நான்காம் பாகம் : பிரளயம்

42. லலிதாவின் மன்னி

     தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் எதிர் எதிராக நின்ற இரு மச்சு வீடுகளின் வாசலிலும் இப்போது போர்டு பலகைகள் தொங்கவில்லை. அட்வகேட் ஆத்மநாதய்யரைப் பின் தொடர்ந்து அவருடைய நண்பர் தாமோதரம்பிள்ளையும் தேவலோக நீதிமன்றத்தில் வழக்காடுவதற்குச் சென்றுவிட்டார்.


ஃபிராய்ட்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

உடம்பு சரியில்லையா?
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மேன்மைக்கான வழிகாட்டி 2
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

விடை
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

மருந்தில்லா மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

அகிலம் வென்ற அட்டிலா
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழகக் கோயில்கள் - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ஆரம்பம் ஐம்பது காசு
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

தமிழாற்றுப்படை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

சந்திரபாபு
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

கெடை காடு
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

எம்.ஜி.ஆர்
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

மைக்கேல் டெல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

மருந்தும்... மகத்துவமும்...!
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

துளசிதாசர் முதல் மீராபாய் வரை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பிசினஸ் டிப்ஸ்
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

கேள்விகளே பதிலாகும்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
     "ஆத்மநாதய்யர், பி.ஏ. பி.எல்." என்ற போர்டு தொங்கிய இடத்தில் சில காலம் "ஏ. பட்டாபிராமன், சேர்மன், முனிசிபல் கௌன்சில்" என்ற போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதைச் சீக்கிரத்திலேயே எடுத்துவிட வேண்டியதாயிற்று. ஏனெனில், பட்டாபிராமனுக்குப் போட்டியாக நின்ற கள்ள மார்க்கெட் முதலாளி பட்டாபிராமனுடைய தேர்தலில் ஊழல் நடந்ததாகவும் அந்தத் தேர்தல் செல்லுபடியாகாதென்றும் வழக்குத் தொடர்ந்தார். பணத்தின் பலத்தினால் கள்ள மார்க்கெட் ஆசாமியின் பக்கம் தீர்ப்பாயிற்று. பட்டாபிராமனுடைய சேர்மன் பதவி போயிற்று.

     அப்பீல் பண்ணும்படி சிலரும் மறுபடியும் தேர்தலுக்கு நிற்கும்படி சிலரும் பட்டாபிராமனுக்கு உபதேசித்தார்கள். லலிதா மட்டும், "போதும், போதும், ஒரு தடவை தேர்தலுக்கு நின்று பட்டதெல்லாம் போதும்!" என்று சொன்னாள். அவளுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு, பட்டாபிராமன் அப்பீல் செய்யவும் மறு தேர்தலுக்கு நிற்கவும் கண்டிப்பாக மறுதளித்து விட்டான்.

     தாமோதரம் பிள்ளையின் மரணத்தறுவாயில் ஊருக்கு வந்து சேர்ந்த அமரநாதன் திரும்பக் கல்கத்தாவுக்குப் போக விரும்பவில்லை.

     நண்பர்கள் இருவரும் சுதந்திர இந்தியாவின் பொருள் வளத்தைப் பெருக்குவதற்கு ஏதேனும் தொழில் செய்யவேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருந்தபோது காந்தி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்து அவர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தி விட்டது. நாள்கணக்காக அந்தச் சம்பவத்தைப் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர, வேறு எதைப் பற்றியும் சிந்தனை செய்ய ஓடவில்லை.

     இந்த நிலைமையிலேதான் சீதாவின் மரணத்தைப்பற்றிய செய்தியும் வந்து அவர்களுடைய கலக்கத்தை அதிகமாக்கியது. கல்கத்தா சாலையில் மூர்ச்சையடைந்து கிடந்த சீதாவை எடுத்துச் சென்று உயிரளித்துக் காப்பாற்றியவனான அமரநாத், அவளுக்கு முடிவில் நேர்ந்த கதியை அறிந்து பெரிதும் பரிதாபப்பட்டான். பட்டாபிராமனோ சீதா தன் வீட்டில் தங்கியிருந்தபோது வாழ்க்கை எவ்வளவு குதூகலமாயிருந்தது என்பதையும், உணர்ச்சி வசப்பட்டுத் தான் செய்த சிறு தவறினால் அவளுக்கு நேர்ந்த கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வருந்தினான். சீதாவிடமிருந்த நல்ல குணங்களையும் துர்க்குணங்களையும் பற்றி அந்த நண்பர்கள் இருவரும் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டு ஒத்துப் பார்த்துக் கொண்டார்கள்.

     ஆனால் அவர்களுடைய தர்ம பத்தினிகளான லலிதாவும் சித்ராவும் சீதாவிடம் எந்தவிதமான துர்க்குணமும் இருந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. லலிதா எல்லாத் தவறுகளையும் தன் பேரிலேயே போட்டுக்கொண்டு பச்சாதாபப்பட்டாள். சீதாவுக்கு நேர்ந்த கஷ்டங்களுக்கெல்லாம் தானே காரணம் என்று சொல்லிச் சொல்லிக் கண்ணீர் விட்டாள். சௌந்தரராகவன் தன்னைப் பார்க்க வந்த இடத்திலேதான் சீதாவைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டான்? தான் பட்டிருக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அவனைக் கலியாணம் செய்து கொண்டு சீதா அல்லவா அனுபவித்தாள்? அப்படிப்பட்டவள் தன்னுடைய சொந்த மனக் கஷ்டங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இங்கே இருந்த சமயம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள்? அவள் இருந்தபோது தன் வீடு எவ்வளவு கலகலப்பாக இருந்தது? வாழ்க்கையே ஒரு புது மெருகு பெற்று ஆனந்த கோலாகலமாக மாறியிருந்ததே! அப்படிப்பட்டவளை அநாவசியமாகச் சந்தேகித்து வீண் பழி சொல்லி நடுராத்திரியில் வீட்டை விட்டு ஓடும்படி செய்தேனே? அந்தப் பாவத்துக்காகக் கடவுள் என்னை என்னமாதிரி தண்டிப்பாரோ தெரியவில்லையே? - இப்படியெல்லாம் ஓயாது புலம்பிய லலிதாவுக்கு அவளுடைய தோழி சித்ரா பலவிதமாக ஆறுதல் சொன்னாள்.

     "நீயும் நானும் என்னடி செய்யக் கிடக்கிறது? அவரவர்கள் தலைவிதிப்படியல்லவா எதுவும் நடக்கிறது?" என்றாள் சித்ரா.

     "அழகாயிருக்கிறது நீ சொல்லுகிறது! எல்லாம் தலைவிதி என்றால் பாவ புண்ணியமே கிடையாதா? காந்தி மகாத்மா இறந்ததும் அவருடைய தலைவிதிதானா? அவரைச் சுட்டுக் கொன்ற மகாபாவியின் பேரில் குற்றம் ஒன்றும் இல்லை என்றுகூடச் சொல்வாயோ?" என்றாள் லலிதா.

     "எதற்கும் எதற்கும் உவமானம் சொல்கிறாய், லலிதா! காந்தி மகாத்மா இறந்தது அவருடைய தலைவிதி என்றால், அவரைக் கொன்றவனைத் தண்டித்தால் அதுவும் அவன் தலைவிதிதானே? நாம் செய்யும் காரியங்களில் பாவ புண்ணியம் பார்த்துச் சரியான காரியத்தைச் செய்யவேண்டும். அப்புறம் நடக்கிறது அவரவர்களின் தலைவிதிபோல் நடக்கும்!" என்றாள் சித்ரா.

     "சில பேர் இந்த உலகத்தில் பாவ புண்ணியம் பார்த்து நல்ல காரியங்களையே செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். வாழ்க்கையெல்லாம் சந்தோஷமேயில்லாமல் கஷ்டப்பட்டு சாகிறார்கள். இது அவர்கள் தலைவிதியா? பகவானுடைய செயலா? உன்னுடைய தத்துவம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை!" என்றாள் லலிதா.

     "முதலாவது நீ சொல்கிறதே தப்பு. வாழ்க்கையெல்லாம் சந்தோஷமில்லாமல் கஷ்டப்பட்டுச் சாகிறார்கள் என்கிறாய். ஏன் அப்படிச் சாகிறார்கள்? வெளிப்பார்வைக்கு நமக்கு அப்படித் தோன்றலாம்; எல்லாருடைய வாழ்க்கையிலும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறித்தான் வருகின்றன!"

     "இல்லவே இல்லை! சீதாவையே பாரேன்! வாழ்க்கையெல்லாம் அவள் கஷ்டப்பட்டுக் கடைசியில் செத்தும் போனாளே?"

     "சீதா சந்தோஷமென்பதையே அறியாமல் செத்துப் போனாள் என்றா சொல்லுகிறாய்? சுத்தத் தவறு, லலிதா! நானும் சீதாவுடன் கொஞ்சம் பழகியிருக்கிறேன். அவள் சந்தோஷப்பட்டதும் அதிகம்; துக்கப்பட்டதும் அதிகம். இந்த உலகத்தில் சிலருடைய வாழ்க்கை சந்தோஷமும் இல்லாமல் துக்கமும் இல்லாமல் எப்போதும் சப்புச் சவுக்கென்று இருந்து கழிந்து விடுகிறது. அவர்கள்தான் இந்த உலகத்தில் பாக்கியசாலிகள் என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வங்காளத்து மகாகவி ரவீந்திரநாத் தாகூர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'ஆண்டவனே? எனக்கு வேறு ஒரு பாக்கியமும் இந்த உலகத்தில் வேண்டாம்; கண்ணீர் பெருக்கி அழும் பாக்கியத்தைக் கொடு!' என்று கடவுளை வரம் கேட்கிறார். துக்கமும் சந்தோஷமும் கலந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. காவியங்கள், இதிகாசங்கள், கதைகள், - எல்லாவற்றையும் பார்! கதாநாயகர்கள்- கதாநாயகிகளில் கஷ்டப்படாதவர்கள் யார்?"

     "சீதாவின் வாழ்க்கையும் ஒரு கதையாகத்தான் முடிந்து விட்டது. சித்ரா! உனக்குத் தெரியுமோ என்னமோ? சீதாவுக்கு அந்த நாளிலிருந்தே கதை என்றால் ரொம்பப் பிரியம். ராஜம்பேட்டைக் குளத்தங்கரையில் முன்னிலவு எரிக்கும் இரவுகளில் அவளும் நானும் கதைபேசிக் கழித்த நாட்களை நினைத்தால் எனக்குப் பகீர் என்கிறது. எத்தனை எத்தனை கதைகள் சொல்வாள்? லைலா மஜ்னுன் கதை, ரோமியோ ஜுலியட் கதை, அனார்கலியின் கதை, - தமயந்தி நளன் கதை, சகுந்தலை துஷ்யந்தன் கதை இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டிருப்பாள். கதை சொல்லும் போதெல்லாம் தானே அந்தக் கதாநாயகி என்று நினைத்துக்கொண்டுவிடுவாள். பாவம்! அவளுக்கா இப்படிப்பட்ட கதி வரவேண்டும்? அவள் எத்தனை எத்தனையோ கனவு கண்டாள்! ஒரு கனவும் பலிக்காமல், ஒரு சுகத்தையும் அநுபவிக்காமல் போய் விட்டாளே?" என்று சொல்லிவிட்டு லலிதா 'ஓ'வென்று அழுதாள்.

     சித்ரா அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள். நல்ல வார்த்தை சொல்லிப் பயன்படாமற் போகவே கோபமாகவும் பேசினாள். கடைசியாக, "சீதாவுக்காக இவ்வளவு வருத்தப்பட்டுக் கண்ணீர் விடுகிறாயே? அவளுடைய தமக்கையைப் பற்றிக் கொஞ்சம் அநுதாபங் காட்டக் கூடாதா? செத்துப் போன சீதாவைக் காட்டிலும் ஒரு கண்ணையும் ஒரு கையையும் இழந்து உயிரோடு இருக்கிறாளே, அவளுடைய கதி இன்னும் பரிதாபம் இல்லையா?" என்றாள்.

     லலிதாவின் அழுகையும் கண்ணீரும் நின்றன.

     "அதை நினைத்தால் ரொம்பப் பரிதாபமாய்த்தானிருக்கிறது. என் மூத்த அத்தங்காளை நான் பார்த்ததேயில்லை. முதன் முதலில் பார்க்கும்போது இப்படிப் பார்க்க வேண்டுமா என்று கஷ்டமாயிருக்கிறது!" என்று சொன்னாள் லலிதா.

     "இதிலேகூட உன்னுடைய மனக் கஷ்டத்தையே பார்க்க வேண்டுமா, லலிதா! அடுத்தாற்போல் உன் தமையன் சூரியாவைப் பார்! தீரன் என்றால் அவன் அல்லவா தீரன்? அப்படி அங்கஹீனமானவளைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல யாருக்குத் துணிச்சல் வரும்! உன் அகத்துக்காரரும் சரி, என் அகத்துக்காரரும் சரி, பத்துக் காத தூரம் ஓடிப் போவார்கள். சீதாவின் கணவன் இருக்கிறானே, அந்த மகராஜன் அவனைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை! கல்கத்தாவிலே அவன் சுரம் வந்து படுத்தபோது எனக்குக் கொஞ்சம் இரக்கமாயிருந்தது. இப்போது என்ன தோன்றுகிறது, தெரியுமா? அவன் எதற்காகப் பிழைத்தான், கல்கத்தாவிலே செத்துப் போன அத்தனை ஆயிரம் பேரோடு அவனும் தொலைந்து போயிருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது."

     "அதெல்லாம் சரிதான், சித்ரா! அவர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாகவே இருக்கட்டும். சூரியா இந்த விஷயத்தில் செய்கிற காரியம் சரியா? எனக்கென்னமோ சரியாகத் தோன்றவில்லை. அப்படியாவது என்ன கலியாணம் வேண்டிக் கிடந்தது! ஒரு கையும் ஒரு கண்ணும் இல்லாதவளைக் கலியாணம் செய்து கொள்ளவாவது? ஊருக்கெல்லாம் பரிகாசமாய்ப் போய்விடும்?" என்றாள் லலிதா.

     "அது உனக்கும் ரொம்ப அவமானமாகத்தான் இருக்கும்! ஒரு கண்ணும் ஒரு கையும் இல்லாதவளை மன்னி என்று அழைக்க உனக்கு வெட்கமாயிராதா? ஆனால் லலிதா! உன்னை அப்படியெல்லாம் சூரியா அவமானப்படுத்த மாட்டான். இங்கே தாரிணியை அழைத்துக்கொண்டு வரவே மாட்டான். அப்படி வருவதாயிருந்தால் நீ ராஜம்பேட்டைக்குப் புறப்பட்டுப் போய் விடு! வந்தவர்களை நான் நன்றாய்த் திட்டித் திருப்பி அனுப்பி விடுகிறேன். அந்த வெட்கங்கெட்ட மூளிகள் இங்கே எதற்காக வரவேண்டும்?" என்று சித்ரா லலிதாவை ஏசுகிற பாவத்தில் பேசினாள்.

     "அவ்வளவு கொடுமையானவள் அல்ல நான். இருந்தாலும் சூரியாவுக்கு இப்படியா ஒரு கலியாணம் என்று நினைத்தால் வருத்தமாய்த்தானிருக்கிறது. அம்மாவுக்கு இது தெரிந்தால் உயிரையே விட்டு விடுவாள்."

     "உயிரை விட்டால் விடட்டுமே! உலகத்தில் எத்தனையோ பேர் செத்துப் போகிறார்கள்! நிமிஷத்துக்கு லட்சம் பேர் சாகிறார்கள்! காந்தி மகானே போய்விட்டார். உன் அம்மா இருந்து என்ன ஆகவேணும்? சூரியாவைப் போன்ற பிள்ளையைப் பெறுவதற்கு உன் அம்மா தபஸ் செய்திருக்க வேண்டும். அதை அவள் தெரிந்து கொள்ளாவிட்டால் யாருடைய தப்பு? நீயும் அவளோடு சேர்ந்து ஏன் அழ வேண்டும்? நானாயிருந்தால் இப்பேர்பட்ட தமையனைப் பெற்றதையெண்ணி இறுமாந்து போவேன். 'என் அண்ணனுக்கு நிகர் இல்லை' என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிப்பேன். எங்கே லலிதா! சூரியாவின் கடிதத்தில் அந்தப் பகுதியை மட்டும் எனக்கு இன்னொரு தடவை வாசித்துக் காட்டடி!"

     கீழே கிடந்த கடிதத்தை லலிதா எடுத்து ஒரு தடவை மேலெழுந்தவாரியாகப் பார்த்தாள். அவளுடைய கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, கடிதத்தில் பின் வரும் பகுதியைப் படிக்கத் தொடங்கினாள்:

     "அருமைத் தங்கையே! உனக்கும் சீதாவுக்கும் ஒரே பந்தலில் இரட்டைக் கலியாணம் நடந்ததே ஞாபகமிருக்கிறதா? இது என்ன கேள்வி? உன் கலியாணம் உனக்குக் கட்டாயம் ஞாபகம் இருக்கும். கலியாணத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னால் நமக்குள்ளே ஒரு விவாதம் நடந்தது. சீதாவும் நீயும் நானும் குளத்தங்கரைப் பங்களாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் 'கலியாணத்தின் போது அம்மி மிதிப்பதற்கு முன்னால் அக்கினி வலம் வருகையில் மாப்பிள்ளை மணப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டுமே, - எந்தக் கையினால் எந்தக் கையைப் பிடித்துக் கொள்வது?' என்ற கேள்வி ஏற்பட்டது. மாப்பிள்ளையின் வலது கரத்தினால் மணப்பெண்ணின் இடது கரத்தைப் பிடிப்பதா? அல்லது வலது கரத்தைப் பிடிப்பதாயிருந்தால் இரண்டு பேரும் நடந்து எப்படிப் பிரதட்சணம் வரமுடியும் என்று வெகுநேரம் தர்க்கம் செய்தோம். தலைக்கு ஒரு அபிப்பிராயம் சொன்னோம். கலியாணம் நடந்தபோது அந்த விஷயத்தை நான் கவனிக்கவில்லை; அதைப் பற்றிப் பிறகு பேசவும் இல்லை.

     லலிதா! அத்தங்காள் தாரிணியை நான் கலியாணம் செய்து கொள்ளும்போது அந்தக் கஷ்டமான பிரச்னை ஏற்படவே ஏற்படாது. அவளுக்கு இருப்பது ஒரே ஒரு கைதான். அதைத்தான் நான் பிடித்துக்கொண்டாக வேண்டும். இன்னொரு கை இல்லை என்பது பற்றி எனக்கு வருத்தம் கிடையாது. அதை நினைக்கும்போதெல்லாம் நான் பூரித்து மகிழ்வேன். தாரிணி இழந்துவிட்ட அந்த ஒரு கை இருநூறு ஸ்திரீகளைக் காப்பாற்றியது என்பதையும், சீதாவின் குழந்தையைக் காப்பாற்றிய கை அதுதான் என்பதையும் நினைத்து நினைத்துக் கர்வம் அடைவேன். நான் மிகவும் அதிர்ஷ்டக்காரன். இத்தனை நாள் கலியாணம் செய்து கொள்ளாமல் நான் காத்துக்கொண்டிருந்தது வீண் போகவில்லை! இனி என் வாழ்நாளில் என்றென்றைக்கும் ஆனந்தந்தான்!....

     லலிதா! தாரிணியின் அழகைப்பற்றி முன் இரண்டொரு தடவை உனக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால் முன்னேயெல்லாம் அவளுடைய அழகு மனித உலகத்துக்குரிய அழகாயிருந்தது. இப்போதோ தெய்வீக சௌந்தர்யம் பெற்று விளங்குகிறாள், என் கண்களுக்கு. வேறு யார் என்ன நினைத்தால் அதைப்பற்றி எனக்கு என்ன? யார் என்ன வம்பு பேசினால்தான் எனக்கு என்ன?...."

     கடிதத்தைப் படிக்கும்போது லலிதாவுக்கு தொண்டையை அடைத்தது. சித்ராவுக்கோ கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. கொஞ்சம் உணர்ச்சி அடங்கிய பிறகு சித்ரா கூறியதாவது:- "லலிதா! நம்முடைய தேசத்து மகான்கள் 'உலகத்தில் துன்பம் என்பதே இல்லை; துன்பம் என்பது வெறும் மாயைதான்' என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில மகான்கள், 'துன்பத்திலே தான் உண்மையான இன்பம் இருக்கிறது' என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதன் பொருள் இத்தனை நாளும் எனக்கு விளங்காமலிருந்தது. இன்றைக்குத்தான் விளங்குகிறது. பிறருடைய துன்பத்தைத் துடைப்பதற்காக நாம் கஷ்டப்பட்டோ மானால் அதைப் போன்ற இன்பம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை; மறு உலகத்திலும் கிடையாது. உனக்கு மன்னியாக வரப் போகிறவள் அந்த ஆனந்தத்துக்கு உரியவளாயிருக்கிறாள். அதை அறிந்த அதிர்ஷ்டசாலி உன் தமையன் சூரியா! அவர்கள் இரண்டு பேரையும் மணம் புரிந்த தம்பதிகளாகப் பார்க்க வேண்டும் என்று எனக்கு மிக்க ஆவலாயிருக்கிறது!" என்றாள்.சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள் | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்