(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 12

     பஞ்சணையில் மிகச் சோர்வுடன் படுத்திருந்தான் இராசசிம்மன். அமைச்சர் பிரம்மராயர், பிற்காலப் பல்லவ அரசு நிறுவக் காரணமான சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் வழி வந்த இரணியவர்மன் - பல்லவமல்லனின் தந்தை - தளபதி ‘பல்லவடி அரையன்’ போசர் முதலானோர் நின்று கொண்டிருந்தனர்.

     அரண்மனை மருத்துவர், “பூரண ஓய்வு தேவை” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

     பிரம்மராயரை அருகில் அழைத்த இராசசிம்மன் அனைவரையும் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான்.


நலம், நலம் அறிய ஆவல்!
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

108 திவ்ய தேச உலா - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

கற்பிதம் அல்ல பெருமிதம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

சதுரகிரி யாத்திரை
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

காவிரி அரசியல்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

அதிர்ந்த இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

திரைக்கதை எழுதலாம் வாங்க
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

சபாஷ் சாணக்கியா பாகம்-II
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

குறள் வானம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கள்ளம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உயிர்ச்சுழி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

27 நட்சத்திரக் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

எலான் மஸ்க்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

பிறந்த மண்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy
     மிகவும் மெல்லிய குரலில் அவன் பேச ஆரம்பித்த போது, வேண்டாம் என்று அமைச்சர் பணிவுடன் குறிப்புக் காட்டினார்.

     ஆனால் இராசசிம்மன், அதை ஏற்கமாட்டேன் என்று கண்களை இருபுறமும் ஓட்டி அசைத்து, “சில செய்திகளை நான் சொல்லித்தான் தீரவேண்டும்!” என்றான். பிறகு கனைத்துவிட்டுப் பஞ்சணையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

     அதைக் கவனித்த பிரம்மராயர், “வேண்டாம் அரசே, படுத்த நிலையிலே சொல்லுங்கள்!” என்றார்.

     “அமைச்சர் என்னை நிரந்தர நோயாளியாக்க விரும்புகின்றார் போலிருக்கு. ஆனால் நான் அப்படியல்ல!” என்று சிரித்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தான்.

     அனைவரும் மன்னர் என்ன சொல்லப் போகின்றார் என்பதிலேயே கவனமாக இருந்தனர்.

     “அமைச்சரே, கொஞ்ச நாட்களாகவே பல்லவ ஆட்சிக்கு நல்ல நேரமில்லை என்றுதான் எனக்குப் படுகிறது! உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல என் மகன் வயிற்றில் பிறந்த சித்திரமாயன், நாட்டுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு, நமக்கு விரோதியான பாண்டியர்களிடமும், சாளுக்கியர்களிடமும் நட்பு வைத்துக் கொண்டிருக்கின்றான். அவனை அரசகுடும்பத்தைச் சேர்ந்தவன் என்றே மக்கள் மதித்ததாகத் தெரியவில்லை. அதைப் பற்றி அவனும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மக்கள் வெறுப்பைச் சம்பாதித்த காபாலிகர்களுடன் கைகோத்துத் திரிந்த வண்ணம் இருக்கின்றான். இதற்கு நடுவில் ஒற்றர்கள் மூலம் நமக்குத் தெரிந்த செய்தி என்னவென்றால் பாண்டியர்கள் சித்திரமாயனுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம்! என்ன வாக்குறுதி என்று பார்த்தால் சித்திரமாயனுக்குப் பல்லவ ஆட்சியைத் தருவதாக வாக்குறுதியாம்! இவர்கள் யார் வாக்குறுதி தருவதற்கு? ஆட்சிப் பொறுப்பைச் சித்திரமாயனுக்குக் கொடுப்பதும் கொடுக்காததும் யார் முடிவு செய்ய வேண்டும்? இவர்கள் என்ன நமக்குப் பங்காளிகளா? அல்லது பல்லவ நாட்டு மக்களா? ஒருவர் விவகாரத்தில் ஒருவர் குறுக்கிடுவது எவ்வளவு தவறு என்று அவர்களுக்குப் புரியவில்லையா? என்ன செய்வது? நம் கையே நமக்குச் சரியில்லை. யாரை நோவது? மிகவும் இக்கட்டான இந்நிலையில் பல்லவமல்லன் கடத்தப்பட்டுவிட்டான்! அவனைத் தேடிச் சென்ற விஜயவர்மனைப் பற்றித் தகவல் இல்லை. அவனுடன் சென்ற பத்து வீரர்களில் ஏழு பேர்தான் திரும்பியிருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணமாகக் காபாலிகக் கும்பல் ஒன்றே பின்னால் செயல்படுவதாக எனக்குப் படுகிறது. யாரை நம்புவது யாரை நம்பாதிருப்பது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பேர்ப்பட்ட கொடிய பஞ்சம் வந்த போது கூடக் காஞ்சி நகரையே மக்கள் காலி செய்த போது கூட, நான் மனம் தளராது பல்லவ ஆட்சியைக் காப்பாற்றி, மறுபடியும் இக்காஞ்சியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றேன்! இன்று...?” சிறிது மௌனம் சாதித்தான் மன்னன். பிறகு கனைத்துவிட்டு மீண்டும் பேசத் துவங்கினான்:

     “மல்லன் கடத்தப்பட்டுவிட்டான்! நாட்டில் ஒற்றர் படை செயல்படுவதில் பலவீனம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் அரண்மனைக் காவலை மீறி அந்தப் பெண் மல்லனைக் கடத்தியிருக்கிறாள் என்றால்...? அத்துடன் சிறந்த வீரனை இழந்துவிட்டிருக்கிறோம். இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ? இதற்கெல்லாம் மாற்று நடவடிக்கையாக என்ன வைத்திருக்கிறாரோ அமைச்சர்! இவ்வளவு படைபலம் இருந்தென்ன? சிறப்பு இருந்தென்ன? எல்லாவற்றையும் ஏப்பம்விடுவது போல் ஒரு சிறிய கும்பல் செயல்படுகிறது! எனவே நான் உங்களுக்குக் கட்டளையிடுவது என்னவென்றால் பல்லவமல்லன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்! அவனைத் தேடிச் சென்ற விஜயவர்மனைப் பற்றித் தகவல் தெரிய வேண்டும்! காஞ்சியில் காபாலிக உருவில் நடமாடுகின்ற வஞ்சகக் கூட்டத்தை ஒழிக்க வேண்டும்! பாண்டியர்களின் ஆணவத்தை அடக்க வேண்டும்! இதற்கு யார் முன் நின்று இதையெல்லாம் செய்யப் போகிறீர்கள்? இதைச் செய்யாதவரை பல்லவ ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை... ஏன், என்னையும் சேர்த்துத்தான்...!” என்று அதற்கு மேல் மன்னனால் பேச முடியாததால் மௌனமானான்.

     இரணியவர்மன் இராசசிம்மன் அருகில் வந்தான்.

     “என்ன இரணியவர்மா?”

     “உங்களிடம் ஒரு முக்கியச் செய்தியைச் சொல்லப் போகின்றேன்!”

     “என்ன செய்தி?”

     “பல்லவமல்லன் காணாமற் போனதைப் பற்றி நீங்கள் அளவு கடந்த மனக்கவலையடைந்ததாகத் தெரிகிறது! ஆனால் நான் அவனைப் பெற்றவன்... அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை! அத்துடன் ஒரு செய்தி” என்று குனிந்து மன்னன் செவியில் எதையோ இரகசியமாகச் சொன்னான்.

     “இந்தச் செய்தி இங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்! நாட்டின் நன்மைக்காக இதை மறைத்தே வைக்க விரும்புகின்றேன்!” என்றான்.

     மன்னன் முகம் அதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியில் நிலவியது.

     “எல்லோரும் சேர்ந்து இவ்வளவு கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுவதைக் கண்டு எனக்குப் பெருமைதான்! இவ்வளவு இரகசியமாக வைத்திருப்பதை நானும் இரகசியமாகவே வைத்துக் கொள்கின்றேன்! நான் உடனே அவனைப் பார்க்க வேண்டுமே!”

     “அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது... இன்று இரவு அரண்மனை உறக்கத்தில் ஆழ்ந்ததும் உங்கள் அறையில் அவன் இருப்பான்!” என்றான் இரணியவர்மன்.

     “நல்லது. இப்போதுதான் எனக்கு அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது! விஜயவர்மன் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?”

     அமைச்சர் குறுக்கிட்டார்.

     “ஆட்களை அனுப்பியிருக்கிறோம் மன்னா! விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று நினைக்கின்றேன்!” என்றார்.

     “எனக்கு மிகக் களைப்பாக இருக்கிறது! அத்துடன் இதுவரை மனதில் இருந்த துக்கம் போன இடம் தெரியவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிய அந்த ஈசன்தான் கருணை வைக்க வேண்டும்?” என்று பஞ்சணையில் சாய்ந்தான்.

     அனைவரும் மன்னன் ஓய்வுக் கொள்ளட்டுமென்று அந்த அறையைவிட்டு வெளியே வந்தனர்.மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்