(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 13

     அலைகளின் ஆரவாரம் பெரிதாகக் கேட்க, அந்தக் குகையில் சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது.

     விஜயவர்மன் கண் விழித்தான்.

     தலையில் பலமான கட்டு. கை கால்களை அசைக்க முடியவில்லை.

     ‘என்ன இது? எங்கே இருக்கின்றேன்?’ எழ முயன்று, முடியாததால் தன் கை கால்களைப் பார்த்தான். கைகள் இரண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. கால்களில் ஒன்று தரையோடு சேர்த்துச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.


கொங்கு மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம்
இருப்பு உள்ளது
ரூ.81.00
Buy

விலங்குப் பண்ணை
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

நோ ஆயில் நோ பாயில்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

இது சக்சஸ் மந்திரம் அல்ல!
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

தமிழ் நாவல்கள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சந்திரபாபு
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

சதுரகிரி யாத்திரை
இருப்பு இல்லை
ரூ.150.00
Buy

ஒளி ஓவியம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

செங்கிஸ் கான்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மாயான் : ஹூலியோ கொர்த்தஸார்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உயிர்ச்சுழி
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

அன்பும் அறமும்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

நான் ரம்யாவாக இருக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

உயிர் வளர்க்கும் திருமந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

சரோஜா தேவி
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy
     சிறை வைக்கப்பட்டிருக்கின்றேன்! யாரால்? திரும்பிச் சுற்றுமுற்றும் கவனித்தான். அவ்வளவு வெளிச்சம் இன்றி ஆனால் சிறு குன்றில் குடையப்பட்ட குகைபோல் இருக்கிறது. கீழே ஒரு சங்கிலியைப் புதைத்துக் காலை அதில் இணைத்திருக்கிறார்கள். கைகள் கற்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் சங்கிலியால் கட்டிவிட்டிருக்கிறார்கள். யார் செய்திருப்பார்கள்? ஒருவேளை அந்தக் காபாலிகர்களா? ஆனால் கைகள் மட்டும் வாய்வரை வரும் அளவுக்குத் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டிருக்கின்றார்கள்! மகா புண்ணியவான்கள்!

     அந்தத் தாராளத்தைப் பயன்படுத்தி விஜயவர்மன் சிறிது நிமிர்ந்து கற்சுவரில் சாய்ந்தான். குகை வாயிலில் ஒருவன் நின்று கொண்டிருப்பது அவன் கண்களுக்குத் தெரிந்தது. நாவறட்சியால் தொண்டை உலர்ந்திருக்கக் குடிக்க தண்ணீர் தேவையாயிருந்தது.

     “தண்ணீர்!” என்று கத்தினான் உரக்க. வார்த்தைகள் தொண்டையிலிருந்து வர மறுத்ததால் முயன்று உரக்கத் “தண்ணீர்!” என்று கூவினான்.

     நின்றிருந்த அவன், நிதானமாக இவனை நோக்கி வந்தான்.

     கிட்டவந்த பிறகுதான், சத்திரத்தில் பார்த்த சோமன் என்று தெரிந்தது. வலக்கை கட்டை விரல் காணவில்லை. அங்கே பச்சிலை வைத்துக் கட்டியிருந்தான்.

     இவனைப் பார்க்கப் பார்க்க, அவனுக்குச் சினம் மிக, “என்ன கேட்டாய்?” என்றான்.

     “தண்ணீர்!” - விஜயவர்மன் கண்கள் பரிதாபமாக அங்குமிங்கும் அலைந்தன.

     சோமன் அதைக் கேட்டு இடிஇடியென்று உரக்கச் சிரித்து, “என்ன கேட்டாய்?” என்றான் மீண்டும்!

     “தண்ணீர்!” - இம்முறை அழுத்திச் சொன்னான்.

     “தண்ணீர்...! அதோ இருக்கிறது” என்று மூலையிலிருந்த மட்பானையைக் காட்டிச் சொன்னான்.

     “என் கைகள் பிணைக்கப் பட்டிருக்கின்றனவே! நான் எப்படி அதை எடுத்துப் பருக முடியும்?”

     “உண்மை. ஆனால் எனக்கு இடக்கை பழக்கம் வராது. வலக்கை கட்டைவிரல் உன்னால் துண்டிக்கப்பட்டு விட்டது! அதனால் எதையும் செய்ய முடியாத நிலையில் நான் இருக்கின்றேன்!”

     “வேறு யாரும் இல்லையா?”

     சோமனுக்குப் கோபம் கொப்பளித்து வந்தது.

     “என்ன கேட்டாய்? வேறு யாரும் இல்லையா என்றா?” பற்கள் அந்த கோபத்தினால் கடகடவென்று கடிக்கப்பட்டன. விழிகள் சிவந்தன. அருகில் நெருங்கி வந்தான்.

     “சிறை நாய்க்கு என்ன தண்ணீர் வேண்டிக்கிடக்கு? பேசாமல் கிட. சும்மா இருப்பதே பெறும் சுகம் என்பது உனக்குத் தெரியாதா?”

     “சிறை நாய்களை எங்கள் பல்லவ நாட்டில் அரசின் பெருமைக்குரிய விருந்தினராக நடத்துவோம்! அவசியம் ஏற்பட்டாலன்றி அவர்கள் மனம் நோக எதையும் செய்யமாட்டோம்! ஆனால் இங்கே...?”

     “என்னடா தத்துவம் பேசுகிறாய்? நாவறட்சியுடையவன் போலவா பேசுகிறாய்? கள்ளன்!” என்று அவனை அடிக்க நெருங்கினான்.

     “சோமா நில்!” என்று ஒரு குரல் பின்னாலிருந்து வந்தது. திரும்பினான்.

     அங்கே-

     கயல்விழியும், நாகபைரவனும் நின்று கொண்டிருந்தனர்.

     “என்ன மாமா... என்ன கயல்விழி?” என்று வினவ “நம் ஆட்சியிலும் சிறை விருந்தினர் மதிப்புக்குரிய விருந்தினராகத்தான் நடத்தப்படுவர்! அதை ஏன் நீ மறந்துவிட்டாய்?” என்று நாகபைரவன் கேட்டான்.

     சோமனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. முகத்தில் அசட்டுச் சிரிப்புத் தோன்றத் தலை குனிந்தான். கயல்விழி, மட்பானையைத் திறந்து குவளையில் நீரை முகந்து அவன் கையில் கொடுத்தாள். விஜயவர்மன், அதைக் குடித்துவிட்டுக் குவளையை அவளிடம் நீட்டக் கயல்விழி வாங்கிக் கொண்டாள்.

     நாகபைரவனுக்கு வலக்கை மணிக்கட்டுவரை காணவில்லை. அதில் பச்சிலை வைத்துக் கட்டியிருந்தார்கள். விஜயவர்மன் அதைக் கவனித்தான்.

     “என்ன பார்க்கிறாய்? எல்லாம் உன் கைங்கர்யம்தான்!” என்றான் நாகபைரவன்.

     விஜயவர்மன் அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

     “மல்லன் எங்கே?” என்றான்.

     “அவசியம் தெரிய வேண்டுமா?”

     “ஆமாம்!”

     “பைரவருக்குப் பலி கொடுத்துவிட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் பத்திரமாக இருக்கின்றான் பைரவருக்குப் பலி தருவதற்காக!”

     “பலி... பலி... பாழும் இந்தப் பலி எப்போதுதான் ஓயுமோ?”

     “ஏன் உனக்கு இதைக் கேட்டு எரிச்சல் வருகிறது! கடவுளுக்குக் காணிக்கை தரப் போகிறோம்! அநீதி நடக்கும் போது, இம்மாதிரி பலிகள் தேவைப்படுகின்றன! அப்படித் தராது போனால் இந்தக் கடல் ஒரு கட்டுக்குள் அடங்கி இருக்காது. வானம் வழங்காது. ஞாயிறும், திங்களும் தங்கள் வேலையினைச் செய்யமாட்டா! இவ்விதம் இயற்கை தன் கடமையினைச் செய்யத் தவறினால் என்ன நடக்கும் இப்பூவுலகில்... அதைச் சிந்தித்துப் பார்த்தாயா?”

     விஜயவர்மனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

     “ஏன் சிரிக்கிறாய் அற்பப் பதரே! உனக்கு என்ன தெரியும் எங்கள் சமயத்தைப் பற்றி! இன்று காஞ்சி ஓரளவு சுபிட்சமாக இருப்பதற்கு எங்கள் சமய வழிபாடுதான் காரணம்! இல்லையென்றால் தற்போது இறந்துவிட்ட இராசசிம்மன் ஒரு காலத்தில் கஞ்சிக்காகக் கலயம் தூக்கிக் கொண்டு காஞ்சி முழுவது சுற்றி வந்தானே... அதை மறந்துவிட்டாயா?”

     “என்ன... இறந்துவிட்டாரா மன்னர்? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?” என்று வியப்புடன் குழப்பமும் திகைப்பும் சேரக் கேட்டான் விஜயவர்மன்.

     “ஆமாம்! கிழக்கோட்டான் கண்ணை மூடிவிட்டது. இனி எங்களுக்கு எந்தத் தொல்லையும் இருக்காது! அடுத்துப் பட்டம் சூட்டிக் கொள்ளப் போகிற பரமேசுவரவர்மனையும் ஒழிப்போம். சக்கரவர்த்தி சித்திரமாயன் அவர்களை அரசுகட்டில் ஏற்றும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை.”

     “அடப்பாவிகளா, மன்னரைக் கொன்றுவிட்டீர்களா?”

     “நாங்கள் ஏன் அந்தக் கிழபுலியைக் கொல்லப் போகிறோம்? போகும் நேரம் வந்தது! போய்விட்டது. இயற்கை மரணம் என்று உங்கள் பல்லவநாட்டு உள்படு கருமத்தலைவர் கூறி, அமைச்சரின் அறிவிப்பு முரசு மூலம் நாடெங்கும் அறிவிக்கப்பட்டுவிட்டதே.”

     “இந்தச் செய்தி கேட்டு ஏன் நான் இன்னும் உயிரோடிருக்கின்றேன்! என்னைக் கொன்றுவிடுங்கள்..” என்று விஜயவர்மன் கைகளால் தலையை அடித்துக் கொள்ள முயன்று, வாய் வரை வந்த கை, அதற்குமேல் போகாமல், இழுத்து அதை அறுக்கத் துள்ளினான்.

     முடியவில்லை.

     “இந்த மாதிரி முயற்சிகளை நீ மேற்கொள்வாய் என்று தெரிந்துதான் பலமான சங்கிலியாகப் போட்டிருக்கிறோம். அதனால் தப்பிக்க முயல்வது என்பது அறிவுடைய செயல் ஆகாது.”

     “இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு நான் வாழ விரும்பவில்லை. என்னைக் கொன்றுவிடுங்கள். என் மார்பில் உங்கள் வாளினைப் பாய்ச்சி வெஞ்சினம் முடித்துக் கொள்ளுங்கள்! நான் சாக விரும்புகின்றேன்” என்றான் விஜயவர்மன்.

     “உன்னை இப்போது கொல்வதால் எங்களுக்கு எந்தவித இலாபமும் இல்லை. நீ இப்போது எங்களுக்குத் தங்கச் சுரங்கம். உன்னை வைத்துத்தான் நாங்கள் நிறையச் சம்பாதிக்க விரும்புகிறோம்! அதனால் பதட்டப்படாமல் நிதானமாக உயிர் வாழ்ந்து கொண்டிரு!” என்று நாகபைரவன் வெளியே போகத் திரும்பினான். பின்னால் கயல்விழி வந்தாள். சோமனைப் பார்த்து நாகபைரவன், “பத்திரமாகப் பார்த்துக் கொள்!” என்று கூறிவிட்டுக் கயல்விழியைத் தன் பின் வரும்படி சைகை செய்து வெளியே வந்தான். ஏறக்குறைய இருநூறு முழ தூரத்துக்கு அப்பால் அலைகள் ஆரவாரத்துடன் எழும்பிக் கரையில் மோதிக் கொண்டிருந்தன. அந்தக் குகை இருந்த இடத்தைச் சுற்றிக் குன்றுகள் நிறைய விரவிக் கிடந்தன. மறைந்திருப்பதற்காகவே செயற்கையாக அமைக்கப்பட்ட அந்தக் குகை, நாகபைரவனுக்கும் அவனைச் சார்ந்த கூட்டத்திற்கும் வசதியாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணற் பரப்பு குன்றை மறைத்தது போலத் தென்னை மரங்கள் மண்டிக் கிடந்தன. அதைத் தாண்டிச் சமமான இடத்தில் கடல் மணலைச் சரி செய்து கீழே உட்கார்ந்தான். கயல்விழி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.

     “கிழவன் இராசசிம்மன் இறந்துவிட்டான்! நமக்கிருந்த பெரிய தடை விலகிப் போனது போல இருக்கிறது. அடுத்துப் பரமேசுவரவர்மன் பட்டத்துக்கு வருவதாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று சாம்பன் மூலம் செய்தி வந்திருக்கிறது. அந்த மணற்சரிவையும், மண்டபத்தையும் இனிமேல் நாம் கைகழுவிவிட வேண்டியதுதான்! எதிரிகளுக்கு அந்த இடம் தெரிந்து போய்விட்டது! பாண்டிய மன்னன் கோச்சடையன் இரணதீரன் என்னை வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கின்றான். நம் சித்திரமாயன்கூட அங்கேதான் தோளில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெற்று வருகிறாராம். முக்கியச் செய்தி இல்லாமல் என்னை வரச் சொல்லமாட்டார் பாண்டிய மன்னர். அதனால் நான் விரைந்து போக வேண்டும்! நான் திரும்பி வரும் வரை நீ எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! விஜயவர்மன் தப்பிவிடப் போகின்றான்! அவனை வைத்துத்தான் நிறையப் பொற்காசுகளைப் பல்லவ ஆட்சியிடமிருந்து பெற வேண்டும்! நான் சீக்கிரம் மதுரை சென்று திரும்பிவிடுகின்றேன்! அதுவரை நீ விழிப்புடன் இருக்க வேண்டும். ஆமாம் பல்லவமல்லனைப் பற்றி ஒரு செய்தியும் தெரியவில்லையே! காஞ்சிக் காபாலிக மடத்திற்கு இன்னும் போய் அவன் சேரவில்லையாமே! ஏன் கயல்விழி, கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாதபடி செய்துவிட்டாயே! எனக்கு வேண்டியவன் என்று சொன்னதுமே யோசனையில்லாமல் அவனிடம் மல்லனை ஒப்படைக்கலாமா? ம்... அவன் யார்... பெயர் சாமன் என்று சொல்கிறாய்? அப்பேற்பட்டவன் எனக்கு... என்ன இது? ஒரே குழப்பமாக இருக்கிறது! புரவியில் சென்றவன் அரண்மனை வீரர்களிடம் மாட்டிக் கொண்டுவிட்டானா? அரண்மனையில் கூடப் பல்லவமல்லன் கிடைத்த மாதிரி எதுவும் தெரியவில்லையே! ம்...” என்று நிறுத்தினான் நாகபைரவன்.

     கயல்விழி, சில கண்ணிமைப் பொழுதுகள் மௌனம் சாதித்துவிட்டுச் சொன்னாள்.

     “அந்த நேரம் நான் மிகக் குழம்பிவிட்டிருந்தேன் அப்பா. ஒரு பக்கம் நீங்கள் மயக்கம் அடைந்து கீழே சவம் போல் விழுந்துவிட்டீர்கள்! சக்கரவர்த்தி தோளில் காயத்துடன் குதிரையில் போய்விட்டார். சோமன், ஆயுதம் எதுவுமின்றி அவர்களிடம் அகப்பட்டுக் கொள்ளும் நிலையில் இருந்தான். நானும் அவர்களிடம் சிக்கும்படியான நிலையில் இருந்தேன். அச்சமயம் பார்த்து அந்தக் காபாலிகன், எனக்கு நன்மை செய்வது போல் பேசிவிட்டான்... நானும் மயங்கி...” அதற்கு மேல் பேசாமல், “என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா! இனிமேல் இம்மாதிரி நடக்காது!” என்றாள்.

     “உன் நிலையும் எனக்குப் புரிகிறது! ஆனால் எச்சரிக்கை வேண்டும் என்று சொன்னேன். மயக்க நிலையிலிருந்த என்னையும், விஜயவர்மனையும் நீ, சோமன் உதவியுடன் இந்தக் குகைக்குக் கொண்டு வந்ததே பெரிய காரியம்தான்! தக்க நேரத்தில் எனக்கும் விஜயவர்மனுக்கும் சிகிச்சை செய்து காப்பாற்றியிருக்கிறாய்! நான் எதற்குச் சொல்கின்றேன் என்றால் வலிமை வாய்ந்த ஒரு அரசை மூன்று, நான்குபேர்களுடன் நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் மிக விழிப்பாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றேன்!” என்றான்.

     கயல்விழி, “இம்மாதிரி இனிமேல் எச்சரிக்கையில்லாமல் நடக்கமாட்டேன்! நீங்கள் கவலைப்படாதீர்கள்!” என்றாள்.

     “சாக்கிரதை... நான் கூடல்மாநகர் புறப்படுகின்றேன். திரும்பி வரும் வரை மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்” என்று எழுந்தான். கயல்விழியும் அவனுடன் எழுந்து கொண்டாள்.

     இருவரும் குகையை நோக்கி நடந்தனர்.மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்