிருக்கிறது; அதற்காகப் பணம் செலவிடவும் முனைந்திருக்கிறது.

     நான் உமது வணிகக் கோட்டத்திலே பணி புரிய ஒப்பந்தம் செய்துகொள்வது என்றால், என் இச்சையாக வேறு வழக்குகளை கவனிக்கக் கூடாதா? அப்படி ஒரு நிபந்தனையா...!

     எந்த வழக்கையும் கவனிக்கலாம், இந்த வழக்கைத் தவிர! டில்மன் ஆட்சியில் இருப்பது எமது கம்பெனிக்கு இடையூறாக இருக்கிறது.

     குடியரசுத் தலைவருக்காக வாதாட எத்தனையோ வழக்கறிஞர்கள் கிடைப்பார்களே...

     கிடைப்பார்கள்... ஆனால், அவர் என்னை அழைக்கிறார்; நம்பிக்கையுடன்; நான் மறுக்க மாட்டேன் என்ற நம்பிக்கையுடன்...

     மறுக்கத்தான் வேண்டும்... உம்மையே டில்மனுக்கு எதிராக வாதாடச் செய்திட விரும்பினோம். நண்பர் என்கிறீர். ஆகவே வற்புறுத்த விரும்பவில்லை. ஆனால் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதானால், டில்மனுக்காக வாதாடக் கூடாது...

     ஒப்பந்தம் நமக்கு நிரம்பச் சாதகமானது என்பதை மறவாதீர். உமது துணைவியாக உள்ள நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்; இத்தனை ஆண்டுகள் உழைத்தது போதும்; இனிக் குடும்பத்தைச் சற்று கவனித்திட வேண்டுகிறேன். மருத்துவர் கூறினதை மறந்திடலாமா... உங்கள் நண்பர் புரிந்து கொள்வார் நிலைமையை... கூறிவிடுங்கள் வேறு ஒருவரை வழக்கை நடத்தச் சொல்லி...

     ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதானால், இந்த நிபந்தனையை மறவாதீர்; டில்மனுக்காக வாதாடக் கூடாது...

     கையொப்பமிட்டால்தானே, நிபந்தனை...?

     அப்படியானால் எமது கம்பெனி அழைப்பை மறுத்து விடப்போகிறீரா...

     வேண்டாம்... வேண்டாம்... என் பேச்சைக் கேளுங்கள். குடும்பத்தை நாசமாக்காதீர்கள். மனைவி என்ற உரிமையுடன் உங்கள் நலனில் அக்கறை கொண்டவள் என்ற முறையில், உம்மைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்...

     ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ஐயா! ஏன் ஓராயிரம் யோசனை. உம்மாலும் முடியாது, உம்மைப் போன்ற பலர் கூடினாலும் முடியாது டில்மனைக் காப்பாற்ற...

     நிலைமை மோசமாக இருப்பதால்தான், டில்மன் என்னை அழைத்திருக்கிறார்; புரிகிறது. நான் ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்யப்போவதில்லை.

     வணிகக் கோட்டத்தானுக்குக் கடுங்கோபம். ஒப்பந்தத் தாளை மடித்து எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறான். கண்ணீர் பொழிந்த நிலையில் துணைவி இருக்கிறாள். ஒரு புறம் அவளுடைய கண்ணீர் தெரிகிறது! மற்றோர் புறம் டில்மனுடைய குரல் காதிலே விழுகிறது! மனக்கண்ணால் பார்க்கும்போது ஒரு பக்கம், மாளிகை, பைபையாகப் பணம், பளபளப்பான வாழ்க்கை, பொன்னகையும் புன்னகையும் துலங்கிடும் நிலையில் மனைவி; சிற்றூர்; சாலை; சோலை; இன்பச் சூழ்நிலை தெரிகிறது; மற்றோர் புறமோ, துயரம் தோய்ந்த முகத்துடன் டில்மன்; அவன் கண்கள் அனுப்பும் அழைப்பு! நான் துரத்தப்படுகிறேன்! என்னை வேட்டையாடுகிறார்கள் - கருநிறம் என்பதால்! பழி சுமத்துகிறார்கள் என்னைச் சூழ்ந்து நிற்கும் நிறவெறியர்! என் கண்களுக்கு ஒரே ஒரு நண்பன் தெரிகிறான்! அதனால் தான் அழைக்கிறேன்; நம்பிக்கையுடன் என்று அந்தக் கண்கள் பேசுகின்றன.

     தத்தளிக்கும் நிலையினளான அம்மாதரசி விழி நீரைத் துடைத்திடவும் மனமின்றி, எழுந்து செல்கிறாள் வெளியே...

     எங்கே? இந்த நேரத்தில்? தனியாக! என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்! அவன் கேட்கிறான்.

     எங்கே என்றா கேட்கிறீர்கள் - நெடுஞ்சாலை நோக்கிச் செல்கிறேன்; ஏதாவது ஒரு மோட்டார் கிடைக்காதா... விழுந்து செத்துத் தொலைக்கிறேன். அவள் கூறுகிறாள், மனம் உடைந்த நிலையில்.

     தம்பி! இது அல்லவா சிக்கல்! இது அல்லவா சோதனை! திருமணமே ஆகாத ஒரு திருவாளர், நான் என்ன என் பிள்ளை குட்டிகளுக்காகவா பாடுபடுகிறேன், எல்லாம் உங்களுக்காகத்தானே என்று பேசுகிறாரே, அந்த நிலைமையா இது!

     ஒரு புறம் உள்ளம் உருகிக் கசிந்திடும் மனைவி.

     மற்றோர் புறம், திகைத்துக் கிடக்கும் நண்பன்.

     மனைவியின் கண்ணீரையும் துச்சமென்று கருதிவிட முடியாது; அந்த மாதரசியும் அக்கிரமம் எதனைச் செய்தாகிலும் எனக்குச் சுகபோக வாழ்வு அமைத்துக் கொடு என்று கேட்கவில்லை. நிம்மதியாக வாழக் கிடைத்திடும் ஒரே வாய்ப்பை இழந்துவிட வேண்டாம் என்றுதான் கெஞ்சுகிறாள்.

     மனைவியின் வேண்டுகோளை மதித்திடுவதும், குடும்பத்திற்கு நிம்மதியான நிலையை அமைத்திடுவதும், ஒரு குடும்பத் தலைவன் மேற்கொண்டாக வேண்டிய கடமைகளிலே ஒன்று! அநீதியல்ல, அக்கிரமம் அல்ல! பிறரைக் கெடுப்பது அல்ல!

     நண்பன் அழைப்பை ஏற்றுக் கொண்டால், அந்த தலைவன் கண்களிலே ஒரு களிப்பு ஒளிவிடும்! மறுத்தால், அந்தக் கண்களிலே இரண்டொரு சொட்டு கண்ணீர் சிந்திடும்.

     நண்பனுடைய கண்களிலே நம்பிக்கை ஒளி எழக் காண வேண்டுமானால், மனைவியின் கண்ணீரைக் கண்டு கலங்கக் கூடாது.

     மனைவியை மகிழச் செய்திடும் கடமையைக் காட்டிலும் நண்பனைக் காத்திடும் கடமை பெரிது.

     குடும்பம் - தன்னை ஒட்டியது! நண்பன் பிரச்சினையோ, பொதுவானது!

     தன்னலம் விரண்டோடிற்று! பொதுநல உணர்ச்சி வென்றது. வெளியே புறப்பட்ட மனைவியைத் தடுக்கக் கூட இல்லை.

     தம்பி! இதனை ஒத்த சிக்கல் எழும்போது, தன்னலத்தைத் துறந்திடும் உறுதி பிறந்திட வேண்டும். இந்த நிகழ்ச்சியைத் திருப்பித் திருப்பிப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்போலத் தோன்றுகிறது.

     குடும்ப நலனைப் பற்றிய கவலையை உதறித் தள்ளி விட்டு கண்ணீர் பொழியும் மனைவியின் மனம் நொந்து போகிறதே என்பது பற்றிய சங்கடத்தையும் தாங்கிக் கொண்டு, அந்த வழக்கறிஞர் டில்மனுக்காக வாதாடியே தீருவேன் என்று உறுதி கொண்டாரே, அது எவருடைய மனதிலே முளைத்திடும் தன்னல உணர்ச்சியையும் பொசுக்கிக் கருக்கி விடத்தக்கது. எவரும் வியந்து பாராட்டுவர் அந்த வழக்கறிஞர் மேற்கொண்ட தன்னல மறுப்பினை.

     ஆனால் அவரே கண்டு வியந்து பாராட்டும் விதமாக அமைகிறது அவருடைய துணைவியாரின் செயல். என்ன செயல்! அந்த மாதரசிதான் குடும்பத்தைக் கவனிக்கும்படி வற்புறுத்தினார்களே; வணிகக் கோட்டப் பணியை மேற்கொள்ளச் சொன்னார்களே; சிக்கலை ஏற்படுத்தினார்களே; அப்படிப்பட்ட செயலுக்காகவா பாராட்ட முடியும் என்று கேட்கிறாய்!

     இல்லை, தம்பி! வெளியே சென்ற மாதரசி, ஒரு மணி நேரம் கழித்த பிறகு வீடு திரும்பினார்கள்; திரும்பியதும், "கண்ணாளா! என்னை மன்னித்துவிடும்! டில்மனுக்காக வாதாடச் சம்மதம் தெரிவித்துவிடும்! எப்படியும் டில்மனைக் காப்பாற்றியாக வேண்டும்" என்று கூறினார்கள். எதனால் ஏற்பட்டது இந்த விந்தையான மாறுதல் என்று கேட்கிறாய்.


வெள்ளை மாளிகையில் : 1  2  3  4  5  6  7  8  9  10



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/annadurai/vellaimaaligaiyil/vellaimaaligaiyil9.html



தேடல்
தேடல்
 

சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
அலை ஓசை
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனி எல்லாமே நீயல்லவோ...
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
காக்கும் இமை நானுனக்கு
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நால்வர் நான்மணி மாலை
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பட்டினப்பாலை
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மணிபல்லவம்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாலவல்லியின் தியாகம்
முத்தொள்ளாயிரம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மோகினித் தீவு
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேருக்கு நீர்




செய்திகள்
சென்னை: தாய், மனைவி, மகளை கொன்று டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
சென்னை: 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி
பேச்சுவார்த்தை தோல்வி: என்.எல்.சி. தொழிலாளர்கள் 28ந் தேதி உண்ணாவிரதம்
அமெரிக்காவில் பயங்கர சூறாவளி : பலி எண்ணிக்கை 91ஆக உயர்வு
சேலம்: மான் வேட்டையாடிய ரிடையர்ட் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் கைது
நாஞ்சில் சம்பத் இல்ல திருமண விழா: முதல்வர் ஜெயலலிதா நேரில் வாழ்த்து
பிரபல ரவுடி வளத்திக்குமார் குண்டர் சட்டத்தில் கைது
எல்லைப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்படும்: சீன பிரதமர்
பிரிட்டனில் மகாத்மா காந்தியின் பொருட்கள் ஏலம்
கோவில்பட்டி: வங்கியில் அடகு வைத்த ரூ.16 லட்சம் நகைகள் மாயம்
நிதிநிறுவனங்களை கண்காணிக்க செபிக்கு அதிகாரம் அரசு திட்டம்
ஜூன் 2ஆம் தேதி 'சிங்கம் 2' பாடல்கள் ரிலீஸ்
ஒரே நாளில் ஐந்து மைனர் திருமணங்கள் நிறுத்தம்: தேனி ஆட்சியர் நடவடிக்கை
காவிரி நீர் பிரச்னை அனைத்து கட்சி கூட்டத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வருஷநாடு வனப்பகுதியில் ராசிக்கல் தோண்டிய கும்பல் ஆயுதங்களுடன் கைது
(செய்தி பதிவு செய்த நாள் : 2013 மே 21 - 15:00 இந்திய நேரம்)
Newspaper Bags - செய்தித்தாள் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தித்தாள் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. நியூஸ்பேப்பர் பேக் - சிறியது
அளவு 1 : உயரம் 22 செ.மீ. (9 இஞ்ச்) - அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.00 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை 80 பைசா
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. நியூஸ்பேப்பர் பேக் - பெரியது
அளவு 2 : உயரம் 26 செ.மீ. (10.5 இஞ்ச்) - அகலம் 24 செ.மீ. (9.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.1.30
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)

Paper Bags - காகிதப் பைகள்
மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் காகிதப் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.

1. பேப்பர் பேக் - சிறியது
அளவு: உயரம் 23 செ.மீ. (9 இஞ்ச்) - அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்) - பக்கவாட்டு அகலம் 5 செ.மீ. (2 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.5.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.5.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000 - ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)

2. பேப்பர் பேக் - பெரியது
அளவு: உயரம் 25 செ.மீ. (10 இஞ்ச்) - அகலம் 20 செ.மீ. (8 இஞ்ச்) - பக்கவாட்டு அகலம் 6 செ.மீ. (2.5 இஞ்ச்)
விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.6.50 - 500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.6.00
ஆப்செட் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.1000 - ஸ்கிரீன் பிரிண்டிங் செலவு 100 பை முதல் 1000 பை வரை: ரூ.2000
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் வரை அனுப்ப ரூ.120 செலவாகும்.)
Candles - மெழுகுவர்த்திகள்
எங்களிடம் முதல் தர மெழுகால் செய்யப்பட்ட தரமான மெழுகுவர்த்திகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். பல வண்ணங்களிலும், இனிமையான நறுமணத்துடனும் கூடிய மெழுகுவர்த்திகள் பலவித வடிவங்களில் கிடைக்கும்.

1. அளவு 1
6 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.1.50)
1 கிலோவுக்கு 170 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

2. அளவு 2
10 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.2.50)
1 கிலோவுக்கு 100 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.200
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

3. அளவு 3
220 கிராம் எடையுடன் கூடிய மெழுகுவர்த்திகள் (குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலை: ரூ.75.00)
1 கிலோவுக்கு 4 மெழுகுவர்த்திகள் - விலை ரூ.225
அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து / பார்சல் மூலம் அனுப்பப்படும். 1 கிலோ முதல் 10 கிலோ வரை ரூ.120 செலவாகும்.)

வாசனை சேர்க்கப்பட்ட மெழுகுவர்த்திகளுக்கு 1 கிலோவுக்கு ரூ.25 கூடுதலாக செலவாகும்.

தொடர்புக்கு: ச.சுதாதேவி, தரணிஷ் எண்டர்பிரைசஸ், எண்.2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை-50.
பேசி: +91-99427-32425, 86081-55133 மின்னஞ்சல்: sudha@chennainetwork.com