இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
P.S.C. Raja (17-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 291
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!


(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 41

     நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த அறைக்குள் நுழைவதற்காக சங்கடப்பட்டாலும் நுழைய வேண்டிய அவசியம் வந்துவிட்டதால் வெள்ளை முக்காடு போட்ட உருவம் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, பட்டத்தரசியின் அறைக்குள் நுழைந்தது.

     முகத்தில் பொட்டையும், தலையில் பூவையும் இழந்துவிட்டிருந்தாலும், அம்மாதரசிக்குரிய முகக்களையில் சிறிதும் குறையாமல் இலக்குமியின் அம்சம்போல் இருந்தார் பட்டத்தரசி.

     காலடிச்சத்தம் கேட்டு நிமிர்ந்தார்.

     அருகில் வந்து “பட்டத்தரசிக்கு வணக்கம்!” என்றது உருவம்.

     பதிலுக்கு வணங்கி, “புதிய செய்தி ஏதாவது உண்டா?” என்று கேட்டார் பட்டத்தரசி.

     “உண்டு...” என்று சினத்துடனே கூறிய அது “உங்களைக் கொல்லும் திட்டத்திற்கு வந்துவிட்டார்கள்!” என்றது.

     “சீக்கிரம் அதைச் செய்யட்டும். என் கணவர் சென்ற இடத்துக்கு நான் போய்ச் சேர்ந்துவிடுகின்றேன்.”

     “தாயே, இப்படிச் சொல்லிவிட்டால் எப்படி?” சோழ நாடு பகைவர்கள் கையில் அல்லவா சிக்கிக் கொள்ளும்?” வருத்தத்துடன் அது கூற “அதற்காக நான் என்ன செய்ய முடியும்?” - சலிப்புடன் மௌனம் சாதித்தார் பட்டத்தரசி.

     “தாயே, உங்களை நம்பித்தான் நாங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுகிறோம். நீங்களே சலிப்படைந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?”

     சிறிது நேரம் அமைதி நிலவ... அதைக் கலைக்கும் விதத்தில் உருவம்தான் பேசியது.

     “சக்கரவர்த்தி அதிராசேந்திரர் திரும்பவும் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் சூட்ட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கின்றார். தங்கள் முயற்சியால் இராசேந்திரனுக்குச் சூடினால்தான் என்ன என்று அவர் மனதில் துளிர்த்த கருத்தை இப்போது மாற்றிக் கொண்டுவிட்டார். முதன்மந்திரி மாளிகைக்குள்ளே சிறை வைக்கப்பட்டிருக்கின்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்படி அப்படி என்று அவர் அசைய முடியாது. மதுரையிலிருந்து இராசேந்திரன் இங்கே வந்திருக்கின்றார். முதன்மந்திரியையும் தங்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. சிறிய தன்மபாலர் இன்னமும் சிறையில்தான் இருக்கின்றார். கங்காபுரிக் கோட்டையின் பொறுப்பு விக்கிரமாதித்தனின் கையாளான கங்கனுக்குக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுவிட்டது!”

     “அப்படிக் கொடுப்பதால் நம் படைக்குள்ளே கலகம் தோன்றுமே?” என்றார் வருத்தமுடன்.

     “ஆமாம். அதனால்தான் சக்கரவர்த்தி கூட அம்முடிவை இதுநாள் வரை தள்ளிக் கொண்டு வந்தார். ஆனால் விக்கிரமாதித்தன் நிர்ப்பந்தத்தின் பேரில் இப்போது கங்கனுக்கு வெகு சீக்கிரம் தரப்பட இருக்கிறது! மதுரையிலிருந்து கடார இளவரசி சாமந்தனுடன் திரும்பிவிட்டாள். உங்கள் இளைய மகன் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றார்.”

     “என்னது?”

     “அவருக்கு சோழ இளவரசுப் பட்டத்தைவிட கடார இளவரசியின் அழகில்தான் மோகம் அதிகமாயிருக்கிறது!”

     “நல்ல பிள்ளைதான்!”

     “உங்களுக்காக இல்லாவிட்டாலும் இந்தச் சோழ நாட்டிற்காக நீங்கள் உயிர் வாழத்தான் வேண்டும். அதற்காக ஒரு வேண்டுகோள். நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் முதலில் பூனைக்கு வைத்துவிட்டுப் பிறகு சாப்பிடுங்கள்!” பணிவுடன் கேட்டுக் கொண்டது.

     “உயிர்த் தோழி அமுதவல்லி இருக்கும்வரை உண்ணும் உணவில் நஞ்சிட்டுவிட முடியாது. அதற்காக நீ கவலைப்பட வேண்டாம்!”

     “இருக்கலாம். இருந்தாலும் எச்சரிக்கை தேவை என்று கூறுகின்றேன். இது விண்ணப்பம்!” என அழுத்திக் கூறிய உருவம் தன் சுண்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் காட்டி “இந்த மோதிரம் இல்லை என்றால் ‘நான் யார்?’ என்று தங்கள் மகனுக்குத் தெரிந்திருக்கும். அத்துடன் நானும் சிறைப்பட்டிருப்பேன்.”

     அம்மோதிரத்தின் ஒளியால் ஒருகணம் கண்ணை மூடி வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்ட அரசி, “ஆபத்துக் காலத்தில் இந்த ஒளியைப் பயன்படுத்தி தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சிறப்பு வாய்ந்த வைரக்கல்லை இதில் பதித்திருக்கின்றார்கள். என்னிடம் வெறுமனே கிடந்த அது இப்போது உமக்குப் பயன்படுவதை அறிந்து மகிழ்ச்சியடைகின்றேன்!” என்றாள் அரசி.

     “வெகு விரைவில் இது உங்களிடமே திருப்பித் தரப்படும். அந்தக் காலம் கூடிய சீக்கிரம் வரவேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.”

     “நல்லது!”

     “நான் விடைபெறுகின்றேன் தாயே! கூடிய சீக்கிரம் நல்ல செய்தியுடன் தங்களைச் சந்திக்கின்றேன்!”

     “அப்படியே ஆகட்டும்!” என்று உருவத்தை அனுப்பிய அரசி தன் தோழி அமுதவல்லியைக் கூப்பிட்டு, சோழச் சக்கரவர்த்தியை நான் பார்க்க விரும்புவதாகத் தெரிவி. அத்துடன் அவசரம் என்றும் அறிவி!” என்றாள்.

     அரசியாரின் உத்தரவுடன் சோழச் சக்கரவர்த்தி இராசேந்திரன் மாளிகை நோக்கி வேகமாய் நடந்தாள் சேடி.

*****

     திருமந்திர ஓலை நாயகம் சக்கரவர்த்தியின் உத்தரவு வரையப் பெற்ற ஓலையை ஒரு தரம் படித்தான்.

     “இராசராச பாண்டி மண்டலத்தை ஆளும் சோழ அரசின் பிரதிநிதியான என் சிறிய தந்தையான ஆளவந்தான் அவர்களுக்கு அரசர் விடுக்கும் செய்தியாவது: இன்று முதல் நீங்கள் பாண்டிய நாடான மதுரைக்குச் சோழ அரசின் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டிருக்கின்றீர்கள். இப்போதே தாங்கள் அதை ஏற்க வேண்டும்.” படித்துப் பார்த்த திருமந்திர ஓலை நாயகம், அரசர் உத்தரவு! என்று அதில் கையப்பமிட்டார்.

     அடுத்த ஓலை நறுக்கில்...

     “அரசர் விடுக்கும் செய்தி: வேங்கி நாட்டு இளவரசராயிருந்த இராசேந்திரனுக்கு, இதைக் கண்ணுற்ற அடுத்தகணமே, தாங்கள் வேங்கிப் பகுதியிலிருக்கும் சோழப் படைக்குத் தலைமை தாங்க வேண்டும்!”

     அதற்கும் கையப்பமிட்ட திருமந்திர ஓலைநாயகம் விடையில் அதிகாரியைக் கூப்பிட்டு, இரு ஓலைகளையும் உரியவர்களிடம் சேர்ப்பித்துவிடும்படி உத்தரவிட்டான்.

     அதைப் பெற்றுக் கொண்ட அதிகாரி அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அங்கிருந்து அகன்றான்.

     உத்தரவுகள் ஓலை மூலம் அவரவருக்குச் சேர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிந்த சோழச் சக்கரவர்த்தி அடுத்து மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதற்கான முயற்சிகளைச் செய்ய முனைந்த போது...

     பெரிய அரசியாரின் சேடி வந்து அவசரமாக அழைப்பதாகக் கூறினாள்.

     இது என்ன புதிதாய்? போய்ப் பார்த்துவிட்டு மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டும் விஷயத்தையும் சொல்லிவிடலாம் என்று அவரின் மாளிகை நோக்கிச் சென்றார்.

     “வா, அதிராசேந்திரா!”- தனக்கு எதிரே இருந்த இருக்கையைக் காண்பித்துச் சொன்னார்.

     “என்ன அவசரமாகக் கூப்பிட்டீர்களாமே?”

     “ஆமாம்! முதலமைச்சரை ஏன் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படிக் கூறிவிட்டாய்?”

     “காரணம் கருதித்தான். உரிய நேரம் வரும்வரை அவர் உள்ளேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியமாய்ப் போய்விட்டது.”

     “எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை!”

     “பிடிக்காத விஷயங்கள் சில நடக்க நீங்கள் அனுமதிக்கத்தான் வேண்டும்!”

     “அப்படி என்ன அனுமதி? பிரமாதிராசரைவிட உனக்கு நம்பிக்கைக்குரியவர் இந்த நாட்டில் வேறு யாராவது இருக்கிறார்கள் என்று நீ உறுதியாகச் சொல்ல முடியுமா?”

     “என் தந்தை இருக்கும் வரை நம்பிக்கைக்கு உரியவராகத்தான் இருந்தார். இப்போது எனக்கு எதிராகச் செயல்படுகிறார்.”

     “அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?”

     “பல விஷயங்களில். காலம் கனியும் போது எல்லாம் வெளிப்படத்தான் போகிறது.”

     “சிறிய தன்மபாலரை நீ இன்னும் சிறையிலிருந்து விடுதலை செய்யவில்லை. அவர்கள் சோழ நாட்டிற்காகச் செய்த தியாகங்கள் எத்தனை? இந்த மாதிரி தியாக சீலர்களின் வெறுப்பையெல்லாம் பெற்றுக் கொண்டு, நீ எத்தனை நாளைக்கு ஆட்சி புரிய முடியும்?”

     “மன்னிக்க வேண்டும் தாயே. சிறிய தன்மபாலர் இராசத்துரோகக் குற்றத்திற்காகச் சிறை வைக்கப் பட்டிருக்கின்றார்!”

     பெரிய அரசியாருக்குச் சீற்றம் மிகுந்தது. “அவர் செய்த இராசத்துரோகக் குற்றம்தான் என்ன?”

     அதிராசேந்திரன் மௌனம் சாதித்தான்.

     “உனக்கு வேண்டாதவர்களையெல்லாம் இராசத்துரோகம் என்று வீண் குற்றம் சுமத்தி, அவர்களைச் சிறையில் தள்ளுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!”

     “தற்சமயம் குற்றத்தை நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கின்றேன். உரிய நேரம் வரும்போது இவர்களின் உண்மை உருவம் வெளிப்படத்தான் போகிறது!”

     “அதிராசேந்திரா! உனக்குத் துர்ப்போதனைகள் செய்யும் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டதாக நான் உணருகிறேன். இதனால் உனக்குத் தீமையைத்தவிர நன்மை ஏதும் விளையப் போவதில்லை!”

     “உங்களுக்கு அது துர்ப்போதனைகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு? என் உயர்வில்... என் வெற்றியில் நாட்டக் கொண்ட நல்லிதயங்கள் கூறும் அறிவுரைகளாக நினைக்கின்றேன்!”

     பெரிய அரசியாரிடமிருந்து வேதனை கலந்த சிரிப்பு வெளிப்பட்டது.

     “யார் நல்லவர்? யார் கெட்டவர் என்று பிரித்துப் பார்க்க முடியாத சிறு குழந்தையாயிருக்கின்றாய். இதைவிட துர்ப்பாக்கிய நிலை எனக்கு வேறு என்ன வேண்டும்? உன்னைப் பெற்ற தாய் என்பதால் கூறுகின்றேன். அவர்களை விலக்கிவிட வேண்டும்!”

     “அவர்களை விலக்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்! ஆனால் துர்ப்போதனைகள் என்று சொல்கிறீர்களே அப்படி ஒன்றை நீங்கள் உதாரணங்காட்டிக் கூற முடியுமா?”

     பெரிய அரசி அதிராசேந்திரனை ஒருமுறை மேலும் கீழும் நோட்டம்விட்டார்.

     “அவசியம் சொல்லத்தான் வேண்டுமா?”

     “ஆமாம்!”

     “என்னை நஞ்சிட்டுக் கொல்ல உனக்குச் சொன்ன யோசனையை எந்தப் போதனையில் சேர்ப்பது?”

     அதிராசேந்திரர் திகைத்துவிட்டார்! இந்த விஷயம் இவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அப்படியென்றால் வெள்ளை உருவத்தில் நடமாடியது இவர்கள்தான் என்று நான் முடிவு செய்தது மிகவும் சரியாகிப் போய்விட்டது!

     “என்ன இராசேந்திரா, மௌனம் சாதிக்கின்றாய்? பெற்ற அன்னைக்கு விஷமிட்டுக் கொல் என்று சொல்லும் அவர்களின் முகத்தில் நீ விழிக்கலாமா? இப்படி யோசனை கூறும் அவர்கள் உன் நல்வாழ்வில் அக்கறை கொள்பவர்கள் என்று சொல்வதை என்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? முதலில் விக்கிரமாதித்தனையும் இராஜசுந்தரியையும் குந்தள நாட்டிற்கு அனுப்பி வை. கலகக்காரரான சயங்கொண்ட சோழ இருக்குவேளை கொடும்பாளூருக்கு அனுப்பு...”

     சோழ மன்னர் இடைமறித்தார்.

     “இவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு, என்னைத் தனிமையில் தவிக்கச் சொல்கிறீர்களா?”

     “ஏன், நான் இல்லை? முதலமைச்சர் பிரமாதிராசர் இல்லை. இதைவிட என்ன வேண்டும் உனக்கு?”

     அதிராசேந்திரர் சிரித்து “சயங்கொண்ட சோழ இருக்குவேளும், குந்தள மன்னரும், உங்கள் சிறிய மகன் மதுராந்தகனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி முடித்ததும் இங்கிருந்து போய்விடுவார்கள்!” என்றார்.

     பெரிய அரசியாருக்கு முகத்தில் அதிர்ச்சிக் குறி நிலவியது. “இராசேந்திரனுக்கு அல்லவா இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் என்று சொன்னேன். மறைந்து போன நம் சக்கரவர்த்தியின் விருப்பம் கூட அதுதானே.”

     “இல்லை என்று நான் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் சூழ்நிலையை அனுசரித்து என்னால் இந்த முடிவுக்கு வரப்பட்டது. அத்துடன் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டுவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தயவு செய்து இதற்கு மேல் இந்த விஷயத்தை நீங்கள் வற்புறுத்த வேண்டாம்!”

     “அப்படியென்றால் என்னை நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிடு.”

     “தன் மகனுக்கு இளவரசுப் பட்டம் வேண்டாம் என்று கூறும் ஒரு விசித்திரத் தாயை இந்த உலகத்தில் உங்களைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியாது.”

     “அப்படித்தான் வைத்துக் கொள். இராசேந்திரா! பெற்ற மகனைவிட இந்தச் சோழ நாடு எனக்கு முக்கியமாகப்படுகிறது. அத்துடன் மறைந்துவிட்ட கணவரின் ஆசையை நிறைவேற்றுவதும் என்னுடைய கடமையாகப் போய்விட்டது.”

     “இதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை என்பதைத் தவிர தற்சமயம் வேறு ஒன்றும் கூற முடியாத நிலையிலிருக்கின்றேன் நான்!”

     “இதற்காகவா மகனே உன்னை அரசு கட்டிலில் ஏற்றினோம்?”

     “தந்தைக்குப் பின் தனயன் என்ற முறைப்படி எனக்கு அரசு கட்டில் கிடைத்திருக்கிறது. மற்றபடி நீங்கள் மனமுவந்து தரவில்லை!” - அதிராசேந்திரர் குரலில் கோபம் இழைந்திருந்தது.

     “இனிமேல் உன்னிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை; உன் விருப்பப்படியே செய். இந்தச் சோழ நாட்டிற்கு இனி நல்ல காலம் இல்லை. அழியப் போகும் இந்த சாம்ராஜ்யத்தை அந்த அழிவிலிருந்து காப்பது யார்? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!” - வருத்தமுடன் கூறிய அரசியாரின் விழிகள் கலங்கின. அங்கே நின்றால் தன் மனமும் வருத்தத்தில் அழும் என்று உணர்ந்த அதிராசேந்திரர்,

     “வருகிறேன் தாயே! உரிய நேரத்தில் உங்கள் விருப்பங்கள் ஒவ்வொன்றும் நிறைவேற்றி வைக்கப்படும். வீணாக வருந்த வேண்டாம்” என்று அங்கிருந்து அகன்றார்.


அரசு கட்டில் : என்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


கிரிவலம்
இருப்பு உள்ளது
ரூ.90.00கே.பாலசந்தர்
இருப்பு உள்ளது
ரூ.105.00காலை எழுந்தவுடன் தவளை!
இருப்பு உள்ளது
ரூ.135.00ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.110.00சூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா
இருப்பு உள்ளது
ரூ.165.00சிவகாமியின் சபதம்
இருப்பு உள்ளது
ரூ.360.00நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி
இருப்பு உள்ளது
ரூ.265.00சிலைத் திருடன்
இருப்பு உள்ளது
ரூ.225.00உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.195.00வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு
இருப்பு உள்ளது
ரூ.200.00அருணகிரி உலா
இருப்பு உள்ளது
ரூ.250.00ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.300.00உச்சம் தொட
இருப்பு உள்ளது
ரூ.180.00சாண்டோ சின்னப்பா தேவர்
இருப்பு உள்ளது
ரூ.120.00வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து
இருப்பு உள்ளது
ரூ.315.00பிசினஸ் டிப்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.125.00இனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்
இருப்பு உள்ளது
ரூ.205.00சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி
இருப்பு உள்ளது
ரூ.200.00இலக்குகள்!
இருப்பு உள்ளது
ரூ.265.00அன்னை தெரசா
இருப்பு உள்ளது
ரூ.115.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)