சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவதாகிய கலித்தொகை ... தொடர்ச்சி - 13 ... 121
ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது, தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம், தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர, புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று, வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி 5 பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப! தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற, தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே உறையொடு வைகிய போது போல், ஒய்யென நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு 10 வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு; இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி, 15 தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு என ஆங்கு, எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை 20 மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து, சாயினள் வருந்தியாள் இடும்பை பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே. 122
'கோதை ஆயமும் அன்னையும் அறிவுற, போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப, காதல் செய்து அருளாது துறந்தார்மாட்டு, ஏது இன்றி, சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை; பலவும் நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; 5 அலவலை உடையை' என்றி தோழீ! கேள், இனி: மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து, அவன் காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், பேணி அவன் சிறிது அளித்தக்கால், என் 10 நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்; இருள் உறழ் இருங் கூந்தல் மகளிரோடு அமைந்து, அவன் தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், அருளி அவன் சிறிது அளித்தக்கால், என் மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்; 15 ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து, அவன் உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்மன்; அறியினும், புல்லி அவன் சிறிது அளித்தக்கால், என் அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்; அதனால், 20 யாம நடு நாள் துயில் கொண்டு ஒளித்த காம நோயின் கழீஇய நெஞ்சம் தான் அவர்பால் பட்டதாயின், நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே. 123
கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும் சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத, ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல், பெருங் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறுங் கானல்; 5 காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான், மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ காணவும் பெற்றாயோ? காணாயோ? மட நெஞ்சே! கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை, அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ 10 புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே! வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான், செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே! என ஆங்கு 15 எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ் அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ, இருங் கழி ஓதம் போல் தடுமாறி, வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!
124
ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின், 5 கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே, பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்; இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின், புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் 10 துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி, அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்; இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின், நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி, 15 நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால்; அதனால், பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால், அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர, புரி உளைக் கலிமான் தேர் கடவுபு 20 விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே. 125
'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார், தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள், நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,' வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5 நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால், 'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்; மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண் அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10 இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ, நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப் புலந்து அழ, புல்லாது விடுவாய்! இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ; 15 இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால் பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் நுண் வரி வாட, வாராது விடுவாய்! தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ; என ஆங்கு 20 அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப் பிறை ஏர் சுடர் நுதற் பசலை மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே. 126
பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி, தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர, செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல், எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப! 5 அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற் புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில் 10 தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே; நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால், தோள் மேலாய் என நின்னை மதிக்குமன்; மதித்தாங்கே, 15 நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே; என ஆங்கு, பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின், அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி 20 மதி மருள் வாள் முகம் விளங்க, புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே! 127
தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல் வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப! 5 கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர், நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க, இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை; குறி இன்றிப் பல் நாள், நின் கடுந் திண் தேர் வரு பதம் கண்டு, 10 எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக, செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை; காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை, யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ 15 வேய் நலம் இழந்த தோள் விளங்குஇழை பொறை ஆற்றாள், வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை; அதனால், இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர, 'உரவுக் கதிர் தெறும்' என ஓங்கு திரை விரைபு, தன் 20 கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளியே. 128
'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று, வாடை தூக்க, வணங்கிய தாழை ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை, நளி இருங் கங்குல், நம் துயர் அறியாது, அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் 5 கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல, புதுவது கவினினை' என்றியாயின், நனவின் வாரா நயனி லாளனைக் கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி: 'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என் 10 நலம் தாராயோ?' என, தொடுப்பேன் போலவும், கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி, 'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும்; 'முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய்' என, நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், 15 'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' என, தலையுற முன் அடிப் பணிவான் போலவும்; கோதை கோலா, இறைஞ்சி நின்ற ஊதைஅம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும், 'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே, 20 'பேதையைப் பெரிது' எனத் தெளிப்பான் போலவும்; ஆங்கு கனவினால் கண்டேன் தோழி! 'காண் தகக் கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு' என 25 அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே. 129
தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால், பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல், எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய; நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின், அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா 5 மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர; எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை; பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்! 'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம் நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் 10 காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! 'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ 15 பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்! 'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ என ஆங்கு, 20 அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட, பெரும் பேதுறுதல் களைமதி, பெரும! வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே. 25 130
'நயனும், வாய்மையும், நன்னர் நடுவும், இவனின் தோன்றிய, இவை' என இரங்க, புரை தவ நாடி, பொய் தபுத்து, இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல், நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செய, 5 கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை; இம் மாலை, ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! 10 இம் மாலை, இருங் கழி மா மலர் கூம்ப, அரோ, என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்! இம் மாலை, கோவலர் தீம் குழல் இனைய, அரோ, என் 15 பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும்! என ஆங்கு, படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை, குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் 20 தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே; |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
அக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு மொழி: தமிழ் பதிப்பு: 38 ஆண்டு: 2016 பக்கங்கள்: 232 எடை: 250 கிராம் வகைப்பாடு : குழந்தைகள் ISBN: 978-81-8402-231-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 110.00 தள்ளுபடி விலை: ரூ. 100.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|