இரண்டாம் பாகம் : புயல்

18. "யார் அங்கே?"

     சீதாவுக்குத் திடீரென்று தைரியம் பிறந்தது. சீ! குழாயிலிருந்து தண்ணீர் விழுந்தால் அதற்காகப் பயப்படுவதா? ஒருவேளை தானே குழாயைத் திறந்துவிட்டு மறதியாக மூடாமல் வந்திருக்கலாம். ஆபீஸ் அறையில் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது அதைக் கவனியாமல் இருந்திருக்கலாம். இப்போது ஆபீஸ் அறையை விட்டு வெளியே வந்ததும் சத்தம் கேட்கிறது. இந்தச் சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பயமா? சீதா தன்னுடைய அசட்டுத்தனத்தை நினைத்துத் தானே புன்னகை புரிந்து கொண்டாள். குழாயை நிறுத்திவிட்டுக் கொல்லைப்புறக் கதவையும் பார்த்துவிட்டு வரலாம் என்று எண்ணிக்கொண்டு நடந்தாள்.


சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

மருந்தாகும் இயற்கை உணவுகள்
இருப்பு உள்ளது
ரூ.215.00
Buy

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

நான் ரம்யாவாக இருக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

லீ குவான் யூ
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

விடை
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஞானகுரு
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

பொன்னி
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

தமிழாலயச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்
இருப்பு இல்லை
ரூ.175.00
Buy

அரசு கட்டில்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

முசோலினி
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.330.00
Buy

தன்னம்பிக்கை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

கேள்வி நேரம்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
     நாலடி வைப்பதற்குள்ளே குழாய்த் தண்ணீரின் ஓசை நின்றது. அப்போது திடீரென்று ஏற்பட்ட நிசப்தம் சீதாவை முன்னைக் காட்டிலும் பன்மடங்கு பயங்கரத்தில் ஆழ்த்திற்று.

     குழாயிலிருந்து தண்ணீர் விழும் ஓசை நின்றது என்றால், அதன் பொருள் என்ன? திறந்திருந்த குழாயை யாரோ திருகி மூடியிருக்க வேண்டும்! மூடியது யார்?

     ஜன்னல் வழியாகப் பார்த்தபோது செடிகளுக்குள்ளே புகுந்து சென்ற முக்காடிட்ட உருவம் சீதாவுக்கு நினைவு வந்தது. யாரோ கொல்லைப்புறமாக வந்து வீட்டுக்குள் நுழைந்து ஸ்தான அறைக்குள்ளே புகுந்திருக்க வேண்டும் அது யாராயிருக்கும்?

     "யாராயிருந்தால்தான் என்ன? எதற்காக இப்படிப் பயப்படுகிறோம்?" என்று எண்ணிச் சீதா மறுபடியும் தன்னைத் தானே தைரியப்படுத்திக் கொண்டாள். ஒருவேளை வீட்டு வேலைக்காரிக்குப் புத்தி வந்து திரும்பி வந்தாலும் வந்திருக்கலாம். வாசல் வழியாக வர வெட்கப்பட்டுக் கொண்டு கொல்லைப்புறமாக வந்திருக்கலாம். ஆம்; அப்படித்தான் இருக்கவேண்டும்! இதற்காகவா இவ்வளவு பயப்பட்டோம்!

     நின்றிருந்த குழாய் மறுபடியும் தண்ணீரைக் கொட்ட ஆரம்பித்தது. சந்தேகத்தையும் கலக்கத்தையும் அதற்கு மேல் சீதாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. யாராயிருந்தாலும் சரி. போய்ப் பார்த்தே தீருவது என உறுதி கொண்டாள். தடுமாறிய கால்களைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஸ்நான அறைக்குப் பக்கமாக வந்து சேர்ந்தாள்; கதவு சாத்தியிருந்தது. ஆனால் உட்புறம் தாளிடவில்லை என்று தெரிந்தது. நடுங்கிய கையினால் கதவை இலேசாகத் தட்டினாள். உள்ளே குழாய்ச் சத்தம் மறுபடியும் நின்றது. அந்த நிசப்தத்தில் சீதா, "யார் அங்கே?" என்று கேட்டாள், கேட்டவள் சீதா தான்; ஆனால் அவளுக்கே அந்தக் குரல் தன்னுடையதாகத் தெரியவில்லை!

     ஸ்நான அறைக்கு உள்ளே காலடிச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கேட்ட காலடி சத்தத்துக்கும் ஒன்பது தடவை சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்டது. ஒன்று, இரண்டு, மூன்று, நாலு, ஐந்து; கதவு உட்பக்கமிருந்து திறந்து கொண்டது.

     திறந்த வாசற்படியருகில் ஒரு உருவம் நின்றது! அது தன் கையில் ஒரு கத்தி வைத்துக் கொண்டிருந்தது.

     இது என்ன பேயா, பிசாசா? அல்லது மனித ஜன்மந்தானா? இதன் முகத்தில் உள்ளவை கண்களா? அல்லது ஜொலிக்கும் கொள்ளிகளா? அல்லது சிகப்பு வர்ண எலெக்ட்ரிக் பல்புகளா?

     இந்த உருவத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே? எங்கே? எங்கே? எப்போது?

     ஐயோ! இது என்ன? தலையை ஏன் இப்படிச் சுற்றுகிறது. ஒன்றும் புரியவில்லையே! மூளை குழம்புகிறது என்பது இது தானோ?

     இங்கே வந்து நாம் நின்று எத்தனை நேரம் ஆயிற்று? இந்த உருவத்தைப் பார்க்கத் தொடங்கி எத்தனை நேரம் ஆயிற்று? ஒரு வருஷம் இருக்குமோ? ஆயிரம் வருஷம் இருக்குமோ? இந்த உருவம் ஏன் இப்படியே நின்று கொண்டிருக்கிறது? ஏன் தன்னுடைய கொள்ளிக் கண்களால் நம்மை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது? ஐயோ! மயக்கமாய் வருகிறதே!

     இல்லை; மயக்கம் வரவில்லை அறிவு தெளிவாய்த்தானிருக்கிறது. கண்ணும் நன்றாய்த் தெரிகிறது. அதோ அந்த உருவம் புன்னகை புரிகிறதே! பேய் பிசாசு புன்னகை புரியுமா? அதோ வாயைத் திறந்து பேசுகிறதே!

     "சீதா! நான் யார் என்று தெரிகிறதா? ஞாபகம் வருகிறதா?"

     இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் சீதாவுக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிட்டது, சீ! இவள் பேயுமில்லை; பிசாசுமில்லை. பம்பாயில் தன் தாயார் படுத்த படுக்கையாயிருந்த சமயம் மர்மமாக வந்து ரத்தின மாலையும் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்துவிட்டுப் போன ஸ்திரீதான் இவள்! மனப்பிராந்தியினால் எப்படியெல்லாமோ தோன்றிவிட்டது.

     இவளை மறுபடி எங்கோ பார்த்தோமே? அது எங்கே?... இதோ ஞாபகம் வருகிறது இரண்டு மாதத்துக்கு முன்னால் இந்தச் சாலை திரும்பும் முடுக்கில் மரத்தின் பின்னால் கையில் கத்தியுடன் இவள் நின்றதைப் பார்த்தோம். யாரிடமோ இவளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோமே? ஆம்; தாரிணியிடம் பேசிக் கொண்டிருந்தோம். தாரிணி இவளுடைய வளர்ப்பு மகள். இவள் பெயர் ரஸியாபேகம்.

     "சீதா! ஏன் இப்படி விழித்துக் கொண்டு நிற்கிறாய்? என்னைத் தெரிகிறதா, இல்லையா?"

     சீதா மிக முயன்று வாயைத் திறந்து இரகசியம் பேசும் குரலில், "தெரிகிறது!" என்றாள்.

     "தெரிகிறது! நான் யார்?"

     சீதா சிறிது யோசித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த இரத்தின மாலையைத் தொட்டு, "இதைக் கொடுத்தவள்!" என்றாள்.

     "நீ நல்ல பெண்; ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய். வீட்டில் நீ மட்டும் தனியே இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று அந்த ஸ்திரீ கேட்டாள்.

     இந்தக் கேள்வி சீதாவின் காதில் விழவில்லை. ஏனெனில் அவளுடைய கண்ணும் கவனமும் அதற்குள் வேறொரு பொருளிடத்தில் சென்று விட்டன. அந்த ஸ்திரீயின் இடுப்பிலிருந்து தொங்கிய கைக்குட்டைதான் அந்தப் பொருள். அந்த வெள்ளைக் கைக்குட்டையில் ஒரு பாதி செக்கச் செவேலென்று இருந்தது.

     அதைச் சீதா பார்த்து மிரள விழித்துக் கொண்டே, "ஐயோ! இரத்தம், இரத்தம்!" என்று அலறினாள்.

     திடீரென்று அவளுக்கு எப்படியோ விம்மலும் அழுகையும் கலந்து வந்தன.

     ரஸியாபேகம் இரண்டு அடி எடுத்து முன்னால் வைத்துச் சீதாவை நெருங்கி வந்தாள். அவளுடைய ஒரு தோளைப் பிடித்து "இதோ பார், சீதா! நீ சமர்த்தாயிருப்பாய் என்று நினைத்தேன். எல்லாப் பெண்களையும் போல் மூடத்தனமாய்த் தானிருக்கிறாய். நீ அழுது கூச்சல் போட்டு, - இப்படி ஏதாவது பண்ணினாயோ, என்ன செய்வேன் தெரியுமா? சற்று முன்னால் சாலையில் ஒரு பைத்தியம் பிடித்த நாயை இந்தக் கத்தியினால் குத்திக் கொன்றேன். அது மாதிரி உன்னையும் கொன்றுவிடுவேன்!" என்றாள்.

     சீதாவின் விம்மல் உடனே நின்றது. இன்னமும் அந்தக் கைக்குட்டையைப் பார்த்துக் கொண்டு, "அது நாயின் இரத்தமா?" என்றாள்.

     "ஆமாம்; உன்னை இது ரொம்பப் பயப்படுத்துகிறது போலிருக்கிறது! கொஞ்சம் இரு! குழாயில் அலம்பிக் கொண்டு வருகிறேன்."

     இவ்விதம் சொல்லிவிட்டு அந்த ஸ்திரீ குழாயடிக்குப் போய்த் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கைக்குட்டையை நனைத்துக் கசக்கினாள். ஆனால் கறை போகிற வழியாயில்லை.

     "இதை நெருப்பிலே போட்டுக் கொளுத்த வேண்டியதுதான்!" என்று சொல்லிக் கீழே எறிந்துவிட்டுத் திரும்பி வந்தாள்.

     சீதாவின் மனது இதற்குள் வேலை செய்து கொண்டே இருந்தது. இவள் நாயைக் கொன்றதாகச் சொன்னது உண்மைதானா? நாயைக் கொன்றிருந்தால், எதற்காகக் கொல்லைப் புறமாக வந்தாள்? நாம் இங்கே இருப்பது தெரிந்து வந்தாளா? தற்செயலாக வந்தாளா? திடீரென்று அவர் இப்போது வந்து விட்டால் என்ன செய்வது?... அதற்குள் இவளை எப்படியாவது நல்ல வார்த்தைச் சொல்லிப் போகச் சொல்லிவிட வேண்டும்! இல்லாவிட்டால் என்ன ஆகுமோ? கடவுளே! எதற்காக இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்? வேறு எங்கேயாவது போயிருக்கக் கூடாதா?

     அதற்குள் அந்த ஸ்திரீ சீதாவை நெருங்கி வந்து, "வீட்டில் நீ மட்டும் தனியாக இருக்கிறாயா? வேறு யாரும் இல்லையா?" என்று மறுபடியும் கேட்டாள்.

     "இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். ஆனால் அவர் சீக்கிரத்தில் வந்துவிடுவார். சாயங்காலமே வந்திருக்க வேண்டும். எதனாலோ இன்று இன்னும் வரவில்லை."

     "ஊர்லே எந்தப் பெண் பிள்ளையைச் சுற்றிக்கொண்டு அலைகிறானோ? யார் கண்டது? அயோக்கியன்!"

     இந்த வார்த்தைகள் சீதாவின் இருதயத்தை ஊசியால் குத்துவதுபோல தைத்தன. பயங்கரமான பல சந்தேகங்கள் உதித்தன.

     "என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று நடுங்கிய குரலில் கேட்டாள்.

     "அசடே! எனக்கு உன் புருஷனைப்பற்றி என்னமாய்த் தெரியும்? புருஷர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று என் எண்ணம். அதனால் பொதுப்படையாகச் சொன்னேனே தவிர உன்னுடைய புருஷர்களைப் பற்றிக் குறிப்பாகச் சொல்லவில்லை. உன் அபிப்பிராயம் என்ன? உன் புருஷன் எப்படி?"

     "எப்படி என்றால் நான் என்னத்தைச் சொல்வது? மொத்தத்தில் நல்லவர்தான். ஆனால் கொஞ்சம் முன்கோபக்காரர். இந்த நிலையில் உங்களைப் பார்த்தால் ஏதாவது தொந்தரவாய் முடியலாம். அவர் வருவதற்குள் நீங்கள்..." என்று சீதா தயங்கினாள்.

     "நீ சொல்வது எனக்குத் தெரிகிறது. உன் புருஷன் வருவதற்குள் நான் போய்விட்டால் நல்லது என்கிறாய். அப்படித்தானே? நல்ல புண்ணியவதி நீ! எனக்கு ஒருவேளை சாப்பாடு போடக்கூட உனக்கு மனதில்லை!"

     "ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள்; என் கலியாணத்துக்கு நீங்கள் செய்த உதவியைப் பற்றி எத்தனையோ தடவை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை சாப்பாடுதானா பெரிது? அவர் வந்துவிட்டால் யார், இன்னார் என்று தெரிவிக்கும்படி நேருமே என்று யோசித்தேன் பேஷாகச் சாப்பிட்டு விட்டுப் போங்கள்."

     "சீதா! எனக்குச் சாப்பாடு வேண்டாம். எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் எனது மனது குளிர்ந்து வயிறும் நிறைந்திருக்கிறது. ஆனால் இன்று ராத்திரி நான் எங்கேயும் போக முடியாது. உடம்பு களைப்பாயிருக்கிறது, நன்றாகத் தூங்கிப் பல நாளாயிற்று. இன்று ராத்திரி இங்கே படுத்துத் தூங்கிவிட்டுத்தான் போக வேண்டும். யார், இன்னார் என்று உன் புருஷனுக்குச் சொல்ல வேண்டியதில்லை. நான் இருப்பதே தெரிய வேண்டியதில்லை. இந்த வீட்டு மாடியில் அறை இருக்கிறதா?"

     "அதுதானே இல்லை? இந்தப் புது டில்லியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டிக் கொடுத்திருக்கும் வீடுகளெல்லாம் மாடியில்லாத வீடுகள்!"

     அந்த ஸ்திரீ சுற்று முற்றும் பார்த்தாள். ஸ்நான அறைக்கு எதிர்ப்புறம் இருந்த அறையைச் சுட்டிக்காட்டி, "அந்த அறையில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாள்.

     "விறகு, கரி, தட்டுமுட்டுச் சாமான்கள்" என்றாள் சீதா.

     அறையை அந்த ஸ்திரீ திறந்து பார்த்துவிட்டு, "சரி இதில் நான் படுத்துக் கொள்கிறேன். ஒருவருக்கும் தெரிய வேண்டாம்; வெளிக் கதவை நீ பூட்டிக்கொண்டு விடு!" என்றாள்.

     "இதில் எப்படிப் படுத்துக் கொள்வீர்கள்? காற்றே வராதே? சாமான்களைக் கன்னாபின்னாவென்று போட்டிருக்கிறதே!"

     "பாதகமில்லை, சீதா! இதைக் காட்டிலும் எவ்வளவோ கேவலமான இடங்களில் நான் இருந்திருக்கிறேன்."

     இதைக் கேட்ட சீதாவின் மனம் இளகிற்று. அந்த ஸ்திரீயின் வரலாறு எப்படியிருக்கும் என்று தான் கற்பனை செய்து கொண்டதெல்லாம் நினைவு வந்தது. வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டங்களை அநுபவித்தவள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் கஷ்டங்கள் அவளுக்கு ரஜினிபூர் ராஜாவினால் நேர்ந்திருக்க வேண்டும் என்பது நிச்சயம். ஆனால் அவை என்ன மாதிரிக் கஷ்டங்கள்? அவளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசையுண்டாயிற்று. அதற்கு இப்போது அவகாசம் இல்லை. எந்த நிமிஷத்திலும் தன் கணவர் திரும்பி வந்து விடலாம். வந்தால் பைத்தியக்காரியைப்போல் தோன்றும் இவளைக் கட்டாயம் விரட்டி அடித்து விடுவார்.

     "இதோ ஒரு ஜமக்காளமும் தலையணையுமாவது கொண்டு வந்து கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சீதா விடுவிடு என்று உள்ளே போனாள். ஜமக்காளமும் தலையணையும் எடுத்துக் கொண்டு வந்தாள். இத்தனை நேரமும் அவளுடைய உள் மனது "எதையோ மறந்துவிட்டோ ம். முக்கியமான விஷயம் அதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அது இப்போது நினைவு வந்தது. மறந்து போய் நினைவு வந்த விஷயம் தாரிணியின் கோரிக்கைதான்.

     ஜமக்காளத்தையும் தலையணையையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, "நிச்சயமாகச் சாப்பாடு வேண்டாமா? பூரியும் சப்பாத்தியும் இங்கேயே கொண்டு வந்து கொடுக்கிறேனே; நீங்கள் சாவகாசமாகப் பசித்தபோது சாப்பிட்டுக் கொள்ளலாம்" என்றாள் சீதா.

     "வேண்டாம், வேண்டாம் இன்று என்ன கிழமை? செவ்வாய்க்கிழமைதானே?"

     "ஆமாம்."

     "செவ்வாய் இரவு நான் சாப்பிடும் வழக்கம் இல்லை. அப்படி விரதம். இன்றைக்கு நிச்சயமாய்ச் சாப்பிடமாட்டேன். இனிமேல் நீ போய் உன் காரியத்தைப் பார். உன் புருஷன் தினம் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பான்?"

     "சாதாரணமாய் ஏழு மணிக்குத்தான்; நான் ஆறு மணிக்கே விழித்துக் கொண்டு விடுவேன்."

     "அப்படியானால் நீ எழுந்ததும் வந்து கதவைத் திறந்து விட்டுவிடு."

     "நான் வருவதற்காக நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த அறைக்கு இன்னொரு கதவு இருக்கிறது, அது கொல்லைப்புறம் திறக்கும். இராத்திரி தாள் போட்டுக்கொள்ளுங்கள். காலையில் இஷ்டமானபோது எழுந்து போகலாம்."

     "ரொம்ப நல்லதாய்ப் போயிற்று; உனக்கு எத்தனை குழந்தை?"

     "ஒரே ஒரு குழந்தைத்தான்! வயது மூன்று ஆகப்போகிறது. வசந்தி என்று பெயர்; இப்போதுதான் கால் மணிக்கு முன்னால் தூங்கினாள்."

     "வசந்தி சௌக்கியமாயிருக்கட்டும்; புருஷர்களின் கொடுமைக்கு உள்ளாகாமல் இருக்கட்டும்."

     "நீங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பீர்கள் போலிருக்கிறது."

     "அதைப்பற்றிச் சொல்ல இப்போது நேரமில்லை. நீ போய் உன் காரியத்தைப் பார்!"

     "உங்களிடம் ஒரு விஷயம் கேட்கவேண்டும்."

     "சீக்கிரம் கேள்; ரொம்ப அலுப்பாயிருக்கிறது."

     "உங்கள் பெயர் என்ன?"

     "என் பெயர் எதுவாயிருந்தால் என்ன இப்போது?"

     "நீங்கள் சொல்லாவிட்டால் எனக்குத் தெரியாதா?"

     "தெரிந்தால் சொல்லேன்."

     "ரஸியா பேகம்!"

     வியப்புடனும் கோபத்துடனும் அந்த ஸ்திரீ சீதாவைப் பார்த்து "உனக்கு யார் சொன்னது?" என்று கேட்டாள்.

     "அதை அப்புறம் சொல்கிறேன். உங்கள் பெயர் ரஸியாபேகமா, இல்லையா?" என்றாள் சீதா.

     "உண்டு இல்லை, இரண்டும்; என்னுடைய பெயர் ரமாமணி. ஒரு காரியத்துக்காகச் சில காலம் ரஸியா பேகம் என்று மாறு பெயர் வைத்துக்கொண்டேன். அதை யாரோ உனக்குச் சொல்லியிருக்கிறார்கள். சொல்லியது யாராக இருக்கும்? ஒருவேளை அந்த அசட்டுப் பிராமணர்தானா?"

     எந்த அசட்டுப் பிராமணரைக் குறிப்பிடுகிறாள் என்று சீதாவுக்குத் தெரியவில்லை. சட்டென்று, "வேறு யாரும் இல்லை. உங்கள் குமாரி தாரிணிதான் சொன்னாள்" என்றாள்.

     சீதா எதிர்பார்த்தது போலவே அவள் பதில் அந்த ஸ்திரீயைத் தூக்கிவாரிப் போட்டது.

     சற்று நேரம் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு, "நிஜமாகவா? தாரிணியா சொன்னாள்?" என்று கேட்டாள்.

     "ஆமாம்; தாரிணிதான்."

     "அவளை எங்கே பார்த்தாய்? எப்போது?"

     "கொஞ்ச நாளைக்கு முன்பு ஆக்ராவுக்கு போயிருந்தோம் அப்போது சந்தித்தோம்."

     "அப்புறம்?"

     "ஆக்ராவிலிருந்து ரஜினிபூருக்குச் சென்றோம்.."

     அந்த ஸ்திரீயின் உள்ளத்தில் ஏதேனும் கொந்தளிப்பு ஏற்பட்டிருந்தால், அதை அவள் முகம் சற்றும் காட்டவில்லை. மரத்தினால் செய்த முகம்போல் ஆகிவிட்டது.

     சீதா மேலும் சொன்னாள்; "ரஜினிபூரில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தோம். தாரிணியை அவளுடைய தாய் தகப்பன் யார் என்று கேட்டேன். அப்போது தன்னை வளர்த்தவள் என்பதாக உங்களைப் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னதிலிருந்தும் எனக்குத் தெரிந்ததைக் கொண்டும் நீங்களாய்த்தானிருக்கும் என்று ஊகித்துக் கொண்டேன்."

     "நீயும் தாரிணியும் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்களா?" என்று ரமாமணி என்கிற ரஸியாபேகம் கேட்டாள்.

     "சிநேகமாகாமல் எப்படியிருக்க முடியும்? படகிலிருந்து நான் ஏரியில் விழுந்து விட்டேன். தாரிணிதான் உடனே தண்ணீரில் குதித்து நீந்தி வந்து என்னைக் காப்பாற்றினாள்."

     ரஸியாபேகத்தின் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது.

     "என் மகளே மகள்!" என்று குதூகலமாகக் கூறினாள்.

     "மகளிடம் இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே? ஆனால் சந்தித்து வருஷக் கணக்கு ஆயிற்றாமே? உங்களைக் கண்டால் உடனே தனக்குத் தெரிவிக்கும்படி சொல்லியிருக்கிறாள்."

     "தாரிணி இப்போது எங்கே இருக்கிறாள் தெரியுமா?"

     "இந்த ஊரிலேதான் இருப்பதாகச் சொன்னாள். விலாசம் கூடத் தந்திருக்கிறாள். நாளைக் காலையில் சொல்லி அனுப்பட்டுமா? நீங்கள் இங்கேயே நாளைக்கும் இருந்து தாரிணியைப் பார்த்து விட்டுப் போகலாமே? என் அகத்துக்காரரிடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டால் போகிறது!"

     ரஸியாபேகம் ஜமக்காளத்தையும் தலையணையையும் கீழே போட்டுவிட்டு, "சீதா! எங்கே! என் கை மேலே உன் கையை வை!" என்று அதட்டும் குரலில் கூறினாள்.

     சீதா அவ்விதமே செய்தாள்.

     "நான் இன்று இரவு இங்கு வந்ததைப்பற்றி தாரிணியிடமாவது உன் புருஷனிடமாவது நீ சொல்லவே கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே கூடாது. அப்படி என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்த நாயைக் கொன்றதுபோல் உன்னை இந்த நிமிஷமே கொன்று போட்டுவிடுவேன்" என்று கூறி ரஸியாபேகம் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை இடது கையினால் எடுத்துத் தூக்கிக் காட்டினாள். சற்று முன்னால் சிறிது அமைதியடைந்திருந்த அவளுடைய முகத்தில் மறுபடியும் கொலை வெறி கூத்தாடியது.

     சீதா மிரண்டு போய் அப்படியே சத்தியம் செய்து கொடுத்தாள். இந்த வெறி பிடித்த ஸ்திரீயிடம் எதற்காக இவ்வளவு பேச்சுக் கொடுத்தோம் என்று தோன்றியது.

     அந்தச் சமயத்தில் வாசலில் 'பாம்' 'பாம்' என்று மோட்டாரின் சத்தம் கேட்டது. அது அந்த வீட்டு மோட்டார்க் குழலின் சத்தந்தான்.

     "அவர் வந்துவிட்டார்; நீங்கள் சீக்கிரம் அறைக்கு உள்ளே போங்கள்!" என்றாள் சீதா.

     "ஜாக்கிரதை! ஞாபக மறதியாகக் கூட என்னைப்பற்றிப் பேச்சு எடுக்காதே!" என்று சொல்லிக் கொண்டே ரஸியாபேகம் சாமான் அறைக்குள்ளே பிரவேசித்தாள்.

     சீதா அறைக் கதவை இழுத்துப் பூட்டிவிட்டுப் பெருமூச்சு விட்டாள். பிறகு வாசற் கதவைத் திறக்க விரைந்து சென்றாள்.

சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode - PDF
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode
     ஏலாதி (உரையுடன்) - Unicode
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode
     மூவருலா - Unicode
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)