|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
கொன்றை வேந்தன்
கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை 15. காவல் தானே பாவையர்க்கு அழகு 16. கிட்டாதாயின் வெட்டென மற 17. கீழோர் ஆயினும் தாழ உரை 18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை 22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி 23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி 24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை 26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை 27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு 28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு 30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|