http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




முதல் பாகம் : பூகம்பம்

19. மோட்டார் விபத்து

     மாசி மாதத்து மனோரம்மியமான மாலை நேரத்தில் ராஜம்பேட்டையை நெருங்கிச் சென்ற சாலையில் இரட்டை மாடு பூட்டிய பெட்டி வண்டி ஒன்று ஜாம் ஜாம் என்று போய்க்கொண்டிருந்தது. காளையின் கழுத்தில் கட்டியிருந்த பெரிய சதங்கை மணிகள் கலீர் கலீர் என்று சப்தித்தன. வண்டியும் வண்டி மாடுகளும் வண்டிக்காரன் கட்டிய முண்டாசும் அந்த வண்டி பட்டாமணியம் கிட்டாவய்யரின் வண்டியென்பதை உலகமறியத் தெரிவித்தன. வண்டிக்குள்ளே கிட்டாவய்யரின் மூத்த புதல்வன் சூரியநாராயணன் பெட்டி படுக்கை சகிதமாக வீற்றிருந்தான். அவனுடைய உள்ளம், தன்னுடைய அருமைத் தங்கை லலிதாவைப் பற்றியும் அவளைப் பார்ப்பதற்காகப் பட்டினத்திலிருந்து வரப் போகிற மேதாவி எப்படியிருப்பான் என்பது பற்றியும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. காரணமில்லாமலே அந்த மேதாவியின் பேரில் சூரியாவுக்குச் சிறிது கோபமும் உண்டாகியிருந்தது. "மகா பெரிய மனிதன் இவன்! பெண்ணைப் பார்க்க வருவதாம்! பிடித்திருக்கிறது - இல்லை என்று தீர்ப்புச் சொல்வதாம்! சுத்த வெட்கக் கேடு!" என்ற எண்ணம் தோன்றி அவன் மனத்தை உறுத்தியது. முந்தா நாள் இரவு தாமோதரம்பிள்ளை வீட்டு மச்சின் பேரில் நடந்த சம்பாஷணையும் இடை இடையே அவனுக்கு நினைவு வந்து கொண்டிருந்தது.

     ராஜம்பேட்டை இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் பொருட்டுச் சூரியா வண்டி முகப்பில் வைத்திருந்த பெட்டி படுக்கையின் மேலாக எட்டிப் பார்த்தான். சமீபத்தில் ஒரு மைல் கல் தென்பட்டது. அதில் பெரிய கறுப்பு எழுத்தில் 3 என்று எழுதியிருந்தது. "இன்னும் மூன்று கல் இருக்கிறது. இருட்டுவதற்கு முன் போய் விடலாமா, முருகா!" என்று சூரியா கேட்டான். "நல்லாப் போய்விடலாம்! நீங்கள் மட்டும் 'மாட்டை விரட்டாதே' என்று சும்மாச் சும்மாச் சொல்லியிராவிட்டால் இத்தனை நேரம் போய்ச் சேர்ந்திருப்போம்! அம்மாகூட, 'சாயங்காலம் காப்பி சாப்பிடச் சின்னய்யாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடு' என்று சொல்லியிருந்தாங்க!" என்றான் வண்டிக்கார முருகன். இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, முன்னால் சுமார் அரை பர்லாங்கு தூரத்தில் ஒரு கட்டை வண்டி போய்க்கொண்டிருப்பதைச் சூரியா கவனித்தான். அந்த வண்டிக்குள்ளே யாரோ பெண் பிள்ளைகள் சிலர் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. அந்த வண்டியும் ராஜம்பேட்டைக்குத்தானே போக வேண்டும்? வண்டிக்குள் இருப்பவர்கள் யாராயிருக்கும்?- என்று சூரியா சிந்தித்துக் கொண்டிருந்தபோதே பின்னால் 'பாம் பாம்' என்று முழங்கிக் கொண்டு ஒரு மோட்டார் வண்டி வந்தது.

     "பாருங்க, சின்னய்யா! மோட்டார் வண்டியிலே ஏறி விட்டாலே தலை கிறுங்கிப் போவுது! இவன் வந்துட்டா, மற்ற வண்டியெல்லாம் உடனே ஒதுங்கிக்கொள்ள வேணுமாம்! மோட்டார் வண்டிக்கு என்று தனியாக ரோடு போட்டுக் கொள்கிறதுதானே!" என்று புகார் சொல்லிக்கொண்டே முருகன் வண்டியைக் கொஞ்சம் சாலை ஓரத்தில் ஒதுக்கினான். மோட்டார் வண்டி அவர்களைத் தாண்டி ஒரு பெரிய புழுதிப் படலத்தை வாரித் தூவிவிட்டு மேலே சென்றது.

     அது போன உடன் முருகன், "சின்னய்யாகூடப் படிச்சுப் பெரிய உத்தியோகத்துக்கு வந்து மோட்டார் கார் வாங்க வேணும்!" என்றான்.

     "அப்போது, மோட்டார் காரர்களைப் பற்றி நீ இப்போது திட்டியது போலத்தானே பத்துப் பேர் என்னையும் திட்டுவார்கள்!" என்றான் சூரியா. இதற்குள் எதிரே கொஞ்ச தூரத்தில் நடந்த சம்பவம் அவர்களுடைய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

     பெட்டி வண்டியைத் தாண்டிச் சென்ற மோட்டார், கட்டை வண்டியையும் சாலை ஓரமாக ஒதுங்கச் செய்வதற்காகப் 'பாம்' 'பாம்' என்று முழங்கியது. கட்டை வண்டிக்காரன் இடது புறத்தில் ஒதுக்குவதற்குப் பதிலாக, வலது பக்கத்தில் ஒதுங்க முயன்றான். கட்டை வண்டியை வலப்பக்கமாகக் கடக்க முயன்ற மோட்டார் அது முடியாதென்று தெரிந்து அதி வேகமாக ஒரு திரும்புத் திரும்பி இடப்பக்கம் தாண்டிச் சென்றது. போகும்போது வண்டி மாட்டின்மீது உராய்ந்து விடும் போல அவ்வளவு நெருக்கமாகச் சென்றபடியால் வண்டி மாடுகள் மிரண்டு சாலையோரத்துப் பள்ளத்தில் இறங்கி விட்டன. அப்படி இறங்கியதில் மாடுகளை மூக்கணையுடன் பிணைத்திருந்த கயிறுகள் கழன்றன. வண்டிக்காரன் காபரா அடைந்து கீழே குதித்தான். வண்டியின் மூக்கணை மேலே போயிற்று. வண்டியின் பின் தட்டுக் கீழே வந்து தரையைத் தொட்டது. வண்டிக்குள்ளிருந்தவர்கள் சறுக்கு மரத்திலிருந்து வழுக்கி விழுகிறவர்களைப்போல உருண்டு வந்து வெளியே தரையில் விழுந்தார்கள். அவர்கள் மேலே சாமான்கள் உருண்டு விழுந்தன.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai1-19.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs