இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Prabhakaran Kannaiyan (18-10-2019)
மொத்த உறுப்பினர்கள் - 286
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 40

     இரத்தினாதேவி கங்கைகொண்ட சோழபுரத்துக்குள் தெம்புடனே நுழைந்து சாமந்தனுடன் சோழகேரளன் திருமாளிகை முன் இறங்கினாள்.

     இராசேந்திரனுக்குக் கூறியது போலவே, காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் அவளையும் உள்ளேவிட மறுத்தனர்.

     “வியப்பாக இருக்கிறதே!” என திகைப்புற்ற கடார இளவரசி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடி நிற்க, கோவிலுக்குச் செல்வதற்காக வெளியில் வந்த இளையராணியும், இராஜசுந்தரியும் “வாருங்கள்! வாருங்கள்!” என்று புன்முறுவலுடன் வரவேற்றனர். அவர்களுடன் நடந்து சென்றவாறு...

     “உள்ளே நுழைய முடியாத அளவிற்குக் காவல் பலத்திருக்கிறதே?” என்றாள் கடார இளவரசி.

     “ஆமாம்! கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும். பிறகு எல்லாம் சரியாகிவிடும்!”- இது இளையராணியின் பதில்.

     “அரசர் இறந்துவிட்டதைக் கேள்விப்பட்டேன். கங்கைகொண்ட சோழபுரத்தில் நான் இருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் இறக்கவிட்டிருக்க மாட்டேன்!”

     இராஜசுந்தரி குறுக்கிட்டாள்.

     “நீங்கள் இல்லாமற் போனதே நல்லதாகப் போய்விட்டது!”

     “என்னது?” - கடார இளவரசியின் புருவங்கள் நெரிந்தன.

     “ஆமாம்! சோழச் சக்கரவர்த்தி கண்களை மூடினதினால்தான் எங்களுக்கெல்லாம் நல்லகாலம் பிறந்திருக்கிறது. இல்லையென்றால் என் அண்ணன் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது! முதன்மந்திரி வைத்ததுதான் சட்டமாய் போயிருக்கும்!” என்றாள் இராஜசுந்தரி.

     “ஓ! அதைச் சொல்கிறீர்களா? நான் மதுரைக்குப் போனது ஒருவிதத்தில் நல்லதாகப் போய்விட்டது என்று சொல்லுங்கள்!” -சிரித்துக் கொண்டே கூறினாள் இரத்தினாதேவி.

     “இராசேந்திரனுக்கு அங்கே இறுதிக்கடன் நடக்க வழி செய்துவிட்டீர்கள் அல்லவா?” - ஆர்வத்தோடு இளையராணி கேட்க...

     இரத்தினாதேவி பதில் சொல்ல முடியாது மௌனம் சாதித்தாள்.

     “என்ன? அவன் இன்னும் உயிருடன் இருக்கின்றானா?”

     “ஆமாம்!”

     “ஆச்சரியம்தான்!” என்ற இராஜசுந்தரியிடம், “அவன் இங்கே மாறுவேடத்தில் வந்திருக்கின்றான்; மதுரையில் இல்லை” என்று கூறினாள் கடார இளவரசி.

     “அப்படியா?” - வியப்புற்ற இளையராணி, “சாமர்த்தியக்காரன்தான் போலிருக்கிறது” என்றாள்.

     அதிராசேந்திரர் வீற்றிருக்கும் கூடம் வந்துவிட்டது.

     மூன்று பெண்களும் சாமந்தனுமாக உள்ளே நுழைந்தனர்.

     மாவலிவாணராயன் இருக்கையில் அதிராசேந்திரர் சக்கரவர்த்திக்குரிய மிடுக்குடன் அமர்ந்திருந்தார். பக்கத்தில் குந்தள நாட்டு மன்னனான விக்கிரமாதித்தன் வீற்றிருக்க, வீரசோழ இளங்கோ வேளான் கைகட்டி நின்று கொண்டிருந்தான். கொடும்பாளூர்க் குறுநில மன்னர் நரைத்த மீசையைத் தடவியவாறு, மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்தார். அடுத்து இளவரசுப் பட்டம் தனக்குத்தான் என்ற தற்பெருமையில் மதுராந்தகன் இன்னொரு இருக்கையில் இருந்தான்.

     அந்த நேரத்தில் நான்கு பேரும் நுழைவதை சோழச் சக்கரவர்த்தியான அதிராசேந்திரர் எதிர்பார்க்கவில்லை. வியப்புடனே அவர்களைப் பார்த்து, “வாருங்கள்! வாருங்கள்!” என்று வரவேற்றார்.

     “சோழச் சக்கரவர்த்தி நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். இந்நாட்டின் பேரரசரானதிற்கு என் மனப்பூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றாள் கடார இளவரசி.

     “நல்லது. உட்காருங்கள்” என்று ஆசனத்தைக் காண்பிக்க, நால்வரும் அமர்ந்தனர்.

     “இராசேந்திரன் மாறுவேடத்தில் இங்கே வந்திருப்பதாகக் கடார இளவரசி தெரிவிக்கின்றார்” - பேச்சை ஆரம்பித்தாள் இராஜசுந்தரி.

     “எனக்குத் தெரியும். அத்துடன் அவன் மாளிகைக்குள் நுழைய முடியாமல், நாய் போல் வீதியில் அலைந்ததும் தெரியும். இப்போதுதான் போனால் போகிறதென்று முன்னால் தங்கியிருந்த மாளிகையின் திறவுகோலை அவனிடம் தரச் சொல்லியிருக்கின்றேன். இந்நேரம் அறைக்குள் இளைப்பாறிக் கொண்டிருக்கலாம். அதே சமயம் அவனை இங்கிருந்து வெளியேற்றிவிடவும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது!”

     குந்தள நாட்டுச் சக்கரவர்த்தியான விக்கிரமாதித்தன் குறுக்கிட்டு, “என்ன அதிராசேந்திரா, இவர்களிடமெல்லாம்...” - மேற்கொண்டு அவர்களிடம் சொல்ல வேண்டியதில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தும் விதத்தில், தன்னுடைய பேச்சை நிறுத்தினான்.

     “இவர்கள் நமக்கு வேண்டியவர்கள்!” என்று கூறிய அதிராசேந்திரன் விக்கிரமாதித்தன் பக்கம் திரும்பி “மறைந்துவிட்ட என் தந்தைக்கு அற்புதமான வைத்தியம் செய்து அவர் உயிரைச் சிறிது நாள் காப்பாற்றிய பெருமை இவருக்கே உரியது. இரத்தினாதேவி என்று பெயர். கடார நாட்டைச் சேர்ந்தவர்கள். நல்லெண்ணத் தூதாக இங்கே வந்திருக்கின்றார்கள்” என்றார்.

     இரத்தினாதேவி விக்கிரமாதித்தனைப் பார்த்துக் கை கூப்பினாள்.

     “அத்துடன் இன்னொன்றும் சொல்கின்றேன்! இவர்கள் இராசேந்திரனுக்கு பகைவர்கள்!”

     அப்போதுதான் விக்கிரமாதித்தன் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.

     “இவர்களுக்கு மருத்துவம் தெரியுமா?” என்ற கேள்வியுடன் மதுராந்தகன் அச்சமயம் குறுக்கிட்டான். ஏற்கனவே இரத்தினாதேவியின் தோற்ற அமைப்பிலும் அங்கங்களின் பூரிப்பிலும் மனதைப் பறிகொடுத்திருந்த அவன் “கொஞ்ச நாட்களாகவே உடலில் சோர்வு தட்டுகிறது. அது நீங்கிப் புதிய சுறுசுறுப்புடன் இருக்க தங்களிடம் மருந்து உண்ண ஆசைப்படுகின்றேன்” என்றான் புன்முறுவலோடு.

     அளவுக்கு மீறிய பெண்கள் போகத்தினால், முகத்தில் இளமை குன்றியிருந்த அவனை அப்போதுதான் பார்த்தாள். ‘அரசகுமாரனுக்குரிய துடிப்பு இல்லாமல் இருக்கின்றாரே. அத்துடன் பெண்கள் விஷயத்தில் அதிக ஈடுபாடுடையவர்’ என அவனைப் பற்றிக் கணக்குப் போட்டு ‘இவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று எண்ணி “அதற்கென்ன. சோர்வு நீங்க என்னிடம் சிறப்பான மருந்தெல்லாம் இருக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டாம்!” என்றாள்.

     சந்தோஷத்தின் மிகுதியால் மதுராந்தகன் இருக்கையிலே நெளிந்தான்.

     ‘அறிவு கெட்ட மடையன்’ என்று அவனை நோக்கி முகம் சுளித்த குந்தளச் சக்கரவர்த்தி, “இதற்குள் என்னப்பா உனக்குச் சோர்வு வந்துவிட்டது? நல்ல இளம் வயது. கல்லையும் உண்டு செரிக்கும் விதத்தில் சக்தி இருக்க வேண்டும்! அதைவிட்டு சோர்வு அது இது என்று மருந்து கேட்கின்றாயே?” என்றான்.

     அதைக் காதில் வாங்கிக் கொள்ளாது, இரத்தினாதேவியைப் பருகிடும் விதத்தில் மதுராந்தகன் அவளை முறைத்துப் பார்த்தான்.

     என்னதான் வேற்று ஆடவனுக்குக் கட்டிலில் இடம் கொடுக்கும் பெண்ணாக இருந்தாலும், பிடிக்காத ஆண் மகனை உதாசீனம் செய்துவிடும் இயல்பு அவளிடம் அமைந்துள்ளதால், மதுராந்தகனிடம் காமத்தைத் தவிர வேறு சிறப்பான ஆண்மைக் குணம் ஏதும் இல்லாததால், வெறுப்புக் கலந்த பார்வையால் அவனை நோக்கிவிட்டு, விழிகளை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

     அந்தத் திரும்பலைப் பற்றிக் கவலைப்படாது அவள் விழிகள் தன் மீது பரவியதே போதும் என்ற கணக்கில் புன்முறுவலை நெளியவிட்டபடி இரத்தினாதேவியை இன்னும் நன்றாக உற்று நோக்க ஆரம்பித்தான் மதுராந்தகன்.

     சோழச் சக்கரவர்த்தி அதிராசேந்திரர் குறுக்கிட்டார். “நீங்கள் சோழ நாட்டின் கௌரவ விருந்தாளிகள்; முந்தின சக்கரவர்த்தி தந்த மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து உங்களுக்குத் தரப்படும்” என்று வீரசோழ இளங்கோ வேளான் பக்கம் திரும்பி, “இவர்களை அழைத்துச் சென்று விருந்தினர் மாளிகையில் தங்க எல்லா வசதிகளையும் செய்து தரும்படி மாளிகைத் தலைவனிடம் கூறு!” என உத்தரவிட்டார்.

     வீரசோழ இளங்கோ வேளான் இருவரையும் அழைத்து கொண்டு அங்கிருந்து அகன்றான்.

     விக்கிரமாதித்தன் மதுராந்தகனை அழைத்து “சற்று நந்தவனம் வரைக்கும் உலவிவிட்டு வா!” என்றான்.

     “எதற்கு?”

     “உடல் நலத்திற்கு மருந்து உண்பதைவிட, உலவுவது சாலச் சிறந்தது!”

     கடார இளவரசியிடம் தனிமையில் பேச வேண்டும் என உரிய தருணத்திற்கு யோசித்துக் கொண்டிருந்த அவன் இதுவே ஏற்ற சமயம் என்று புறப்பட்டான்.

     ‘யாரையும் உள்ளேவிட வேண்டாம்!’ என்று வெளியே காவலுக்கிருந்த வீரர்களிடம் உத்தரவிட்ட விக்கிரமாதித்தன், எழுந்து கூடத்தை நோட்டம் விட்டுவிட்டு வந்து உட்கார்ந்தான்.

     விக்கிரமாதித்தன், இராஜசுந்தரி, சோழச் சக்கரவர்த்தி அதிராசேந்திரர், இளையராணி, கொடும்பாளூர்க் குறுநில மன்னர் மட்டும் அறையிலிருந்தனர்.

     சாளுக்கிய வேந்தன் “நாட்டைவிட்டு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என் தமையன் சோமேசுவரன் எனக்கு எதிராய்ப் படைகளைத் திரட்டுவதாக செய்தி வந்துள்ளது” என்றான்.

     அதிராசேந்திரர் முகத்தில் அதிர்ச்சி நிலவியது.

     “இதற்குள்ளாகவா புறப்பட வேண்டும்? மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டுப் போகலாமே?” - குறுக்கிட்டாள் இராஜசுந்தரி.

     “இங்கே வந்து முப்பது தினங்களுக்கு மேல் ஆகிவிட்டது, அங்கே நிலைமை சரியில்லை! நான் உடனே புறப்பட வேண்டும்” என்றான் அழுத்தமாய்.

     அந்த வார்த்தைகளுக்காக முகத்தைச் சுருக்கி, யோசனையில் ஆழ்ந்த அதிராசேந்திரன், “என்ன இருந்தாலும் குந்தள வேந்தருக்கு இங்கிருந்து போக என்னிடமிருந்து அனுமதி இல்லை!” என்றான் சிரித்துக் கொண்டு.

     மீசையைத் தடவியபடி கொடும்பாளூரார், சக்கரவர்த்தியை வினோதப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்தார்.

     “சோழச் சக்கரவர்த்தி என்னை இங்கேயே இருக்கச் சொன்னது பற்றிச் சந்தோஷம். ஆனால் குந்தள நாட்டின் நிலைமை மிக மோசமாய் இருக்கிறது. நான் எப்படியும் போக வேண்டிய சூழலில் இருக்கின்றேன். அதற்கு முன் சில வார்த்தைகள், அதிராசேந்திரருக்குச் சொல்ல விரும்புகிறேன். தற்சமயம் இங்கே பதவியிலிருப்பவர்களெல்லாம் பேரரசருக்கு எதிராய்ச் செயல்படுபவர்கள். அவர்களை நீக்கிவிட்டு அவ்விடத்தில் நமது நம்பிக்கைக்குகந்த ஆட்களை அவர் அமர்த்தியே ஆக வேண்டும். இல்லையென்றால் ஆட்சியில் பெருங்குழப்பம் ஏற்படும் என தெரிகிறது. அதற்கு முதற் கட்டமாக தளபதி தன்மபாலரை நீக்கி, அங்கே வீரசோழ இளங்கோ வேளானை அமர்த்த வேண்டும். கோட்டையின் பொறுப்பு நம் அனைவரின் நம்பிக்கைக்குரிய கங்கனிடம் தரப்பட வேண்டும். முதலமைச்சர் பதவி பிரமாதிராசருக்கு மட்டும் சொந்தம் அல்ல; அதனால் வேறு ஒருவருக்கு அப்பதவி தரப்பட வேண்டும். பட்டத்தரசியின் விஷயத்தில் நான் சொன்ன யோசனைதான் சிறந்தது. பாவ புண்ணியம் பார்ப்பதால், உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகின்றேன். திரும்ப வந்திருக்கும் இராசேந்திரனை இங்கிருந்து நாடு கடத்திவிட வேண்டும். அவனை வைத்துக் கொண்டால் உங்களுக்கு என்றும் ஆபத்துதான். அத்துடன் மதுரைக்குச் சோழ அரசின் பிரதிநிதியாக இராசராச பாண்டி மண்டலத்தை ஆளும் தங்களின் சிற்றப்பன் ஆளவந்தானை நியமிக்க வேண்டும். இவைகளையெல்லாம் செய்தால்தான் ஓரளவாவது நாம் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முடியும்!” என்றான் விக்கிரமாதித்தன்.

     “இவையெல்லாம் செய்துவிடுகிறோம். நீங்கள் இந்த சமயத்தில் எங்களைவிட்டுப் போக வேண்டாம்” என்று இடை மறித்துக் கூறினாள் இளையராணி.

     விக்கிரமாதித்தன் அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது...

     அவ்வறையின் பெருங்கதவு அவசரமாக ‘தட தட’வெனத் தட்டப்பட்டது.

     “என்ன இது? அதிகப்பிரசங்கித்தனமாய்?” முனிவுடன் மேலைச்சாளுக்கிய வேந்தன் எழுந்தான்.

     “யாரது இந்நேரத்தில்?” கேள்வியையெழுப்பியபடி கதவை நோக்கிச் சென்றாள் இராஜசுந்தரி.

     “அவசரம். மிக அவசரம்!” என்று குரல் கேட்டது.

     பதட்டத்துடனே தாழினை நீக்கினாள். அடுத்த நொடியே...

     “என்ன பிடித்துவிட்டார்களா! அந்த வெள்ளை முக்காடிட்ட உருவத்தை. இதோ வருகிறோம்!” என்று உற்சாக மிகுதியால் கூறினாள்.

     எல்லோரும் குதூகலத்துடன் செய்தியைத் தெரிவித்த வீரனைப் பின் பற்றி வேகமாய் நடந்தனர்.

     பாதாளச் சிறைக்குச் செல்லும் வழியில் உருவம் நின்று கொண்டிருந்ததாகவும், அதைப் பார்த்து அடிமேல் அடியெடுத்து வைத்துப் பின்பக்கமாய்ச் சென்று பிடித்துக் கொண்டதாகவும் தெரிவித்தான் வீரன்.

     அவ்விடத்தை அடையும் போது அங்கேயிருந்த மூன்று வீரர்களும் சோர்ந்த முகத்துடன் தப்பித்துவிட்டதாகக் கூறினர்.

     “மடையர்கள்!” - கோபத்துடன் அதிராசேந்திரர் கூவினார்.

     “மன்னிக்க வேண்டும்! நாங்கள் அதைப் பின்பக்கமாகப் பிடித்திருந்தோம். கையில் விலங்கிடுவதற்காக எங்களில் ஒருவன் முன்பக்கம் செல்லும் போது, நீட்டிய அதன் கையிலிருந்த மோதிரத்தின் ஒளி, அவன் கண்களைக் கூசவைக்க என்ன இது என்று முகத்தை மூடுவதற்குள், பின் பக்கம் பிடித்திருந்தவனைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டது. பின்பற்றி ஓடலாம் என்பதற்குள், பளிச் பளிச் என்று வீசிய ஒளியில், நாங்கள் திகைப்பூண்டை மிதித்தவர்கள் போல் நின்றுவிட்டோம்!”

     “அதுதானே விஷயம்! இவ்வளவு எளிதாக எப்படிக் கிடைத்துவிடும் என்று பார்த்தேன்!” என்று கூறிய குந்தளத்தான், “அதைப் பிடிக்க நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்!” என்றான்.

     “என்ன திட்டம் அது?” என்று சோழச் சக்கரவர்த்தி அருகிலிருந்த வீரர்களை அங்கிருந்து விலகிச் செல்லும்படிக் கூறினார்.

     “முதல் அமைச்சர் அந்த உருவில் நடமாடுவதாக ஐயம்! அவரைப் பிடித்துச் சிறையில் வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்” என்றான் விக்கிரமாதித்தன்.

     “இல்லை. அந்த மோதிரம் யாருடையது என்று தெரியும். மோதிரத்தின் ஒளியைப் பற்றி நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்!” என்றார் சோழச் சக்கரவர்த்தி.

     குந்தள மன்னன் வியப்புடன் குறுக்கிட்டு, “என்னது?” என்று வினவினான்.

     “ஆமாம். என் அன்னைக்குத் தாய் வீட்டுச் சீதனமாக அளிக்கப்பட்ட மோதிரம் அது. இப்போது உருவத்தின் மேலிருக்கும் வெள்ளைத் துணியையும், அதையும் வைத்து யோசித்தால் அநேகமாய் என் அன்னையாக இருக்கலாம் என்று கருதுகின்றேன்.”

     “நீ சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை; ஒரு பெண்ணால் அந்த அளவிற்குச் செயல்பட முடியுமா? நன்றாய் யோசித்துக் கூறு. மாளிகையின் உச்சியிலிருந்து எவ்வளவு வேகமாகவும், போர் வீரனுக்குரிய செயல் திறனுடனும், மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு அது கீழே இறங்கிற்று. இதையெல்லாம் பார்க்கும் போது பட்டத்தரசி என்று கூறுவதை நான் ஏற்பதற்கில்லை!” என்றான் விக்கிரமாதித்தன்.

     “என் அன்னைக்குப் போரைப் பற்றிய சில விஷயங்கள் தெரியும் என்பது என் போன்ற சிலருக்குத்தான் தெரியும்!”

     குந்தள வேந்தனுக்கு அப்போதுதான் சிந்தனை வேறு பக்கமாகத் திரும்பியது. ஏன் இவ்விதம் இருக்கக் கூடாது என்று கேள்வியை எழுப்பிக் கொண்டான்.

     “இவ்வளவு தூரம் வந்துவிட்டதால், பாதாளச் சிறையைப் பார்வையிடலாம்!” என்று சோழச் சக்கரவர்த்தி கூற அனைவரும் சிறைக்கூடத்தை நோக்கி நடந்தனர்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.500.00
Buy

பேலியோ டயட்
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.239.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.239.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)