chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Alai Osai
http://www.chennailibrary.com
இணைய தமிழ் நூலகம்
பதினொரு ஆண்டு சேவையில்
25.09.2006 - 25.09.2017

twitter
facebook
9176888688
நன்கொடைக்கு கீழ் பட்டனை சொடுக்குக

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 552  
புதிய உறுப்பினர்:
Dr.S.Seshadri, Karthik, Nagaraj
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி
சென்னை: 1.5கிலோ தங்கம் பறிமுதல்
டிச.15-ஜன.5 வரை பார்லி குளிர்கால தொடர்
பஞ்சாப்: தொழிற்சாலை இடிந்து 13 பேர் பலி
ஈராக் : கார் குண்டு தாக்குதலில் 21 பேர் பலி
டிசம்பர்-2-ம் தேதி மிலாடிநபி விடுமுறை
ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா
அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு
தமிழகத்தில் புதியதாக 70 மணல் குவாரிகள்
1. பொன்னியின் செல்வன் | 2. பார்த்திபன் கனவு | 3. சிவகாமியின் சபதம் | 4. அலை ஓசை | 5. தியாக பூமி | 6. கள்வனின் காதலி | 7. பொய்மான்கரடு | 8. மோகினித் தீவு | 9. சோலைமலை இளவரசி | 10. மகுடபதி | 11. பொன் விலங்கு | 12. குறிஞ்சி மலர் | 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) | 14. சமுதாய வீதி | 15. சாயங்கால மேகங்கள் | 16. ஆத்மாவின் ராகங்கள் | 17. நெஞ்சக்கனல் | 18. துளசி மாடம் | 19. ராணி மங்கம்மாள் | 20. பிறந்த மண் | 21. கபாடபுரம் | 22. வஞ்சிமா நகரம் | 23. நெற்றிக் கண் | 24. பாண்டிமாதேவி | 25. சத்திய வெள்ளம் | 26. ரங்கோன் ராதா | 27. ஊருக்குள் ஒரு புரட்சி | 28. ஒரு கோட்டுக்கு வெளியே | 29. வேருக்கு நீர் | 30. ஆப்பிள் பசி | 31. வனதேவியின் மைந்தர்கள் | 32. கரிப்பு மணிகள் | 33. வாஷிங்டனில் திருமணம் | 34. நாகம்மாள் | 35.பூவும் பிஞ்சும் | 36. பாதையில் பதிந்த அடிகள் | 37. மாலவல்லியின் தியாகம் | 38. வளர்ப்பு மகள் | 39. அபிதா | 40. அநுக்கிரகா | 41. பெண் குரல் | 42. குறிஞ்சித் தேன் | 43. நிசப்த சங்கீதம் | 44. உத்தர காண்டம் | 45. மூலக் கனல் | 46. கோடுகளும் கோலங்களும் | 47. நித்திலவல்லி | 48. அனிச்ச மலர் | 49. கற்சுவர்கள் | 50. சுலபா | 51. பார்கவி லாபம் தருகிறாள் | 52. மணிபல்லவம் | 53. பொய்ம் முகங்கள் | 54. சுழலில் மிதக்கும் தீபங்கள் | 55. சேற்றில் மனிதர்கள் | 56. வாடா மல்லி | 57. வேரில் பழுத்த பலா | 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே | 59. புவன மோகினி | 60. பொன்னகர்ச் செல்வி | 61. மூட்டம்புதிது
புதிய வெளியீடு
திரை உலக செய்திகள்
நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை - பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குபதிவு | சிறு வயது விஜய் சேதுபதியாக நடிக்கும் எம்.பாஸ்கரின் மகன் ஆதித்யா! | யுனிசெஃபின் பிரபல தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார் | தீபிகா படுகோனே தலைக்கு ரூ.10 கோடி: பாஜக பிரமுகர் அறிவிப்பு | தொடரும் எதிர்ப்பு: பத்மாவதி ரிலீஸ் ஒத்திவைப்பு!



நான்காம் பாகம் : பிரளயம்

16. ரமாமணியின் தோல்வி

     தாரிணி உண்மையில் ஒரு ராஜகுமாரி என்று எண்ணியதும் ராகவனுடைய உள்ளம் புயற்காற்றில் அலைகடலைப் போல கொந்தளித்தது. அதுவரை அவனுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்கள் விளங்கின. தாரிணி சாதாரணப் பெண் அல்ல என்று பலமுறை தான் எண்ணியது எவ்வளவு சரியாய்ப் போயிற்று என்று நினைத்துக் கர்வம் கொண்டான். ஒரு ராஜகுமாரியின் காதலுக்குத் தான் ஒரு சமயம் உரியவனாயிருந்தது குறித்துப் பெருமிதம் அடைந்தான். அந்த அபூர்வமான காதலைத் தான் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதை எண்ணி ஆதங்கம் அடைந்தான். ரஜினிபூர் ராஜ்யமே தனக்கு வந்திருக்க வேண்டியது என்றும், அது நியாயமாக நஷ்டமாகிவிட்டது என்றும் அவனுடைய அந்தரங்கத்தில் ஒரு சபல நினைவு தோன்றி மறைந்தது! தான் எவ்வளவோ முயன்றும் அறிய முடியாத தாரிணியின் பிறப்பு மர்மத்தை இந்தச் சூரியா அறிந்துகொள்ள முடிந்தது பற்றி ஒரு பக்கம் வியப்பு உண்டாயிற்று. ராஜகுமாரி தாரிணி இந்தச் சூரியாவிடம் அந்தரங்கத்தை வெளியிட்டிருப்பதை எண்ணி மனம் எரிந்தான். தாரிணி, சூரியா, சீதா - ஆகிய மூவர் மீதும் அவனுக்கு அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. அந்த மூன்று பேரும் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்குச் சதி செய்ததாக அவனுக்குத் தோன்றியது.

     ஆயினும், இன்னும் சில விவரங்களைச் சூரியாவிடம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகையால் தன்னுடைய கோபத்தைக் காட்டி இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தீர்மானித்தான். ஆத்திரத்தையும் எரிச்சலையும் அசூயையும் குரோதத்தையும் கஷ்டப்பட்டு மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, "சூரியா! நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது. கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது!" என்றான்.

     "கற்பனைக் கதையெல்லாம் மிஞ்சி விடும் உண்மைச் சம்பவங்கள் நம்முடைய சுதேச சமஸ்தானங்களில் எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனால் எனக்கு அந்தக் கதைகள் சுவாரஸ்யமாயிருப்பதில்லை. உள்ளத்தைப் பிளக்கும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகின்றன. கங்காபாயையும் ரமாமணியையும்போல் எத்தனை ஆயிரம் பெண்கள் துர்க்கதி அடைந்தார்களோ, யாருக்குத் தெரியும்? அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே!" என்று சூரியா கூறினான்.

     "அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை. இது கலியுகம் அல்லவா? கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல்! கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார்? வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன்!" என்றான் ராகவன்.

     "மேலே சொல்லுவதற்கு அதிகம் இல்லை. ஒருவேளை என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆயினும் எனக்குத் தெரியாத மீதி விவரங்களையும் சொல்லி விடுகிறேன்" என்றான் சூரியா.

     கங்காபாயின் சோக முடிவு ரமாமணியைக் குலுக்கிப் போட்டுவிட்டது. அவளுடைய அறிவே கலங்கிவிட்டது. அந்த நிலைமையில் ரமாமணி இருந்தபோது குழந்தை தாரிணியைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்புத் துரைசாமி ஐயருக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அக்குழந்தையிடம் ஏற்கெனவே இருந்த பாசம் மேலும் வளர்ந்து உறுதிப்பட்டது.

     ரமாமணிபாய்க்கு அறிவு கொஞ்சம் தெளிந்தபோது தன் தங்கையின் அகால முடிவுக்குக் காரணமாயிருந்த ரஜினிபூர் ராஜாவையும் அவருடைய துர்மந்திரி மதோங்கரையும் பழிக்குப் பழி வாங்குவது என்று சங்கல்பம் செய்து கொண்டாள். இந்த உத்வேகமே அவளுடைய உடலுக்கும் உயிருக்கும் வலிமையைத் தந்து எத்தனையோ கஷ்டங்களைச் சகிக்கும் சக்தியை அவளுக்கு அளித்து வந்தது.

     பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் குழந்தை தாரிணியை மதோங்கர் வசத்தில் பாதுகாப்பதற்கும் ரமாமணிக்குப் புருஷத் துணை அத்தியாவசமாயிருந்தது. ஆதலின் பெண்மைக்குரிய சகல சாமர்த்தியங்களையும் பிரயோகித்து ஸ்டேஷன் மாஸ்டர் துரைசாமியின் சிநேகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள்.

     துரைசாமி ஐயரின் பாடு, ரொம்பவும் சங்கடமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய சொற்ப சம்பளத்தைக் கொண்டு, பம்பாய் நகரில் இரண்டு தனிக் குடும்பங்களை நடத்தவேண்டி வந்தது. பணக்கஷ்டம் அதிகமாயிற்று. அதோடு தன் மனைவி ராஜம்மாளிடம் உண்மை நிலையைச் சொல்லுவதற்கு வழியில்லாததால், பணச் செலவுக்குப் பொய்க் காரணம் சொல்ல வேண்டியதாயிருந்தது. குதிரைப் பந்தய தினங்களில் பந்தயத்துக்குத் தான் போய் வந்ததாகவும் பணம் நஷ்டப்பட்டதாகவும் சொல்லி வந்தார்.

     முதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதில் ராஜம்மாள் பெருந் துயரத்துக்கு ஆளானாள். அதோடு உத்தமமான ஒழுக்கம் படைத்தவர் என்று தான் எண்ணியிருந்த கணவன் குதிரைப் பந்தயத்துக்குப் போக ஆரம்பித்திருப்பது பற்றிப் பெரிதும் வருந்தினாள். அதைத் தவிர வேறு கெட்ட நடவடிக்கைகளுக்குத் தன் கணவர் ஆளாகியிருப்பாரோ என்ற சந்தேகங்கள் அவள் மனதில் தோன்றின. அவற்றை வெளியிட்டுக் கணவரிடம் கேட்கும் தைரியம் ஏற்படவில்லை. மனதிற்குள்ளேயே துயரத்தை வைத்து வளர்த்து வந்தாள்.

     இதற்கிடையில், தாரிணி பிறந்த இரண்டு வருஷத்துக்குப் பிறகு ராஜம்மாளுக்குச் சீதா பிறந்தாள். இதற்குப் பிறகாவது தன் கணவனுடைய நடவடிக்கைகள் திருந்தும் என்று ராஜம்மாள் எதிர்பார்த்தாள். அவ்வித நல்ல மாறுதல் ஏற்படாதது கண்டு மேலும் மனம் குன்றினாள்.

     நாட்கள் வருஷங்களைப் போலவும், வருஷங்கள் யுகங்களைப் போலவும் ராஜம்மாளுக்குப் சென்று வந்தன. ரமாமணிக்கும் அப்படித்தான்.

     ஆனால் குழந்தைகளான சீதாவுக்கும் தாரிணிக்கும் வருஷங்கள் இறகு கட்டிக் கொண்டு பறந்து சென்றன. துரைசாமி ஐயருக்கோ கழிந்த நாட்களையும் வருஷங்களையும் கணக்குப் பண்ணுவதற்கே நேரம் கிடைக்கவில்லை.

     தாரிணிக்கு வயது வந்தபோது தன்னுடைய தாயும் தகப்பனாரும் உலகத்தில் உள்ள மற்ற தாய் தந்தையரைப் போல் மணம் செய்துகொண்டு வாழ்கிறவர்கள் அல்ல என்னும் விஷயம் தெரிய வந்தது. தன்னுடைய தாயின் மர்மமான காரியங்கள் அவளுக்குப் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஒவ்வொரு சமயம் விலை உயர்ந்த ஆபரணங்களை அவளுடைய தகப்பனாரிடம் தாயார் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்லுவதைக் கவனித்திருந்தாள். ஒரு நாள் தாயாரிடம் சந்தேகங்களை வெளியிட்டாள். அதன் பேரில் ரமாமணி ரஜனிபூர் ராஜாவினால் தன்னுடைய தங்கை கங்காபாய்க்கு நேர்ந்த கதியைப் பற்றியும் அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் தான் தீர்மானித்திருப்பது பற்றியும் தாரிணியிடம் கூறினாள்.

     கங்காபாயின் கதையைக் கேட்டதிலிருந்து தாரிணியின் மனம் தான் பிறந்த தேசத்தின் நிலைமையைப் பற்றிச் சிந்திக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாயிற்று. அச்சமயம் இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உப்புச் சத்தியாகிரஹ இயக்கத்தில் கலந்து கொண்டாள். பிற்பாடு, பீஹார் பூகம்பத்தைப் பற்றிய செய்தி வந்தபோது பூகம்பத்தினால் துன்புற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றாள்.

     ஏறக்குறைய இதே சமயத்தில் ராஜம்மாள் நீடித்த நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்றும் பிழைப்பது துர்லபம் என்றும் ரமாமணிக்குத் தெரியலாயிற்று. தன்னால் கஷ்டத்திற்கு ஆளான ராஜம்மாளையும் அவளுடைய குமாரி சீதாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரமாமணியின் மனதில் வெகு காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் தருணம் என்று எண்ணினாள். ரஜனிபூர் ஆபரணங்களில் தன்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு துரைசாமி இல்லாத சமயத்தில் ராஜம்மாளைப் பார்க்கச் சென்றாள். சீதாவின் கலியாணத்துக்கு என்று ரத்தின ஹாரத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

     இந்த முக்கியமான கடமை தீர்ந்த பிறகு ரமாமணி தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாள். பம்பாய்க்கு வந்திருந்த ரஜனிபூர் ராஜாவைக் கத்தியினால் குத்திக் கொல்லப் பிரயத்தனம் செய்தாள். அந்தப் பிரயத்தனம் பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டாள்.

     சிறையில் இருந்தபோது ரமாமணியின் பைத்தியம் முற்றியது. சிறையிலிருந்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சென்று சில காலத்துக்குப் பிறகு அங்கிருந்து விடுதலை அடைந்தாள்.

     ரஜனிபூர் ராஜாவும் அதற்குப் பிறகு அதிக காலம் உயிரோடிருக்கவில்லை. ஆகவே விடுதலையாகி வந்த ரமாமணி அடுத்தாற்போல் தான் பழி தீர்க்க வேண்டிய மதோங்கரின் பேரில் கவனம் செலுத்தினாள். புது டில்லியின் சாலைகளில் அலைந்து திரிந்து மதோங்கரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முயற்சியிலும் ரமாமணி தோல்வியே அடைந்தாள். ஏனெனில், அவள் மதோங்கரை வெகு காலம் தேடிக் கொண்டிருந்து கடைசியில் ஒரு நாள் பிடித்து விட்டோ ம் என்று எண்ணிய சமயத்தில், ரமாமணிக்கு முன்பாகவே மதோங்கரின் பேரில் பழி தீர்க்க விரும்பியவன் ஒருவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டான்!







அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்

1861 | 1862 | 1863 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 2017


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017



பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)



உங்கள் கருத்துக்கள்


கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)

தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)

புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)

அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)

பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்

பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்

மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)

ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)

லா.ச.ராமாமிருதம் :  அபிதா

சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை

ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்

ரமணிசந்திரன்

சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்

சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்

க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு

கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்

மகாத்மா காந்தி :  சத்திய சோதனை

ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி

பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி

என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்

கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி

விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்

கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)

பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)

ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி

ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்

வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்

சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை

மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா

கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்

ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி

ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை

திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்

திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்

ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை

முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்

நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம்

இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை

உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா

பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை

கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்

பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா

ஆன்மீகம் :  தினசரி தியானம்