http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 1 - வீரர் குலத்துதித்த ஜோதி

... தொடர்ச்சி ...

     மிகுந்த பராக்கிரமசாலியான ஆதித்தனும் அவன் தம்பி பராந்தகனும் நினைத்ததை முடிப்பதிலேயே கருத்து உடையவர்கள். தங்கள் அரசையும், உயிரையும், திரணமாக மதித்து லட்சிய சித்திக்காகப் பாடுபடும் திட நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுடைய தாய் பழையாறை நகரை ஆண்ட சோழ மன்னன் குமராங்குஜனின் சகோதரி. வீரத் தாயின் ரத்தத்தில் உதித்தவர்களின் நெஞ்சம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தீரம் மிக்க சோழ பரம்பரையில் உதித்த அவர்கள் தாய் சாகும் தறுவாயில் தன் புதல்வர்களை அருகில் அழைத்து, "நீங்கள் தான் மறுபடியும் சோழவள நாட்டைச் சோழர்களுடையதாக்கி வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். அவர்கள் தங்கள் தாய்க்கு அளித்த வாக்குறுதியை எப்படி மறக்க முடியும்? தங்கள் அரசை இழப்பதாயினும் மறுபடியும் கரிகாலனின் பரம்பரை இந்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதையே விரும்பினர்.

     சுற்றிலும் சூழ்ந்த பெரும் கோட்டைக்குள் அடங்கிய அழகிய கொடும்பை மாநகரின் அரச மாளிகையை ஒட்டினாற் போல் உள்ள ஒரு அழகான சோலை. காலை வேளை. அச் சோலையிலே உள்ள சிறு மைதானத்தில் இரு வாலிபர்கள் வாட்போர் செய்து கொண்டிருந்தனர். ஆம்! அவ்விரு வாலிபர்களும் விளையாட்டாகவே வாட்போர் செய்து பழகிக் கொண்டிருந்தாலும் உண்மையாக உத்வேகத்துடனும் ஆத்திரத்துடனும் போர் செய்வது போல் தான் இருந்தது. அவர்களுடைய போராட்டத்தைக் கண்டு வியந்து கொண்டிருந்தனர் இரு இளமங்கையர். அவ்விரு மங்கையரும் ஒவ்வொரு கட்சியில் நின்று அவ்வீர வாலிபர்கள் ஒருவரை ஒருவர் சாமர்த்தியமாகவும், தந்திரமாகவும் தாக்கும் நேரத்திலெல்லாம் கைதட்டுவதும் சந்தோஷ ஆரவாரம் செய்வதுமாக அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்விரு வாலிபர்களில் ஒருவனுக்குச் சுமார் இருபத்து ஐந்து வயது இருக்கலாம். மற்றவனுக்கு இருபது வயது தான் இருக்கும். அவர்கள் உடை உருவம் இவைகளிலிருந்து அவ்விருவரும் அரச குமாரர்களாய்த்தான் இருக்க வேண்டுமென்று தெளிவாக விளங்கியது. அவ்வாலிபர்களை உற்சாகப்படுத்திய யௌவன மங்கையர்களும் அரசகுமாரிகள் என்பது அவர்கள் அணிந்திருந்த ஆடை அலங்காரங்களிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.

     அப்பெண்களில் ஒருத்தி பதினெட்டு வயது மதிக்கத் தக்கவளாயும் ஒருத்தி பதினாறு வயது மதிக்கத்தக்கவளாயும் இருந்தாள். அவ்விரு வீர வாலிபர்களுக்கும் இப்படிப்பட்ட அழகும் வயதும் நிறைந்த பெண்கள் தான் காதலிகளாக இருக்கப் பொருத்தமானவர்கள் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டிய இடமே இல்லாதபடி அவ்வளவு இணையாக விளங்கினர். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் வயதில் மூத்தவளாக இருந்த பெண் வயதில் சிறியவனாக இருந்த வாலிபனையும், வயதில் சிறியவளாக இருந்த பெண் மற்றவனை விட வயதில் மூத்தவனாய் இருந்த வாலிபனையும் ஆதரித்து நின்றதுதான். இவ்வளவு தூரம் அவர்களைப் பற்றிச் சொல்லிய பிறகு அவர்கள் யாரென்று குறிப்பிடாமல் இருக்க முடியுமா?

     அவ்விருவரில் வயதில் மூத்தவனாக இருந்தவன் கொடும்பாளூர் மன்னன் ஆதித்தனின் தம்பி பராந்தகன். வயதில் சிறியவனாகத் தோன்றிய மற்றவன் பழையாறை நகர் மன்னன் குமராங்குஜ சோழனின் மகன் விஜயன். அந்த மங்கையர்களில் மூத்தவளாக இருப்பவள் தான் பழையாறை நகரையாளும் உரிமையுள்ளவனான விஜயனின் சகோதரி அருந்திகைப் பிராட்டி. வயதில் சிறியவளாகத் தோன்றிய மற்றவள் கொடும்பாளூர் மன்னன் ஆதித்தனுக்கும், பராந்தகனுக்கும் சகோதரியாக விளங்கும் அனுபமா. அருந்திகை தன் சகோதரன் விஜயனின் சார்பாக நின்று அவனை உற்சாக மூட்டியதிலும் அனுபமா தன் சகோதரன் பராந்தகன் சார்பாக நின்று அவனை உற்சாகப்படுத்தியதிலும் வியப்பு என்ன இருக்கிறது?




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/gopalan/maalavalliyinthiyagam/mt2-1a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs