(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)

அத்தியாயம் - 7

     இராசசிம்மனின் மாமல்லபுர அரண்மனை! சிறுவன் பல்லவமல்லன் விசித்து விசித்து அழுது கொண்டிருந்தான். தங்கப் பூணிட்ட பிரம்பு ஒரு மூலையில் கிடந்தது. இரண்டாவது அடுக்கு உப்பரிகையின் ஓரமாக வந்து நின்று, தூணில் சாய்ந்தபடி தூரத்தில் தெரிந்த கடலை வெறித்து நோக்கியபடி இருந்தான் மன்னன் இராசசிம்மன்.

     ‘வந்து ஒரு நாழிகைக்கு மேல் ஆகிறது! இன்னும் மல்லன் அழுகையை நிறுத்தாது பிடிவாதம் பிடிக்கிறானே. என்ன பண்ணலாம்?’ என்ற சிந்தனையோடு தூணில் சாய்ந்தவாறு நின்றிருந்த மன்னனின் கவனத்தைத் திருப்பியது அங்கே கேட்ட காலடிச் சத்தம்! திரும்பினான்.


இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

செகண்ட் ஒப்பினியன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

முறிவு
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

உங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

கேரளத்தில் எங்கோ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

தமிழில் சைபர் சட்டங்கள்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy

நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

சபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

பணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

பிக்சல்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சுழலில் மிதக்கும் தீபங்கள்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழகத்தில் ஆசீவகர்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

நான் செய்வதைச் செய்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

எங்கு செல்கிறோம்?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.355.00
Buy
     மிக யௌவனமும் சுந்தரச் சிவப்பும் நிரம்பிய வானத்திலிருந்து இறங்கி வந்த விண்மகளைப் போன்ற அழகுடன் இளமை பூரிக்க நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.

     ‘ஓ... கயல்விழி! அண்மையில் பணிப்பெண்ணாகச் சேர்ந்தவள்... எதற்கு இப்போது வந்தாள்!’ - கேள்வியாக மன்னன் வாயிலிருந்து புறப்பட்டது.

     தன் முத்துப்பல் வரிசை பால் நிலா போன்று ஜொலிக்கப் பணிவுடன் சொன்னாள்.

     “தங்களைப் பல்லவமல்லன் மிகவும் தொல்லைப்படுத்தி விட்டான் என்று நினைக்கிறேன்.”

     “ஆம் கயல்விழி. எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளித்த எனக்கு இது பெருந் தொல்லையாகத்தான் இருக்கிறது!”

     “தாங்கள் அனுமதித்தால் மல்லனின் அழுகையை நிறுத்திச் சிரிக்கச் செய்ய என்னால் முடியும்!”

     “என்னது?” - வியப்புடன் இராசசிம்மன் திரும்பினான். கயல்விழியை ஆச்சரியத்துடன் நோக்கினான். ஆனால் அவள், எவ்வித பரபரப்பும் காட்டாது செவ்விதழ்களில் முறுவலை மட்டும் உதிர்த்து நின்றாள்.

     “உன்னால் முடியுமா?” மன்னன் கேள்வியில் ஐயம் மேலோங்கியது.

     அவள் அழுத்தமாகத் தலையசைத்துவிட்டுத் திரும்பவும் முறுவல் செய்தாள்.

     “அப்படியென்றால் உனக்குப் பரிசுதான் தரவேண்டும்! எங்கே மல்லனைச் சாந்தப்படுத்து பார்க்கலாம்.”

     “கொஞ்சம் தனிமையில் மல்லனை எடுத்துப் போக அனுமதியுங்கள்.”

     “ஆகா, தாராளமாக! எனக்கு வேண்டியது அவன் பிடிவாதம் போய் மகிழ்ச்சியாக என்னைத் ‘தாத்தா!’ என்று கூப்பிட வேண்டும்!”

     “அப்படியே செய்கின்றேன்! மன்னா!”

     மல்லன் அருகில் சென்று கயல்விழி அவனைத் தூக்கினாள்.

     சிணுங்கல் அதிகமாகியது.

     ‘என்ன இருந்தாலும் கயல்விழி பெண்... ஒருவேளை அவனைச் சமாதனப் படுத்திவிடலாம்’ என்று நம்பிக்கையுடனே, அவன் பண்ணும் அழிச்சியாட்டத்தைக் கவனித்த மன்னனுக்கு இவள் கூடச் சமாதானப்படுத்துவது சந்தேகம்தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

     பலவந்தமாக அவனைத் தூக்கிக் கொண்டு கயல்விழி அப்புறம் செல்ல, மன்னன் செவிகளில் அவள் சமாதானப்படுத்துவதற்காகச் சொன்ன சொற்கள் செவியில் விழுந்து கொண்டிருந்தன. “இன்று இரவு முழுவதும் இதே கூத்துத்தான்!” என்று தூரத்தில் தெரிந்த கடல் அலைகளைக் கவனித்தான். அவை நிலவொளியில் வெள்ளிப் பாளங்களாய் மின்னிக் கொண்டிருந்தன.

     சிலநொடிகள் சென்றன. பல்லவமல்லன் சிணுங்கல் நின்றுவிட்டது என்பதற்கு அடையாளமாக அவ்விடம் மிக அமைதியாகப் போனது. மன்னன் கண்கள் அகல விரிந்தன. புருவங்கள் மேல் நோக்கி ஏறின. ‘உண்மையிலேயே சாமர்த்தியம் நிறைந்த பெண்தான்’ என்று மனத்திற்குள் வியந்து, “கயல்விழி!” என்று உரக்கக் கூப்பிட்டான்.

     பதிலில்லை.

     திரும்பவும் குரல் கொடுக்கப் பதில் வராது போகவே, பல்லவமல்லனுடன் கயல்விழி சென்ற பக்கம் நோக்கி வேகமாக நடந்தான்.

     திருப்பு வாட்டத்தில், கீழ்பகுதிக்குச் செல்வதற்காக மரத்தில் செய்யப்பட்ட படிகளில் அவள் இறங்கிக் கொண்டிருந்தாள் பல்லவமல்லனுடன்.

     மேலேயிருந்தபடி, “என்ன கயல்விழி, எங்கே போகிறாய்?” என்றான்.

     கயல்விழி ஒருகணம் திடுக்கிட்டு, “ஓ! மன்னரா” என்று சமாளித்து திரும்பவும் மேல் நோக்கிப் படியேறினாள். அச்சமயம் பல்லவமல்லன் பெட்டிப் பாம்பாய் அவளின் வேய்த் தோள்களில் சாய்ந்து கொண்டு, மன்னனை எவ்விதச் சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

     மேலேறி வந்த கயல்விழியிடமிருந்து அவனைப் பெற்றுக் கொள்வதற்காகக் கைகளை நீட்டி, “வா மல்லா!” என்று அன்புடன் அழைத்தான் இராசசிம்மன்.

     ‘முடியாது’ என்று தலையசைத்துவிட்டுக் கயல்விழியைப் பார்க்க, அவள், “போ மல்லா!” என்று சொல்ல, மனமின்றி மன்னன் தோள்களில் சரிந்தான்.

     ‘கொஞ்ச நேரத்தில் அழுகையை நிறுத்திவிட்டாளே, பாராட்டுக் குறியவள்தான்!’ என்று மனதிற்குள் எண்ணியவாறு “மல்லனின் அழுகையை நிறுத்தியதற்கு மகிழ்ச்சி! உனக்கு என்ன பரிசு வேண்டும்?” என்று கேட்டான் வேந்தன்.

     “மன்னர் எதைத் தந்தாலும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்! ஆனால் பரிசு பெறும் அளவுக்குப் பெரியதாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.”

     “அப்படியா!” என்ற இராசசிம்மன், “நன்றாகத்தான் உரையாடுகிறாய். இம்மாதிரி புத்திக் கூர்மையுள்ள பெண்கள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும்! அந்த ஊக்குவிப்பு, உரிய நேரத்தில் உனக்குக் கிடைக்கும்!” என்றான் புன்முறுவலுடன்.

     “நன்றி மன்னா!” என்று கூறிவிட்டு மடமடவென்று மரப்படிகளில் இறங்கி கீழே போனாள்.

     இரவு!

     விண்மீன்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. பால் நிலவு மேற்குநோக்கி மெல்லச் சரிந்து கொண்டிருந்தது. கடற்காற்று உஸ்ஸென்று ஓசையுடனே வீசிய வண்ணமிருந்தது. யவன வீரர்களின் இரவுகால எச்சரிக்கையொலி நடுநடுவே அந்த இரவின் அமைதியை அழிப்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அதற்கு எதிரொலியாக ஆந்தைகளின் அலறலும் கேட்டது. இது போதாதென்று நரிகளின் ஊளைக் குரல் வேறு.

     இரண்டாவது அடுக்கு உப்பரிகையின் நடு அறையில் ஒரு மூலையில் மங்கையொருத்தியின் கையிலிருந்த விளக்கு, காற்றில் அணைந்துவிடுவது போலப் பலமாக ஆடி இறுதியில் ஜூவாலையுடன் பிரகாசிக்கலாயிற்று. எவ்வளவு நேரம் அந்த மங்கை விளக்குடன் நின்று கொண்டிருப்பாள்? என்று வியப்புக் கொள்ளும் அளவுக்கு உலோகத்தால் ஆன அச்சிலை, உயிருள்ள பெண் போலக் காட்சியளித்தது.

     அது அணைந்துவிடுவது போல் பலமாக ஆடி, அதன் ஜுவாலை குறையும் போது, அந்த அறை கண் சிமிட்டும் நேரம் இருளில் ஆழ்ந்தது.

     மன்னன் பஞ்சணையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் பல்லவமல்லன் படுத்திருந்தான்.

     அச்சமயம்...

     யாரோ வரும் காலடியோசை. படுத்திருந்த சிறுவன் பல்லவமல்லன் கண்களைத் திறந்தான். அக்காலடிச் சப்தம் இச்சிறுவனை நோக்கி வருவது போலிருந்தது. மிக நிசப்தமான அந்த வேளையில் காற்றின் உஸ்ஸென்று ஓசையைத் தவிர, வேறு எதுவும் கேட்காத அத்தருணத்தில் அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் சிறுவன் அதைக் கேட்டு மகிழ்ச்சியே அடைந்தான் என்பதை, அவன் முகம் மிகத் தெளிவாகக் காட்டியது. எழுந்து உட்கார்ந்தான். அச்சமயம் பார்த்து விளக்கொளி காற்றின் வேகத்தால் அணைந்துவிடுவது போன்று அலைபாய, அந்த அறை முழுவதும் ஒரு நொடிப் பொழுது பாதி இருளும் பாதி ஒளியுமான நிலைக்கு ஆளானது.

     சிறுவன் கண்களைச் சுற்றிலும் ஓட்டி ஒலி வந்த திசைப் பக்கம் பார்த்தான். “பல்லவமல்லா!” என்று கூப்பிடும் ஓசை மிக மெலிதாய் அவன் காதில் விழுந்தது.

     அந்த அரை இருளில் அக்குரலைக் கேட்டு அவன் அச்சமுறவில்லை. மாறாக மகிழ்ச்சியுற்றான். திரும்பி இராசசிம்மனைப் பார்த்தான். மன்னனின் ஆழ்துயில் அவனுக்குத் திருப்தியைத் தரவே திரும்பவும் குரல் வந்த பக்கம் தன் கண்களை ஓட்டினான்.

     அப்போது கூகை பயங்கரமாக அலறியது. அதற்குப் பதிலடி கொடுப்பது போல நரிகளும் பலமாய் ஊளையிடத் துவங்கின. இவை இரண்டும் செய்த அமர்க்களத்துக்குப் பயந்தோ என்னவோ எல்லாக் காற்றும் ஒருமுகமாகத் திரண்டு, வேகமாக இரண்டாவது உப்பரிகையை நோக்கி வீசியது. அந்த வேகம் தாளமாட்டாது மங்கையின் கையிலிருக்கும் விளக்கும் பொட்டென அணையச் சிறுவன் இதயம் பயத்தினால் படபடவென்று அடிக்கத் துவங்கியது. அதற்கு ஏற்றாற் போல் “மல்லா!” என்ற குரல் இப்போது மிகத் தெளிவாய்க் கேட்டது.

     தன்னைக் கூப்பிடுகிறார்கள்! விளக்கு நின்று இருள் சூழ்ந்துவிட்ட அந்தச் சமயத்தில் தன்னைக் கூப்பிடுகிறார்கள். அச்சத்தின் சாயல் அந்த இளம் முகத்தில் மெல்லப் பரவ. ஆரம்பித்தது.

     “ஏன் தயங்குகிறாய்? சீக்கிரம்...!” இதுவும் அவன் செவிகளில் விழுகிறது.

     இப்போது அவன் மனதில் பயம் போய்க் குழப்பம்தான் எஞ்சி நின்றது. குரல் சொன்னபடி கேட்பதா? அல்லது... அல்லது... என்று திரும்பிக் கவனித்தான். அந்நேரம் பார்த்து மன்னன் புரண்டு வலப்பக்கம் திரும்பிப் படுக்க, செய்வது புரியாமல் பெருமூச்சொன்றைவிட்டான் சிறுவன் பல்லவமல்லன். ‘கிரீச்‘ மன்னன் புரண்டதின் விளைவாகப் பஞ்சணை அவ்விதம், கிரீச்சிட்ட ஒலி மெல்லியதாக இருந்தாலும், அமைதியான அந்த இரவில் சிறிது பலமாகவே அந்த அறையெங்கும் ஒலித்தது.

     அவ்வோசையைக் கேட்டதாலோ என்னவோ இதுவரை. மல்லனைக் கூப்பிட்ட குரலும் சட்டென்று நின்றுவிட்டது.

     மல்லன், கண்களைக் கசக்கிச் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரே இருள் - வெளியே விசாலமான கூடத்தில் ஒரு பக்கம் நிலவின் ஒளி தெளிவாக விழுந்து கொண்டிருந்தது. அதுவும் ஒரு நொடிதான்... அந்த ஒளியும் எங்கிருந்தோ வந்த கருமேகத்தால் மறைந்து போக, இப்போது அந்த உப்பரிகை முழுவதுமே இருட்டு மயமாகிவிட்டது. என்ன செய்வது?

     இப்போது மன்னன் உறங்கிவிட்டான் என்பதை உறுதிப் படுத்திவிட்டது போல, அந்தக் குரல், திரும்பவும் “மல்லா!” என்று அழைக்க, அவன் பஞ்சணையிலிருந்து கீழிறங்கிக் குரல் வந்த பக்கம் நோக்கிச் சென்றான்.

     “என்ன இவ்வளவு நேரம்?” அதற்குப் பிறகு ஒன்றும் கேட்கவில்லை... கொஞ்ச நேரம் கழிந்து ஏதோ அபசகுனம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்த காற்று மட்டும் மனம் தாளாமல் மிக வேகமாக வீசிச் சாளரத்தின் கதவுகளை படீர் படீர் என்று பலமாக அறைய, அந்த ஒலியைக் கேட்டு மன்னன் கண் விழித்தான்.

     நடந்துவிட்ட அபசகுனத்தை மன்னனுக்கு அறிவுறுத்துவது போன்று ஆந்தையும் பலமாக அலறியது.

     “சட்... என்ன இது? விளக்கு அணைந்து போய்விட்டதா?” என்று தன் பக்கத்தில் படுத்திருந்த பல்லவமல்லன் பயப்படப் போகின்றான் என எண்ணி அவனை அணைக்கக் கைகளைத் துழாவினான். வெறும் பஞ்சு மெத்தைதான் கைகளுக்குத் தட்டுப்பட்டது.

     ‘தூக்கத்தில் புரண்டு கீழே விழுந்துவிட்டானோ?’ துணுக்குற்ற மன்னன் சட்டென்று எழுந்து “யாரங்கே?” என்று உரக்கக் குரல் கொடுத்தான்.

     பதிலில்லை.

     எழுந்து பலமாகக் குரல் கொடுத்தான். சயன அறையில் வெளிப்புறத்தில் மரப்படிகள் சமீபம் உருவிய வாளுடன் இருந்த இரு வீரர்கள், “என்ன மன்னா?” என்று ஓடி வந்தனர்.

     “எங்கே போய்விட்டீர்கள்? ஒரே இருளாக இருக்கின்றது! தீப்பந்தம் கொண்டு வா” என்று கட்டளையிட்டான். அடுத்த நொடியே தீப்பந்தத்துடன் வந்தான் ஒரு வீரன்.

     அந்த ஒளியில் பஞ்சணையும் தரையும் வெறுமையாய்க் காட்சி தந்தன. மன்னனுக்குப் பக்கென்றது.

     “என் பக்கத்தில் படுத்திருந்த பல்லவமல்லன் எங்கே?” என்று அந்த இரண்டாம் உப்பரிகையே அதிரும்படி கேட்க, வீரர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நிற்க, கீழ்ப் பகுதியில் படுத்திருந்த விஜயவர்மனை உலுக்கி எழுப்பியது அம்மன்னன் கேள்வி.

     ‘என்ன என்ன’ என்று அவ்வரண்மனையே விழித்து எழுந்தது. அம்மாளிகை முழுவதும் தீப்பந்தங்கள் ஒளியால் நிரம்ப அனைவரும் பல்லவமல்லனை மூலைமுடுக்கெங்கும் தேடலாயினர்.

     ‘வெண்ணிலவு மறைந்தது. விண்மீன்கள் ஒளிந்தன. வானம் இருண்டது. மல்லன் மாயமாய்விட்ட துயரச் செய்தியினைக் கேட்டதாலோ என்னவோ, மேகங்கள் அதைத் தாங்கமாட்டாது மழைத் தூறல்களாய் சட சடவென்று பூமியில் இறங்கின. பூ மகளும் தன் புவி மகனைக் காணாத வருத்தத்தால் நீர்த் தாரைகளை கன்னத்தில் சரியவிடுவது போன்று, பூமியில் இறங்கிய மழைத் தூறல்கள் தரையில் உருண்டு ஓடின.

     விஜயவர்மன், கைகளைப் பிசைந்து செய்வதறியாது திகைத்து நிற்க, சோகமே உருவாய் நின்ற மன்னன் அவனை நோக்கினான். பளிச்சென்று வானில் மின்னல் தோன்றியது. மன்னனின் கோபப் பார்வை போல! அதைத் தொடர்ந்து இடியோசை. வேந்தன் வருத்தத்துடன் சொன்னான்.

     “விஜயவர்மா, எத்தனை ஆட்கள், எத்தனை காவல் இருந்தென்ன... நொடியில் அனைவரையும் ஏமாற்றிவிட்டு அந்த வஞ்சகி, என் மல்லனுடன் மறைந்துவிட்டாளே? நான் பல போர் கண்டவன்... பல படை கண்டவன் என்று இனி யாரும் தம்பட்டம் அடிக்க முடியாது. எல்லாவற்றையும்... அந்தச் சிறுபெண் மிஞ்சிவிட்டாள்! இனி மல்லனை நான் எப்போது காண்பேன்! பல்லவ குலத்துக்கு அவன் கொழுந்தாக இருந்தான் என்று இறுமாந்திருந்தேனே... எல்லாம் பாழாய்ப் போய்விட்டதே!” என்ற மன்னனின் கண்கள் கலங்கின. திகைத்து நின்ற விஜயவர்மன், நிமிர்த்து நின்றான் உறுதியாக.

     “பல்லவ மன்னன் மீது ஆணை... சிறு நாகமென வஞ்சித்துவிட்டு மல்லனுடன் மாயமாய்விட்ட அந்த நஞ்சினும் கொடியாளைக் கண்டுபிடித்து அவள் தலையைக் கொய்து திரும்பாவிடில், நான் இம்மண்ணில் பிறந்த பெருமையை இழந்து நாயினும் கேடாய்ப் பேயினும் கடையோனாய் அழிந்து ஒழிவேன்! இது சத்தியம்!”

     அதை உறுதி செய்வது போன்று விண்ணும் தொடர்ந்து இரண்டு, மூன்று முறை இடித்தது.

     உருவிய வாளை உறையிலிட்டு, “விடை கொடுங்கள் மன்னா!” என்று தலைவணங்கி நின்றான்.

     “வெற்றியோடு திரும்பு விஜயவர்மா! எல்லாம்வல்ல அந்த ஈசன் உனக்குத் துணையிருப்பான்!”

     இதுவரை தூறலாக இருந்த மேகம், பெரு மழையாகப் பெய்யத் தொடங்கியது.

     “கொண்டு வாருங்கள் என் புரவியை!” என்று கட்டளையிட்டான் விஜயவர்மன். இந்த மழையிலா என்று வீரன் திகைத்து விஜயவர்மனைப் பார்க்க, அவன் இருந்த கோபம் கண்டு ஒன்றும் பேசாது வேகமாகப் புரவியை அழைத்து வர ஓடினான்.

     முதலில் வர மறுத்து... முரண்டு பிடித்த புரவி, தன் தலைவன் போக்குணர்ந்து அப்பெருமழையில் கம்பீர நடை போட்டு வந்து நின்றது.

     “துணைக்கு வீரர்களை அழைத்துப் போ விஜயவர்மா!”

     அவன் “ஆகட்டும் வேந்தே!” என்று நின்ற வீரர்களில் இருவரை மட்டும் அழைத்தான்.

     “போதாது. பத்துப் பேரையாவது அழைத்துச் செல்!” என்ற மன்னனின் கட்டளைப்படி, பத்து வீரர்களுடன் அப்பெரு மழையில் புரவியைச் செலுத்தினான் விஜயவர்மன்.மாமல்ல நாயகன் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19


சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்