chennailibrary.com - சென்னை நூலகம் - Works of K.R. Gopalan - Maalavalliyin Thiyagam
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter
facebook
9176888688
நன்கொடைக்கு கீழ் பட்டனை சொடுக்குக

சினிமா செய்திகள்
சொந்த ஊரில் நூலகம் துவங்கும் சினேகன்
திருப்பதியில் நமீதா-வீரா திருமணம்
டிச.3ல் வேலைக்காரன் இசை வெளியீடு
அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி
பாலா, ஜோதிகா மீது நீதிமன்றத்தில் வழக்கு
பிரிட்டனில் பத்மாவதி படத்துக்கு ஒப்புதல்

செய்திகள்
ஆர்.கே.நகர்:திமுக வேட்பாளர் மருது கணேஷ்
அன்புசெழியனுக்குஎதிராக லுக்அவுட் நோட்டீஸ்
துருக்கியில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம்
எகிப்து மசூதியில் தாக்குதல்: பலி 200
அரக்கோணம்: 4 மாணவிகள் தற்கொலை
2வது டெஸ்ட்: இலங்கை 205க்கு ஆல் அவுட்
ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் போட்டி
டிச. 21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 544  
புதிய உறுப்பினர்:
Dr.S.Seshadri, Karthik, Nagaraj
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
1. பொன்னியின் செல்வன் | 2. பார்த்திபன் கனவு | 3. சிவகாமியின் சபதம் | 4. அலை ஓசை | 5. தியாக பூமி | 6. கள்வனின் காதலி | 7. பொய்மான்கரடு | 8. மோகினித் தீவு | 9. சோலைமலை இளவரசி | 10. மகுடபதி | 11. பொன் விலங்கு | 12. குறிஞ்சி மலர் | 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) | 14. சமுதாய வீதி | 15. சாயங்கால மேகங்கள் | 16. ஆத்மாவின் ராகங்கள் | 17. நெஞ்சக்கனல் | 18. துளசி மாடம் | 19. ராணி மங்கம்மாள் | 20. பிறந்த மண் | 21. கபாடபுரம் | 22. வஞ்சிமா நகரம் | 23. நெற்றிக் கண் | 24. பாண்டிமாதேவி | 25. சத்திய வெள்ளம் | 26. ரங்கோன் ராதா | 27. ஊருக்குள் ஒரு புரட்சி | 28. ஒரு கோட்டுக்கு வெளியே | 29. வேருக்கு நீர் | 30. ஆப்பிள் பசி | 31. வனதேவியின் மைந்தர்கள் | 32. கரிப்பு மணிகள் | 33. வாஷிங்டனில் திருமணம் | 34. நாகம்மாள் | 35.பூவும் பிஞ்சும் | 36. பாதையில் பதிந்த அடிகள் | 37. மாலவல்லியின் தியாகம் | 38. வளர்ப்பு மகள் | 39. அபிதா | 40. அநுக்கிரகா | 41. பெண் குரல் | 42. குறிஞ்சித் தேன் | 43. நிசப்த சங்கீதம் | 44. உத்தர காண்டம் | 45. மூலக் கனல் | 46. கோடுகளும் கோலங்களும் | 47. நித்திலவல்லி | 48. அனிச்ச மலர் | 49. கற்சுவர்கள் | 50. சுலபா | 51. பார்கவி லாபம் தருகிறாள் | 52. மணிபல்லவம் | 53. பொய்ம் முகங்கள் | 54. சுழலில் மிதக்கும் தீபங்கள் | 55. சேற்றில் மனிதர்கள் | 56. வாடா மல்லி | 57. வேரில் பழுத்த பலா | 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே | 59. புவன மோகினி | 60. பொன்னகர்ச் செல்வி | 61. மூட்டம்புதிது


புதிய வெளியீடுஇரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 18 - பூதுகன் எங்கே?

     அங்கு வந்த தேனார்மொழியாளைப் பூதுகன் நிமிர்ந்து பார்த்தான். அவள் முகந்தான் எத்தனை அழகாக மலர்ந்திருந்தது! தீர நெஞ்சையும் திடங்குலைய வைக்கும் அவள் அழகு அந்த இரவு வேளையில் தனிச் சோபையுடன் திகழ்ந்தது. சாளரத்தின் ஊடே பாய்ந்து வந்த நிலாக் கதிர் அவள் எழில் உருவத்துக்கு மேலும் மெருகு கொடுத்தது.

     பூதுகன் முன்பு அவளை வெறுத்து ஒதுக்க முற்பட்டாலும், தேனார்மொழியாளின் உள்ளம் பூதுகனை மறந்துவிடவில்லை. ஆனால் பூதுகனது இயல்பை அவள் ஒரு முறை அறிந்து கொண்டு விட்டாளாதலால், மீண்டும் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி அவனுடைய வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. அவள் உள்ளம் முழுவதும் பூதுகன் தான் நிறைந்திருந்தான்.

     “தேனார்மொழி! என்ன ஒரே யோசனையில் ஆழ்ந்து விட்டாய்?” என்று கேட்டுப் பூதுகன் அவளைச் சுயநினைவுக்குத் திருப்பினான்.

     “...யோசனை ஒன்றும் இல்லை, சுவாமி! சிம்மவர்மனிடம் தாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். தங்களுக்கு இருக்கும் அபார சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தேன். சிம்மவர்மன் இலேசுப்பட்டவன் அல்ல; மிகவும் தந்திரக்காரன். பல்லவ சிம்மாசனத்தின் மீது அவனுக்கு வெகு காலமாக ஒரு கண் உண்டு. தன்னுடைய நோக்கம் நிறைவேறுவதற்காக அவன் எதையும் செய்யக்கூடியவன். அவன் காரணம் இல்லாமல் யாரிடமும் நட்புப் பூணமாட்டான். தங்களிடம் அவன் இத்தனை அன்பு காட்டுவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது. அவனை உங்கள் பக்கம் திருப்ப என்ன சொக்குப்பொடி போட்டீர்கள்?” என்று குன்றாத அதிசயத்துடன் கேட்டாள் தேனார்மொழியாள்.

     பூதுகன் சிரித்துக் கொண்டே, “தேனார்மொழி! இதில் அதிசயம் என்ன இருக்கிறது? எதன் மீதிலாவது ஒருவனுக்கு ஆசை விழுந்துவிட்டால் அவன் அதற்கு அடிமையாகி விடுகிறான். பிறகு அவனுடைய ஆசை நிறைவேறுகிற வரையில் அவன் புத்தி வேறு எதிலும் செல்லுவதில்லை. தன் இச்சைக்கு உதவியாக யாரையும் பயன்படுத்திக் கொள்ள அவன் தயங்க மாட்டான். அதுவும் சிம்மவர்மனைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆசை வெறி ராஜ்ய ஆதிபத்ய ஆசை. அது மிகவும் பொல்லாதது! அந்தப் பொல்லாத ஆசை நிறைவேறுவதற்கு யாராவது பயன்படுவார்கள் என்று தெரிந்தால் அவன் அவர்களிடம் அன்பாயிருக்கிறான்! அவ்வளவுதான்; வேறொன்றுமில்லை” என்றான்.

     “...சுவாமி! தங்களுக்கு எப்படி அவனைப் பற்றி இவ்வளவு நன்றாய்த் தெரிகிறது...?” என்று கேட்டள் தேனார்மொழி.

     “‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்னும் பழமொழியை நீ கேட்டதில்லையா? நானும் அவனைப் போலவே ஒரு தனி அரசை நிறுவுவதற்குத்தானே இத்தனை பாடுபடுகிறேன்! ஆனால் என் ஆசை சிறிதும் தன்னலமற்றது. சோழ அரசை நிறுவும் ஆசையில் யாருடைய நலனும் பாதிக்கப்படக் கூடாது என்பதே என்னுடைய விருப்பம். பிறருக்குச் சொந்தமானதை நான் பறிக்க ஆசைப்படவில்லை. கரிகால் வளவன், நெடுமுடிக்கிள்ளி முதலிய மதிப்புக்குரிய மாபெரும் சோழ மன்னர்கள் பரம்பரையாக ஆண்டு வந்த சோழ ராஜ்யம் மீண்டும் பொலிவுடன் திகழ வேண்டும். அது தான் என் ஆசை. இந்த ஆசை நியாயமற்றது என்று யாரும் சொல்ல முடியாது. பாரில் புகழுடன் விளங்கிய சோழப் பேரரசு இன்று பழையாறை நகருடன் மங்கிக் கிடக்கிறது. சோழ ராஜ்யம், மீண்டும் ஒளியுடன் திகழுவதற்கு உறுதுணையாகவுள்ள எக்காரியத்தையும் நான் விட்டு வைக்க முடியாது.”

     “உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் நீங்கள் உங்கள் கோரிக்கை ஈடேறச் சிம்மவர்மனின் உதவியை நாடுவதுதான் எனக்குப் பெரிதும் வியப்பாயிருக்கிறது. அவன் பெரிய சதிகாரன்!”

     “தேனார்மொழி! சிம்மவர்மன் எத்தகையவன் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். அவன் என்னைத் தன்னுடைய காரியங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிறகு தீர்த்துக் கட்டிவிட நினைக்கிறான். இதே காரியத்துக்காகத்தான் இவன் கலங்கமாலரையனுடன் நட்புக் கொண்டவன் போல் நடிக்கிறான். கலங்கமாலரையன் வஞ்சனையின் உருவம். அவனுக்கும் சிம்மவர்மனிடம் நெடுநாட்களாகப் பகை உண்டு. அவர்கள் ஒருவரையொருவர் தீர்த்துக் கட்டச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தான் நான் என் முயற்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பெரிதும் ஆவலாயிருக்கிறேன்.”

     “மிகவும் பிரமாதமான யோசனைதான். ஆனால் சிம்மவர்மன் விஷயத்தில் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். அவன் உங்களை இங்கே சிறையில் வைத்திருப்பது போல் தான் வைத்திருக்கிறான். அவனுடைய காரியங்களுக்கு நீங்கள் அனுகூலமா யிருக்கும் வரையில் தான் அவன் உங்களுக்கு நண்பனாயிருப்பான்.”

     “தேனார்மொழி! எனக்கு அது நன்றாய்த் தெரியும். அவனுடைய நட்பையும் பகைமையையும் நான் என்னுடைய முயற்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு விடுவேன். அவன் என்னை இப்பொழுது சிறையில் வைத்திருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். இந்தச் சிறை இப்பொழுது என் முயற்சிகளுக்கு மிகவும் சாதகமாயிருக்கிறது. ஆகையினால், அனுமன், இந்திரஜித்தன் எய்த பிரம்மாஸ்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் நானும் சிம்மவர்மனின் சூழ்ச்சிக்கு இணங்கியவன் போல் இருக்கிறேன். அவ்வளவு தான். எந்தக் கணமும் நான் இவ்விடத்திலிருந்து தப்பி விடுவேன். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் நான் இங்கிருந்தபடியே கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்!” என்று கூறிவிட்டுப் பூதுகன் தேனார்மொழியாளை ஏற இறங்க ஒரு தடவை கூர்ந்து நோக்கினான்.

     அவன் பார்வையில் தேனார்மொழியாளுக்குத் தேகம் முழுவதும் ஒருமுறை சிலிர்த்தது.

     “சுவாமி! அடியாளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? எதையோ சொல்ல நினைத்து மனத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது, உங்கள் பார்வை...!” என்றாள் தேனார் மொழியாள்.

     பூதுகன் ஒரு முறை தொண்டையைக் கனைத்துக் கொண்டே, “...தேனார்மொழி! நீ என்னிடம் கொண்டிருக்கும் அன்புக்காக எவ்விதமான தியாகத்தையும் செய்வாயல்லவா?” என்றான்.

     “...சுவாமி! தங்களுக்கு என் மீது அது விஷயத்தில் ஐயம் ஏற்பட்டிருந்தால் அது என் துர்ப்பாக்கியம்தான். சிம்மவர்மனோ, கலங்கமாலரையனோ தங்களுக்குக் கேடு சூழ நினைத்தால் தங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன்.”

     “தேனார்மொழி! உன் மன உறுதியை மெச்சுகிறேன். உன் உள்ளத் துணிவைச் செயலில் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் அதிக தூரத்தில் இல்லை என்று என் உள்மனம் சொல்லுகிறது...!”

     “...சுவாமி! தாங்கள் சொல்லுவது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! தங்களுக்கு இங்கேயிருப்பது சௌகரியக் குறைவாயிருக்கிறதா? நான் எதாவது தவறுதலாக நடந்து கொள்கிறேனா?” என்று தேனார்மொழியாள் பதற்றத்துடன் கேட்டாள்.

     பூதுகன் சிரித்துக் கொண்டே, “அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ ஒரு தவறும் செய்யவில்லை. நான் இங்கிருப்பது கலங்கமாலரையனுக்குத் தெரிந்து விட்டால், நான் இங்கிருக்க முடியாது” என்று கூறினான்.

     “கலங்கமாலரையரால் உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. சிம்மவர்மர் இது விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பார்.”

     “கலங்கமாலரையனை உனக்குத் தெரியாது; எதற்கும் கலங்காத நெஞ்சம் படைத்தவன். அவன் ஒரு பொழுதும் சும்மா இருக்க மாட்டான். நரி மாதிரி தந்திரக்காரன். ஆகையால் நீயும் என்னால் துன்பப்பட நேரிடலாம்!” என்று கூறிப் பூதுகன் பெருமூச்செறிந்தான்.

     “சுவாமி! தாங்கள் அதற்காகச் சிறிதும் ஆயாசப்பட வேண்டாம். நான் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்ளுவேன்...!” என்றாள் தேனார்மொழியாள்.

     இந்தச் சமயம் வாசற் கதவு தட்டப்படும் ஓசை ‘டக் டக் டக்’ என்று சங்கேதமாகக் கேட்டது.

     தேனார்மொழியாளும் பூதுகனும் அந்த ஓசையைக் கவனமாகக் கேட்டனர். அந்த ஓசை மீண்டும் கேட்டது.

     தேனார்மொழியாள் உடனே பதற்றமடைந்து பரபரப்புடன், “சுவாமி! யாரோ கதவைத் தட்டுகிறார்கள்... நான் போய் யாரென்று பார்த்துவிட்டு வருகிறேன். தாங்கள்... ஜாக்கிரதையாக...” என்று அவள் மேலே கூறுவதற்குள், பூதுகன் இடைமறித்தான்.

     “தேனார்மொழி! பதற்றங் கொள்ளாதே. நீ தைரியமாகப் போய் வாசல் கதவைத் திறக்கலாம். வந்திருப்பது யார் என்று எனக்குத் தெரியும்...”

     உடனே தேனார்மொழியாள் ஓடிப் போய் வாசல் கதவைத் திறந்தாள்.

     “தேனார்மொழி! சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த மனிதரைப் பார்த்ததும் தேனார்மொழியாளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆச்சரியத்தினால் திகைத்து நின்ற அவளைப் பார்த்து அந்த மனிதர் கதவைச் சாத்தும்படி கையினால் சமிக்ஞை காட்டிவிட்டு உள்ளே சென்றார். கதவைச் சாத்திவிட்டுத் தேனார்மொழியாளும் அவரைப் பின் தொடர்ந்தாள்.

     “...சுவாமி! தாங்கள் இங்கே தான் இருக்கிறீர்களா? இத்தனை நாட்களாக உங்களை நான் பார்க்கவே இல்லையே!” என்றாள் தேனார்மொழியாள் வியப்பினால் விரிந்த நயனங்களுடன்.

     “தேனார்மொழி! நான் பகிரங்கமாக வந்தால் பார்த்திருக்கலாம். சோதிடம் பார்த்துக் கொண்டு நிம்மதியாக என் ஊரோடு இருந்த எனக்கு இப்பொழுது பல வேலைகள் சேர்ந்து கொண்டன. ஆகையினால் சாவகாசமாக உன்னை வந்து பார்க்க முடியவில்லை... சரி! இப்பொழுது நான் பூதுகரைப் பார்த்துப் பேச வேண்டும்” என்று கூறிவிட்டு மேன்மாடத்தை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளிலே வெகுவேகமாக ஏறினார் வந்த மனிதர்.

     பூதுகனுக்கு அவரைப் பார்த்ததும் முகத்தில் ஆவல் பொங்கியது.

     “வாருங்கள், சந்தகரே! வாருங்கள்!” என்று கரங் குவித்து முகத்தில் ஆர்வம் பொங்க அவரை வரவேற்றான் பூதுகன்.

     சோதிடர் சந்தகரும் அவனைக் கை கூப்பி வணங்கினார்.

     இருவரும் ஆசனத்தில் அமர்ந்தனர். மெதுவான குரலில் பூதுகன் அவரைப் பார்த்து, “ஏதாவது மிகவும் முக்கியமான தகவல் இருக்கும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் தாங்கள் இந்த இரவு நேரத்தில் என்னைத் தேடி இங்கே வருவீர்களா?” என்றான்.

     “உங்கள் ஊகம் முற்றிலும் சரிதான். மிகவும் முக்கியமான செய்தியொன்று கொண்டு வந்திருக்கிறேன்...!”

     “என்ன செய்தி? கொடும்பாளூரிலிருந்து ஏதாவது செய்தி வந்ததா?”

     “பூதுகரே! வெளியூர்ச் செய்தி எதுவும் இப்பொழுது வரவில்லை. உள்ளூர் விவகாரம்தான் நமக்கு எல்லாவிதத்திலும் தொல்லை தருவதாயிருக்கிறது. இருக்கட்டும். உங்களை நான் ஒன்று முக்கியமாகக் கேட்க வேண்டும். இந்த இசைக் கணிகை... தேனார்மொழியாள் எப்படி? அவள் அரண்மனைப் பாடகியல்லவா? சிம்மவர்மனுக்கும் அவள் மிகவும் வேண்டியவள் என்று கேள்வி. அவள் விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும்...”

     “சந்தகரே! அவளைப் பற்றி நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். அவள் என்னிடம் அளவு கடந்த அன்பு கொண்டு விட்டாள். அதை என்னிடமே வெளியிட்டாள். நான் அவளைத் திரஸ்கரித்து விட்டேன். ஆனால் அந்த ஆசை இன்னும் அவள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கிறது. ஆகையினால் அவள் எனக்கு எவ்விதக் கெடுதியும் செய்யத் துணிய மாட்டாள். சிம்மவர்மனும் தன் காரியத்தில் குறியாயிருக்கிறான். அவன் நினைவெல்லாம் பல்லவ சிம்மாசனத்தைப் பற்றித்தான். அதற்கு என்னுடைய உதவியைத் தான் பூரணமாக நம்பியிருக்கிறான். அது இருக்கட்டும். உள்ளூர் விவகாரம் கவலை தருவதாகச் சொன்னீர்களே... அது என்ன?”

     “அது மிகவும் முக்கியமானது. கலங்கமாலரையன் உங்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட்டான். சிம்மவர்மன் உங்களோடு நட்புக் கொண்டதிலிருந்து, அவன் பல்லவ சேனாபதி உதயசந்திரனோடு மிகவும் இழைந்து கொண்டிருக்கிறான். ஒரே கல்லில் இரண்டு மாம்பழங்களை வீழ்த்தும் நோக்கத்தில் அவன் மூர்த்தண்யமாக வேலை செய்து வருகிறான்...”

     “சரிதான். இனி நான் இங்கேயிருப்பது சரியல்ல. சந்தகரே! நான் வெளியேறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் யாவும்...”

     “...ஆயத்தம் செய்யப்பட்டிருக்கின்றன. நீங்கள் உடனே புறப்பட்டு விட வேண்டும். ஒரு கல் தூரம் வெளியூருக்குச் செல்லும் சாலையோடு நடந்தால் அங்கே உங்களுக்காகக் குதிரை காத்துக் கொண்டிருக்கும். பொழுது புலருவதற்கு முன்பு நீங்கள் இந்த நகரத்து எல்லையைத் தாண்டிப் போய் விடலாம். நான் வருகிறேன்...” என்று கூறி விட்டுச் சந்தகர் அங்கிருந்து புறப்பட்டார்.

     உடனே பூதுகன் அங்கிருந்து புறப்பட ஆயத்தம் செய்து கொண்டான். தேனார்மொழியாள் அங்கு வந்தாள்.

     “சுவாமி! வெளியே போகிறீர்களா? இந்த இரவு வேளையில்...!”

     “...தேனார்மொழி, இப்பொழுது உன்னோடு பேச அவகாசம் இல்லை. நீ எனக்கு இந்த இல்லத்தில் இடங் கொடுத்து இத்தனை நாட்களாக ஆதரித்து வந்ததற்கு என் நன்றி என்றும் உனக்கு உரியது!” என்று கூறி விட்டு அவளுடைய மறுமொழிக்குக் காத்துக் கொண்டிராமல் பூதுகன் அந்த வீட்டுப் பின் வாசல் வழியாகவே வெளியே செல்லலானான்.

     தேனார்மொழியாள் இதைக் கண்டு ஒன்றும் தோன்றாமல் திகைத்துப் போய் விட்டாள்.

     விடிய ஒரு ஜாமப்பொழுது இருக்கையில் தேனார்மொழியாள் இல்லத்தின் வாசற் கதவு இடிக்கப்படும் ஓசை பலமாகக் கேட்டது. தேனார்மொழியாள் உடனே கதவைத் திறந்தாள்.

     “அம்மணி! தாங்கள் தானே தேனார்மொழியாள் என்பவர்?” என்ற மிடுக்கான குரலைக் கேட்டுத் தேனார்மொழியாள் சற்றுத் திகைத்தாள்.

     “...ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டாள் தேனார்மொழியாள்.

     “உங்கள் வீட்டில் அடைக்கலம் அடைந்திருக்கும் பூதுகனை உடனே எங்களிடம் ஒப்புவித்துவிட வேண்டும்...!”

     “அவர் இங்கே இல்லை!”

     “அம்மணி, உங்களையும் சிறைப்பிடித்து வரும்படி சேனாபதி உத்தரவிட்டிருக்கிறார்!” என்றான் அந்த வீரன், மரியாதையும் மிடுக்கும் கலந்த குரலில்.

     இதைக் கேட்டதும் தேனார்மொழியாளின் வனப்பு மிகுந்த வதனம் கோபத்தினால் குபீரென்று சிவந்தது.

     “உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் பூதுகனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்!” என்று அந்தக் குதிரை வீரன் அங்கிருந்த சேனை வீரர்களைப் பார்த்துக் கட்டளையிட்டான்.

     உடனே வீரர்கள் தபதப வென்று தேனார்மொழியாளின் மாளிகைக்குள்ளே நுழைந்தனர்.

     அதைக் கண்ட தேனார்மொழி அடிபட்ட பெண்புலியைப் போல் சீறினாள்.

     “அரண்மனைப் பாடகியாகிய என்னைச் சிறையாக்கப் பல்லவ சேனாபதிக்கு யார் அதிகாரம் கொடுத்தது?”

     “அம்மணி! மன்னரின் உத்தரவு பெற்றுத்தான் சேனாபதி உங்களைச் சிறைப்பிடித்து வரும்படி என்னை இங்கே அனுப்பினார். இதோ மன்னரின் இலச்சினை பதித்த ஓலை!” என்று கூறி ஒரு ஓலையைக் காண்பித்தான் குதிரை வீரன்.

     தேனார்மொழியாள் அந்த ஓலையை வாங்கிப் பார்த்து விட்டு, பெருமூச்சுடன் போய் வண்டியில் ஏறினாள்.

     அப்பொழுது வீட்டுக்குள்ளே சென்ற வீரர்கள் வேகமாக வெளியே வந்து, “பூதுகனை உள்ளே காணோம்! எல்லா இடங்களையும் நன்றாகப் பார்த்து விட்டோம்!” என்றனர்.

     உடனே குதிரை வீரன் ஆத்திரத்துடன், “...என்ன! பூதுகன் தப்பி விட்டானா? என்ன ஆச்சரியம்! இந்த மாளிகையின் உள்ளேயிருந்து யாரும் வெளியே போகாமலும். வெளியே யிருந்து யாரும் உள்ளே போகாமலும் காவல் இருங்கள். நாலாபுறங்களிலும் வீரர்களை அனுப்பிப் பூதுகனைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன். இவளை ஜாக்கிரதையாகச் சிறைக்குக் கொண்டு போய்ச் சேருங்கள்!” என்று கூறிவிட்டுக் குதிரையைச் செலுத்தலானான்.

     தேனார்மொழியாள் ஏறியிருந்த வண்டியும் அங்கிருந்து நகர்ந்தது. வண்டிக்கு முன்னாலும் பின்னாலும் வீரர்கள் சென்றனர்.அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்

1861 | 1862 | 1863 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 2017


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)உங்கள் கருத்துக்கள்


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்

பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம் :  அபிதா

சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை

ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்

ரமணிசந்திரன்

சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்

சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்

க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு

கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்

மகாத்மா காந்தி :  சத்திய சோதனை

ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி

பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி

என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி

விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்

கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)

ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்

வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்

சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை

மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா

கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்

ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை

திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்

ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை

முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்

நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம்

இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை

உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா

பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை

கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்

பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா

ஆன்மீகம் :  தினசரி தியானம்