இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
P.S.C. Raja (17-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 291
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 39

     ஆவணித் திங்கள் ஆயில்ய நாளில் கங்கைகொண்ட சோழனின் மகனாய் அவதரித்த சக்கரவர்த்தி வீரராசேந்திரர் பூதவுடல் நீத்து, புகழுடம்பு பெற்று விண்ணுலகம் எய்திவிட்டார்.

     இராசகேசரி என்ற பட்டப் பெயருடன், சோழ அரசுப் பொறுப்பை ஏற்ற அவர் சோழநாட்டைக் காப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுமையும் போரிலேயே செலவிட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார். அதற்காக மக்களிடம் வேலி ஒன்றுக்கு ஒரு கழஞ்சுப் பொன் வீதம் வரியாக வசூலித்தார்.

     ‘வீரமே துணையாகவும், தியாகமே அணியாகவும்’ என்ற வரிகளுடன் தொடங்கும் மெய்க்கீர்த்தி இவரின் வீரச் செயல்களைக் குறிக்க...

     ‘நேற்று இருந்தார் இன்றில்லை’ என்ற பெருமைக்கு ஏற்ப அவர் மறைந்துவிட்ட நிகழ்ச்சியைத் தாங்க முடியாது சோழ மக்கள் சொல்லால் விவரிக்க முடியாத துயரத்தில் ஆழ்ந்தனர்.

     அந்தச் சூழ்நிலையில்தான் யவன வீரனைப் போன்று உடையணிந்து உள்ளே புகுந்த இராசேந்திரனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அது...

     மன்னர் வீரராசேந்திரருக்கு அவசரம் அவசரமாக இறுதிக் கடன்களைச் செய்து முடித்துவிட்டார்கள் என்பதே!

     கடைசியாய் அவரின் உயிரற்ற உடலைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் வந்த அவனுக்கு இது பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது.

     முதலமைச்சர் கூடப் பொறுப்பில்லாமல் நடந்துவிட்டாரே! என்ற கோபத்துடன் அவரின் மாளிகை நோக்கி காரனை விழுப்பரையனுடன் சென்றான்.

     ஆனால்...

     மாளிகையின் முன்னாலிருந்த வீரர்கள், அவர்களைத் தடுத்துவிட்டனர். அத்துடன் யாரையும் உள்ளேவிட முடியாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டனர்.

     ‘ஆட்சி மாறிவிட்டதின் அறிகுறி இங்கேயே தெரிகிறதே!’ என்று உணர்ந்து இராசேந்திரன், பின்பக்க வழியாக இரகசியமாய் நுழைந்தான்.

     முதலமைச்சர் சோர்வுடனிருந்தார். யவன வேடத்திலிருந்த இராசேந்திரனைப் புரிந்து கொண்டு, தன் அந்தரங்க அறைக்குள் அவனை அழைத்துச் சென்றார். காரனை விழுப்பரையன் யாராவது வருகின்றார்களாவென்று வெளியே கண்காணித்தபடி இருந்தான்.

     “இதற்குள் எப்படி நீங்கள் அரசருக்கு இறுதிக் கடன்களை முடிக்கலாம்? எனக்கு அவர் மாமன் முறை வேண்டும். நாங்களெல்லாம் இல்லாமல் எப்படி நடத்தினீர்?” என்று கோபத்துடனே கேட்டான் இராசேந்திரன்.

     “என் கைகள் கட்டப்பட்டுவிட்டதப்பா. அரசர் இறந்ததும், அரசிக்கு சுயநினைவே இல்லை. யார் சொன்னாலும் சரி... சரி... என்று தலையாட்ட ஆரம்பித்துவிட்டார். இராஜசுந்தரியும் இளையராணியும் இதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். நீண்ட நாள் நோயுற்று இருந்ததால் இறந்த மறுநாளே உடலிலிருந்து ஒருவித வாசனை வர ஆரம்பித்துவிட்டது. அதனால், சீக்கிரம் இறுதிக் கடன்களை முடிக்க வேண்டும் என்று அவர்கள் செய்த முடிவுக்கு, கட்டுப்பட வேண்டியதாகப் போயிற்று.”

     “என்ன இருந்தாலும் நான் வரும் வரை இறுதிக் கடன்களை நிறுத்தியே வைத்திருக்கலாம்” என்று தன் எண்ணத்தை வெளியிட்ட இராசேந்திரன், “தங்களைப் பார்ப்பதற்கு மாளிகைக்குள் நுழையக்கூட எங்களை அனுமதிக்கவில்லை!” என்றான்.

     “அது என் உத்தரவு அல்ல அப்பா. இப்போதைய சோழச் சக்கரவர்த்தி அதிராசேந்திரனின் கட்டளை. இதிலிருந்தே என் நிலைமையை நீ புரிந்து கொண்டிருக்க வேண்டும்!” என்றார் முதலமைச்சர் அமைதியாக. அத்துடன் சிறிது வருத்தம் தோய்ந்த குரலில் அவர் கூறிய விஷயமாவது:

     “நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. சோழச் சக்கரவர்த்தி உயிருடன் இருக்கும்போதே உனக்கும் மதுராந்தகிக்கும் திருமணம் நடத்திவிட திட்டமிட்டிருந்தோம். அதற்கு அரசரின் பரிபூரண ஒத்துழைப்பும், பட்டத்தரசியின் ஆதரவும் இருந்தது. அந்த நம்பிக்கையில்தான் உன்னை மதுரையிலிருந்து இரகசியமாக வரவழைக்க ஆளை அனுப்பினேன். ஆனால் தெய்வத்தின் நினைப்பு வேறாக இருந்துவிடவே, என் திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன. இனி நான் என்ன செய்ய முடியும்? இன்று காலையில்தான் சோழச் சக்கரவர்த்தியாக முடிசூடியிருக்கும் அதிராசேந்திரர் என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் என்னை வீட்டுக்குள்ளேயே இருக்கச் செய்வது மனவேதனையைத் தருகிறது என்று கூட சொன்னேன். அதற்கு அவர், ‘நீங்கள் பதவியிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று மறுமொழி கூறிவிட்டார். இதைவிட ஒரு அவமானத்தை என் வாழ்க்கையில் இதுவரை நாள் சந்தித்ததில்லை. என்ன செய்வது? நேரம் சரியில்லை என்று பேசாமல் இருந்துவிட்டேன். என்னால் சிறை வைக்கப்பட்ட வீரசோழ இளங்கோ வேளான் அரசரின் மெய்க்காப்பாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான். சிறிய தன்மபாலர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அதற்குக் காரணமே இல்லை. தளபதிக்கு என்ன நேருமோ என்ற கவலை! நீண்ட நாளாய் மறைபட்டிருந்த இடங்கை, வலங்கை பிரிவு மறுபடியும் சோழப் படையில் தலைதூக்கும் போல் தெரிகிறது! குந்தள மன்னர் சொன்னபடியெல்லாம் அரசர் ஆடுகின்றார். கங்கரபுரியின் கோட்டை தலைமை குந்தள நாட்டைச் சேர்ந்தவருக்குத் தரப்போவதாக பேசப்படுகிறது. சோழ அரசர் அதிராசேந்திரர் எங்களையெல்லாம் நம்பாமல் செயல்படுகிறார். எத்தனை நாளைக்குக் குந்தள மன்னர் அவருக்குத் துணையிருப்பார்? இது தெரியாமல் அந்த இரு பெண்மணிகள் சொன்னபடி செயல்படும் பொம்மையாக இருக்கின்றார். சக்கரவர்த்திக்குரிய தன்னிச்சையாய்ச் செயல்படும் திறன் அவருக்கு இருக்கிறதா என்றால் சந்தேகமாயிருக்கிறது!” அவர் கூறிக் கொண்டிருக்கும் போது அந்தரங்க அறையிலிருந்த மூலப் பக்கத்திலிருந்து ‘தட் தட்’ என்று மூன்று முறை தட்டும் சப்தம் கேட்டது.

     “அது என்ன சப்தம்?” என வாளை உருவினான்.

     சோர்ந்திருந்த முதலமைச்சரின் முகத்தில் புன்முறுவல் வெளிப்பட்டது.

     “இது அனுமதிக்கப்பட்ட சப்தம்தான்” என்றார்.

     இராசேந்திரன் அதைப் புரிந்து கொண்டு, “நான் வெளியே இருக்கட்டுமா?” என்றான்.

     “அப்படித்தான்!” என்ற அவர், அங்கிருந்து புறப்படத் திரும்பிய இராசேந்திரனை, “சற்று நில்!” என்றார்.

     “என்ன முதன்மந்திரி?” என்று கேட்டவாறு அருகில் வந்தான்.

     “மரியாதைக்குச் சோழச் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கும் அதிராசேந்திரனைப் பார்த்து வாழ்த்துத் தெரிவி! உன்னை இளவரசன் ஆக்குவதற்கு அதன் மூலம் அவருக்கு எண்ணம் வருகிறதா பார்க்கலாம். நானும் சக்கரவர்த்தியின் விருப்பம் என்று ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்கின்றேன்!”

     “எனக்கு இளவரசனாக விருப்பம் இல்லை. இவர்கள் மத்தியில் அந்தப் பட்டத்துடன் உலவுவதைவிட எங்கேயாவது போர்க்கள முனைக்கு அனுப்பி வையுங்கள். போய்விடுகின்றேன்” என்றான் விரக்தியான குரலில்.

     “நம்பிக்கையை இழந்துவிடாதே இராசேந்திரா! எனக்கு ஏற்பட்ட தோல்வியைவிடவா உனக்கு ஏற்பட்டுவிட்டது? இறுதி வெற்றி நமக்குத்தான்! கவலைப்படாமல் அதிராசேந்திரரைப் போய்ச் சந்தி. உன்னை ஒன்றும் அவர் செய்துவிடமாட்டார். அப்படி ஏதாவது நடந்தால் நானும் மற்றவர்களும் வேடிக்கை பார்க்கமாட்டோம். அதனால் துணிவுடன் அவரைச் சந்தித்துவிட்டு என்னை இரகசியமாய் வந்து பார். அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று தெரிவிக்கின்றேன்!” என்றார்.

     அதற்குள் மறுபடியும், ‘தட் தட் தட்’ என்று மூன்று முறை தட்டும் சப்தம் கேட்டது.

     முதலமைச்சர் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டார்.

     இராசேந்திரன், “அதிராசேந்திரரைப் பார்த்துவிட்டுப் பிறகு வந்து சந்திக்கின்றேன்” என்று அங்கிருந்து வெறியேறினான்.

     மூலையிலிருந்த சுவரிலுள்ள புலித்தலையை அவர் வலப் பக்கமாய்த் திருப்பினார். மூலைப்பக்கத்தில் ஆள் நுழையுமளவிற்கு வழி கிடைத்தது. உள்ளே எட்டிப் பார்க்க, வெள்ளை முக்காடிட்ட உருவம் சுரங்கப் படிக்கட்டுகளின் நின்று கொண்டிருந்தது.

     முதலமைச்சரைப் பார்த்ததும் அது கை குவித்து வணங்கியது.

     அவ்விதம் கைகுவிக்கும் போது, விரலிலிருந்த வைர மோதிரத்தின் ஒளி அவரின் கண்களைக் கூச வைப்பது போல் பளிச்சிட்டது.

     அந்த வெளிச்சம் கண்களில் படாதிருக்க ஒருகணம் இமைகளை மூடிக் கொண்டார்.

     “என்னப்பா வழக்கத்திற்கு விரோதமாய்” என்று கூறியபடி படிக்கட்டுகளில் கால் வைத்து மூலையில் உண்டான வழியை அடைத்துக் கொண்டார்.

     அந்தக் கரகரப்புக் குரல்... அதே வாசனை... சுரங்க அறை முழுவதும் வீச உருவத்தின் அருகில் சென்றார்.

     “சதி! பெரிய அளவில் நடக்கிறது. மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்ட முடிவு செய்து இரகசியமாய் சோதிடரை வரவழைத்துத் தேதியும் குறித்துவிட்டார்கள். பட்டத்தரசியைக் கொல்ல முடிவு செய்துவிட்டார்கள். மன்னர் இறந்த துக்கம் தாளாமல் நஞ்சுண்டு இறந்துவிட்ட மாதிரி வெளி உலகத்துக்குத் தெரியும்படி அவர் கைப்பட எழுதப்பட்ட ஒரு போலி ஓலை நறுக்கைத் தயார் செய்துவிட்டார்கள். இன்னும் மூன்று தினங்களில் அவர் கொல்லப்படலாம்” என்றது உருவம்.

     முதலமைச்சருக்கு நெற்றி சுருங்கியது.

     “அவரைக் கொல்வதால் இவர்களுக்கு என்ன இலாபம்?”

     “எதுவாயினும் உங்களைக் கலந்து செய்யும்படி, அதிராசேந்திரருக்குக் கட்டளையிட்டிருக்கின்றார் பட்டத்தரசி. இது சோழ மன்னருக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அத்துடன் மதுரையிலிருந்து இராசேந்திரனை வரவழைத்து, அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டும்படி அடிக்கடி அதிராசேந்திரரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.”

     “ஓ! கதை இப்படிப் போகிறதா?” புரிந்து கொண்ட முதன்மந்திரி, “இளவரசர் அதிராசேந்திரர் இந்த அளவிற்குத் துணிந்துவிட்டாரா?” என்றார்.

     “அவர் சம்மதிக்கவில்லை. ஆனால் அவருக்குத் தெரியாமல், விக்கிரமாதித்தர் இம்மாதிரி ஒரு திட்டத்தைத் தீட்டி வைத்திருக்கிறார். அரசியின் நச்சரிப்புத் தாங்காமல் அவர்கள் சொல்லியபடி இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினால் என்ன? நம்மை மீறியா போய்விடுவான்? என்று தன் தங்கை இராஜசுந்தரியிடம் கேட்டிருக்கின்றார் அரசர். அதன் விளைவாய் அவர்கள் சோழச் சக்கரவர்த்திக்குத் தெரியாமல் இத்தகைய கீழ்த்தரமான செயலில் இறங்கியிருக்கின்றார்கள்.”

     “சோழப் பேரரசர் பட்டத்தரசி சொல்வது போல் தலையாட்ட ஆரம்பித்தால், அவர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமே! அதனால்தான் அவர்கள் அரசியைக் கொன்றுவிடுவதில் தீவிரமாயிருக்கிறார்கள்.”

     “இதைப் பட்டத்தரசிக்குத் தெரிவித்து, அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல வேண்டுமே?” - முதன்மந்திரி குழம்பிக் கொண்டிருக்கும் போது, உருவம் குறுக்கிட்டு...

     “நீங்கள் அவரைச் சந்திக்க முடியாதா?” என்று கேட்டது.

     “முடியாது. எக்காரணம் கொண்டும் நான் இந்த மாளிகையைவிட்டு வெளியேற முடியாது!”

     “அக்கிரமம். இது அநியாயம். இதற்கு அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும்” என்று உருவம் பற்களைக் கடிக்க...

     சினத்தினால் அதன் கண்கள் கொழுந்துவிட்டெரியும் சுடரெனப் பிரகாசித்தன.

     “இரகசிய வழியின் மூலம் சந்தித்தாலென்ன?” உருவம் திரும்பவும் வினவ...

     “இந்த அறைக்கும் அவர்கள் இருக்கும் அறைக்கும் எந்தவித மறைவான வழியும் இல்லை. அதனால்தான் யோசிக்கின்றேன்!” என்றார் முதன்மந்திரி.

     “நான் நேரே போய் அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டுமா?”

     “அப்படியே செய்! ஆனால் இந்த உருவத்துடன் போக வேண்டாம். உன் பழைய உருவத்தில் சென்றுவிடு” என்று கூறினார்.

     வெள்ளை முக்காடு போட்ட உருவம் சம்மதித்தது.

     “அடுத்து உன்னுடைய வேலை என்ன?”

     “சிறிய தன்மபாலனை விடுதலை செய்வது. அதற்காகத்தான் தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!”

     “எச்சரிக்கையுடன் செயல்படு. அவர்களிடம் மாட்டி கொள்ளாதே! இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு நீ ஒருத்தன்தான் எனக்கு வலக்கை போன்று இருக்கின்றாய். சாக்கிரதை” என்றார் முதன்மந்திரி.

     “நான் அவர்களிடம் சிக்கமாட்டேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்!” - பிரமாதிராசரிடம் விடைபெற்றுக் கொண்டு உருவம் அங்கிருந்து மறைந்தது.

     முதன்மந்திரி பழையபடி சுரங்க வழியைத் திறந்து வெளியேறி இருக்கையில் அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம்? என்ற யோசனையில் மூழ்கலானார்.

*****

     பிரமாதிராசரின் மாளிகையிலிருந்து வெளியேறிய இராசேந்திரன், யவன வேடத்தைக் கலைத்துக் கொண்டு காரனை விழுப்பரையனுடன் பட்டத்தரசியின் மாளிகை நோக்கிச் சென்றான்.

     அவனை வீதியில் மக்கள் அடையாளம் கண்டு கொண்டு சூழ்ந்து கொண்டனர். இராசேந்திரன் புரவியிலிருந்து இறங்கி அனைவரையும் வணங்கினான்.

     சக்கரவர்த்தி இறந்தது பற்றிக் கூட்டத்தினர் கண் கலங்கி நிற்க இவனுக்கும் துயரம் தாளாமல் விழிகளில் நீர் சுரந்தது. அவனுடன் கடாரத்திற்குக் கூடச் சென்ற போர் வீரர்கள் சிலர் இராசேந்திரனைப் பார்த்துவிட்டு அருகே வந்து வணங்கி நின்றனர்.

     அனைவரையும் நலம் விசாரித்து ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும் போது சக்கரவர்த்தியின் மெய்க்காப்பாளனான வீரசோழ இளங்கோ வேளான் தன்னுடன் வந்து கொண்டிருந்த வீரர்களிடம், “அது என்ன கூட்டம்?” என்று வினவினான்.

     “தெரியவில்லை!” என்று ஒரு வீரன் பதில் கூறவும் அதனால் கோபமுற்று “இம்மாதிரி அசட்டையாய் நாம் இருக்கக் கூடாது. வலங்கைப் பிரிவினரான நமக்கு எதிராக இடங்கை வகுப்பார் கலகம் செய்ய முயல்வதாக செய்தி வந்துள்ளது. வாருங்கள். என்னவென்று பார்ப்போம்!” எனக் கூட்டத்தை நோக்கிக் குதிரையைச் செலுத்தினான்.

     “என்னப்பா நடுவீதியில் கும்பல்? எல்லோரும் கலைந்து செல்லுங்கள்!” என்று ஒரு வீரன் அதட்ட மக்கள் ஒன்றும் பேசாமல் மெல்ல கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

     குதிரையிலிருந்தவாறு இதைப் பார்த்துக் கொண்டிருந்த வீரசோழ இளங்கோ வேளான், கூட்டத்தினர் நடுவில் இராசேந்திரன் நிற்பதையும், அதற்குப் பக்கத்தில் காரனை விழுப்பரையன் இருப்பதையும் கவனித்துத் திடுக்கிட்டான்.

     முன்பெல்லாம் இராசேந்திரனைக் கண்டால் அவன் வணங்குவது வழக்கம். ஆனால் இம்முறை அம்மாதிரி எதுவும் செய்யாமல் சற்று மிடுக்குடனே, “எப்போது மதுரையிலிருந்து வந்தீர்? முந்தின சக்கரவர்த்தி மறைந்த செய்தி எப்போது தெரிந்தது?” என்று கேட்டான்.

     “சற்று முன்புதான் வந்தேன்” என்று கூறிய இராசேந்திரன், “அரசரை நான் பார்க்க வேண்டுமே!” என்றான்.

     “அரசர் முக்கிய வேலையாயிருக்கின்றார். இப்போது நீங்கள் சந்திக்க முடியாது! வேண்டுமென்றால் நீங்கள் வந்திருப்பது பற்றி அவரிடம் தெரிவிக்கின்றேன்!”

     “மகிழ்ச்சி. அதற்குள் நான் பட்டத்தரசியைப் பார்த்துவிட்டு வருகின்றேன். சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புவது பற்றி அவரிடம் ஒரு வார்த்தை தெரிவித்து வையுங்கள். எப்போது வரச்சொல்கிறாரோ, அப்போது சந்திக்கின்றேன்!”

     “பார்க்கலாம்”- அலட்சியத்துடன் கூறிய வீரசோழ இளங்கோ வேளான் கூட்டத்தினரிடையே, வீரர்கள் இருப்பதைப் பார்த்து, “இங்கே என்ன உங்களுக்கு வேலை!” என்றான் சீற்றத்தோடு.

     “ஒன்றுமில்லை” என்றபடி அவர்களும் கலைய, சில பேர் “உங்கள் அட்டகாசத்துக்கெல்லாம் சீக்கிரம் முடிவு வரத்தான் போகிறது!” என்று முணுமுணுத்தவாறு அகன்றனர். வீரசோழ இளங்கோ வேளான் இராசேந்திரனை ஒரு மாதிரி பார்த்தபடி, புரவியைத் தட்டிவிட்டான்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


அள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.145.00தனிமனித வளர்ச்சி விதிகள் 15
இருப்பு உள்ளது
ரூ.225.00கன்னிவாடி
இருப்பு உள்ளது
ரூ.125.00கேரளா கிச்சன்
இருப்பு உள்ளது
ரூ.160.00பிறகு
இருப்பு உள்ளது
ரூ.180.00வெக்கை
இருப்பு உள்ளது
ரூ.135.00பட்டத்து யானை
இருப்பு உள்ளது
ரூ.270.00முசோலினி
இருப்பு உள்ளது
ரூ.110.00அள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்
இருப்பு உள்ளது
ரூ.180.00சக்தி வழிபாடு
இருப்பு உள்ளது
ரூ.115.00காலை எழுந்தவுடன் தவளை!
இருப்பு உள்ளது
ரூ.135.00தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
இருப்பு உள்ளது
ரூ.180.00உயிருள்ள மூலிகை மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.225.00தென்னாப்பிரிக்க சத்யாக்கிரகம்
இருப்பு உள்ளது
ரூ.270.00நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00அன்னை தெரசா
இருப்பு உள்ளது
ரூ.115.00நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.50.00நந்திகேஸ்வரரின் காமசூத்ரா
இருப்பு உள்ளது
ரூ.135.00மருந்தில்லா மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00ஒரே ஒரு விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)