http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



எதிர்பாராத முத்தம்

... தொடர்ச்சி ...

இனமலர் அழகு கண்டே
'இச்' சென்று முத்தம் ஈவார்.

மணிப்புனல் பொய்கை தன்னில்
மங்கைமார் கண்ணும், வாயும்

அணிமூக்கும், கையும் ஆன
அழகிய மலரின் காடும்,

மணமலர்க் காடும் கூடி
மகிச்சியை விளைத்தல் கண்டோம்!

அணங்குகள் மலர்கள் என்ற
பேதத்தை அங்கே காணோம்!

பொய்கையில் மூழ்கிச் செப்பில்
புதுப்புனல் ஏந்திக் காந்த

மெய்யினில் ஈர ஆடை
விரித்துப்பொன் மணி இழைகள்

வெய்யிலை எதிர்க்கப் பெண்கள்
இருவர் மூவர்கள் வீதம்

கைவீசி மீள லுற்றார்
கனிவீசும் சாலை மார்க்கம்!


3. பூங்கோதை - பொன்முடி

பூங்கோதை வருகின்றாள் புனிதையோடு!
பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து
வாங்கப் போகின்றான் அவ்வழியாய்! வஞ்சி,
வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன்
பூங்கோதையா என்று சந்தேகித்தான்!
போன வருஷம் வரைக்கும் இரண்டு பேரும்
வங்காத பண்டமில்லை; உண்ணும் போதும்
மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்!

"அத்தான்" என்றழைக்காத நேரமுண்டா!
அத்தை மகளைப்பிரிவானா அப்பிள்ளை!
இத்தனையும் இரு குடும்பம் பகையில் மூழ்கி
இருந்ததனை அவன் நினைத்தான்! அவள் நினைத்தாள்!

தொத்துகின்ற கிளிக்கெதிரில் அன்னோன் இன்பத்
தோளான மணிக்கிளையும் நெருங்க-மேலும்
அத்தாணி மண்டபத்து மார்பன் அண்டை
அழகிய பட்டத்தரசி நெருங்கலானாள்!

"என்விழிகள் அவர்விழியைச் சந்திக்குங்கால்
என்ன விதம் நடப்ப" தென யோசிப்பாள் பெண்;
ஒன்றுமே தோன்றவில்லை; நிமிர்ந்தே அன்னோன்
ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள்!

சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சிரிக்கும்!
திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்!
"இன்னவர் தாம் என் அத்தான்" என்றே அந்த
எழிற் புனிதையிடம் விரல் சுட்டாது சொன்னாள்!

பொன்முடியோ முகநிமிர்ந்து வானிலுள்ள
புதுமையெலாம் காண்பவன் போல் பூங்கோதைதன்
இன்பமுகம் தனைச் சுவைப்பான் கீழ்க்கண்ணாலே,
'இப்படியா' என்று பெரு மூச்செறிந்தே,

"என் பெற்றோர் இவள் பெற்றோர் உறவுநீங்கி
இருப்பதனால் இவளென்னை வெறுப்பாளோ? நான்
முன்னிருந்த உறவுதனைத் தொடங்கலாமோ
முடியாதோ" என்று பல எண்ணி நைவான்.

எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவளும்பார்த்தாள்;

இரு முகமும் வரி வடிவு கலங்கிப் பின்னர்
முதல் இருந்த நிலைக்கு வர இதழ் சிலிர்க்க,
முல்லை தனைக் காட்டி உடன் மூடி மிக்க
அதிகரித்த ஒளி வந்து முகம் அளாவ
அடி மூச்சுக் குரலாலே ஒரே நேரத்தில்
அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில்
"அத்தான்", "பூங்கோதை" என்றார்! நின்றார் அங்கே.



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/bharathidasan/ethirpaaraathamuththam2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs