எதிர்பாராத முத்தம் முதற்பகுதி 1. பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில் மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை! வள்ளியூர் தன்னில் மறைநாய்கன் வீட்டுப் புள்ளிமான் வெளியிற் புறப்பட்ட துவாம்! நீலப் பூவிழி நிலத்தை நோக்கக் கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச் செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும் அப்படி இப்படி வலதுகை யசைத்தும் புறப்பட்ட மங்கைதான் பூங்கோதை என்பவள். நிறப்பட்டாடை நெகிழ்ந்தது காற்றில்! பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம் சீதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்! பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில், வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்; புனிதை அவள்பெயர். புனல்மொள்ளு தற்கும் குளிப்ப தற்கும் சென்றார் குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே! 2. நீராடு பெண்ணினத்தாரோடு, பூங்கோதை!
வள்ளியூர்த் தென்புறத்து வனசப் பூம் பொய்கை தன்னில் வெள்ளநீர் தளும்ப, வெள்ளம் மேலெலாம் முகங்கள், ஓவியம் கண்கள்; எள்ளுப் பூ நாசி, கைகள் எழிலொடு மிதக்கப் பெண்கள் தெள்ளு நீராடு கின்றார்! சிரிக்கின்றார், கூவுகின்றார்! பச்சிலைப் பொய்கை யான நீலவான் பரப்பில் தோன்றும் கச்சித முகங்க ளென்னும் கறையிலா நிலாக் கூட்டத்தை அச்சமயம் கிழக்குச் சூரியன் அறிந்து நாணி உச்சி ஏறாது நின்றே ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்! படிகத்துப் பதுமை போன்றாள் நீந்துவாள் ஒருத்தி! பாங்காய் வடிகட்டும் அமுதப் பாட்டை வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்! கடிமலர் மீது மற்றோர் கைம்மலர் வைத்துக் கிள்ளி, மடிசேர்ப்பாள் மற்றொருத்தி! வரும் மூழ்கும் ஓர் பொன் மேனி! புனலினை இறைப்பார்! ஆங்கே பொத்தென்று குதிப்பார் நீரில்! "எனைப்பிடி" என்று மூழ்கி இன்னொரு புறம்போய் நிற்பார்! புனை உடை அவிழ்த்துப் பொய்கைப் புனலினை மறைப்பார் பூத்த இனமலர் அழகு கண்டே 'இச்' சென்று முத்தம் ஈவார். மணிப்புனல் பொய்கை தன்னில் மங்கைமார் கண்ணும், வாயும் அணிமூக்கும், கையும் ஆன அழகிய மலரின் காடும், மணமலர்க் காடும் கூடி மகிச்சியை விளைத்தல் கண்டோம்! அணங்குகள் மலர்கள் என்ற பேதத்தை அங்கே காணோம்! பொய்கையில் மூழ்கிச் செப்பில் புதுப்புனல் ஏந்திக் காந்த மெய்யினில் ஈர ஆடை விரித்துப்பொன் மணி இழைகள் வெய்யிலை எதிர்க்கப் பெண்கள் இருவர் மூவர்கள் வீதம் கைவீசி மீள லுற்றார் கனிவீசும் சாலை மார்க்கம்! 3. பூங்கோதை - பொன்முடி
பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு! பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து வாங்கப் போகின்றான் அவ்வழியாய்! வஞ்சி, வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன் பூங்கோதையா என்று சந்தேகித்தான்! போன வருஷம் வரைக்கும் இரண்டு பேரும் வங்காத பண்டமில்லை; உண்ணும் போதும் மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்! "அத்தான்" என்றழைக்காத நேரமுண்டா! அத்தை மகளைப்பிரிவானா அப்பிள்ளை! இத்தனையும் இரு குடும்பம் பகையில் மூழ்கி இருந்ததனை அவன் நினைத்தான்! அவள் நினைத்தாள்! தொத்துகின்ற கிளிக்கெதிரில் அன்னோன் இன்பத் தோளான மணிக்கிளையும் நெருங்க-மேலும் அத்தாணி மண்டபத்து மார்பன் அண்டை அழகிய பட்டத்தரசி நெருங்கலானாள்! "என்விழிகள் அவர்விழியைச் சந்திக்குங்கால் என்ன விதம் நடப்ப" தென யோசிப்பாள் பெண்; ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தே அன்னோன் ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள்! சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சிரிக்கும்! திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்! "இன்னவர் தாம் என் அத்தான்" என்றே அந்த எழிற் புனிதையிடம் விரல் சுட்டாது சொன்னாள்! பொன்முடியோ முகநிமிர்ந்து வானிலுள்ள புதுமையெலாம் காண்பவன் போல் பூங்கோதைதன் இன்பமுகம் தனைச் சுவைப்பான் கீழ்க்கண்ணாலே, 'இப்படியா' என்று பெரு மூச்செறிந்தே, "என் பெற்றோர் இவள் பெற்றோர் உறவுநீங்கி இருப்பதனால் இவளென்னை வெறுப்பாளோ? நான் முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ முடியாதோ" என்று பல எண்ணி நைவான். எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவளும்பார்த்தாள்; இரு முகமும் வரி வடிவு கலங்கிப் பின்னர் முதல் இருந்த நிலைக்கு வர இதழ் சிலிர்க்க, முல்லை தனைக் காட்டி உடன் மூடி மிக்க அதிகரித்த ஒளி வந்து முகம் அளாவ அடி மூச்சுக் குரலாலே ஒரே நேரத்தில் அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில் "அத்தான்", "பூங்கோதை" என்றார்! நின்றார் அங்கே. வையம் சிலிர்த்தது. நற் புனிதை யேகி, மலை போன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று 'கையலுத்துப் போகு' தென்று மரத்தின் வேர் மேல் கடிது வைத்தாள்; "அத்தான் நீர் மறந்தீர் என்று மெய்யாக நான் நினைத்தேன்" என்றாள். அன்னோன் வெடுக்கென்று தான் அனைத்தான். "விடாதீர்" என்றாள்! கையிரண்டும் மெய்யிருக, இதழ் நிலத்தில் கன உதட்டை ஊன்றினான் விதைத்தான் முத்தம்! உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள உடலிரண்டின் அணுவனைத்தும் இன்பம் ஏறக் கைச்சரக்கால் காண வொண்ணாப் பெரும் பதத்தில் கடை யுகமட்டும் பொருந்திக் கிடப்பதென்று நிச்சயித்த மறுகணத்தில் பிரிய நேர்ந்த நிலை நினைத்தார்; "அத்தான்" என்றழுதாள்! அன்னோன், "வைச்சேன் உன் மேலுயிரைச் சுமந்து போவாய்! வரும் என்றன் தேகம். இனிப் பிரியா" தென்றான்! "நீர் மொண்டு செல்லுபவர் நெருங்குகின்றார்; நினைப்பாக நாளைவா" என்று சொன்னான். காரிகையாள் போகலுற்றாள்; குடத்தைத் தூக்கிக் காலடி ஒன்றெடுத்து வைப்பாள்; திரும்பிப் பார்ப்பாள்! ஓர விழி சிவப்படைய அன்னோன் பெண்ணின் ஒய்யார நடையினிலே சொக்கி நிற்பான்! "தூரம்" எனும் ஒரு பாவி இடையில் வந்தான் துடித்ததவர் இரு நெஞ்சும்! இது தான் லோகம்! 4. அவன் உள்ளம்
அன்று நடுப்பகல் உணவை அருந்தப் பொன்முடி மறந்து போனான்! மாலையில் கடைமேல் இருந்தான்; கணக்கு வரைதல் இடையில் வந்தோரிடம் நலம் பேசுதல், வணிகர் கொண்டு வந்த முத்தைக் குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல், பெறுலாபத்தொடு பெறத்தகும் முத்து வரின், அதைக் கருத்தோடு வாங்க முயலுதல், ஆன இவற்றை அடுத்தநாள் செய்வதாய் மோனத் திருந்தோன் முடிவு செய்து மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி வந்தான் வீடு! வந்தான் தந்தை! தெருவின் திண்ணையிற் குந்தி இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே! "விற்று முதல்என்ன? விலைக்கு வந்த முத்திலே குற்ற மில்லையே? நீ கணக்குக் குறித்தாயா?" என்று வினவினான் தந்தை. இனிய மகன், "ஒன்றும் நான் விற்கவில்லை; ஓர் முத்தும் வாங்கவில்லை; அந்தி வியாபாரம் அது என்னமோ மிகவும் மந்தமாயிற்" றென்றான். மான நாய்க்கன் வருந்திக் "காலையிலே நீ போய்க் கடையைத் திற! நான் அவ் வேலனிடம் செல்கின்றேன்" என்று விளம்பினான். "நான்போய் வருகின்றேன் அப்பா நடைச்சிரமம் ஏன் தங்கட்" கென்றான் இனிதாகப் பொன் முடியான்! "இன்று நீ சென்றதிலே ஏமாற்றப் பட்டாய்; நான் சென்றால் நலமன்றோ" என்றுறைத்தான் சீமான். "தயவு செய்து தாங்கள் தடைசெய்ய வேண்டாம்; வெயிலுக்கு முன் நான் போய் வீடு வருவேன்" என்றான். "வேலன் முத்துக் கொடுக்க வேண்டும்; அதுவன்றிச் சோலையப்பன் என்னை வரச் சொல்லியிருக்கின்றான்; ஆதலினால் நான் நாளை போவ தவசியம். நீ ஏதும் தடுக்காதே" என்று முடித்தான் தந்தை. ஒப்பவில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை! அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்! அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள்; நச்சுண்ணச் சென்றான் நலிந்து. 5. பண்டாரத் தூது
பகலவன் உதிப்ப தன்முன் பண்டாரம் பூக் கொணர்ந்தான். புகலுவான் அவனிடத்தில் பொன்முடி: "ஐயா, நீவிர் சகலர்க்கும் வீடு வீடாய்ப் பூக்கட்டித் தருகின் றீர்கள் மகர வீதியிலே உள்ள மறைநாய்கன் வீடும் உண்டோ? மறைநாய்கன் பெற்ற பெண்ணாள், மயில்போலும் சாயல் கொண்டாள். நிறைமதி முகத்தாள்; கண்கள் நீலம்போல் பூத்திருக்கும்; பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்; பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள்; அறையும் அவ் வணங்கை நீவிர் அறிவீரா? அறிவீராயின், சேதியொன் றுரைப்பேன்; யார்க்கும் தெரியாமல் அதனை அந்தக் கூறிட ஒப்பு வீரா? காதைஎன் முகத்தில் சாய்ப்பீர்! கையினில் வராகன் பத்துப் போதுமா?" என்று மெல்லப் பொன்முடி புலம்பிக் கேட்டான். "உன் மாமன் மறைநாய்கன் தான் அவன்மகள் ஒருத்தி உண்டு; தென்னம் பாளை பிளந்து சிந்திடும் சிரிப்புக் காரி! இன்னும் கேள் அடையாளத்தை; இடைவஞ்சிக் கொடிபோல் அச்சம் நன்றாகத் தெரியும்! நானும் பூ அளிப்பதும் உண்" டென்றான். "அப்பாவும் மாம னாரும் பூனையும் எலியும் ஆவார்; அப்பெண்ணும் நானும் மெய்யாய் ஆவியும் உடலும் ஆனோம்! செப்பேந்தி அவள் துறைக்குச் செல்லுங்கால், சென்று காண ஒப்பினேன்! கடைக்குப் போக உத்திர விட்டார் தந்தை. இமைநோக என்னை நோக்கி இருப்பாள் கண் திருப்ப மாட்டாள்; சுமைக்குடம் தூக்கி அந்தச் சுடர்க்கொடி காத்திருந்தால் 'நமக்கென்ன என்றிருத்தல் ஞாயமா?' நீவிர் சென்றே அமைவில் என் அசந்தர்ப்பத்தை அவளிடம் நன்றாய்ச் சொல்லி சந்திக்க வேறு நேரம் தயவு செய்துரைக்கக் கேட்டு வந்திட்டால் போதும்! என்னைக் கடையிலே வந்து பாரும். சிந்தையில் தெரிவாள்; கையால் தீண்டுங்கால் உருவம் மாறி அந்தரம் மறைவாள்; கூவி அழும்போதும் அதையே செய்வாள். வையத்தில் ஆண்டு நூறு வாழ நான் எண்ணினாலும் தையலை இராத்திரிக்குள் சந்திக்க வில்லை யானால், மெய்யெங்கே? உயிர்தா னெங்கே? வெடுக்கென்று பிரிந்து போகும். 'உய்யவா? ஒழியவா?' என்று உசாவியே வருவீர்" என்றான். பண்டாரம் ஒப்பிச் சென்றான். பொன்முடி பரிவாய்ப் பின்னும் கண்ட பூங்கோதை யென்னும் கவிதையே நினைப்பாய், அன்னாள் தண்டைக்கால் நடை நினைத்துத் தான் அது போல் நடந்தும், ஒண்டொடி சிரிப்பை எண்ணி உதடு பூத்தும் கிடப்பான். வலிய அங்கணைத்த தெண்ணி மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால் ஒலி கடல் நீலப் பெட்டி உடைத்தெழுந்தது கதிர்தான்! பலபல என விடிந்த படியினால் வழக்க மாகப் புலம்நோக்கிப் பசுக்கள் போகப் பொன்முடி கடைக்குப் போனான். 6. நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு!
நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல் ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில் - சோலைஉதிர் பூவென்ன மக்கள் இமைமூடி துயில்கிடக்கும் போதில், இரு சீவன்கள் மட்டும் திறந்தவிழி - ஆவலினால் மூடா திருந்தனவாம்! முன்னறையில் பொன்முடியான் ஆடா தெழுந்தான் அவள் நினைப்பால்! - ஓடைக்குள் காலால் வழி தடவும் கஷ்டம் போல், தன் உணர்வால் ஏலா இருளில் வழிதடவி - மேல் ஏகி, வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட காட்டில் இரு கண்ணில்லான் போதல் போல் - பேட்டை அகன்றுபோய் அன்னவளின் வீட்டினது தோட்டம் புகும்வாசல் என்று புகுந்தான் - புகும் தருணம் வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்தது போல் ஆணழகன் என்றெண்ணி "அத்தான்" என்றாள் நங்கை! ஓங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத் தாங்கா மகிச்சியுடன் தான்பிடித்துப் - பூங்கொடியை மாரோ டணைத்து மணற்கிழங்காய்க் கன்னத்தில் வேரோடு முத்தம் பறித்தான்!அந் - நேரத்தில் பின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன் பொன்முடியை! மங்கை புலன் துடிக்க - அன்பில்லா ஆட்கள் சிலர் வந்தார். புன்னை அடிமரத்தில் போட்டிறுக்கக் கட்டினார் பொன்முடியை - நீட்டு மிலாரெடுத்து வீசும் மறைநாய்கன் காலில் நிலாமுகத்தை ஒற்றி நிமிர்ந்து - கலாப மயில் "அப்பா அடிக்காதீர்" என்றழுதாள். அவ்வமுதம் ஒப்பாளைத் தள்ளி உதைக்கலுற்றான் - அப்போது வந்துநின்ற தாயான வஞ்சி வடிவென்பாள் சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள் - சுந்தரியோ அன்னையின் கைவிலக்கி ஆணழகிடம் சேர்ந்தே "என்னை அடியுங்கள்" என்றுரைத்துச் - சின்னவிழி முத்தாரம் பாய்ச்ச உதட்டின் முனைநடுங்க வித்தார லோகம் விலவிலக்க - அத்தானின் பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்த படியிருந்தாள். பின்னுமவன் கோபம் பெரிதாகி - அன்னார் இருவரையும் இன்னற் படுத்திப் பிரித்தே ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித் - திருவனைய செல்விதனை வீட்டிற் செலுத்தி மறைநாய்கன் இல்லத்துட் சென்றான். இவன் செயலை - வல்லிருளும் கண்டு சிரித்தது போல் காலை அரும்பிற்று. "வண்டு விழி நீர் வடித்தாளே! - அண்டையில் என் துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ! இன்ப உடலில் அடி யேற்றாளே! - அன்புள்ள காதலிக் கின்னும் என்ன கஷ்டம் விளைப்பாரோ? மாது புவி வெறுத்து மாய்வாளோ - தீதெல்லாம் என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ?" என்றுதன் துன்பத்தை எண்ணாமல் - அன்னாள் நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான் உலராத காயங்க ளோடு. 7. பண்டாரத்தைக் கண்டாள் தத்தை
பண்டாரம் இரண்டு நாளாய்ப் பூங்கோதை தன்னைப் பார்க்கத் திண்டாடிப் போனான். அந்தச் செல்வியும் அவ்வா றேயாம்! வண்டான விழியால் அன்னாள் சன்னலின் வழியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். பண் டாரம் குறட்டினிற் போதல் பார்த்தாள். இருமினாள் திரும்பிப் பார்த்தான். தெருச்சன்னல் உள்ளி ருந்தே ஒரு செந்தாமரை இதழ்தான் தென்றலால் உதறல் போல வருக என்றழைத்த கையை மங்கை கை என்றறிந்தான். "பொருளை நீர் கொள்க இந்தத் திருமுகம் புனிதர்க்" கென்றே பகர்ந்தனள்; போவீர் போவீர் எனச்சொல்லிப் பறந்தாள். அன்னோன் மிகுந்த சந்தோஷத் தோடு "மெல்லியே என்ன சேதி? புகலுவாய்" என்று கேட்டான். "புகலுவ தொன்று மில்லை அகன்று போவீர்; எனக்கே பாதுகாப் பதிகம்" என்றாள். "சரிசரி ஒன்றே ஒன்று தாய்தந்தைமார் உன் மீது பரிவுடன் இருக்கின்றாரா? பகையென்றே நினைக்கின்றாரா? "சீக்கிரம் போவீர்" என்றாள். "வரும்படி சொல்லவா உன் மச்சானை" என்று கேட்டான். "விவரமாய் எழுதியுள்ளேன் விரைவினிற் போவீர்" என்றாள். "அவரங்கே இல்லா விட்டால் ஆரிடம் கொடுப்ப" தென்றான். "தவறாமல் அவரைத் தேடித் தருவதுன் கடமை" என்றாள். "கவலையே உனக்கு வேண்டாம் நான் உனைக் காப்பேன். மேலும்... என்றின்னும் தொடர்ந்தான். மங்கை "என்அன்னை வருவாள் ஐயா முன்னர்நீர் போதல் வேண்டும்" என்றுதன் முகம் சுருக்கிப் பின்புறம் திரும்பிப் பார்த்துப் பேதையும் நடுங்க லுற்றாள். "கன்னத்தில் என்ன" என்றான். "காயம்" என்றுரைத்தாள் மங்கை. "தக்கதோர் மருந்துண்" டென்றான். "சரிசரி போவீர்" என்றாள். அக்கணம் திரும்பினாள்; பின் விரல்நொடித் தவளைக் கூவிப் "பக்குவ மாய் நடக்க வேண்டும் நீ" என்றான். பாவை திக்கென்று தீப்பிடித்த முகங்காட்டச் சென்றொழிந்தான். 8. அவள் எழுதிய திருமுகம்
பொன்முடி கடையிற் குந்திப் புறத்தொழில் ஒன்று மின்றித் தன்மனத் துட்புறத்தில் தகதக என ஒளிக்கும் மின்னலின் கொடி நிகர்த்த விசித்திரப் பூங்கோதைபால் ஒன்றுபட்டிருந்தான்! கண்ணில் ஒளியுண்டு; பார்வை யில்லை. கணக்கர்கள் அங்கோர் பக்கம் கடை வேலை பார்த்திருந்தார். பணம்பெற்ற சந்தோஷத்தால் பண்டாரம் விரைந்து வந்தே மணிக்கொடி இடையாள் தந்த திருமுகம் தந்தான். வாங்கித் தணலிலே நின்றி ருப்போர் தண்ணீரில் தாவுதல் போல் எழுத்தினை விழிகள் தாவ இதயத்தால் வாசிக்கின்றான். "பழத்தோட்டம் அங்கே; தீராப் பசிகாரி இவ்விடத்தில்! அழத்துக்கம் வரும்படிக்கே புன்னையில் உம்மைக் கட்டிப் புழுதுடி துடிப்பதைப்போல் துடித்திடப் புடைத்தார் அந்தோ! புன்னையைப் பார்க்குந் தோறும் புலனெலாம் துடிக்க லானேன்; அன்னையை, வீட்டி லுள்ள ஆட்களை, அழைத்துத் தந்தை என்னையே காவல் காக்க ஏற்பாடு செய்து விட்டார். என்அறை தெருப் பக்கத்தில் இருப்பது; நானோர் கைதி! அத்தான்! என் ஆவி உங்கள் அடைக்கலம்! நீர் மறந்தால் செத்தேன்! இஃதுண்மை. இந்தச் செகத்தினில் உம்மை அல்லால் சத்தான பொருளைக் காணேன்! சாத்திரம் கூறு கின்ற பத்தான திசை பரந்த பரம்பொருள் உயர் வென்கின்றார். அப்பொருள் உயிர்க் குலத்தின் பேரின்பம் ஆவ தென்று செப்புவார் பெரியார் யாரும் தினந்தோறும் கேட்கின்றோமே. அப்பெரி யோர்களெல்லாம் - வெட்கமாய் இருக்கு தத்தான் - கைப்பிடித் தணைக்கும் முத்தம் ஒன்றேனும் காணார் போலும்! கனவொன்று கண்டேன் இன்று காமாட்சி கோயிலுக்குள் எனதன்னை, தந்தை, நான்இம் மூவரும் எல்லா ரோடும் 'தொணதொண' என்று பாடித் துதி செய்து நிற்கும் போதில் எனது பின் புறத்தில் நீங்கள் இருந்தீர்கள் என்ன விந்தை! காய்ச்சிய இரும்பாயிற்றுக் காதலால் எனது தேகம்! பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல் தந்தையார் பார்க்கும் பார்வை! கூச்சலும் கிளம்ப, மேன்மேல் கும்பலும் சாய்ந்த தாலே ஓச்சாமல் உம்தோள் என்மேல் உராய்ந்தது; சிலிர்த்துப் போனேன்! பார்த்தீரா நமது தூதாம் பண்டாரம் முக அமைப்பை; போர்த்துள்ள துணியைக் கொண்டு முக்காடு போட்டு மேலே ஓர்துண்டால் கட்டி மார்பில் சிவலிங்கம் ஊச லாட, நேரினில் விடியு முன்னர் நெடுங்கையில் குடலை தொங்க வருகின்றார்; முகத்தில் தாடி வாய்ப்பினைக் கவனித்தீரா? பரிவுடன் நீரும் அந்தப் பண்டார வேஷம் போடக் கருதுவீரா என் அத்தான்? கண்ணெதிர் உம்மைக் காணும் தருணத்தைக் கோரி, என்றன் சன்னலில் இருக்கவா நான்? அன்னையும் தந்தை யாரும் அறையினில் நம்மைப் பற்றி இன்னமும் கட்சி பேசி இருக்கின்றார்; உம்மை அன்று புன்னையில் கட்டிச் செய்த புண்ணிய காரியத்தை உன்னத மென்று பேசி உவக்கின்றார் வெட்கமின்றி. குளிர்புனல் ஓடையே, நான் கொதிக்கின்றேன் இவ்வி டத்தில். வெளியினில் வருவதில்லை; வீட்டினில் கூட்டுக் குள்ளே கிளியெனப் போட்ட டைத்தார் கெடுநினைப் புடைய பெற்றோர். எளியவள் வணக்கம் ஏற்பீர். இப்படிக்குப் பூங்கோதை." 9. நுணுக்கமறியாச் சணப்பன்
பொன்முடி படித்த பின்னர் புன்சிரிப்போடு சொல்வான்: "இன்றைக்கே இப்போதே ஓர் பொய்த்தாடி எனக்கு வேண்டும்; அன்னத னோடு மீசை அசல் உமக்குள்ளதைப் போல் முன்னே நீர் கொண்டு வாரும் முடிவு சொல்வேன் பின்" என்றான். கணக்கர்கள் அவன் சமீபம் கைகட்டி ஏதோ கேட்க வணக்கமாய் நின்றிருந்தார்; வணிகர்சேய் கணக்கர்க் கஞ்சிச் சணப்பன் பண்டாரத்தின் பால் சங்கதி பேசவில்லை. பொன்முடி தன்னை நோக்கி, "அவள் ஒரு வெள்ளை நூல் போல் ஆய்விட்டாள்" என்று சொன்னான். "அவுஷதம் கொடுக்க வேண்டும் அடக்" கென்றான் செம்மல்! பின்னும் "கவலைதான் அவள் நோய்" என்று பண்டாரம் கட்டவிழ்த்தான். "கவடில்லை உன்தாய்க்" கென்று கவசம் செய்ததனை மூடிக் "கணக்கரே ஏன் நிற்கின்றீர்? பின்வந்து காண்பீர்" என்றான். கணக்கரும் போகலானார்; கண்ட அப்பண்டாரந்தான் "அணங்குக்கும் உனக்கும் வந்த தவருக்குந் தானே" என்றான். "குணமிலா ஊர்க் கதைகள் கூறாதீர்" என்று செம்மல் பண்டாரந் தனைப் பிடித்துப் பரபர என இழுத்துக் கொண்டேபோய்த் தெருவில் விட்டுக் "குறிப்பறி யாமல் நீவிர் குண்டானிற் கவிழ்ந்த நீர்போல் கொட்டாதீர்" என்றான். மீண்டும் பண்டாரம், கணக்கர் தம்மைப் பார்ப்பதாய் உள்ளே செல்ல, பொன்முடி "யாரைப் பார்க்கப் போகின்றீர்?" என்று கேட்டான். "பொன்முடி உனக்கும் அந்தப் பூங்கோதை தனக்கும், மெய்யாய் ஒன்றும் சம்பந்த மில்லை என்றுபோய் உரைக்க எண்ணம்" என்று பண்டாரம் சொன்னான். பொன்முடி இடை மறித்தே பண்டாரம் அறியத் தக்க பக்குவம் வெகுவாய்க் கூறிக் கண்டிடப் பூங்கோதை பால் காலையில் போக எண்ணங் கொண்டிருப்பதையுங் கூறிப் பிறரிடம் கூறி விட்டால் உண்டாகும் தீமை கூறி உணர்த்தினான்! போனான் ஆண்டி. 10. விடியுமுன் துடியிடை
'சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத் தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி தேவை இல்லை போலும்! இதை நான் என் தாய்க்குச் செப்புவதும் சரியில்லை. என்ன கஷ்டம்! பூவுலகப் பெண்டிரெல்லாம் இக்காலத்தில் புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம் என்ன? ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்; அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்? விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்டமானால் வீதியில் நான் இந்நேரம், பண்டாரம்போல் வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணாளர்தாம் வருகின்றாரா வென்று பார்ப்பேனன்றோ? துடிதுடித்துப் போகின்றேன்; இரவிலெல்லாம் தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம் ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்?' என்றே உலகத்தை நிந்தித்தாள் பூங்கோதைதான். தலைக்கோழி கூவிற்று. முதலில் அந்தத் தையல்தான் அதைக்கேட்டாள்; எழுந்திருந்தாள். கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே கையோடு செம்பில் நீர் ஏந்தி ஓடி விலக்கினாள் தாழ்தன்னை; வாசல் தன்னை விளக்கினாள் நீர்தெழித்து. வீதி நோக்கக் குலைத்ததொரு நாய் அங்கே! சரிதான் அந்தக் கொக்கு வெள்ளை மேல் வேட்டிப் பண்டாரந்தான் என்று மனம் பூரித்தாள். திருவிழாவே எனை மகிழ்ச்சி செய்யநீ வாவா என்று தன்முகத்தைத் திருப்பாமால் பார்த்திருந்தாள் சணப்பனா? குணக்குன்றா? வருவதென்று தன் உணர்வைத் தான் கேட்டாள்! ஆளன் வந்தான். தகதகெனக் குதித்தாடும் தனது காலைச் சொன்னபடி கேள் என்றாள். பூரிப்பெல்லாம் துடுக்கடங்கச் செய்துவிட்டாள். "அத்தான்" என்றாள். "ஆம்"என்றான். நடைவீட்டை அடைந்தார்; அன்னை அப்போது பால்கறக்கத் தொடங்குகின்றாள். தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்ததைப்போல் தமிழ்ச்சுவடிக் கன்னத்தில் இதழ் உணர்வை நேமமுறச் செலுத்தி நறுங் கவிச்சு வைகள் நெடுமூச்சுக் கொண்ட மட்டும் உரிஞ்சி நின்று மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம். பூமுடித்த பொட்டணத்தை வைத்துச் சென்றான். பூங்கோதை குழல் முடித்துப் புகுந்தாள் உள்ளே! "நீ முடித்த வேலையென்ன?" என்றாள் அன்னை. "நெடுங்கயிற்றைத் தலைமுடித்துத் தண்ணீர் மொண்டேன்; ஆமுடித்த முடியவிழ்த்துப் பால்கறந்தீர்; அதைமுடித்தீர்; நீர் தெளித்து முடித்தேன், இன்னும் ஈ முடித்த தேன்கூட்டை வடித்தல் போலே எனை வருத்தாதீர்!" என்றாள் அறைக்குள் சென்றாள். 11. அறையிலிருந்து அம்பலத்தில்
"ஒருநாள் இரவில் உம் எசமானின் அருமைப் பிள்ளை ஐயோ பாவம் பட்ட பாடு பருத்திப் பஞ்சுதான் பட்டிருக்குமா? பட்டிருக்காதே!" என்று கூறினான் இரிசன் என்பவன் "என்ன" என்றான் பொன்னன் என்பவன். இரிசன் என்பவன் சொல்லுகின்றான் "பரிசம் போட்டுப் பந்தலில் மணந்த மாப்பிளை பொன்முடி! மணப்பெண் பூங்கோதை! சாப்பாடு சமைத்துச் சாப்பிடுவதுபோல் புன்னை அடியில் பூரிப்பு முத்தம் தின்று கொண்டிருந்தார்! திடீரென் றெசமான் பிடித்துக் கட்டினார் பிள்ளையாண்டானை! அடித்தார் மிலாரால்; அழைத்தார் என்னை அவிழ்த்து விட்டபின் அவதியோ டோ டினான்!" என்றது கேட்ட பொன்னன் உடனே சொன்னதை யெல்லாம் தோளில் முடிந்து மான நாய்கன் தன்னிடம் போனான் விரைவில் புகல்வ தற்கே! 12. பெற்றோர் பெருந்துயர்
விளக்குவைத்து நாழிகை ஒன்றாயிற்று மீசை வளைத்து மேலேற்றி அந்த மானநாய்கன் வந்தான். "அன்னம்" என்று கூவினான் அன்னோன் மனைவிதனை "என்ன"என்று கேட்டே எதிரில் வந்து நின்றிருந்தாள். "பையன் வெறிபிடித்த பாங்காய் இருக்கின்றான்! செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியண்டை உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத் தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி வாரம் இரண்டாயினவாம் இதுஎன்ன கோரம்!" எனக் கூறிக் குந்தினான் பீடத்தில்! அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே அச்சமயமாக "ஐயா" எனக்கூவிப் பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும், புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்ததையும், சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள். "நல்லது நீ போ பொன்னா" என்று நவின்று பின் மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல் "தான தருமங்கள் நான் செய்து பெற்ற பிள்ளை ஏன் என்றதட்டாமல் இது வரைக்கும் சிறந்த வானமுதம் போல வளர்த்த அருமை மகன் வெள்ளை உடுத்தி வெளியிலொருவன் சென்றால் கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில் வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு கொல்லைப் புறத்தில் கொடுமை பல பட்டானா!" என்று பலவாறு சொல்லி இருக்கையிலே, நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல் பண்டாரம் வந்து பழிப்பது போல் பல்லிளிக்கக் கண்ட அந்நாய்கன் கடிந்த மொழியாக "நில்லாதே போ!" என்றான். "என்னால் நிகழ்ந்ததில்லை. சொல்லென்று தங்கள் பிள்ளை சொன்னபடி போய்ச் சொன்னேன். பூங்கோதை ஓலை தந்து போய்க்கொடு என்றாள்; அதனை வாங்கிவந்து பிள்ளை வசம் சேர்த்தேன். வேறென்ன?" என்றுரைத்தான் பண்டாரம். கேட்டான் இதை நாய்கன். "சென்றதற்குக் கூலி என்ன சேர்ந்த துனக்"கென்றான். "பத்து வராகன் பணம் கொடுத்ததாகவும் முத்துச் சரத்தை அவள் மூடித்தந்தாள் எனவும் எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்? அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்! தாடி ஒன்று கேட்டான். எனக்கென்ன? தந்ததுண்டு. மூடி முக்காடிட்டு மூஞ்சியிலே தாடி ஒட்டி நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில். மான் வந்தாற் போல் வந்து வாய்முத்தம் தந்துவிட்டுப் போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்காதல் ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!" என்று பண்டாரம் இயம்பவே நாய்கனவன் "நன்று தெரிந்துகொண்டேன். நான்சொல்வதைக் கேட்பாய் என்னை நீ கண்டதாய் என் மகன் பால் சொல்லாதே; அன்னவனை நானோ அயலூருக்குப் போகச் சொல்ல நினைக்கின்றேன்; அன்னவன்பால் சொல்லாதே செல்லுவாய்" என்றுரைத்தான். பண்டாரம் சென்றுவிட்டான். பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப் பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன் "அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம் சென்று முத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன். நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர் தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும் முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும் ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்; கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி நெஞ்சில் அவள் மயக்கம் நீங்கும்!" எனச்சொன்னான். அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச் சொன்னது நன்றென்றாள் துணிந்து. 13. இல்லையென்பான் தொல்லை
பொன்முடி கடையி னின்று வீட்டுக்குப் போகும் போது தன்னெதிர்ப் பண்டாரத்தைப் பார்த்தனன்; "தனியாய் எங்கே சென்றனிர்" என்று கேட்டான். பண்டாரம் செப்பு கின்றான்: "உன் தந்தையாரும் நானும் ஒன்றுமே பேச வில்லை. அவளுக்கும் உனக்குமுள்ள அந்தரங் கத்தை யேனும், அவன் உன்னை மரத்தில் கட்டி அடித்ததை யேனும், காதற் கவலையால் கடையை நீதான் கவனியா மையை யேனும், அவர் கேள்விப் படவே இல்லை, அதற்கவர் அழவு மில்லை. நாளைக்கே அயலூர்க் குன்னை அனுப்பிடும் நாட்ட மில்லை; கேளப்பா, தாடிச் சேதி கேட்கவும் இல்லை" என்றான். ஆளனாம் பொன்மு டிக்கோ சந்தேகம் அதிகரிக்கக் கோளனாம் பண்டாரத்தின் கொடுமையை வெறுத்துச் சென்றான். 14. எதிர்பாராப் பிரிவு
பொதிசுமந்து மாடுகளும் முன்னே போகப் போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர்! அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோதைபால் ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்களோடு குதிகாலைத் தூக்கிவைக்கத் துடித்துக் காதல் கொப்பளிக்கும் மனத்தோடு செல்லலுற்றான். மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி வந்து நுழைந்ததுமுத்து வணிகர் கூட்டம். வடநாடு செல்கின்ற வணிகர்க்கெல்லாம் மங்கையரும் ஆடவரும் வீதி தோறும் "இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்" என்றுரைத்து வாழ்த்தலுற்றார்! மாடிமீது சுடரொன்று தோன்றிற்று. பொன்முடிக்கோ துயர் ஒன்று தோன்றிற்று. கண்ணீர் சிந்த அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால் "அன்பே நீ விடைகொடுப்பாய்" என்று கேட்டான். எதிர்பார்த்த தில்லையவள் வடநாடென்னும் எமலோகத் துக்கன்பன் செல்வானென்றே! அதிர்ந்ததவள் உள்ளந்தான் பயணஞ் செல்லும் அணிமுத்து வணிகரொடு கண்ட போது விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந் தன்னைப் புதுமலர்க்கை யால்அழுத்தித் தலையில் மோதிப் புண்ணுளத்தின் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள். விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட் டஞ்சும் விழிதானா? விழியொழுகும் நீர்தானா?பின் இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெருப்பா? எதுவிடை? பொன்முடி மீண்டும் மீண்டும் மீண்டும் கடைவிழியால் மாடியிலே கனிந்திருக்கும் கனிதன்னைப் பார்த்துப் பார்த்தகன்றான். பாவை உடைந்து விழுவாள் அழுவாள், அழுவாள் கூவி! "உயிரே நீர் பிரிந்தீரா" என்று சோர்வாள்! 15. அழுதிடுவாள் முழுமதியாள்
"இங்கேதான் இருக்கின்றார் ஆதலாலே இப்போதே வந்திடுவார்" என்று கூறி வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன். இங்கில்லை; அடுத்த ஊர்தனிலு மில்லை; இரு மூன்று மாத வழித் தூரமுள்ள செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி சென்றுவிட்டார்; என்உயிர்தான் நிலைப்பதுண்டோ? செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும் சிட்டுப்போல், தென்னையிலே ஊசலாடி எழுந்தோடும் கிள்ளைபோல் எனதுடம்பில் இனியஉயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை! வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக் கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க கோமானே பிரிந்தீரா?" எனத் துடித்தாள். தாய் வயிற்றினின்று வந்த மானின் கன்று தள்ளாடும்; விழும் எழும் பின்னிற்கும்; சாயும். தூய்வனசப் பூங்கோதை அவ்வாறானாள். தோளசந்து தாளசந்து மாடி விட்டுப் பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந்தன்னில் நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம் நாவறளக் கத்துதல்போல் பேசலுற்றார். வடநாடு செல்கின்றான் அந்தப் பையன் உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்! நடப்பானா? தூரத்தைச் சமாளிப்பானா? நான் நினைக்கவில்லை என்று மகிழ்ச்சி கொண்டு திடமுடனே வஞ்சி வடிவுரைத்து நின்றாள். சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய் வடக்கென்றால் சாக்காடென்றேதான் அர்த்தம்! மாளட்டும்!" என்றுரைத்தான் மறைநாய்கன்தான். வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில் வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக் கடல்நீரில் சுறாப்போலப் படுக்கை தன்னில் துள்ளிஉடல் துவள்வதன்றித் தந்தை தாயார் துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டா? தள்ளஒண்ணா முடிவொன்று கண்டாள் அங்குத் தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே. 16. எந்நாளோ!
பாராது சென்ற பகல் இரவு நாழிகையின் ஈராயிரத்தி லொன்றும் இல்லை எனும்படிக்குத் தூங்கா திருக்கின்றேன் தொண்ணூறு நாள்கடந்தேன். தூங்குதல் எந்நாள்? துணைவரைக் காண்பதெந்நாள்? கண்டவுடன்வாரி அணைத்துக் "கண்ணாட்டி" யென்று புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமான் அன்பு நிலையம் அடையும் நாள் எந்நாளோ? என்புருகிப் போகின்றேன் ஈடேற்றம் எந்நாளோ? கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும் விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி ஆளன் திருவருளுக் காளாதல் எந்நாளோ? இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே? ஊரின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன் யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?" என்று பலவாறழுதாள். பின் அவ்விரவில் சென்றுதன் தோட்டத்திற் சேர்ந்தாள். அப்புன்னைதனைக் கோதைகண்டாள் தன்னுட் குலையதிர்ந்தாள்; தாங்காத வாதைகண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன் கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப் பொன்னுடம்பு நோகப் புடைக்க அவரைப் பிணித்த புன்னை இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்தான்! தொட்ட போதெல்லாம் சுவையேறும் நல்லுடம்பை, விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக் கட்டிவைத்த காரணத்தால், புன்னை நீ காரிகைநான் ஒட்டுறவு கொண்டுவிட்டோ ம். தந்தை ஒரு பகைவன்! தாயும் அதற்கு மேல்! சஞ்சலந்தான் நம்கதியோ? நோயோ உணவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ? சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ! ஏதோ அறியேன் இனி. 17. ஆசைக்கொரு பெண்
புன்னையில் அவளுடம்பு புதைந்தது! நினைவு சென்று கன்னலின் சாறு போலக் கலந்தது செம்ம லோடு! சின்னதோர் திருட்டு மாடு சென்றதால் அதைப் பிடித்துப் பொன்னன்தான் ஓட்டி வந்தான் புன்னையில் கட்டப் போனான். கயிற்றொடு மரத்தைத் தாவும் பொன்னனின் கையில் தொட்டுப் பயிலாத புதிய மேனி பட்டது. சட்டென் றங்கே அயர்கின்ற நாய்கனைப் போய் அழைத்தனன்; நாய்கன் வந்தான் மயில்போன்ற மகளைப் புன்னை மரத்தோடு மரமாய்க் கண்டான். "குழந்தாய்" என்றழைத்தான். வஞ்சி வடிவினைக் கூவி "அந்தோ இழந்தாய் நீ உனது பெண்ணை!" என்றனன். வஞ்சி தானும் முழந்தாளிட்டழுது பெண்ணின் முடிமுதல் அடி வரைக்கும் பழஞ்சீவன் உண்டா என்று பதைப்புடன் தடவிப் பார்த்தாள். "அருமையாய்ப் பெற்றெடுத்த ஆசைக்கோர் பெண்ணே!" என்றும் அருவி நீர் கண்ணீராக அன்னையும் தந்தையும் "பொற் றிருவிளக் கனையாய்!" என்றும் செப்பியே அந்தப் புன்னைப் பெருமரப் பட்டை போலப் பெண்ணினைப் பெயர்த் தெடுத்தார். கூடத்தில் கிடத்தி னார்கள் கோதையை! அவள் முகத்தில் மூடிய விழியை நோக்கி மொய்த்திருந்தார்கள். அன்னாள் வாடிய முகத்தில் கொஞ்சம் வடிவேறி வருதல் கண்டார்; ஆடிற்று வாயிதழ் தான்! அசைந்தன கண்ணிமைகள். எழில்விழி திறந்தாள். "அத்தான்" என்றுமூச் செறிந்தாள். கண்ணீர் ஒழுகிடப் பெற்றோர் தம்மை உற்றுப் பார்த்தாள்; கவிழ்ந்தாள். தழுவிய கைகள் நீக்கிப் பெற்றவர் தனியே சென்றார். பழமைபோல் முணு முணுத்தார்; படுத்தனர் உறங்கினார்கள். 18. பறந்தது கிள்ளை
விடியுமுன் வணிகர் பல்லோர் பொதிமாட்டை விரைந்தே ஓட்டி நடந்தனர் தெருவில்! காதில் கேட்டனள் நங்கை. நெஞ்சு திடங்கொண்டாள்; எழுந்தாள். வேண்டும் சில ஆடை பணம் எடுத்துத் தொடர்ந்தனள், அழகு மேனி தோன்றாமல் முக்கா டிட்டே! வடநாடு செல்லும் முத்து வணிகரும் காணா வண்ணம் கடுகவே நடந்தாள். ஐந்து காதமும் கடந்த பின்னர் நடைமுறை வரலாறெல்லாம் நங்கையாள் வணிகருக்குத் தடையின்றிக் கூறலானாள் தயைகொண்டார் வணிகர் யாரும். 19. வடநாடு செல்லும் வணிகர்
பளிச்சென்று நிலா எரிக்கும் இரவினில் பயணம் போகும் ஒளிச்செல்வ வணிகர்க்குள்ளே ஒரு நெஞ்சம், மகர வீதி கிளிச்சந்த மொழியாள் மீது கிடந்தது. வணிகரோடு வெளிச்சென்ற அன்னோன் தேகம் வெறுந்தேகம் ஆனதன்றோ! வட்டநன் மதியி லெல்லாம் அவள்முக வடிவங் காண்பான்! கொட்டிடும் குளிரில் அப்பூங் கோதைமெய் இன்பங் காண்பான்! எட்டுமோர் வானம் பாடி இன்னிசை தன்னிலெல்லாம் கட்டிக் கரும்பின் வாய்ச்சொற் கவிதையே கண்டு செல்வான். அணிமுத்து மணி சுமக்கும் மாடுகள் அலுத்துப் போகும். வணிகர்கள் அதிக தூர வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில் தணியாத அவள் நினைவே பொன்முடி தனக்கு நீங்காப் பிணியாயிற் றேனும், அந்தப் பெருவழிக் கதுதான் வண்டி! இப்படி வடநாட்டின்கண் டில்லியின் இப்புறத்தில் முப்பது காத முள்ள மகோதய முனிவனத்தில் அப்பெரு வணிகர் யாரும் மாடுகள் அவிழ்த்து விட்டுச் சிப்பங்கள் இறக்கிச் சோறு சமைத்திடச் சித்தமானார். அடுப்புக்கும் விறகினுக்கும் இலைக்கலம் அமைப்பதற்கும், துடுப்புக்கும் அவரவர்கள் துரிதப்பட்டிருந்தார். மாவின் வடுப்போன்ற விழிப்பூங் கோதை வடிவினை மனத்தில் தூக்கி நடப்போன் பொன்முடிதான் அங்கோர் நற்குளக் கரைக்குச் சென்றான். ஆரியப் பெரியோர், தாடி அழகுசெய் முகத்தோர், யாக காரியம் தொடங்கும் நல்ல கருத்தினர் ஐவர் வந்து "சீரிய தமிழரே, ஓ! செந்தமிழ் நாட்டாரேஎம் கோரிக்கை ஒன்று கேட்பீர்" என்றங்கே கூவி னார்கள். தென்னாட்டு வணிக ரான செல்வர்கள் அதனைக் கேட்டே என்ன என் றுசாவ அங்கே ஒருங்கேவந் தீண்டி னார்கள். "அன்புள்ள தென்னாட் டாரே, யாகத்துக் காகக் கொஞ்சம் பொன்தரக் கோரு கின்றோம், புரிகஇத் தருமம்" என்றே. வந்தவர் கூறக் கேட்டே மாத்தமிழ் வணிக ரெல்லாம் சிந்தித்தார்; பொன்முடிக்குச் சேதியைத் தெரிவித் தார்கள். வந்தனன் அன்னோன் என்ன வழக்கென்று கேட்டு நின்றான். பந்தியாய் ஆரி யர்கள் பரிவுடன் உரைக்க லானார். "மன்னவன் செங்கோல் வாழும், மனுமுறை வாழும்; யாண்டும் மறைப்பாதத் தால் நடக்கும்; இன்னல்கள் தீரும்; வானம் மழைபொழிந் திருக்கும்; எல்லா நன்மையும் பெருகும்; நாங்கள் நடத்திடும் யாகத் தாலே. ஆதலின் உமைக்கேட் கின்றோம் அணிமுத்து வணிகர் நீவீர் ஈதலிற் சிறந்தீர் அன்றோ இல்லையென் றுரைக்க மாட்டீர்! போதமார் முனிவ ரேனும் பொன்னின்றி இந்நி லத்தில் யாதொன்றும் முடிவ தில்லை" என்றனர். இதனைக் கேட்டே பொன்முடி உரைக்க லுற்றான்: "புலமையில் மிக்கீர்! நாங்கள் தென்னாட்டார்; தமிழர், சைவர் சீவனை வதைப்ப தான இன்னல்சேர் யாகந் தன்னை யாம்ஒப்ப மாட்டோம் என்றால் பொன்கொடுப் பதுவும் உண்டோ போவீர்கள்" என்று சொன்னான். காளைஇவ் வாறு கூறக் கனமுறு தமிழர் எல்லாம் ஆளன்பொன் முடியின் பேச்சை ஆதரித் தார்கள்; தங்கள் தோளினைத் தூக்கி அங்கை ஒருதனி விரலால் சுட்டிக் "கூளங்காள்! ஒருபொன் கூடக் கொடுத்திடோ ம் வேள்விக்" கென்றார். கையெலாம் துடிக்க அன்னார் கண்சிவந் திடக்கோ பத்தீ மெய்யெலாம் பரவ நெஞ்சு வெந்திடத் "தென்னாட் டார்கள் ஐயையோ அநேக ருள்ளார் அங்கத்தால் சிங்கம் போன்றார் ஐவர்நாம்" எனநி னைத்தே அடக்கினார் எழுந்த கோபம். வஞ்சத்தை எதிர்கா லத்துச் சூழ்ச்சியை வெளிக்காட் டாமல் நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு வாயினால் நேயங் காட்டிக் "கொஞ்சமும் வருத்த மில்லை கொடாததால்" என்ப தான அஞ்சொற்கள் பேசி நல்ல ஆசியும் கூறிப் போனார். 20. வணிகர் வரும்போது
முத்து வணிகர் முழுதும் விற்றுச் சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில் மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார். போகும் போது பொன்கேட்ட அந்த யாகஞ் செய்ய எண்ணு வோர்களின் கொடுவிஷம் பூசிய கூரம்பு போன்ற நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்! ஆத்திர முகங்கள் அங்குள தமிழரைப் பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின! தமிழர் கண்டு சந்தே கித்தனர். "நமது சொத்தும் நல்லுயிர் யாவும் பறிபோகும் என்று படுகின்ற" தென்றே அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான். செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர்; கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர். தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன! வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர். தப்பிய சிற்சில தமிழர் வனத்தின் அப்புறத் துள்ள அழகிய ஊரின் பின்புற மாகப் பிரியும் வழியாய்ப் பொன்முடி யோடு போய்ச்சேர்ந் தார்கள். சூறை யாடிய துறவிகள் அங்கே மாறு பாட்டு மனத்தோடு நின்று "வைதிகம் பழித்த மாபாவி தப்பினான்; பைதலி வனத்தின் பக்க மாகச் செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக் கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனைக் அனுப்பி வைப்போம் வருவீர் இனிநில் லாதீர்" என்று போனாரே. 21. ஜீவமுத்தம்
வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்; வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று வடதிசை நோக்கிச் சென்றாள். நெருங்கலானார்! வளர்புதர்கள் உயர்மரங்கள் நிறைந்த பூமி! நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும் வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்! வணிகர்களும் கண்டார்கள் வெகுதூரத்தில்! பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட்டத்தைப் புலைத்தொழிலும் கொலைத்தொழிலும் புரிவோ ரான வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்; வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான். தன்நடையை முடுக்கினான். எதிரில் மங்கை தளர்நடையும் உயிர்பெற்றுத் தாவிற்றங்கே! என்னஇது! என்னஇது! என்றே அன்னோன் இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான். "நிச்சயமாய் அவர்தாம்" என்றுரைத்தாள் மங்கை "நிசம்"என்றாள்! பூரித்தாள்! மெல்லிடைமேல் கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்; கைகள் கொட்டினாள்! ஆடினாள்! ஓடலானாள். "பச்சைமயில்; இங்கெங்கே அடடா என்னே! பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று கச்சைதனை இறுக்கிஎதிர் ஓடி வந்தான். கடிதோடினாள் அத்தான் என்றழைத்தே! நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது நெடுமரத்தின் மறைவினின்று நீள்வாள் ஒன்று பாய்ந்ததுமேல்! அவன்முகத்தை அணைத்தாள் தாவிப் பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின் சாந்தமுகந் தனைக்கண்டாள்; உடலைக் காணாள்! தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்! தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன் செத்ததற்குச் செத்தாள்அத் தென்னாட் டன்னம்! இரண்டாம் பகுதி முறையீடு
22 தருமபுரச் சந்நிதியில் இருவணிகர்
திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும் தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த - குருமூர்த்தி சீர்மாசி லாமணித் தேசிகனார் சேவடியில் நேர்மான நாய்கன், நிதிமிக்க - ஊர்மதிக்கும் நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம் - அன்னார் அருளுவார்: "மெய்யன் புடையீரே, அப்பன் திருவுள்ளம் நாமறியோம்! சிந்தை - உருகாதீர்! அன்பே சிவமென் றறிந்தோன் அறியார்க்குத் தின்புலால் யாகச் சிறுமைதனை - நன்றுரைத்தான். ஆதலினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ! தீதலால் வேறு தெரியாரோ! - சோதியான் சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர் உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் - மெய்யன்பீர், பூங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! - தீங்கு வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார் கடவுள் கருணை இதுவாம்! - வடவர் அழிவாம் குறுநெறியா ரேனும் பழிக்குப் பழிவாங் குதல்சைவப் பாங்குக் - கிழிவாம். வடநாட்டில் சைவம் வளர்ப்போம்; கொலையின் நடமாட்டம் போகும்! நமனைக் - கெடமாட்டும் தாளுடையான் தண்ணருளும் சார்ந்ததுகண்டோம்; நம்மை ஆளுடையான் செம்மை அருள்வாழி! - கேளீர் குமர குருபரன் ஞான குருவாய் நமை யடைந்தான் நன்றிந்த நாள்! 23. குருபரனுக் கருள்புரிந்தான்
கயிலாச புரத்தில் நல்ல சண்முகக் கவிரா யர்க்கும் மயில்நிகர் சிவகா மிக்கும் வாயிலாப் பிள்ளை யாக அயலவர் நகைக்கும் வண்ணம் குருபரன் அவத ரித்தான் துயரினால் செந்தூர் எய்திக் கந்தனைத் துதித்தார் பெற்றோர். நாற்பது நாளில் வாக்கு நல்காயேல் எங்கள் ஆவி தோற்பது திண்ண மென்று சொல்லியங் கிருக்கும் போது வேற்படை முருகப் பிள்ளை குருபரன் தூங்கும் வேளை சாற்றும்அவ் வூமை நாவிற் சடாட்சரம் அருளிச் சென்றான். 24. ஊமையின் உயர் கவிதை
அம்மையே அப்பா என்று பெற்றோரை அவன் எழுப்பிச் செம்மையே நடந்த தெல்லாம் தெரிவித்தான். சிந்தை நைந்து கைம்மையாய் வாழ்வாள் நல்ல கணவனைப் பெற்ற தைப்போல் நம்மையே மகிழ வைத்தான் நடமாடும் மயிலோன் என்றார். மைந்தனாம் குருப ரன்தான் மாலவன் மருகன் வாழும் செந்தூரில் விசுவ ரூப தரிசனம் செய்வா னாகிக் கந்தரின் கலிவெண் பாவாம் கனிச்சாறு பொழியக் கேட்ட அந்தஊர் மக்கள் யாரும் அதிசயக் கடலில் வீழ்ந்தார்! 25. ஞானகுருவை நாடிச் சென்றான்
ஞானசற் குருவை நாடி நற்கதி பெறுவ தென்று தானினைந் தேதன் தந்தை தாயார்பால் விடையும் கேட்டான். ஆனபெற் றோர்வ ருந்த அவர்துயர் ஆற்றிச் சென்றான், கால்நிழல் போற் குமார கவியெனும் தம்பி யோடே. மீனாட்சி யம்மன் பிள்ளைத் தமிழ்பாட விரைந்து தம்பி தானதைக் குறிப் பெடுக்கத் தமிழ்வளர் மதுரை நாடிப் போனார்கள்; போகும் போது திருமலை நாய்க்க மன்னன் ஆனைகொண் டெதிரில் வந்தே குருபரன் அடியில் வீழ்ந்தான். 26. யானைமேல் பானைத் தேன்
"என்னையும் பொருளாய் எண்ணி எழுதரும் அங்க யற்கண் அன்னைஎன் கனவில் தோன்றி அடிகள்நும் வரவும், நீவிர் சொன்னநற் றமிழும் பற்றிச் சொன்னதால் வந்தேன். யானை தன்னில்நீர் எழுந்த ருள்க தமிழுடன்" என்றான் மன்னன். தெய்விகப் பாடல் தன்னைத் திருவரங் கேற்று தற்கே எய்துமா றனைத்தும் மன்னன் ஏற்பாடு செய்தான். தேவர் துய்யநற் றமிழ்ச்சா ராயம் துய்த்திடக் காத்தி ருந்தார்; கையில்வாத் தியங்கள் ஏந்திக் கந்தர்வர் கண்ணாய் நின்றார். 27. அவையிடைச் சிவை
அரங்கிடை அரசன் ஓர்பால், அறிஞர்கள் ஓர்பால் கேட்கத் தெரிந்தவர் கலையில் வல்லோர் செந்தமிழ் அன்பர் ஓர்பால் இருந்தனர். அரிய ணைமேல் இருந்தனன் குருப ரன்தான்! வரும்சனம் தமிழ ருந்த வட்டிக்க ஆரம் பித்தான். அப்போது கூட்டத் தின்கண் அர்ச்சகன் பெற்ற பெண்ணாள் சிப்பத்தைப் பிரித் தெடுத்த சீனத்துப் பொம்மை போன்றாள் ஒப்பியே ஓடி வந்தாள் காற்சிலம் பொலிக்க! மன்னன் கைப்பற்றி மடியில் வைத்தான்; கவிதையில் அவாவை வைத்தான். 28. தெய்வப் பாடல்
குமரகு ருபரன் பாடல் கூறிப்பின் பொருளும் கூறி அமரரா தியர்வி ருப்பம் ஆம்படி செய்தான்; மற்றோர் அமுதப்பாட் டாரம் பித்தான். அப்பாட்டுக் கிப்பால் எங்கும் சமானமொன் றிருந்த தில்லை சாற்றுவோம் அதனைக் கேட்பீர். "தொடுக்கும் கடவுட் பழம்பாடற் றொடையின் பயனே! நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகு நறுஞ் சுவையே! அகந்தைக் கிழங்கைஅகழ்ந் தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே! வளர்சிமைய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே! எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள் ளத்தில்அழ கொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே! மதுகரம்வாய் மடுக்கும் குழற்கா டேந் துமிள வஞ்சிக் கொடியே வருகவே! மலையத் துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே!" 29. இறைவி மறைவு
என்றந்தப் பாடல் சொன்னான் குருபரன்! சிறுமி கேட்டு நன்றுநன் றென இசைத்தாள்; நன்றெனத் தலை அசைத்தாள்; இன்னொரு முறையுங் கூற இரந்தனள்; பிறரும் கேட்கப் பின்னையும் குருப ரன்தான் தமிழ்க்கனி பிழியுங் காலை, பாட்டுக்குப் பொருளாய் நின்ற பராபரச் சிறுமி நெஞ்சக் கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து கொஞ்சினாள் அரங்கு தன்னில். ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துட் சென்ற தாலே கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் சீமட்டி! 30. திருவடி சரணம்
முழுதுநூல் அரங்கேற் றிப்பின் முடிமன்னன் குதிரை யானை பழுதிலாச் சிவிகை செம்பொன் காணிக்கை பலவும் வைத்துத் தொழுதனன். குருப ரன்பின் துதிநூலும் நீதி நூலும் எழுதிய அனைத்தும் தந்தே சின்னாட்கள் இருந்து பின்னே, தம்பியை இல்லம் போக்கித் தான்சிராப் பள்ளி யோடு செம்மைசேர் ஆனைக் காவும் சென்றுபின் திருவா ரூரில் பைம்புனற் பழனத் தாரூர் நான்மணி மாலை பாடி நம்மைவந் தடைந்த காலை நாமொரு கேள்வி கேட்டோம். அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடு மானந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்." ஆகுமித் திரு விருத்த அனுபவப் பயனைக் கேட்க ஈகுவோன் கையி லொன்றும் இல்லாமை போல் தவித்துத் தேகமும் நடுங்கி நின்று திருவடி சரணம் என்றான் ஏகிப்பின் வருக என்றோம் சிதம்பரம் ஏகி உள்ளான். சென்றஅக் குருப ரன்தான் திரும்பிவந் திடுமோர் நாளும் இன்றுதான். சிறிது நேரம் இருந்திடில் காணக் கூடும். என்றுநற் றேசி கர்தாம் இருநாய்கண் மாருங் கேட்க நன்றுற மொழிந்தார். கேட்ட நாய்கன்மார் காத்தி ருந்தார். 31. சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்
புள்ளிருக் கும்வேளூர் போய்ப் புனைமுத்துக் குமரன் மீது பிள்ளைநூல் பாடி மன்றில் பெம்மானை மும்மணிச் சொல் தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும் சிதம்பரச் செய்யுட் கோவை அம்மைக் கிரட்டை மாலை அருளினான் இருளொன் றில்லான். மூளும்அன் பாற் பண்டார மும்மணிக் கோவை கொண்டு ஆளுடை ஞானா சானின் அடிமலர் தொழுது பாடி நீளுறப் பரிசாய்ப் பெற்ற நெடுநிதி அனைத்தும் வைத்து மீளவும் தொழும் சீடன்பால் விளம்புவான் ஞான மூர்த்தி. "அப்பனே இதுகேள்! இந்த அரும்பொருள் அனைத்தும் கொண்டு செப்பிடும் வடநா டேகிச் சிவதரு மங்கள் செய்க! அப்பாங்கில் உள்ளா ரெல்லாம் அசைவர்கள், உயிர்வ தைப்போர்; தப்பிலாச் சைவம் சார்ந்தால் அன்பிலே தழைத்து வாழ்வார். சைவநன் மடா லயங்கள் தாபிக்க! கோயில் காண்க! நைவார்க்குச் சிவபி ரானின் நாமத்தால் உணவு நல்கும் சைவசத் திரங்கள் காண்க! தடாகங்கள் பூந்தோட் டங்கள் உய்வாக உயிரின் வேந்தன் உவப்புறச் செய்து மீள்க!" என்றுதே சிகனார் சொல்லி இனிதாக ஆசி கூறி நன்றொரு துறவு காட்டிக் காவியும் நல்கி, ஆங்கே "இன்றொடு வட தேசந்தான் எம்பிரான் இருக்கை யாகித் தென்றமிழ் நாட்டினைப் போல் சிறப்பெலாம் எய்த" என்றார். மறைநாய்கன் மான நாய்கன் வாய்மூடிக் காத்தி ருந்தார். குறைவறு பரி சனங்கள் கூட்டமாய்த் தொடர, அன்பால் இறைவனாம் தேசி கன்தாள் இறைஞ்சிய குருப ரன்தான் பிறைசூடி தன்னைப் பாடிப் பெருஞ் சிறப்போடு சென்றான். 32. இப்போதெப்படி நாய்கன்மார்கள்?
தேசிகர் சரிதம் சொன்னார் செவிசாய்த்தார் நாய்கன் மார்கள் ஆசிகள் சொல்லக் கேட்டார் அப்போது குருப ரன்தான் தேசிகர் திருமுன் வந்து சேர்ந்ததும் பார்த்தி ருந்தார் நேசத்தால் தேசி கர்தாம் நிகழ்த்திய அனைத்தும் கேட்டார். வடநாட்டை நோக்கிச் சென்ற வண்ணமும் பார்த்தி ருந்தார்; உடன்சென்று வழிய னுப்ப ஒப்பினோர் தமையும் பார்த்தார்; கடனாற்றத் தேசி கர்க்குக் கைகளும் குவித்தார்; செல்ல விடைகேட்டார். தேசி கர்தாம் விடைதந்தார். எனினும் அந்தோ அழுதிடு நாய்கன் மார்கள் அழுதுகொண் டேமீண் டார்கள்; எழுதிய ஓவி யங்கள் கலைந்தன எனப் பதைத்தார். பழுதிலா எம்கு டும்பப் பரம்பரை 'ஆல்' இன்றோடு விழுதொடு சாய்ந்த தென்று விளம்பினார் உளம் பதைத்தே. எதிர்பாராத முத்தம் முற்றும்
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |