http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




நான்காம் பாகம் : பிரளயம்

4. காதல் என்னும் மாயை

     சீதாவும் லலிதாவும் அன்று சாயங்காலம் குளத்தங்கரை பங்களாவுக்குச் சென்றார்கள். 'பங்களா'வென்று அந்தக் கட்டிடத்தை முன்னே மரியாதைக்குச் சொல்லக்கூடியதாயிருந்தது. இப்போது அப்படிக்கூடச் சொல்வதற்கில்லை. அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. சுவர்களின் மேல் பூச்சு பல இடங்களில் உதிர்ந்து போயிருந்தது. திண்ணைக்குப் பந்தோபஸ்தாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் பிளாச்சு வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது.

     பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது.

     சீதாவும் லலிதாவும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் சீதா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று.

     "லலிதா! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள்.

     "அதை வெட்டி விறகுக்கு விற்றாகிவிட்டது?" என்றாள் லலிதா.

     "அதனால்தான் இந்தப் பக்கமெல்லாம் இப்படி பார்ப்பதற்கு வெறிச்சென்று இருக்கிறது. சவுக்குத் தோப்பை வெட்டி விட்டபடியால் இந்தக் குளக்கரையின் அழகே போய் விட்டது. இப்போது என்னுடைய வாழ்க்கை சூனியமாயிருப்பதுபோல் இந்தப் பிரதேசமும் சூனியமாயிருக்கிறது!" என்று சொல்லிச் சீதா பெருமூச்சு விட்டாள்.

     "நீ இப்படிப் பேசுவது எனக்குப் புரியவேயில்லை! டில்லியிலிருந்து நீ கடைசியாக எழுதிய கடிதங்களும் எனக்குச் சரியாக அர்த்தமாகவில்லை! உனக்கென்ன வருத்தம், சீதா! ஏன் இப்படி வாழ்க்கையையே வெறுத்தவள்போல் பேசுகிறாய்? அவருக்கும் உனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையா? இந்த ஊரில் நீங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பிரியப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டீர்களே? இந்தப் பக்கத்து ஊர்களிலெல்லாம் வெகு காலம் வரை உங்களுடைய காதல் கலியாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களே, அதெல்லாம் வெறும் பொய்யா? உங்களுக்குள் ஏன் ஒத்துக்கொள்ளவில்லை? உண்மையில் அவருக்கு உன் பேரில் அன்பு இல்லையா?" என்று லலிதா வருத்தமான குரலில் கேட்டாள்.

     "எனக்குத் தெரியாது. அவருக்கு என் பேரில் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதே எனக்குத் தெரியாது. ஆரம்பத்திலிருந்தே அவருக்கும் எனக்கும் மத்தியில் ஒரு மாயத்திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவருடைய மனதை நான் அறிய முடியாமல் அந்தத் திரை மறைத்துக் கொண்டிருந்தது. அந்தத் திரையைத் திறந்து அவருடைய மனதில் உள்ளது என்னவென்பதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவேயில்லை. அத்தனை தைரியம் எனக்கு இல்லை. திரையைத் திறந்து பார்த்தால் உள்ளே என்ன இருக்குமோ என்னமோ என்று பயந்தேன். பேய் பிசாசு இருக்குமோ, புலியும் கரடியும் இருக்குமோ, அல்லது விசுவாமித்திரரை மயக்கிய மேனகையைப் போல யாராவது ஒரு மாயமோகினி இருப்பாளோ என்று எனக்குப் பயமாயிருந்தது. ஆகையினால் திரையை நீக்கி அவருடைய மனதை அறிந்து கொள்ள நான் பிரயத்தனப்படவேயில்லை. அப்படிப் பிரயத்தனப்பட்டிருந்தால் ஒரு வேளை நான் கொலைகாரியாகியிருப்பேன். அல்லது கொலையுண்டு செத்துப் போயிருந்தாலும் போய் இருப்பேன்!" என்றாள் சீதா.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-4.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs