|
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த: (Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS) (நன்கொடையாளர்கள் விவரம்)
|
புதிய வெளியீடு! |
ஸினிமாக் கதை "தங்கம்! அதோ அப்பா வருகிறார், பார்!" என்றான் ராமு. "மூஞ்சியைப் பார்த்தால் கோபமா வராப்பலே இருக்கே" என்றாள் தங்கம். கீழே 'படார்' என்று கதவைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது. "அம்மாவும் கோபமாய்த்தானிருக்கிறாள்" என்றான் ராமு. "இன்னிக்கு ரகளைதான் நடக்கப் போகிறது" என்றாள் தங்கம். "மனுஷாளுன்னுட்டு என்னத்துக்காகத்தான் ஸ்வாமி படைச்சிருக்காரோ?" என்றாள் தங்கம். "கல்யாணம் பண்ணிக்கிறதுன்னுட்டு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ" என்றான் ராமு. தடால், தடால் என்று கீழே இடிக்கும் சத்தம் கேட்டது. "நான் இன்னிக்கு கீழேயே போகப் போகிறதில்லை. மாடியிலேயே இருந்துடப் போகிறேன்" என்றாள் தங்கம். "நானுந்தான்" என்றான் ராமு. இந்தக் குழந்தைகளின் பேச்சைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது; இன்னொரு பக்கம் வருத்தமாயிருந்தது. கீழே அப்பாதுரை ஐயர் ஏழாங்கட்டை சுருதியில், "சனியன்களா? எல்லாரும் ஒரேயடியாய்ச் செத்துப் போயிட்டீர்களா? கதவைத் திறந்து தொலையுங்கோ!" என்று கத்தினார். உடனே அதற்கு மேல் ஒரு ஸ்வரம் அதிகமான குரலில் ஜானகி அம்மாள் "வருகிறபோதே என்னத்துக்காக எள்ளுங் கொள்ளும் வெடிச்சுண்டு வரேள்?" என்று கேட்டுக் கொண்டே வந்து கதவைத் திறந்தாள். "சரி, யுத்தம், ஆரம்பமாய் விட்டது" என்று ராமு சொன்னான். "எப்போ முடியப் போகிறதோ?" என்றாள் தங்கம். "அந்தக் குழந்தைகளைப் போலவே தான் நானும் யுத்தம் எப்போது முடியப் போகிறதோ?" என்று எண்ணினேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் போட்ட சண்டைகள் எனக்கு ரொம்பவும் உபத்திரவமாக இருந்தன. அவர்கள் கீழ் வீட்டில் குடியிருந்தார்கள்; நான் மேல் மாடியில் குடியிருந்தேன். மேல் மாடிக்கு வரும் மச்சுப் படிகளில் உட்கார்ந்து கொண்டு தான் ராமுவும் தங்கமும் மேற்கண்ட சம்பாஷணையை நடத்தினார்கள். ***** அப்போது நான் அற்புதமான ஸினிமாக் கதை ஒன்று எழுதிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்தக் கதை என் மனத்தில் தோன்றிற்று. "ஆஹா! ஸினிமாவுக்கு எவ்வளவு பொருத்தமான கதை" என்று எண்ணினேன். அதனுடைய வாய்ப்பை நினைக்க நினைக்க எனக்கே ஆச்சரியமாயிருந்தது. இந்தக் கதை மட்டும் ஸினிமாப் படமாகப் பிடித்து வந்து விட்டால், தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிடாதா? எல்லாரும் அப்படியே பிரமித்துப் போய் விட மாட்டார்களா? என்னுடைய வறுமைப் பிணியும் அடியோடு நீங்கி விடலாமல்லவா? எத்தனை நாளைக்கு மாதம் முப்பது ரூபாய் சம்பளத்தில் தரித்திரக் காலட்சேபம் செய்து கொண்டிருப்பது? கதையை விற்பது கொஞ்சம் சிரமமான காரியமா இருக்கலாமென்று எனக்குத் தெரியாமலில்லை. டாக்கி முதலாளிகளும் டைரக்டர்களும் சாதாரணமாக ஒரு மாதிரிப் பேர்வழிகள் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம். நல்லது எல்லாம் அவர்களுக்குக் கெடுத்தலாய்ப்படும்; கெடுதல் எல்லாம் நல்லதாய்ப் படும். ஆனாலும் இத்தனை பேரில் யாராவது ஒருவனுக்கேனும் என்னுடைய கதையைப் பிடிக்காமலா போய்விடும்? பார்க்கலாமே ஒரு கை! இம்மாதிரித் தீர்மானத்துடன் தான் அந்த ஸினிமாக் கதையை எழுதிக் கொண்டிருந்தேன். 'ஸினேரியோ' முறையில் முதல் காட்சி, இரண்டாம் காட்சி என்று எழுதிக் கொண்டிருந்தேன். அப்பாதுரை ஐயரும் அவர் சம்சாரமும் தினசரி யுத்தம் நடத்தாமலிருந்தால் இத்தனை நாளைக்குள் எழுதி முடித்திருப்பேன். ஆனால், இவர்களுடைய இடைவிடாத் தொந்தரவின் காரணமாக, கதை இருபத்திரண்டாவது காட்சிக்கு மேல் நகர்ந்த பாடில்லை. மாலை வேளையில் மட்டுமே எழுதுவதற்கு எனக்கு அவகாசம். அதே சமயத்தில் தான், கீழ் வீட்டிலும் தாம்பத்ய கலகங்கள் நடந்து கொண்டிருக்கும். என்றைக்காவது அந்தத் தம்பதிகள் வெளியில் தொலைந்து போனால் நிம்மதியாக இரண்டு மூன்று காட்சிகள் எழுதி முடித்து விடுவேன். இன்றைக்கு அப்பாதுரை ஐயர் வருகிறபோதே யுத்த சின்னத்தராய் வந்தபடியால், என்னென்ன நடக்கப் போகிறதோ, என்று எனக்குத் திகிலாயிருந்தது. ஆனால், நான் சற்றும் எதிர் பாராதவிதத்தில் யுத்தம் வெகு சீக்கிரத்திலேயே முடிவடைந்து விட்டது! ***** அப்பாதுரை ஐயர் வீட்டில் உள்ளே பிரவேசித்ததும், "இந்தச் சனியன்கள் இரண்டும் எங்கே தொலைஞ்சு போச்சு?" என்று கேட்டார். "உங்கள் நாக்கிலேதான் சனியன் இருக்கு" என்றாள் ஜானகி அம்மாள். "உன் மூஞ்சியிலே மூதேவி கூத்தாடறது" என்றார் அப்பாதுரை ஐயர். "நான் மூதேவிதான். என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதுதான்; நான் செத்துப் போய் விட்டால் உங்களுக்குச் சந்தோஷந்தான்..." என்று அடுக்கிக் கொண்டே ஜானகி அம்மாள் அழத் தொடங்கினாள். "பின்னே என்னத்துக்காக என் வாயைப் பிடுங்கறே?" என்று அப்பாதுரை ஐயர், சிறிது அடங்கிய குரலில் கேட்டார். "நீங்கதானே வருகிறபோதே எரிஞ்சு விழுந்துண்டு வரேள்?" "நீ இப்படி அநாகரிகமாயிருக்கிறதைப் பார்த்தால் எனக்குக் கோபமாய்த்தான் வருகிறது. சாயங்காலம் நாலு மணியானால் முகத்தை அலம்பி, தலையை வாரி, அழகாய்ப் பின்னிக் கொண்டு நெற்றியில் லட்சணமாய்க் குங்குமம் இட்டுக் கொண்டு இருக்கக் கூடாதோ? இந்த மாதிரிதானா மூஞ்சியிலே எண்ணெய் வடிஞ்சுண்டு அவலட்சணமாய் நிற்கணும்?" "எல்லா அலங்காரமும் பண்ணிக் கொண்டிருந்தால் என்னை நீங்கள் ஸினிமாவுக்கும், டிராமாவுக்கும் அழைச்சுண்டு போகிறது தட்டுக் கெட்டுப் போகிறதாக்கும்! வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறதுக்கு அலங்காரம் என்ன வேண்டிக் கிடந்தது?" "நான் வருகிறபோது நீ தயாராயிருந்தால்தானே எங்கேயாவது அழைத்துக் கொண்டு போகலாம்." "இப்போ சொல்லுங்கோ ஸினிமாவுக்குப் போகலாம்னு அரை நிமிஷத்திலே எல்லாம் பண்ணிண்டு தயாராய் வந்துடறேனா, இல்லையா, பாருங்கோ!" "அரை நிமிஷம், இல்லை, பதினைந்து நிமிஷம் தருகிறேன், அதற்குள் தயாராகி விடு, பார்க்கலாம்." "அடே ராமு! தங்கம் ஓடியாங்கோ, அப்பா ஸினிமாவுக்கு அழைச்சுண்டு போறேங்கறா!" என்று ஜானகி அம்மாள் கூவினாள். ***** இம்மாதிரி எண்ணமிடுவதிலேயே வெகு நேரம் போய்விட்டது. ஆனாலும் இன்றையப் பொழுதுக்கு ஏதாவது எழுதி விட வேண்டுமென்று அவசர அவசரமாக எழுதி இரண்டு காட்சி முடித்து விட்டேன். மூன்றாவது காட்சி எழுதிக் கொண்டிருக்கையில் வாசலில் குதிரை வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் கீழே பூட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. உடனே பின்வரும் ரஸமான சம்பாஷணையும் ஆரம்பாயிற்று:- "ஸினிமாவாம் ஸினிமா! போயும் போயும் பொறுக்கி எடுத்து அழைச்சுண்டு போனேளே! சவரணைதான்! யாரோ கட்டேலே போறவனும், கட்டேலே போறவளும் நின்னுண்டு வாயிலே வந்ததைக் கன்னாபின்னான்னு பேசுறதாம். அதை எல்லாரும் பார்த்துண்டு வாயைப் பிளந்துண்டு உட்கார்ந்திருக்கிறதாம். உங்களுக்குந்தான் புத்தி போச்சே!" "சீ! வாயை மூடு! ஸினிமாவுக்குப் போகணும் என்று என் பிராணனை வாங்கினதில் குறைச்சல் இல்லை; இப்போது என் மேல் குற்றம் சொல்கிறாயே?" "உங்க வாயை நீங்க மூடிக்குங்கோ, ஸினிமாவுக்குப் போகணும் என்றால் இந்த மாதிரி கழிசடை ஸினிமாவுக்கா நான் போகணும் என்று அழுதேன்? புருஷாள் என்றால் புத்தியே இல்லாமல் போய்விட வேணுமா?" "ஏ கழுதை! வாயை இப்போ மூடுகிறாயா இல்லையா?" "நான் கழுதையாயிருந்தால் நீங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்துக்குங்கோ!" "பின்னே என் மேலே என்னத்துக்குக் குற்றம் சொல்றேன்னு கேக்கறேன்? ஆனை, குதிரைன்னு விளம்பரம் பண்ணியிருக்கானேன்னு! நான் கண்டேனா!" "இதைப் போய் ஒரு கதை என்று எழுதினானே ஒரு கட்டையில போறவன், அவனைச் சொல்லுங்கோ!" "கதை எழுதினவன் என்ன பண்ணுவான், டைரக்டர் அதைக் குட்டிச்சுவர் பண்ணியிருக்கான்!" "டைரக்டர் குட்டிச்சுவர் பண்ணினால், பணத்தைச் செலவழித்துப் படம் எடுத்தவன் என்னத்துக்குப் பல்லை இளிச்சுண்டு நின்னான்?" "உன்னைப் போன்ற இளிச்சவாய்ச் சுப்பிகள் பத்துப் பேர் பார்க்க வருவார்கள் என்று தான்?" "நான் ஒண்ணும் இளிச்சவாய்ச் சுப்பி இல்லை, உங்கம்மா இளிச்சவாய்ச் சுப்பி, உங்க பாட்டி இளிச்சவாய்ச் சுப்பி." இதற்குள் மளமளவென்று மாடிப்படி ஏறுகிற சத்தம் கேட்டது. ராமுவும் தங்கமும் ஏறி வந்து தங்களுடைய வழக்கமான இடத்தில் உட்கார்ந்தார்கள். "ஸினிமான்னு ஒண்ணு என்னத்துக்குத்தான் ஏற்பட்டிருக்கோ?" என்றாள் தங்கம். மறுநாளே அந்த வீட்டை விட்டு ஜாகை மாற்றி விட்டேன். ஆனால், என்னுடைய ஸினிமாக் கதை மட்டும் நாளது வரையில் பூர்த்தியாகவில்லை. அந்தத் தம்பதிகளின் இரண்டாவது சம்பாஷணையைக் கேட்டதும், எனக்குண்டான அதிர்ச்சி இன்னும் நீங்கியபாடில்லை! |
கல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) |
தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) |
ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் |
சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் |
புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) |
அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) |
பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் |
பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் |
மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) |
ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) |
லா.ச.ராமாமிருதம் : அபிதா |
சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை |
ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி |
ரமணிசந்திரன் |
சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் |
க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு |
கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் |
மகாத்மா காந்தி : சத்திய சோதனை |
ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி |
பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி |
மாயாவி : மதுராந்தகியின் காதல் |
வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் |
கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் |
என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் |
கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே |
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு |
விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் |
கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் |
எட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) |
பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் |
பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) |
ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி |
ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் |
வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் |
சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை |
மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா |
கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் |
ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி |
ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை |
திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் |
திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் |
ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை |
முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் |
நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா |
இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை |
உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா |
குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் |
பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் |
நான்மணிமாலை நூல்கள் :
திருவாரூர் நான்மணிமாலை |
தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது |
கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை |
கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் |
சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் |
பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா |
ஆன்மீகம் : தினசரி தியானம் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|
© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள் |