http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 1 - வீரர் குலத்துதித்த ஜோதி

     கொடும்பாளூர் அரசன் பூதி விக்கிரம கேசரி கொடும்பை நகரைச் சுற்றி அமைத்திருந்த கோட்டை எல்லோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாகத்தான் இருந்தது. விளையாட்டுப் போல் நகரைச் சுற்றிலும் அதிசயிக்கத் தக்க கோட்டையையும் பிரும்மாண்டமான அகழிகளையும் சிருஷ்டித்து விட்டான் அந்த மகா வீரன். உண்மையாகவே விக்கிரம கேசரி சிருஷ்டித்திருந்த அக் கோட்டை பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்குமே சிறிது அச்சத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. விக்கிரமகேசரி இப்படி ஒரு கோட்டையை எழுப்பக் காரணம் என்ன? ஏதோ முன்னேற்பாடாகத்தான் அந்த வீரன் தன் நகரைச் சுற்றிலும் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறான் என்று எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. விக்கிரம கேசரி பல்லவ மன்னனுக்கு அடங்கிய சிற்றரசன் தான். இருப்பினும் அவன் தன் நகரைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக ஒரு கோட்டை கட்டிக் கொள்வதைத் தடுக்க முடியுமா?

     கொடும்பாளூர் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கியதுதான். நெடு நாட்களாகக் கொடும்பாளூர் அரச பரம்பரையினருக்கும் பல்லவ மன்னர்களுக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. சாம்ராஜ்யத்தைப் பெருக்க வேண்டும் என்றிருந்த பல்லவர்களுக்குப் பெருவீரர்களான இருக்கு வேளார்களின் நட்பு மிக்க இன்றியமையாததாகவே எப்பொழுதும் இருந்தது. இந்த நட்பைத் துறந்து விடாமல் இருக்கவும் அவர்கள் விரும்பினர். பல்லவ மன்னர்கள் மற்றச் சிற்றரசர்களை நடத்துவது போலல்லாமல் கொடும்பை மன்னர்களுக்குச் சில சலுகைகளும் கொடுத்து வந்தார்கள். கொடும்பாளூர் மன்னர் பல்லவ மன்னருக்கு அடங்கியவராகவும், நெருங்கிய நட்பினராகவும் இருந்ததில் அவர்களுக்கு ஜன்ம வைரிகளாகத் திகழ்ந்த பாண்டியர்களுக்கு மிகவும் இடையூறாகவும், பொறாமையாகவும் தான் இருந்தது.

     பல்லவ மன்னருக்குக் கீழ்ப்படிந்து பழையாறை, நாகை, திருப்புறம்பயம் முதலிய சிறு பகுதிகளை ஆண்டு வந்த சோழ வம்சத்தினருக்கு இன்னும் அதிகச் சலுகைகள் அளிக்க வேண்டுமென்பது தான் கொடும்பாளூர் அரச வம்சத்தினரின் விருப்பம். ஆனால் பல்லவர் கோன் அவர்களுக்கு அதிகச் சலுகைகள் அளிக்க விரும்பவில்லை. தஞ்சையை ஆண்ட மாறன் முத்தரையர் தம் ஆட்சிக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் பல்லவ மன்னன் சோழ வம்சத்தினர்களுக்கு அதிகச் சலுகைகள் கொடுக்காத வண்ணம் சூழ்ச்சிகள் செய்து தடுத்துக் கொண்டிருந்தார். முத்தரையரின் உபதேசங்களுக்குச் செவி கொடுத்த பல்லவ மன்னனும் பிரசித்தி பெற்ற வீரர் பரம்பரையான சோழ வம்சத்தினருக்குச் சலுகை காட்டினால் தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கு ஏதேனும் கெடுதல் நேரிடுமோ என்று அஞ்சி அவர்களை ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தான். இதனால் கொடும்பாளூரார்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள நெடுநாளைய நட்பு மாறிச் சிறிது அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அவர்கள் நட்புறவில் வெளிக்குத் தோன்றாத கசப்பு உணர்ச்சியும் பெருகி வந்தது. அதோடு விக்கிரமகேசரி, கொடும்பாளூரில் எழுப்பியிருந்த பெருங் கோட்டை பல்லவ மன்னனுக்குச் சிறிது சந்தேகத்தையும் புகைச்சலையும் ஏற்படுத்தி இருந்தன. தங்களுக்கு அனுகூலமாகத் தெய்வாதீனமாக இத்தகைய நிலை ஏற்பட்டதைப் பாண்டிய மன்னன் பயன்படுத்திக் கொள்ளத்தானே விரும்புவான்?

     மகா வீரனான பூதி விக்கிரம கேசரி திடீரென்று இறந்து விட்டான். அவன் இறந்தது பல்லவ மன்னனுக்குச் சிறிது மன ஆறுதலை ஏற்படுத்தியது. விக்கிரம கேசரிக்குப் பின் அவன் மகன் ஆதித்த இருக்கு வேளான் ஆட்சி பீடம் ஏறினான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? 'என் தகப்பன் பத்தடிதான் தாண்டுவான். நான் பதினாறு அடி தாண்டுவேன்' என்று சொன்னான் அந்த இளஞ் சிங்கம். ஆதித்தனுக்கு உற்ற துணையாக நின்ற அவன் தம்பி பராந்தகன் அண்ணனை விட அரை அடி அதிகமாகத் தாண்டுவான் போல் இருந்தது. அமைதி ஏற்படுத்திக் கொண்டிருந்த பல்லவ மன்னனின் மனம் மறுபடியும் குழம்பத் தொடங்கியது. ஆதித்தன் ஆட்சி செய்யத் தொடங்கியதும் அவன் பல்லவ மன்னனுக்கு அடங்கியவன் என்று பெயரளவிலேயே இருந்தானே தவிர அவன் தன் இச்சையாகவே தான் நடந்து வந்தான். இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த பாண்டிய மன்னன், கொடும்பாளூரார்களுக்கும், சோழ வம்சத்தினருக்கும் ஆதரவாகவே பேசி வந்தான். சம்சயமும் பீதியும் அடைந்திருந்த பல்லவர் கோன் கொடும்பாளூராரின் நட்பை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை இழந்து அவர்களை அடியோடு ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று நினைத்தான்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/gopalan/maalavalliyinthiyagam/mt2-1.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs