மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 21 - இதென்ன விரதம்?

     சோழ இளவரசி அருந்திகைப் பிராட்டி பிக்ஷுணிக் கோலத்திலிருந்த திருபுவனியைக் கண்டு திகைப்படைந்ததையும், திருபுவனியும் அருந்திகையைக் கண்டு திகைப்படைந்தவள் போல் காணப்பட்டதையும் இடங்காக்கப் பிறந்தார் ஒரு விதமாகப் புரிந்து கொண்டார். அருந்திகையின் முகத்தைப் பார்த்த போது அவரை அவ்விடத்திலிருந்து வெளியே செல்லும்படி அவள் சமிக்ஞை காட்டினாள். இடங்காக்கப் பிறந்தாரும் அதை அறிந்து கொண்டவராக, "நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள். எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. உத்தரவு கொடுங்கள்" என்று அருந்திகையை நோக்கிக் கேட்கவும், அவளும் தலையசைத்தாள். இடங்காக்கப் பிறந்தார் அந்த இடத்தை விட்டு அகன்றார்.


என்றும் காந்தி
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நெடுங்குருதி
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

அகத்தில் புழுங்கும் வெப்பம்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

India Ahead: 2025 and Beyond
Stock Available
ரூ.450.00
Buy

ஆகாயத் தாமரை
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - 2
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

நான் செய்வதைச் செய்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

1975
இருப்பு உள்ளது
ரூ.405.00
Buy

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

உங்கள் மனிதம் ஜாதியற்றதா?
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ரயில் நிலையங்களின் தோழமை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

வளம் தரும் விரதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

மகாநதி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

காலம் உங்கள் காலடியில்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

எழுத்தாளன்
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நீர்த்துளி
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
     அவர் சென்ற பின் அருந்திகைப் பிராட்டி சாளரத்துக்குச் சமீபமாக நின்று கொண்டிருந்த திருபுவனியை நெருங்கி அவளுடைய மெல்லிய தோள் மீது அன்போடு தொட்டு, "உன்னை எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறது. ஆனால் எங்கே பார்த்தோம் என்று தான் தெரியவில்லை" என்றாள்.

     "எனக்கும் உங்களை எங்கோ பார்த்த நினைவாகத்தான் இருக்கிறது. உங்களைப் போல் எனக்கும் உங்களை எங்கு பார்த்தோம் என்பதுதான் புரியாமலிருந்தது. அப்புறம் புரிந்து விட்டது!" என்றாள் திருபுவனி அன்போடு. அருந்திகை சிரித்திக் கொண்டே, "நாம் ஏதாவது கனவில் சந்தித்திருப் போமோ?" என்று கேட்டாள்.

     "இருக்கலாம். நான் வேண்டுமானால் உங்களைக் கனவில் சந்தித்திருக்கலாம். ஆனால் நீங்கள் என்னைச் சந்தித்திருக்க நியாயமில்லையே?" என்றாள் திருபுவனி.

     "ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டாள்.

     "ஏன் அப்படிச் சொல்கிறேனா? நான் ஒரு சாதாரணப் பெண். என்னைப் பற்றி உங்களைப் போன்றவர்கள் நினைப்பதற்கு நியாயமில்லை. ஆனால் நீங்கள் ஒரு அரசகுமாரி. அதிலும் புகழ்பெற்ற சோழ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். உங்களைப் பற்றி இந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் நினைப்பது சகஜம்தானே? உங்களைப் பற்றியும், பெருமை மிகுந்த உங்கள் குலத்தைப் பற்றியும் எத்தனையோ தடவைகள் நான் நினைத்திருக்கிறேன். அந்த நினைவின் காரணமாக எவ்வளவோ தடவைகள் கனவு கண்டிருக்கிறேன். அந்தக் கனவுகளில் நீங்கள் வந்திருக்கலாமல்லவா?"

     அருந்திகை ஒரு பெருமூச்சு விட்டாள். பிரகாசம் நிறைந்த அவளுடைய முகம் சிறிது வாட்டமடைந்தது. "எங்கள் குலத்தைப் பற்றியும் எங்களைப் பற்றியும் நினைப்பவர்களும் இன்னும் உலகத்தில் இருக்கிறார்களா? இமயம் போல் தலை நிமிர்ந்து நின்ற சாம்ராஜ்யமே அழிந்து அந்த இடத்தில் சிறிய மணற் குன்று போல் பழையாறை நகர்ச் சோழர்களென்று பெயர் சொல்லிக் கொண்டு நாங்கள் இருந்து வருகிறோம். இந்தச் சிறு மணற்குவியலையும் நாற்புறமும் வெள்ளம் போல் வந்து அழித்துவிட எத்தனையோ பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் தஞ்சையிலிருந்து வந்த புலிப்பள்ளி கொண்டார் உங்கள் குலத்தின் சம்பந்தத்தை விரும்புவதும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் சிறு சந்ததியையும் அழித்து விடச் செய்யும் முயற்சியாகத்தான் நான் நினைக்கிறேன்" என்றாள்.

     இதைக் கேட்டதும் திருபுவனியின் முகத்திலும் ஒரு வாட்டம் ஏற்பட்டது. அவள் அருந்திகையைச் சமாதானம் செய்கிறவள் போல் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு, "உங்களைச் சூழந்த ஆபத்துக்களை நீங்கள் சொல்வதிலிருந்து நான் ஒருவாறு உணர்ந்து கொண்டேன். ஆனால் உங்களை நாடு துறந்து விட்டதாக நீங்கள் நினைத்து ஆயாசம் அடைய வேண்டாம். உங்களுக்கு எதிரிடையாக யார் யார் சூழ்ச்சி செய்கிறார்களோ, அதைப் போல உங்களுக்கு ஆதரவாக எதிரிகளின் சூழ்ச்சிகளைக் கவிழ்க்கவும் சிலர் சூழ்ச்சி செய்து கொண்டு தான் இருப்பார்கள் என்பதைத் தாங்கள் மறக்க வேண்டாம். இன்று இச்சோழ நாடு எப்படி இருக்கிறதென்று நினைத்துப் பாருங்கள். மிகுந்த கலக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சரியான அரசர்கள் இல்லை. சிறு சிறு அரசர்களாக இருப்பவர்களும் பெருத்த படட பலம் கொண்ட பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் அடங்கியவர்களாக இருக்கிறார்கள். பாண்டியர்களும் பல்லவர்களும் பகை கொண்டு ஒருவருக்கொருவர் ஈடு இணையின்றி உலகெங்குமே தங்களுடைய அரசாட்சியை நிலை நிறுத்திவிட மாட்டோமா என்ற ஆணவத்தில் இருக்கிறார்கள். இதனால் எந்த நேரத்திலும் போர் முழக்க எச்சரிக்கையாகவே இருக்கிறது. பாண்டிய நாட்டுக்கும் பல்லவ நாட்டுக்கும் இடையே உள்ள பொன் கொழிக்கும் இந்தப் பூமியில் தான் பிணங்களைக் குவிக்கிறார்கள். சோழ வள நாடு ஆக்கிரமிப்பு வெறி கொண்ட மன்னர்கள் மோதிக் கொள்வதற்குரிய சரியான போர்க்களமாகி விட்டது. ஊருக்கு ஊர் தனித்தனியாக இருந்து ஆளும் மன்னர்கள் எல்லாம் சமயம் பார்த்து வலுத்த கையோடு சேர்ந்து போராடித் தங்கள் சிறு நலனைப் பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்களே தவிர, மக்களைப் பற்றி நினைப்பதில்லை. இந்த நிலையில் மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் நினைத்துப் பார்க்கத்தானே வேண்டும்? வறுமையும் துயரும் ஏற்படும் போது தான் சீரும் சிறப்புமாக இருந்த அக்காலத்தை எண்ணிப் பார்க்கத் தோன்றும். மகோன்னத நிலையில் இச்சோழ மண்டலத்தை ஆண்ட கரிகாலன் மரபினரைப் பற்றி இவர்கள் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் தம் உள்ளத்தில் மறுபடியும் இந்நாட்டில் சோழ சாம்ராஜ்யம் ஏற்பட்டுச் செல்வமும் சிறப்பும் கொண்டதாகாதா என்று தான் நினைக்கின்றனர். இதை எண்ணித்தான் மன ஆறுதல் அடைய வேண்டும். தஞ்சை அமைச்சர் உங்களுக்குச் சிறு ஆதரவாக இருக்கும் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொண்டால் உங்களுக்குள்ள சிறு ஆதரவை அழித்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அவருடைய குமாரனை நான் விவாகம் செய்து கொள்ளச் சம்மதித்தால் அல்லவா அம்மாதிரி நிகழும் என்று எண்ணுவதற்கு? துறவறத்தில் நாட்டம் கொண்ட என்னை அவர் மகனுக்கு மணவாட்டியாக்க நினைப்பது வீண் பிரயாசையாகத்தான் முடியும்!" என்றாள்.

     "திரிபுவனி! உனக்குத் துறவறத்தில் தீவிரமாகப் பற்றுதல் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். உன்னைப் போன்ற இளம் வயதுடைய பெண்கள் உலக இன்ப சுக, மாயைகளிடமிருந்து விலகி துறவறம் கொள்வது என்பது முடியாத காரியம். அப்படித் துறவறம் பூணுவது நியாயமாகாது. உன்னுடைய மனம் தீவிரமாகத் துறவறத்தைப் பற்றிக் கொண்டு நிற்கவில்லை என்பதை இன்று சீவர ஆடைகளையெல்லாம் களைந்து பட்டாடை ஆபரணங்களை அணிந்து கொண்டதிலிருந்து பிறர் அறிந்து கொண்டிருக்க மாட்டார்களா?" என்றாள் அருந்திகை.

     திருபுவனி ஏளனமாகச் சிரித்தாள். "சீவர ஆடையை விட்டுச் சில நிமிட நேரங்கள் பட்டாடையும் பூஷணங்களும் அணிந்து கொண்டதினால் என் மனசை மாற்றி விட்டதாகச் சொல்ல முடியுமா? அவைகளை ஏதோ காரணத்துக்காக அணிந்து கொண்டேன். தஞ்சை அமைச்சர் தன் மகன் கோளாந்தகனுக்கு மணம் முடிக்க ஆசை வைத்ததும், மறுபடியும் சீவர ஆடையை அணிந்து கொள்வதுதான் நல்லதென்று பட்டது. அவைகளை அணிந்து கொண்டேன். உடலை மறைக்கும் ஆடைகளைக் கொண்டு உள்ளத்தின் நிலையைத் தீர்மானம் செய்வது மடமையாகும்" என்றாள் உறுதியான குரலில்.

     அருந்திகை சிரித்துக் கொண்டே, "உண்மை. நீ இப்பொழுது சீவர ஆடையைச் சுற்றிக் கொண்டிருக்கிறாய். இதை வைத்துக் கொண்டு உன் உள்ளத்தின் நிலையை நான் நிர்ணயித்து விட மாட்டேன். இந்த வேஷத்துக்கும் உன் உள்ளத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்று நான் கருதி விட மாட்டேன்" என்றாள்.

     "நீங்கள் என்னை எப்படிக் கருதினாலும் சரியே. ஒவ்வொருவரும் நடந்து கொள்வது அவரவர்கள் மனத்தில் கொண்ட லட்சியத்தைப் பொறுத்ததுதான். என்னுடைய நிலையைப் பற்றி அதிகமாக என்னைக் கிளறிக் கேட்காதீர்கள். நீங்கள் எனக்கு ஏதேனும் உபகாரம் செய்ய நினைத்தால் என் தகப்பனாரிடம் சென்று, 'உங்களுடைய குமாரிக்குத் தஞ்சை அமைச்சரின் மகன் கோளாந்தகனை விவாகம் செய்து வைக்க முயலாதீர்கள்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் போங்கள்!" என்றாள்.

     அருந்திகை சிரித்துக் கொண்டே, "நிச்சயம் செய்கிறேன். ஆனால் உன்னை வேறு யாருக்குக் கல்யாணம் செய்து வைப்பது என்று கேட்டால் அதற்கும் நான் யோசனை சொல்லத்தானே வேண்டும்?" என்றாள்.

     "சொல்லுகிறேன். 'உங்கள் மகள் புத்த பெருமானின் அறவழிகளில் சென்று கொண்டிருக்கிறாள். அவளை அவ்வழியிலிருந்து தாங்கள் திருப்ப முடியாது. ததாகதரின் பேரொளியில் கலந்து விட்ட அவளை மறுபடியும் வாழ்க்கையின் மாய இருளில் சிக்க வைப்பது மிகவும் கடினம்' என்று சொல்லுங்கள்" என்றாள் திருபுவனி.

     விளையாட்டாகப் பேசிக் கொண்டு வந்த அருந்திகை அப்பொழுது திருபுவனி சொன்ன வார்த்தைகளை விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள முற்படவில்லை. உண்மையாகவே அவளுக்கு துறவறத்தில் தீவிரப் பற்று தான் இருந்தது என்பது நன்கு விளங்கியது. அவளுக்குத் துறவறத்தில் இத்தகைய பக்குவம் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றி நினைக்க அருந்திகைக்குச் சிறிது ஆச்சரியம்தான் ஏற்பட்டது. "உன் வார்த்தைகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. துறவறத்தை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு உனக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. உன்னைப் போன்ற இவ்வளவு அழகான இளம் வயதுடைய பெண்களை யெல்லாம் துறவு மார்க்கத்தில் இழுக்கும் பௌத்த சங்கத்தைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. இது என்ன ஆடை? இது என்ன வேஷம்? இவ்வித ஆடைகளை அணிந்து கொண்டு தலையைச் சடையாக்கிக் கொண்டை போட்டுக் கொண்டால் உன் யௌவன அழகு குறைந்து விடுமா? உன்னைப் பார்த்தவர்கள் பக்தியும் அடக்கமும் காட்டுவதை விட உன்னிடம் மோகமும் தாபமும் தான் அதிகமாகக் காட்டுவார்கள். எவரும் இந்தப் பருவத்தில் உன் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டதாகக் கருதுவார்களே தவிர, நேராக்கிக் கொண்டதாகக் கருத மாட்டார்கள். உள்ளம் தூய்மையாக இருந்தாலும் உடலழகு உள்ளத் தூய்மையையும் பாழாக்க வழி வகுத்து விடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். திருபுவனி! உனக்கு நான் உற்ற தோழியாகி விட்டேன். உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய நான் என்றும் சித்தமாக இருக்கிறேன். என்னிடம் உன் அந்தரங்கத்தைச் சொல்வதில் பிசகு ஒன்றும் இல்லை. உன்னிடமிருந்து விவரமாக எல்லாம் அறிந்து கொள்ளப் பிரியப் படுகிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் சொல்லு!" என்றாள்.

     திருபுவனி அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே ஒரு பெருமூச்சு விட்டாள். "என்னுடைய கதையை அறிந்து கொள்ளுவதினால் உங்களுக்கு எவ்விதமான பலனுமில்லை. அவைகளை யெல்லாம் உங்களிடம் சொல்ல நான் பிரியப்படவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எனக்கு உற்ற தோழியாகி விட்டதாக உங்கள் திருவாக்கிலிருந்தே வெளியாகி விட்டது. அப்படியே எனக்கு உற்ற தோழியாகத் தாங்கள் இருப்பதை நான் விரும்புகிறேன். என் தகப்பனார் இடங்காக்கப் பிறந்தார் என்பதைத் தவிர வேறு அதிக விவரம் உங்களுக்கு வேண்டாம். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் குழந்தையாக இருந்த போது கள்வர்களால் அபகரிக்கப்பட்டேன். பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நான் இந்தக் குடும்பத்துக்கு வந்திருக்கிறேன். இதற்குள் எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி எப்படி மாறின என்பவையெல்லாம் விவரிக்க எனக்கு விருப்பமில்லை. நீங்கள் எனக்காக ஏதேனும் இப்பொழுது உதவி செய்ய நினைத்தால், அது என் தகப்பனாரிடம் எனக்கு மணம் முடிக்காமலிருக்கும்படி செய்வதுதான். அதைத்தான் எனக்கு நீங்கள் செய்த பேருதவியாக நினைப்பேன். அத்துடன் துறவு வாழ்க்கையில் உள்ள நான் குடும்பச் சூழ்நிலையில் இருக்கப் பிரியப்படவில்லை. எப்பொழுது நினைக்கிறேனோ அப்பொழுது இங்கிருந்து போய் விடுவேன் என்பதையும் தெளிவாகச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் அடைப்பது போல் இந்த மாளிகையில் அடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதானே தவிர, நான் குடும்பத்தாரோடு எவ்வித ஒட்டுதலும் கொள்ளவில்லை. தன்னிச்சையாகப் பறக்கும் என் மனம் எந்தக் கூண்டிலும் அடைபட்டு விடவில்லை. அவர்கள் என் வாழ்க்கை நலனுக்காக ஏதேதோ திட்டம் வகுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் நானும் எனக்காக ஏதேதோ திட்டம் வகுக்கத் தொடங்கியிருக்கிறேன் என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாது..." என்றாள்.

     அருந்திகை சில நிமிட நேரம் பேசாமல் இருந்துவிட்டு, "உன் மனத்தை என்னால் திருப்ப முடியாது. ஒரு நாள் என் வார்த்தையைக் கேட்டு நடப்பாய் என்றே நம்புகிறேன். இப்பொழுது நான் உன்னிடம் சொல்லியபடியே உன் தகப்பனாரிடம் சொல்லி விட்டுப் போகிறேன். ஆனால் அவருடைய அபிப்பிராயம் எப்படியோ? எனக்கும் தஞ்சை அமைச்சரின் மகனுக்கு நீ வாழ்க்கைப் படுவதில் சம்மதமில்லை. ஆனால் விவாகமே செய்து கொள்ளாமல் இப்படி பிக்ஷுணியாகவே இருப்பதிலும் பிரியமில்லை. இதை நன்றாக யோசித்து ஒரு முடிவு செய்ய வேண்டியது உன்னுடைய பொறுப்பு" என்றாள்.

     திருபுவனி சிரித்தாள். "ஆகட்டும்! நான் கடைசியாக உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இந்த நாட்டில் என்னுடைய விவாகப் பருவம் கடப்பதற்கு முன் சோழ சாம்ராஜ்யம் ஏற்படுமானால் ஒரு வேளை நான் விவாகம் செய்து கொள்ளலாம்!" என்றாள்.

     அருந்திகைப் பிராட்டி திகைப்பும் வியப்பும் அடைந்தாள். பிறகு, "நீ அதற்காகத்தான் இந்த பிக்ஷுணிக் கோலம் பூண்டிருக்கிறாயா? இது என்ன கனவு? இது என்ன விரதம்? வேடிக்கையாக இருக்கிறது. இன்று உள்ள நிலையில் உன் விருப்பம் நிறைவேறுமா? இதற்காக நீ ஏன் வாழ்க்கையைப் பாழ்பண்ணிக் கொள்கிறாய்?" என்றாள்.

     "என்னைப் போன்ற இரண்டொருவருடைய வாழ்வு பாழானால் பாதகமில்லை. அதன் மூலமாக இந்தச் சோழ வள நாடு நன்மையடையுமானால் அதை விட உயர்ந்தது வேறு எதுவுமில்லை!" என்றாள் திருபுவனி.

     அருந்திகை திருபுவனியின் லட்சியத்தையும் தியாக உணர்ச்சியையும் எண்ணி வியந்தாள். தங்கள் குலத்தினர் நாட்டைப் பெருமையுற ஆட்சி செய்ய வேண்டுமென்பதற்காகத் திருபுவனி போன்ற இளம் பெண்கள் வாழ்வைத் துச்சமாக மதிப்பதையெண்ணி அவள் மனம் நெகிழ்ந்தது. திருபுவனி போன்றவர்களின் தியாகத்துக்காக எப்படி நன்றி செலுத்துவது என்று தான் அவளுக்குத் தெரியவில்லை. அவள் திருபுவனிக்கு எவ்வித பதிலும் சொல்லாமல் அவளை ஆர்வத்தோடு அணைத்து கொண்டு, "உன்னைப் போன்ற தோழி எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம் தான். இருளடைந்த சோழ பாரம்பரியத்தை மறுபடியும் பிரகாசிக்க வைக்க முயலும் உன்னைப் போன்றவர்களுக்கு நான் எந்த வகையில் நன்றி தெரிவித்தாலும் போதாது. சரி, நான் வருகிறேன். எப்பொழுதும் உன்னுடைய நலனனப் பாதுகாப்பதற்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன் என்பதை நீ நிச்சயம் நம்பலாம். நான் அடிக்கடி உன்னை வந்து சந்திக்காமல் இருக்க மாட்டேன். என்னால் உனக்கு ஏதேனும் காரியமாக வேண்டுமானால் தாராளமாகக் கேட்கலாம். நான் சென்று வருகிறேன்!" என்று விடைபெற்று வெளியே வந்தாள்.

     தம் மகள் திருபுவனியோடு பேசிக் கொண்டிருந்த அருந்திகைப் பிராட்டியின் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்தார் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார். அவருடைய மகன் பொற்கோமனும் அங்கே நின்றான்.

     அருந்திகை முகத்தில் வருத்தக் குறியுடன் வந்து, "திருபுவனியுடன் இவ்வளவு நேரம் பேசியும் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. அவளைப் புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது. அவளுக்கு ஏன் துறவறத்தில் இவ்வளவு பற்றுதல் ஏற்பட்டதோ தெரியவில்லை. இவ்வளவு காலமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததால் அவள் மிகவும் அல்லல்பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் இந்த வயதில் துறவறத்தில் இவ்வளவு பற்றுதல் ஏற்படக் காரணமில்லை. அவளுக்கு விவாகத்தில் பிரியமே இல்லை. குடும்ப மார்க்கத்தில் பற்றுதலே இல்லை. ஓரளவு உங்களுக்காக - உங்கள் மனச் சாந்திக்காகச் சீவர ஆடைகளைக் களைந்து நல்லாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டிக் கொண்டாள். தஞ்சை அமைச்சரின் புதல்வருக்கு அவளைக் கலியாணம் செய்து கொடுத்துவிடப் போவதாகத் தாங்கள் தீர்மானித்திருப்பதை யறிந்ததும், மறுபடியும் துவராடையை யணிந்து கொண்டு விட்டாள். உங்களுடைய பிரயாசை யெல்லாம் வீணானதென்றே நினைக்கிறேன். அவள் நெடு நாட்கள் வரையில் இந்தக் குடும்பத்தில் தரித்திருக்க மாட்டாளென்று தான் தோன்றுகிறது" என்றாள்.

     இதைக் கேட்டதும் பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தாரின் முகம் சுருங்கியது. அவர் மனம் மிகவும் இடிந்தவராக ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே, "இவ்வளவு நாட்களுக்குப் பின்னும் எவ்வளவோ சிரமத்தின் பேரில் என் அருமை மகளைத் தேடிக் கண்டு பிடித்தேன். ஆனால் அவள் சித்தம் இப்படி இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இதுவும் என் துரதிர்ஷ்டம்தான். அவள் மனநிலையை மாற்ற என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி இனி தீவிரமாக யோசிக்க வேண்டியது தான். நான் புலிப்பள்ளி கொண்டாருக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன ஆவது? அவர் எவ்வளவு ஆவலாக இருக்கிறார் தெரியுமா? அவருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ளலாமா? அது எவ்வளவு ஆபத்தானது?..." என்றார்.

     "அவள் அபிப்பிராயப்படியே நடந்தால் விபரீதமாகத்தான் முடியும். எப்படியாவது நாம் இந்தக் கலியாணத்தை முடித்து விட வேண்டியதுதான். அவள் பிக்ஷுணிக் கோலத்துடனேயே இருந்தாலும் பாதகமில்லை. பலாத்காரமாகவாவது அவளுக்கு மணம் முடித்து விட வேண்டும். கலியாணத்தைச் செய்து விட்டால் அப்புறம் அவள் மன நிலை தானே திரும்பி விடும். அவளைப் புலிப்பள்ளியாரின் மகன் கோளாந்தகனுக்குத்தான் மணம் செய்து வைக்க வேண்டும்" என்றான் பொற்கோமன்.

     "இவ்வளவு பிடிவாதத்தோடு அவளுக்கு மணம் முடிப்பது பிசகு. பொதுவாக அவள் தஞ்சை அமைச்சரின் புத்திரரை விவாகம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதை முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை அவளுக்கு வேறு யாரையேனும் கலியாணம் செய்து வைக்க நீங்கள் முயன்று பார்த்தால் அவள் மனம் மாறினாலும் மாறலாம்" என்றாள் அருந்திகை.

     பெருந்தக்க இடங்காக்கப் பிறந்தார் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.

     "இவ் விவாக விஷயத்தில் இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்ல முடியாதவளாக இருக்கிறேன். அவளுக்கு விருப்பம் இல்லாத ஒருவருக்கு அவசர விவாகம் செய்து வைப்பது முறையாகாது என்பது தான் என் அபிப்பிராயம். அப்புறம் உங்கள் விருப்பம்" என்று சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டு பல்லக்கில் சென்று அமர்ந்தாள் அருந்திகை. பரிவாரங்கள் சூழப் பல்லக்கும் புறப்பட்டது.

     அருந்திகையின் பல்லக்கும் பரிவாரங்களும் கண் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பொற்கோம இடங்காக்கப் பிறந்தார் சிறிது ஆத்திரமும் கோபமும் கொண்டவனாகத் தன் தகப்பனாரைப் பார்த்து, "அருந்திகைப் பிராட்டிக்கு நாம் தஞ்சை அமைச்சரோடு பெண் கொடுத்து உறவு கொள்வதில் பொறாமை. இவளே திருபுவனியின் மனத்தைக் கலைத்திருப்பாள்" என்று கூறினான்.

சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode - PDF
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode
     ஏலாதி (உரையுடன்) - Unicode
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode
     மூவருலா - Unicode
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode