chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter facebook
9176888688 
admin@chennailibrary.com +91-9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 486  
புதிய உறுப்பினர்:
Saran.A
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
மக்கள் நீதி மய்யம்: கமல் கட்சி துவக்கம்
ராஜஸ்தானில் 1,000 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
புதுக்கோட்டை: 20 கிலோ தங்கம் பறிமுதல்
வங்கி மோசடி: அம்பானி மருமகன் கைது
வரி பாக்கி : ராம்கி வீட்டிற்கு நோட்டீஸ்
சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரஜினி படம்
பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா
தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
ஜிவி பிரகாஷ் ஜோடியாக அமைரா தஸ்தூர்
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்
எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!

அன்புடையீர்! நீங்கள் எழுதியுள்ள தமிழ் நூல்களை எமது சென்னைநூலகம்.காம் தளத்தில் மின்னூல் வடிவிலும் (யூனிகோட் மற்றும் பிடிஎப்), எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் நூல் வடிவிலும் வெளியிட விரும்பினால் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும். (பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)

புதிய வெளியீடு



முதல் பாகம் : பூகம்பம்

20. அம்மாஞ்சி அறிமுகம்

     சிரிப்பின் ஒலியைக் கேட்டதினால் அடைந்த திகைப்பு நீங்கியதும் சூரியா தன்னுடைய தவறை உணர்ந்தான். ஓடையில் விழுந்திருந்த பெண்ணைத் தான் கரை சேர்க்க எண்ணியது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்பதை அறிந்தான். அவள், "முழுகப் போகிறேன்" என்று கத்தியது வெறும் விளையாட்டுத் தான் என்பதும் தெளிவாயிற்று. ஓடையில் முழங்கால் அளவு தண்ணீருக்குமேல் இல்லையாகையால் அந்தப் பெண்ணுக்கு அபாயம் ஒன்றும் ஏற்படக் காரணம் கிடையாது.

     சாலைக்கு மண் போடுவதற்காகச் சாலையின் ஓரத்தில் மண் எடுத்து எடுத்துப் பள்ளமாயிருந்தது. நாளடைவில் அப்பளத்தில் தண்ணீர் தேங்கிச் சாலைக்கும் நன்செய் நிலத்துக்கும் இடையே நீண்ட ஓடையாக மாறியிருந்தது. நீர் ஓடையின் அகலம் சுமார் பதினைந்து அடிதான். ஆழமோ எந்த இடத்திலும் மூன்று அடிக்குமேல் இராது. மழை காலத்தில் பெய்யும் மழையும் வயல்களிலிருந்து வடிந்த தண்ணீருமாகச் சேர்ந்து நீரோடையில் வருஷத்தில் பத்து மாதத்துக்குக் குறையாமல் தண்ணீர் நிற்கும். நீண்ட காலம் இப்படித் தண்ணீர் நின்ற காரணத்தினால் அல்லிக் கொடிகளும் செங்கழுநீர்க் கொடிகளும் மண்டிப் படர்ந்து கொழுகொழுவென்னும் இலைகளோடும் அழகிய மலர்களோடும் விளங்கின. மாலை வேளையானதால் அம்மலர்கள் நன்றாக இதழ் விரிந்திருக்கவுமில்லை; அடியோடு கூம்பவும் இல்லை. அரைவாசி விரிந்திருந்த அல்லி.... செங்கழுநீர்ப் புஷ்பம் ஒவ்வொன்றும் ஓர் அழகிய வர்ணப் பளிங்குக் கிண்ணத்தைப் போல் காட்சியளித்தன.

     ஓடையின் மேலாகச் சாலை ஓரத்து ஆலமரக் கிளைகள் தழைத்திருந்தன. அஸ்தமனச் சூரியனின் பொற்கிரணங்கள் அந்தப் பசுங் கிளைகளின் வழியாக நுழைந்து வந்து நீல நிற ஓடை நீரில் லீலை புரிந்தன.

     சற்று தூரத்தில் பொன்னிற நெற் கதிர்களைத் தாங்க முடியாமல் வயலில் சாய்ந்திருந்த நெற்பயிர்களும் இன்னும் அப்பால் மரகதப் பசுமை வாய்ந்த அடர்ந்த தென்னந்தோப்புகளும் காணப்பட்டன.

     இந்த இயற்கை வர்ணக் காட்சிகளை எல்லாம் சூரியாவினுடைய கண்கள் பார்த்து, புகைப்படக் கருவி படம் பிடிப்பது போலப் பிடித்து, அவனது உள் மனத்தில் பதியச் செய்தன. அவ்வளவு இயற்கை எழில்களும் அந்த நீல நிற ஓடையில் விழுந்த ஜலகன்னிகையின் முகத்தின் அழகைச் சிறப்பித்துக் காட்டுவதற்காக ஏற்பட்ட செயற்கைச் சித்திரங்களாகச் சூரியாவுக்குத் தோன்றின. தன்னுடைய வாழ்நாள் உள்ளளவும், தன் உடம்பில் உயிர் இருக்குமளவும், தன் மனத்திற்கு நினைக்கும் சக்தி இருக்குமளவும், இந்த நிமிஷத்திலே தான் பார்க்கும் காட்சியைத் தன்னால் மறக்க முடியாது என்று சூரியாவின் உள் மனத்தில் ஒரு பகுதி எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

     ஜலகன்னிகை சிரிப்பை நிறுத்தி, "பெரியம்மா! இந்தப் பிள்ளை யார்?" என்று கேட்டவுடனே, சூரியா கனவு லோகத்திலிருந்து இந்தப் பூவுலகத்துக்கு வந்தான்.

     "இவன்தான் உன் அம்மாஞ்சி சூரியா! பார்த்தால் தெரியவில்லையா, சீதா! கிடக்கட்டும், நீ கரை ஏறு."

     "ஓகோ லலிதாவின் அண்ணாவா, பெரியம்மா!"

     "ஆமாண்டி பெண்ணே! லலிதாவின் தமையன்தான். நீ சீக்கிரம் கரையேறி வந்து சித்தாடை உடுத்திக் கொள்!" என்று அபயாம்பாள் சொல்லி விட்டுப் பின்னர் சூரியாவைப் பார்த்து, "நீ எங்கே இருந்தடா அப்பா, வருகிறாய் - இவர்கள்தான் உன் பம்பாய் அத்தை ராஜமும் அவளுடைய பெண்ணும். இவர்களை நீ பார்த்ததேயில்லையே!" என்றாள்.

     "தேவப்பட்டணத்திலிருந்து வருகிறேன் அத்தை!" என்று சொல்லிக்கொண்டே சூரியா ஓடக் கரையிலிருந்து இப்பால் வந்தான்.

     "ஒருவருக்கும் காயம்படவில்லையே, அத்தை?"

     "ஏதோ நல்ல காலமாய்ப் போச்சு! இங்கே இந்த வண்டிக்குச் சத்தத்தைக் கொடுத்து அனுப்பிவிடலாம். நம்முடைய வண்டியிலேயே எல்லாரும் போய்விடலாம்" என்றான்.

     இதற்குள் சீதா ஓடையிலிருந்து கரையேறி வந்தாள். "பெரியம்மா! அம்மாஞ்சியை அறிமுகம் செய்து கொள்வதற்குச் சரியான இடந்தான். இந்த ஓடையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் அதிகமாயில்லாதது மட்டும் ஒரு குறை!" என்று சொல்லிக் கொண்டே சூரியாவை ஒரு விஷமப் பார்வை பார்த்தாள். பிறகு அம்மாவின் அருகில் சென்று, "பெட்டியிலிருந்து வேறு புடவை எடுத்துக் கொள்கிறேன், அம்மா! உனக்கு ஒன்றும் காயம் கீயம் இல்லையே!" என்று கவலையுடன் கேட்டாள்.

     "எனக்கு ஒன்றுமில்லை சீதா! ஆனாலும் நீ இப்படி முழுகப் போகிறேன், என்று கூச்சல் போடலாமா? ஒரு நிமிஷம் நான் கதி கலங்கிப் போய்விட்டேன்!" என்றாள் ராஜம்.

     "நீ இனிமேல் என்னைப் பற்றிக் கொஞ்சம்கூடக் கவலைப்பட வேண்டாம், அம்மா! அம்மாஞ்சி சூரியா இருக்கிறபோது உனக்கு என்ன கவலை? என்னை இந்த முழங்கால் மட்டும் ஜலத்திலிருந்து காப்பாற்றுவதற்காக அம்மாஞ்சி ஓடிவந்த வேகத்தை நீ பார்த்தாயோ, இல்லையோ?" என்று சொல்லிக் கொண்டே சீதா சூரியாவை மறுபடி ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள்.

     "இந்தப் பெண்ணுக்கு எப்போது பார்த்தாலும் சிரிப்புத் தான்; எதற்கெடுத்தாலும் சிரிப்புத்தான்!" என்றாள் ராஜத்தின் தமக்கை.

     சூரியா சொன்னபடி எல்லோரும் ஒரே வண்டியில் ஏறிப் போகவில்லை. ராஜம்மாளுக்குத் தன் மருமகனோடு தனியாகப் பேச வேண்டும் என்ற எண்ணம். இதற்குள் இரண்டு வண்டிக்காரர்களுமாகக் குடையடித்த வண்டியை நிமிர்த்திச் சாலைக்குக் கொண்டு வந்து மாட்டையும் மெள்ளப் பூட்டி விட்டார்கள். ராஜம்மாள் வற்புறுத்தியதன் பேரில் அவளும் சூரியாவும் வாடகை வண்டியில் ஏறிக்கொண்டார்கள். சீதாவும் அவளுடைய பெரியம்மாவும் பெட்டி வண்டியில் ஏறிக்கொண்டார்கள். வண்டிகள் ராஜம்பேட்டையை நோக்கி ஜாம் ஜாம் என்று சென்றன.

     சீதா பெரியம்மாளிடம், "அம்மாஞ்சியைப் பார்த்தால் லலிதாவை அச்சடித்தது மாதிரி இருக்கிறது; அம்மாஞ்சிக்குப் புடவை கட்டிவிட்டால் லலிதா என்றே பார்க்கிறவர்கள் நினைப்பார்கள். பெரியம்மா! ஒருவேளை அவர்கள் இரண்டு பேரும் இரட்டைக் குழந்தைகளோ?" என்றாள் சீதா.

     "சீ சீ! அசடே! என்ன சொல்கிறாய்! லலிதாவைவிடச் சூரியா மூன்று வயது பெரியவன். என் மனத்திற்குள்ளே நான் என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால்....."

     "என்ன ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாய், சொல்லேன்!"

     "அதைச் சொல்லி என்ன பிரயோசனம்? தொழுவூர் அய்யனார் கிருபை வைத்தால் நடக்கும்!"

     அது யார் பெரியம்மா, தொழுவூர் அய்யனார்?" என்றாள் சீதா.

     "உனக்குத் தெரியாதா? நம் குடும்பத்தின் குல தெய்வம்! ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்."

     "ஓகோ! அப்படியா? நான் என்ன நினைத்தேன் சொல்லட்டுமா, அத்தை! அய்யர்களிலே பணக்காரர்களுக்கு 'அய்யனார்' என்ற பட்டப் பெயரோ என்று நினைத்தேன்."

     "சீதா! எதற்கும் ஒரு குதர்க்கம் பேசுகிறது என்று வைத்துக் கொண்டிருக்கிறாய். இது நன்றாயில்லை, பெரியவர்கள் சொல்கிறதைப் பயபக்தியோடு கேட்டுக் கொள்ளவேணும்."

     சீதா உடனே கையைக் கட்டிக் கொண்டு, "ஆகட்டும்" அப்படியே செய்கிறேன். அய்யனாரால் இப்போது என்ன காரியம் ஆகவேணும்?" என்று கேட்டாள்.

     "நான் நினைத்தது கை கூடினால் ஆயிரத்தெட்டுத் தேங்காய் உடைப்பதாக வேண்டிக் கொண்டிருக்கிறேன்."

     "நீ நினைத்துக் கொண்டிருப்பது என்ன சொல்லு, பெரியம்மா!"

     அபயாம்பாள் வண்டிக்காரனுக்குக் கேளாதபடி தன் குரலை மெல்லியதாக்கிக் கொண்டு, "உன்னைச் சூரியாவுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்கலாம் என்று தான்; கிட்டா உடனே சம்மதித்து விடுவான்; நான் சொன்னால் தட்ட மாட்டான். ஆனால் அந்த ராட்சஸி இருக்கிறாளே?"

     "அது யார் ராட்சஸி, பெரியம்மா!"

     "உன் அம்மாமி சரஸ்வதிதான்! அவள் சம்மதிப்பதுதான் சந்தேகம். பெரிய இடமாய் இருக்கணும்; எதிர் ஜாமீனும் சீரும் செனத்தியும் வீடு கொள்ளாமல் வரணும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறாள் பகவான் புண்ணியத்திலே...."

     "பெரியம்மா! நீ சொல்லுவது தப்பு, சரஸ்வதி அம்மாமி சொல்லுவதுதான் சரி, சூரியாவைப் பார்த்தால் என்னுடைய அண்ணாவோ தம்பியோ என்று சந்தேகப்படும்படி இருக்கிறது. அப்படிப் போய் யாராவது கலியாணம் திட்டம் செய்வார்களா? பெண்ணுக்கும் பிள்ளைக்கும் குறைந்தது ஐந்து வருஷமாவது வித்தியாசம் இருக்க வேண்டாமா?"

     "ஐந்து வருஷம் என்னத்துக்கு வித்தியாசம்? இரண்டு வருஷம் இருந்தால் ஏதேஷ்டம். உன் தாத்தாவுக்கு அதாவது எங்க அப்பாவுக்குப் பதினாலு வயதிலே கலியாணம் நடந்ததாம். அப்போது அம்மாவுக்கு வயது பதிமூன்றுதான். உன் பாட்டி எத்தனை குழந்தை பெற்றாள் தெரியுமா? பதினேழு பெற்றாள்."

     "அதெல்லாம் அந்தக் காலம், பெரியம்மா! இந்த நாளிலே இருபது வயதுக்குக் குறைந்த எந்தப் பிள்ளையும் கலியாணம் பண்ணிக்க மாட்டான்; அப்படிப் பண்ணிக் கொண்டாலும் அவர்கள் சந்தோஷமாயிருக்க மாட்டார்கள்!"

     "ஏன் சந்தோஷமா இருக்க மாட்டார்கள்? பேஷாக இருப்பார்கள். உன் அம்மாமி மாத்திரம் சம்மதித்தால் கலியாணம் நடந்து விடும். ஆனால் அவள் எங்கே சம்மதிக்கப் போகிறாள்! ரொம்பப் பேராசை அவளுக்கு, ஆனால் குழந்தைகள் மட்டும் தங்கக் கம்பிகள் தான்! அப்பாவின் குணத்தைக் கொண்டு அவர்கள் பிறந்திருக்கிறார்கள்!"

     "பெரியம்மா! பிறத்தியாரைப் பற்றி அவர்கள் இல்லாத போது குறை சொல்லக் கூடாது. அது ரொம்பப் பிசகு, மாமியைப் பற்றி ஏன் இப்படியெல்லாம் சொல்கிறாய்? சரஸ்வதி மாமி ரொம்ப நல்லவள். என்னிடம் எவ்வளவு பிரியமாயிருக்கிறாள் தெரியுமா?" என்றாள் சீதா.

     "அசட்டுப் பெண்ணே! நீயும் உன்னுடைய அம்மாவைப் போலவேதான் இருக்கிறாய். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கிறாய். மாமியின் சுபாவம் போகப் போகத் தெரியப் போகிறது பார்!" என்றாள் அபயாம்பாள்.

     முதலில் சூரியாவுக்கு சீதா ஏறிய வண்டியில் தானும் ஏறவில்லையே என்று இருந்தது. அந்த ஏமாற்றம் ஒரு கணத்துக்குமேல் இருக்கவில்லை. சீதாவுடன் பேசிக் கொண்டு போவதற்கு அடுத்தபடியாகப் பம்பாய் அத்தையுடன் பேசிக்கொண்டு பிரயாணம் செய்வது அவனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

     "அத்தை! நீங்கள் எங்கே போய் விட்டு வருகிறீர்கள்? ராஜம்பேட்டையில் இருப்பதாகவல்லவா நினைத்தேன்? 'லலிதாவைக் கலியாணத்துக்காகப் பார்க்க வருகிறார்கள்; நீயும் வந்து விட்டுப்போ!' என்று அப்பா கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உங்களையும் பார்த்து விட்டுப் போகலாம் என்ற ஆசையினால் தான் நான் வந்தேன். போன வருஷம் லலிதா பம்பாய்க்குப் போய்த் திரும்பியதிலிருந்து உங்களைப் பற்றியும் சீதாவைப் பற்றியும் ஓயாமல் ஏதாவது புகழ்ந்து கொண்டேயிருப்பது அவளுக்கு வழக்கமாகி விட்டது! அதிலிருந்து எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவலாயிருந்தது" என்று சூர்யா தன்னுடைய வழக்கத்தைவிட அதிகப் படபடப்புடன் வார்த்தைகளைக் கொட்டினான்.

     "இங்கேதான் ஒரு வாரத்துக்கு மேலே இருந்தோம். சூர்யா! அக்கா வீட்டில் சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அதற்கு வரவேண்டுமென்று ரொம்பச் சொன்னாள்; போய்விட்டுத் திரும்பினோம். வருகிற வழியிலேதான் இப்படி ஆயிற்று. நல்ல சமயத்துக்கு நீ வந்தாய்!" என்றாள் ராஜம்.

     "நான் வந்து என்ன செய்து விட்டேன்? ஒன்றுமில்லையே!"

     "அப்படிச் சொல்லாதே, அப்பா! வண்டி குடை கவிழ்ந்ததும் எனக்கு ஒரே பயமாய்ப் போய் விட்டது, அதுவும் இந்த அசட்டுப் பெண் விளையாட்டுக்காக, 'முழுகப் போகிறேன்; முழுகிக் கொண்டிருக்கிறேன்' என்று கத்தினதும் எனக்கு என்னமோபோல் ஆகிவிட்டது. உன்னைக் கண்ட பிறகுதான் தைரியம் உண்டாயிற்று. வேண்டுமென்கிற மனுஷாள் பக்கத்தில் இருந்தாலே எப்படிப்பட்ட ஆபத்திலும் ஒரு தைரியந்தானே?"

     "அத்தை! என்னைப் பார்த்ததும் நான் வேண்டும் என்கிறவன் என்று உனக்குத் தெரிந்து விட்டதா? என்னை இதற்கு முன்னால் நீ பார்த்ததே கிடையாதே!"

     "எத்தனை நாள் பிரிந்திருந்தாலும் பார்க்காதிருந்தாலும் இரத்த பாசம் என்பது ஒன்று இருக்கிறதல்லவா? உன்னைப் பார்த்ததுமே எனக்குத் தெரிந்து போய் விட்டது. சூர்யா! உன்னுடைய வயதில் உன் அப்பா உன்னைப் போலவே இருந்தார். நீ தலையைக் கிராப் செய்துகொண்டிருக்கிறாய்; உன் அப்பா குடுமி வைத்துக் கொண்டிருந்தார். மற்றபடி தத்ரூபம் அதே மாதிரி இருக்கிறாய். திடீரென்று உன்னைப் பார்த்ததும் எனக்குப் பழைய காலத்து நினைவு வந்தது. வண்டி குடையடித்ததைப் பார்த்து விட்டு அண்ணாதான் ஓடி வருகிறார் என்று நினைத்தேன். அண்ணா உன் பிராயமாக இருந்த நாளிலேதான் எனக்குக் கலியாணம் நடந்தது. நேற்றுப் போல் இருக்கிறது; ஆனால், அதெல்லாம் நடந்து வருஷம் இருபது ஆகிவிட்டது!" என்று ராஜம் சொல்லுகையில் அவளுடைய கண்கள் கலங்கின.

     "அத்தை! கலியாணம் ஆகிப் புக்ககத்துக்குப்போன பிறகு நீ இந்த ஊருக்கு வரவே இல்லையாமே? ஏன் அப்படி?" என்று சூரியா கேட்டான்.

     "ஆமாம்; வரவேயில்லை. உன் அத்திம்பேரின் சுபாவந்தான் காரணம். இப்போது கூட வரமாட்டேன் என்று சொன்னேன். ஆனால், வந்தது நல்லதாய்ப் போயிற்று. இப்போது வந்திரா விட்டால் உங்களையெல்லாம் எங்கே பார்க்கப் போகிறேன்? இந்த ஊரையெல்லாந்தான் மறுபடி எந்தக் காலத்தில் பார்க்கப் போகிறேன் சூரியா? சீதாவைவிட இரண்டு வயது குறைவாயிருந்த போதே எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. அப்போது போனவள் இப்போதுதான் திரும்புகிறேன். ஆனாலும் இந்தச் சாலையும் ஓடையும், வயலும் வரப்பும், தோப்பும் துரவும், கோயிலும், குளமும் அப்படியே எல்லாம் ஞாபகம் இருக்கின்றன. இந்தச் சாலை வழியாக இதே மாதிரி மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு எத்தனை உற்சவங்களுக்கும் கலியாணங்களுக்கும் போயிருக்கிறேன் தெரியுமா? அதையெல்லாம் நினைத்தால் சந்தோஷமாயுமிருக்கிறது; துக்கமாயுமிருக்கிறது!" என்றாள் ராஜம்.

     சூரியாவும் அப்போது சந்தோஷமும் துக்கமும் கலந்த மனோநிலையை அடைந்தான். அத்தைக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்ல வேண்டுமென்று நினைத்தான். ஆனால் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.







அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாமல்ல நாயகன்
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன்
2. பார்த்திபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. தியாக பூமி
6. கள்வனின் காதலி
7. பொய்மான்கரடு
8. மோகினித் தீவு
9. சோலைமலை இளவரசி
10. மகுடபதி
11. பொன் விலங்கு
12. குறிஞ்சி மலர்
13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
14. சமுதாய வீதி
15. சாயங்கால மேகங்கள்
16. ஆத்மாவின் ராகங்கள்
17. நெஞ்சக்கனல்
18. துளசி மாடம்
19. ராணி மங்கம்மாள்
20. பிறந்த மண்
21. கபாடபுரம்
22. வஞ்சிமா நகரம்
23. நெற்றிக் கண்
24. பாண்டிமாதேவி
25. சத்திய வெள்ளம்
26. ரங்கோன் ராதா
27. ஊருக்குள் ஒரு புரட்சி
28. ஒரு கோட்டுக்கு வெளியே
29. வேருக்கு நீர்
30. ஆப்பிள் பசி
31. வனதேவியின் மைந்தர்கள்
32. கரிப்பு மணிகள்
33. வாஷிங்டனில் திருமணம்
34. நாகம்மாள்
35.பூவும் பிஞ்சும்
36. பாதையில் பதிந்த அடிகள்
37. மாலவல்லியின் தியாகம்
38. வளர்ப்பு மகள்
39. அபிதா
40. அநுக்கிரகா
41. பெண் குரல்
42. குறிஞ்சித் தேன்
43. நிசப்த சங்கீதம்
44. உத்தர காண்டம்
45. மூலக் கனல்
46. கோடுகளும் கோலங்களும்
47. நித்திலவல்லி
48. அனிச்ச மலர்
49. கற்சுவர்கள்
50. சுலபா
51. பார்கவி லாபம் தருகிறாள்
52. மணிபல்லவம்
53. பொய்ம் முகங்கள்
54. சுழலில் மிதக்கும் தீபங்கள்
55. சேற்றில் மனிதர்கள்
56. வாடா மல்லி
57. வேரில் பழுத்த பலா
58. சிலையும் நீயே சிற்பியும் நீயே
59. புவன மோகினி
60. பொன்னகர்ச் செல்வி
61. மூட்டம்
62. மண்ணாசை
63. மதுராந்தகியின் காதல்புதிது

வெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 15

கபாடபுரம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
சிவகாமியின் சபதம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
சோலைமலை இளவரசி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
நித்திலவல்லி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பாண்டிமாதேவி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பார்த்திபன் கனவு
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
புவன மோகினி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பொன்னகர்ச் செல்வி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பொன்னியின் செல்வன்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மணிபல்லவம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மதுராந்தகியின் காதல்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மாலவல்லியின் தியாகம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மோகினித் தீவு
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
ராணி மங்கம்மாள்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
வஞ்சிமா நகரம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
வெற்றி முழக்கம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 486  
புதிய உறுப்பினர்:
Saran.A
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
உங்கள் கருத்துக்கள்

வாசர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அன்புடையீர்! எனது சென்னைநூலகம்.காம் அரசு நூலகமோ அல்லது அரசு உதவி பெறும் நூலகமோ அல்ல. இது எனது தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் உழைப்பினால் உருவானதாகும். ஆகவே எனது நூலகம் தொடர்பாக என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும். இந்தியாவில் உள்ளவர்கள் எனது சென்னைநூலகம்.காம் இணையதளத்திற்கு நன்கொடை அளிக்க கீழே உள்ள பேயூ மணி (PayU Money) பட்டனை சொடுக்கி பணம் அனுப்பலாம். வெளிநாடு வாழ் அன்பர்கள் நேரடியாக எமது ஆக்ஸில் வங்கிக்கு இணையம் வழி பணம் அனுப்பலாம். (வங்கி விவரம்: G.Chandrasekaran, SB A/c No.: 168010100311793 Axis Bank, Anna Salai, Chennai. IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168). (ரூ.2000/- அல்லது அதற்கு மேல் நிதி அளிப்பவர்கள் எமது தளத்தில் “வாழ்நாள்” உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.) அன்புடன் கோ.சந்திரசேகரன் (பேசி: +91-94440-86888, 91768-88688 மின்னஞ்சல்: admin@chennailibrary.com)மேலும் விவரங்களுக்கு
  நன்கொடையாளர்கள் 

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


gowthampathippagam.in
சங்கமம்
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy
gowthampathippagam.in
மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
gowthampathippagam.in
தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
gowthampathippagam.in
விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
gowthampathippagam.in
இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy
gowthampathippagam.in
அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | தமிழகம் ரூ.60 | இந்தியா: ரூ.100 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)