இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரம் ... தொடர்ச்சி - 6 ... மதுரைக் காண்டம் 11. காடுகாண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக் கீழ், செங் கதிர் ஞாயிற்றுத் திகழ் ஒளி சிறந்து, கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த, ஆதி இல் தோற்றத்து அறிவனை வணங்கி, கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் 5 அந்தில் அரங்கத்து அகன் பொழில் அகவயின் சாரணர் கூறிய தகைசால் நல் மொழி மாதவத்து ஆட்டியும் மாண்புற மொழிந்து, ஆங்கு, அன்று, அவர் உறைவிடத்து அல்கினர் அடங்கி, தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று, 10 வைகறை யாமத்து வாரணம் கழிந்து, வெய்யவன் குண திசை விளங்கித் தோன்ற, வள நீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர் இள மரக் கானத்து இருக்கை புக்குழி- 'வாழ்க, எம் கோ, மன்னவர் பெருந்தகை! 15 ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க! அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி, வடி வேல் எறிந்த வான் பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங் கடல் கொள்ள 20 வட திசைக் கங்கையும் இமயமும் கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி! திங்கள் செல்வன் திருக் குலம் விளங்க, செங் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் பொங்கு ஒளி மார்பில் பூண்டோ ன் வாழி! 25 'முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி' என்று இடி உடைப் பெரு மழை எய்தாது ஏக, பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப, மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க!' என, தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி, 30 மா முது மறையோன் வந்திருந்தோனை- 'யாது நும் ஊர்? ஈங்கு என் வரவு?' எனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மா மறையாளன் வருபொருள் உரைப்போன் 'நீல மேகம் நெடும் பொன் குன்றத்துப் 35 பால் விரிந்து அகலாது படிந்ததுபோல, ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் பாயல்-பள்ளி, பலர் தொழுது ஏத்த, விரி திரைக் காவிரி வியன் பெரும் துருத்தித் திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்- 40
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கொடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, 45 நல் நிற மேகம் நின்றது போல- பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய 50 செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்- என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும், கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின், 55 வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு' என, தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு- 'மா மறை முதல்வ! மதுரைச் செந் நெறி கூறு நீ' எனக் கோவலற்கு உரைக்கும் 'கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, 60 வேத்தியல் இழந்த வியல் நிலம் போல, வேனல் அம் கிழவனொடு வெங் கதிர் வேந்தன் தான் நலம் திருக, தன்மையில் குன்றி, முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப், 65 பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் காலை எய்தினிர் காரிகை-தன்னுடன்; அறையும், பொறையும், ஆர் இடை மயக்கமும், நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த இந் நெடும் போர் அத்தம் நீந்திச் சென்று- 70 கொடும்பை நெடுங் குளக் கோட்டகம் புக்கால்- பிறை முடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறை வாய்ச் சூலத்து அரு நெறி கவர்க்கும்- வலம்படக் கிடந்த வழி நீர் துணியின், அலறு தலை மராமும், உலறு தலை ஓமையும், 75 பொரி அரை உழிஞ்சிலும், புன் முளி மூங்கிலும், வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும்; நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் கானமும்; எயினர் கடமும் கடந்தால், ஐவன வெண்ணெலும், அறைக் கண் கரும்பும், 80 கொய் பூந் தினையும், கொழும் புன வரகும், காயமும், மஞ்சளும், ஆய் கொடிக் கவலையும், வாழையும், கமுகும், தாழ் குலைத் தெங்கும், மாவும், பலாவும், சூழ் அடுத்து ஓங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் 85 அம் மலை வலம் கொண்டு அகன் பதிச் செல்லுமின்- அவ் வழிப் படரீர் ஆயின், இடத்து, செவ்வழிப் பண்ணின் சிறை வண்டு அரற்றும் தடம் தாழ் வயலொடு தண் பூங் காவொடு கடம் பல கிடந்த காடுடன் கழிந்து, 90 திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின், பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு: ஆங்கு, விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் புண்ணிய சரவணம், பவகாரணியோடு, இட்டசித்தி, எனும் பெயர் போகி, 95 விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்று உள ஆங்கு, புண்ணியசரவணம் பொருந்துவிர் ஆயின், விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர்; பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் 100 இட்டசித்தி எய்துவிர் ஆயின் இட்டசித்தி எய்துவிர் நீரே. ஆங்குப் பிலம் புக வேண்டுதிர் ஆயின், ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது, 105 சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து, வந்தனை மும் முறை மலை வலம் செய்தால், நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை, பொலங் கொடி மின்னின் புயல் ஐங் கூந்தல், கடி மலர் அவிழ்ந்த கன்னி காரத்து, 110 தொடி வளைத் தோளி ஒருத்தி தோன்றி, 'இம்மைக்கு இன்பமும், மறுமைக்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர் செம்மையில் நிற்பதும், செப்புமின், நீயிர்? இவ் வரைத் தாள் வாழ்வேன்; வரோத்தமை என்பேன்; 115 உரைத்தார்க்கு உரியேன்; உரைத்தீர் ஆயின், திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவு' எனும் கதவம் திறந்து, அவள் காட்டிய நல் நெறிப் புதவம் பல உள, போகு இடைகழியன; ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு; அதன் உம்பர் 120 வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி, 'இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால், பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள்' எனும்; 'உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன்; நெடு வழிப் புறத்து நீக்குவல் நும்' எனும் 125 உரைத்தார் உளர் எனின், உரைத்த மூன்றின் கரைப்படுத்து, ஆங்குக் காட்டினள் பெயரும் அரு மறை மருங்கின், ஐந்தினும் எட்டினும், வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி, 130 வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின், காண்தகு மரபின அல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொன் தாமரைத் தாள் உள்ளம் பொருந்துமின். உள்ளம் பொருந்துவிர் ஆயின், மற்று அவன் 135 புள் அணி நீள் கொடி புணர்நிலை தோன்றும்; தோன்றியபின் அவன் துணை மலர்த் தாள் இணை ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி, மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகுமின்; காண்தகு பிலத்தின் காட்சி ஈது 'ஆங்கு 140 அந் நெறிப் படரீர் ஆயின், இடையது செந் நெறி ஆகும்; தேம் பொழில் உடுத்த ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் ஆர் இடை உண்டு, ஓர் ஆர் அஞர்த் தெய்வம்; நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி, 145 இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும். மடுத்து உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி, நீள் நிலம் கடந்த நெடு முடி அண்ணல் தாள் தொழு தகையேன் போகுவல் யான' என- மா மறையோன் வாய் வழித் திறம் கேட்ட 150 காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் 'நலம் புரி கொள்கை நான்மறையாள! பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை; கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு-இயற்கையின் விளங்கக் காணாய்; 155 இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் பிறந்த பிறப்பில் காணாயோ, நீ? வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ , எய்தா அரும் பொருள்? காமுறு தெய்வம் கண்டு அடி பணிய 160 என்று அம் மறையோற்கு இசை மொழி உணர்த்தி- குன்றாக் கொள்கைக் கோவலன்-தன்னுடன் அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி, பின்றையும் அவ் வழிப் பெயர்ந்து செல் வழிநாள்- 165 கருந் தடங் கண்ணியும் கவுந்தி அடிகளும் வகுத்து செல் வருத்தத்து வழிமருங்கு இருப்ப- இடை நெறிக் கிடந்த இயவு கொள் மருங்கின், புடை நெறிப் போய், ஓர் பொய்கையில் சென்று, நீர் நசைஇ வேட்கையின் நெடுந் துறை நிற்ப- 170 கான் உறை தெய்வம் காதலின் சென்று, 'நயந்த காதலின் நல்குவன் இவன்' என, வயந்தமாலை வடிவில் தோன்றி, கொடி நடுக்கு உற்றது போல, ஆங்கு-அவன் அடிமுதல் வீழ்ந்து, ஆங்கு, அரும் கணீர் உகுத்து, 175 'வாச மாலையின் எழுதிய மாற்றம் தீது இலேன்; பிழை மொழி செப்பினை; ஆதலின், கோவலன் செய்தான் கொடுமை' என்று, என் முன் மாதவி மயங்கி, வான் துயர் உற்று, 'மேலோர் ஆயினும், நூலோர் ஆயினும், 180 பால் வகை தெரிந்த பகுதியோர் ஆயினும், பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்' என, செவ் வரி ஒழுகிய செழுங் கடை மழைக் கண் வெண் முத்து உதிர்த்து, வெண்நிலாத் திகழும் 185 தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து, துனி உற்று என்னையும் துறந்தனள்; ஆதலின் மதுரை மூதூர் மா நகர்ப் போந்தது எதிர் வழிப் பட்டோ ர் எனக்கு ஆங்கு உரைப்பச் சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்; 190 பாத்து-அரும் பண்ப! நின் பணி மொழி யாது? என- 'மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு உண்டு' என வியத்தகு மறையோன் விளம்பினன்; ஆதலின், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ் ஐஞ் சில் ஓதியை அறிகுவென் யான்' என- 195 கோவலன் நாவில் கூறிய மந்திரம் பாய் கலைப் பாவை மந்திரம் ஆதலின், 'வன-சாரிணி யான்; மயக்கம் செய்தேன்; புன மயில் சாயற்கும், புண்ணிய முதல்விக்கும், என் திறம் உரையாது ஏகு' என்று ஏக- 200 தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து, ஆங்கு, அயர் உறு மடந்தை அரும் துயர் தீர்த்து- மீது செல் வெங்கதிர் வெம்மையின் தொடங்க, 'தீது இயல் கானம் செலவு அரிது' என்று கோவலன்-தன்னொடும் கொடுங் குழை மாதொடும் 205 மாதவத்து ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து, குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை, ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது, மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் 210 கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி, வேற்றுப் புலம் போகி, நல் வெற்றம் கொடுத்துக் கழி பேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும் விழி நுதல் குமரி, விண்ணோர் பாவை, மை அறு சிறப்பின் வான நாடி, 215 ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு-என். 12. வேட்டுவ வரி (கொச்சகக்கலி) கடுங் கதிர் திருகலின், நடுங்க அஞர் எய்தி, ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து-ஆங்கு, ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை வருந்து நோய் தணிய இருந்தனர். உப்பால்- 5 வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப் பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்துக் கை எடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப, இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் 10 நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி, 'கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன; வல் வில் எயினர் மன்று பாழ் பட்டன; மறக் குடித் தாயத்து வழி வளம் சுரவாது, அறக் குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்; 15 கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்; மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின் கட்டு உண் மாக்கள்! கடம் தரும்' என-ஆங்கு- இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது 20 சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை- சிறு வௌ அரவின் குருளை நாண் சுற்றி குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி, இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து வளை வெண் கோடு பறித்து, மற்று அது 25 முளை வெண் திங்கள் என்னச் சாத்தி; மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி; வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇப் பரிவொடு 30 கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி; பாவையும், கிளியும், தூவி அம் சிறைக் கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும், பந்தும், கழங்கும், தந்தனர் பரசி; 35 வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும், புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும், பூவும், புகையும், மேவிய விரையும், ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர; ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும், 40 கோடும், குழலும், பீடு கெழு மணியும், கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ விலைப்பலி உண்ணும் மலர் பலி - பீடிகை, கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி- இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்தி, 45 கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை, 'இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி; தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து; ஒரு மா மணி ஆய், உலகிற்கு ஓங்கிய திரு மா மணி' எனத் தெய்வம் உற்று உரைப்ப 50 'பேதுறவு மொழிந்தனள் மூதறிவு ஆட்டி' என்று, அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி, விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப- மதியின் வெண் தோடு சூடும் சென்னி, நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து, 55 பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி; நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்; துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி; வளை உடைக் கையில் சூலம் ஏந்தி; 60 அரியின் உரிவை மேகலைஆட்டி; சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி, வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை; இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன் 65 தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும் அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை; ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப் பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை; 70 ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை; தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் இளங் குமரியும் அருளினள்- வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே. உரைப்பாட்டுமடை (வேறு) நாகம், நாறு நரந்தை, நிரந்தன; ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும், சேவும் மாவும் செறிந்தன-கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே. 1 செம் பொன் வேங்கை சொரிந்தன; சேயிதழ், கொம்பர் நல் இலவங்கள், குவிந்தன; பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு-இளந் திங்கள் வாழ் சடையாள் திரு முன்றிலே. 2 மரவம், பாதிரி, புன்னை, மணம் கமழ், குரவம், கோங்கம், மலர்ந்தன; கொம்பர்மேல், அரவ வண்டு இனம் ஆர்த்து, உடன் யாழ்செயும்- திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே. 3 (வேறு) கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப் பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோ? பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த வில் தொழில் வேடர் குலனே குலனும்! 4 ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இப் பை அரவு அல்குல் தவம் என்னைகொல்லோ? பை அரவு அல்குல் பிறந்த குடிப் பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும்! 5 பாய் கலைப் பாவை அணி கொண்டு நின்ற இவ் ஆய் தொடி நல்லாள் தவம் என்னைகொல்லோ? ஆய் தொடி நல்லாள் பிறந்த குடிப் பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும்! 6 (வேறு) ஆனைத் தோல் போர்த்து, புலியின் உரி உடுத்து, கானத்து எருமைக் கருந் தலைமேல் நின்றாயால்- வானோர் வணங்க, மறைமேல் மறை ஆகி, ஞானக் கொழுந்து ஆய், நடுக்கு இன்றியே நிற்பாய்! 7 வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மை இடர் செற்று, கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்- அரி, அரன், பூமேலோன், அகமலர்மேல் மன்னும் விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்! 8 சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி, செங் கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால்- கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து, மங்கை உரு ஆய், மறை ஏத்தவே நிற்பாய்! 9 (வேறு) ஆங்குக் கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த, துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டு ஆங்கு, அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய குமரிக் கோலத்துக் கூத்து உள்படுமே. 10 (வேறு) ஆய் பொன் அரிச் சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப, மாயம் செய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக் கால்மேல் வாள்-அமலை ஆடும் போலும்; மாயம் செய் வாள் அவுணர் வீழ, நங்கை மரக் கால்மேல் வாள்-அமலை ஆடும் ஆயின், காயா மலர் மேனி ஏத்தி, வானோர் கை பெய் மலர்-மாரி, காட்டும் போலும் 11 உட்கு உடைச் சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்றகாலை வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும் வேண்டின், வேற்றூர்க் கட்சியுள் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும். 12 கள் விலை ஆட்டி மறுப்ப, பொறா மறவன் கை வில் ஏந்தி, புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதிப் போகும் போலும் புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதிப் போகும்காலை, கொள்ளும் கொடி எடுத்து, கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும். 13 (வேறு) இள மா எயிற்றி! இவை காண், நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்; கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல நல்லி யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன. 14 முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இள நிரைகள்; கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன், புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன. 15 கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர், அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்; நயன் இல் மொழியின் நரை முது தாடி எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன. 16 (வேறு) சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்; அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே. 17 அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு மணி உருவினை! நின் மலர் அடி தொழுதேம்; கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது, நிணன் உகு குருதி; கொள், நிகர் அடு விலையே. 18 துடியொடு, சிறு பறை, வயிரொடு துவைசெய, வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்; அடு புலி அனையவர், குமரி! நின் அடி தொடு படு கடன் இது, உகு பலி முக மடையே. 19 (வேறு) வம்பலர் பல்கி, வழியும் வளம் பட; அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்- சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடிச் செங் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! 20 துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு, கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்- விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு, இருந்து, அருள் செய்குவாய்! 21 பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, யார்க்கும் அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய்- மருதின் நடந்து, நின் மாமன் செய் வஞ்ச உருளும் சகடம் உதைத்து, அருள் செய்குவாய்! 22 மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியுங் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே. 23 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |