http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




ஆரணிய காண்டம்

10. சடாயு உயிர் நீத்த படலம்

இராவணனை கழுகு அரசன் சடாயு எதிர்த்தல்

என்னும் அவ் வேலையின்கண், 'எங்கு அடா போவது?' என்னா,
'நில் நில்' என்று, இடித்த சொல்லன், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீரத் துண்டத்தன்; மேரு என்னும்
பொன் நெடுங் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான்; 1

பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து, எழுந்து, ஒன்றோடு ஒன்று
பூழியின் உதிர, விண்ணில் புடைத்து, உறக் கிளர்ந்து பொங்கி,
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர, முழுதும் வீசும்
ஊழி வெங் காற்று இது என்ன, இரு சிறை ஊதை மோத. 2

சாகை வன் தலையொடு மரமும் தாழ, மேல்
மேகமும் விண்ணின் மீச்செல்ல, 'மீமிசை
மாக வெங் கலுழன் ஆம் வருகின்றான்' என,
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே. 3


யானையும், யாளியும், முதல யாவையும்,
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்,
வானமும் கானமும் மாறு கொள்ளவே. 4

'உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர்
வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு' எனா,
பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; 5

வந்தனன்-எருவையின் மன்னன்; மாண்பு இலான்
எந்திரத் தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்;
சிந்துரக் கால், சிரம், செக்கர் சூடிய
கந்தரக் கயிலையை நிகர்க்கும் காட்சியான். 6

சடாயு சீதையிடம் அஞ்சவேண்டாம் எனக் கூறி, இராவணனுக்கு அறிவுரை கூறுதல்

ஆண்டு உற்ற அவ் அணங்கினை, 'அஞ்சல்' எனா,
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான்,
மூண்டுற்று எழு வெங் கதம் முற்றிலனாய்,
மீண்டுற்று உரையாடலை மேயினனால்; 7

'கெட்டாய் கிளையோடும்; நின் வாழ்வை எலாம்
சுட்டாய்; இது என்னை தொடங்கினை? நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை
விட்டு ஏகுதியால், விளிகின்றிலையால். 8

'பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடு, நீ
யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்?
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? 9

'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை
மெய்யாக இராமன் விருந்திடவே,
கை ஆர முகந்து கொடு, அந்தகனார்,
ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? 10

'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே?
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன்
கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்! 11

'எல்லா உலகங்களும், இந்திரனும்,
அல்லாதவர் மூவரும், அந்தகனும்,
புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்;
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ? 12

'இம்மைக்கு, உறவோடும் இறந்தழியும்
வெம்மைத் தொழில், இங்கு, இதன்மேல் இலையால்;
அம்மைக்கு, அரு மா நரகம் தருமால்;
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை, நீ? 13

'முத் தேவரின் மூல முதற் பொருள் ஆம்
அத் தேவர் இம் மானிடர்; ஆதலினால்,
எத் தேவரோடு எண்ணுவது? எண்ணம் இலாய்!
பித்தேறினை ஆதல் பிழைத்தனையால். 14




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/aaraniya/sadaayuvuyirneeththa.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs