http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




நான்காம் பாகம் : பிரளயம்

43. பாமா விஜயம்

     ராஜம்பேட்டை கிராமச்சாலை முன்போலவே இருபுறமும் மரம் அடர்ந்து நிழல் படர்ந்து விளங்கியது. தபால் சாவடியும் பதினைந்து வருஷத்துக்கு முன்னால் அளித்த தோற்றத்துக்கு அதிக மாறுபாடில்லாமல் காட்சி அளித்தது. ரன்னர் தங்கவேலு முன்னைப்போல் அவ்வளவு அவசரப்படாமல் சாவதானமாக நடந்து தபால் கட்டை எடுத்துக்கொண்டு வந்தான். 'ஜிங் ஜிங்' என்ற சதங்கையின் ஒலி சவுக்க காலத்தில் கேட்டது.

     ராஜம்பேட்டை அக்கிரகாரம் அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் இருந்தது. உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நம்முடைய கிராமங்களில் அவ்வளவாக மாறுதலைக் காண முடிவதில்லை. அப்படி மாறுதல் இருந்தால் முன்னே வீடாயிருந்த கட்டிடங்கள் இப்போது குட்டிச்சுவர்களாக மாறியிருக்கலாம். வேறு பிரமாத மாறுதலைப் பார்த்துவிட முடியாது.

     ராஜம்பேட்டை முன்னைப்போல அவ்வளவு கலகலப்பாயில்லை என்பது மட்டும் உண்மை. ஏனெனில், இப்போது அங்கே பட்டாமணியம் கிட்டாவய்யர் இல்லை. அவர் பார்த்த பரம்பரைக் கிராம முனிசீப் உத்தியோகத்தைச் 'சுண்டு' என்கிற சியாமசுந்தர் பார்த்து வந்தான். சினிமா டைரக்டர் ஆகும் ஆசையையெல்லாம் அவன் விட்டு விட்டான். 'படம் எடுத்தால் சீதாவைக் கதாநாயகியாக வைத்து எடுக்க வேண்டும்; இல்லாவிடில் என்ன பிரயோஜனம்?' என்பது அவன் கருத்து. கொஞ்ச நாள் முன்பு வரையில்கூட அந்த ஆசை அவனுக்குச் சிறிது இருந்தது. சீதா இறந்த செய்தி வந்தபின் அடியோடு போய்விட்டது. பின்னர் நிம்மதியாகக் கிராம முனிசீப் வேலையைப் பார்த்து வந்தான்.

     ஊரில் கலகலப்புக் குறைந்திருந்ததற்கு இன்னொரு காரணம் "என்ன ஓய்?" சீமாச்சுவய்யர் ஊரில் இல்லாதது. அவர் இப்போது சிறைச்சாலையில் இரண்டு வருஷம் கடுங்காவல் அநுபவித்துக் கொண்டிருந்தார். கள்ள மார்க்கெட் கேஸில் அசல் முதலாளி தப்பித்துக் கொண்டு சீமாச்சுவய்யரை மாட்டி வைத்துவிட்டான். அதைப் பற்றி ஊரில் யாரும் அனுதாபப்படவில்லை. நடுவில் பணம் அதிகமாக வந்தபோது சீமாச்சுவய்யர் யாரையும் இலட்சியம் செய்யாமல் அகம்பாவத்துடன் நடந்து கொண்டார். ஆகவே அவர் சிறைப்பட்டபோது கிராமத்தார், "என்ன ஓய்? சீமாச்சு உயிரோடு திரும்பி வருவானா?" என்று கேட்டுக் கொள்வதுடன் திருப்தியடைந்தார்கள்.

     கிட்டாவய்யர் வீட்டுக் கூடத்தில் லலிதா உட்கார்ந்து குழந்தை பட்டுவின் தலையை வாரிப் பின்னிக் கொண்டிருந்தாள். சரஸ்வதி அம்மாள் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தாள். குழந்தை பாலசுப்பிரமணியன் ஏதோ வாரப் பத்திரிகையில் வந்திருந்த காந்தி மகான் கதையை எழுத்துக் கூட்டி இரைந்து படித்துக் கொண்டிருந்தான்.

     தபால் ரன்னர் வரும் 'ஜிங் ஜிங்' சத்தம் கேட்டதும் லலிதாவுக்குப் பழைய ஞாபகங்கள் உண்டாகிக் கண்கள் ஈரமாயின.

     "லலிதா! பட்டுவின் வயதில் நீ தபால் கட்டு வரும் சத்தம் கேட்டதும் எழுந்து தபாலாபீஸுக்கு ஓடுவாயே; ஞாபகமிருக்கிறதா?" என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள்.

     "ஞாபகம் இல்லாமல் என்ன? நன்றாய் இருக்கிறது. இப்போது கூடத் தபாலாபீஸுக்குப் போய் ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு வரத் தோன்றுகிறது!" என்றாள் லலிதா.

     "நீ அப்படிப் போனாலும் போவாய்! உன் நெஞ்சுத் தைரியம் யாருக்கு வரும்?" என்றாள் தாயார்.

     அரை மணி நேரத்திற்குப் பிறகு வாசலில் "தபால்!" என்ற சத்தம் கேட்டதும் லலிதா விழுந்தடித்து ஓடினாள். ஒரு கணம் ஒருவேளை தபால்கார பாலகிருஷ்ணனாயிருக்குமோ என்று எண்ணினாள். பார்த்தால், உண்மையிலேயே அந்தப் பழைய பாலகிருஷ்ணன்தான்!

     "நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்களா, அம்மா! ரொம்ப சந்தோஷம். எனக்கும் டவுன் வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு வழியாக இங்கேயே வந்துவிட்டேன்" என்றான் பாலகிருஷ்ணன்.

     "கொஞ்ச நாளாக உன்னை தேவபட்டணத்தில் காணோமே என்று பார்த்தேன்! குழந்தைகள் சௌக்கியமா?" என்றாள் லலிதா.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-43.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs