அயோத்தியா காண்டம் 7. குகப் படலம் குகனின் அறிமுகம் ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான், தூய கங்கைத் துறை விடும் தொன்மையான், காயும் வில்லினன், கல் திரள் தோளினான். 1 துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர்- அடியன், அல் செறிந்தன்ன நிறத்தினான், நெடிய தானை நெருங்கலின், நீர் முகில் இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான். 2 கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை பம்பை பம்பு படையினன், பல்லவத்து அம்பன், அம்பிக்கு நாதன், அழி கவுள் தும்பி ஈட்டம் புரை கிளை சுற்றத்தான். 3 காழம் இட்ட குறங்கினன், கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான், அரை தாழ விட்ட செந் தோலன், தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான். 4 பல் தொடுத்தன்ன பல் சூழ் கவடியன், கல் தொடுத்தன்ன போலும் கழலினான், அல் தொடுத்தன்ன குஞ்சியன், ஆளியின் நெற்றொடு ஒத்து நெரிந்த புருவத்தான். 5 பெண்ணை வன் செறும்பின் பிறங்கிச் செறி வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன், கண் அகன் தட மார்பு எனும் கல்லினன், எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான். 6 கச்சொடு ஆர்த்த கறைக் கதிர் வாளினன், நச்சு அராவின் நடுக்குறு நோக்கினன், பிச்சாரம் அன்ன பேச்சினன், இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான். 7 ஊற்றமே மிக ஊனொடு மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான், சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான், கூற்றம் அஞ்சக் குமுறும் குரலினான். 8 சிருங்கிபேரம் எனத் திரைக் கங்கையின் மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன், ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன், - இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான். 9 இராமனின் தவச்சாலையை குகன் சேர்தல் சுற்றம் அப் புறம் நிற்க, சுடு கணை வில் துறந்து, அரை வீக்கிய வாள் ஒழித்து, அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன், நல் தவப் பள்ளி வாயிலை நண்ணினான். 10 குகன் இலக்குவனுக்குத் தன்னை அறிவித்தல் கூவா முன்னம், இளையோன் குறுகி, 'நீ ஆவான் யார்?' என, அன்பின் இறைஞ்சினான்; 'தேவா! நின் கழல் சேவிக்க வந்தனென்; நாவாய் வேட்டுவன், நாய் அடியேன்' என்றான். 11 குகனின் வரவை இலக்குவன் இராமனுக்கு அறிவித்தல் 'நிற்றி ஈண்டு' என்று, புக்கு நெடியவன் - தொழுது, தம்பி, 'கொற்றவ! நின்னைக் காணக் குறுகினன், நிமிர்ந்த கூட்டச் சுற்றமும், தானும்; உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்; எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை; குகன் ஒருவன்' என்றான். 12 இராமனைக் கண்டு வணங்கி குகன் தன் கையுறைப் பொருளை ஏற்க
வேண்டுதல் அண்ணலும் விரும்பி, 'என்பால் அழைத்தி நீ அவனை' என்ன, பண்ணவன், 'வருக' என்ன, பரிவினன் விரைவில் புக்கான்; கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்; இருண்ட குஞ்சி மண் உறப் பணிந்து, மேனி வளைத்து, வாய் புதைத்து நின்றான். 13 இராமன் இருக்கச் சொல்ல, குகன் தன் கையுறைப் பொருளை அறிவித்தல் 'இருத்தி ஈண்டு' என்னலோடும் இருந்திலன்; எல்லை நீத்த அருத்தியன், 'தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்; என்கொல் திரு உளம்?' என்ன, வீரன் விருத்த மாதவரை நோக்கி முறுவலன், விளம்பலுற்றான்: 14 குகனது அன்பை இராமன் பாராட்டுதல் 'அரிய, தாம் உவப்ப, உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால், அமிழ்தினும் சீர்த்த அன்றே? பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும் உரியன; இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?' என்றான். 15
விடியலில் நாவாய் கொண்டு வர குகனிடம் இராமன் கூறல் சிங்க ஏறு அனைய வீரன், பின்னரும் செப்புவான், 'யாம் இங்கு உறைந்து, எறி நீர்க் கங்கை ஏறுதும் நாளை; யாணர்ப் பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து, இனிது உன் ஊரில் தங்கி, நீ நாவாயோடும் சாருதி விடியல்' என்றான். 16 குகனது வேண்டுகோள் கார் குலாம் நிறத்தான் கூற, காதலன் உணர்த்துவான், 'இப் பார் குலாம் செல்வ! நின்னை, இங்ஙனம் பார்த்த கண்ணை ஈர்கிலாக் கள்வனேன் யான், இன்னலின் இருக்கை நோக்கித் தீர்கிலேன்; ஆனது, ஐய! செய்குவென் அடிமை' என்றான். 17 குகனின் வேண்டுகோளை இராமன் ஏற்றல் கோதை வில் குரிசில், அன்னான் கூறிய கொள்கை கேட்டான்; சீதையை நோக்கி, தம்பி திருமுகம் நோக்கி, 'தீராக் காதலன் ஆகும்' என்று, கருணையின் மலர்ந்த கண்ணன், 'யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு, எம்மொடு' என்றான். 18 அடிதொழுது உவகை தூண்ட அழைத்தனன், ஆழி அன்ன துடியுடைச் சேனை வெள்ளம், பள்ளியைச் சுற்ற ஏவி, வடி சிலை பிடித்து, வாளும் வீக்கி, வாய் அம்பு பற்றி, இடியுடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான். 19 இராமன் நகர் நீங்கிய காரணம் அறிந்து குகன் வருத்துதல் 'திரு நகர் தீர்ந்த வண்ணம், மானவ! தெரித்தி' என்ன, பருவரல் தம்பி கூற, பரிந்தவன் பையுள் எய்தி, இரு கண் நீர் அருவி சோர, குகனும் ஆண்டு இருந்தான், 'என்னே! பெரு நிலக் கிழத்தி நோற்றும், பெற்றிலள் போலும்' என்னா. 20 கதிரவன் மறைதல் விரி இருட் பகையை ஓட்டி, திசைகளை வென்று, மேல் நின்று, ஒரு தனித் திகிரி உந்தி, உயர் புகழ் நிறுவி, நாளும் இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து, அருள்புரிந்து வீந்த செரு வலி வீரன் என்னச் செங் கதிர்ச் செல்வன் சென்றான். 21 இராமனும் சீதையும் உறங்க இலக்குவன் காவல் இருத்தல் மாலைவாய் நியமம் செய்து மரபுளி இயற்றி, வைகல், வேலைவாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் மாலைவாய்ப் பாரின் பாயல் வைகினர்; வரி வில் ஏந்திக் காலைவாய் அளவும், தம்பி இமைப்பிலன், காத்து நின்றான். 22 இராம இலக்குவரை நோக்கி குகன் இரவு முழுது கண்ணீர் வழிய
நிற்றல் தும்பியின் குழாத்தின் சுற்றும் சுற்றத்தன், தொடுத்த வில்லன், வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன், விழித்த கண்ணன் தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி, அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான். 23 கதிரவன் தோன்றலும் தாமரை மலர்தலும் துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும் மறக்குமா நினையல் அம்மா!- வரம்பு இல தோற்றும் மாக்கள் இறக்குமாறு இது என்பான்போல் முன்னை நாள் இறந்தான், பின் நாள், பிறக்குமாறு இது என்பான்போல் பிறந்தனன்-பிறவா வெய்யோன். 24 செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை, தேரில் தோன்றும் வெஞ் சுடர்ச் செல்வன் மேனி நோக்கின விரிந்த; வேறு ஓர் அஞ்சன நாயிறு அன்ன ஐயனை நோக்கி, செய்ய வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே. 25 குகனை நாவாய் கொணருமாறு இராமன் பணித்தல் நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி, நாமத் தோள் முதற்கு அமைந்த வில்லான், மறையவர் தொடரப் போனான், ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி, 'ஐய! கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின்' என்றான். 26 இராமனை தன் இருப்பிடத்தில் தங்க குகன் வேண்டுதல் ஏவிய மொழிகேளா, இழி புனல் பொழி கண்ணான், ஆவியும் உலைகின்றான், அடி இணை பிரிகல்லான், காவியின் மலர், காயா, கடல், மழை, அனையானைத் தேவியொடு அடி தாழா, சிந்தனை உரை செய்வான்: 27 'பொய்ம் முறை இலரால்; எம் புகல் இடம் வனமேயால்; கொய்ம் முறை உறு தாராய்! குறைவிலெம்; வலியேமால்; செய்ம் முறை குற்றேவல் செய்குதும்; அடியோமை இம் முறை உறவு என்னா இனிது இரு நெடிது, எம் ஊர்; 28 'தேன் உள; திணை உண்டால்; தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் உள; துணை நாயேம் உயிர் உள; விளையாடக் கான் உள; புனல் ஆடக் கங்கையும் உளது அன்றோ? நான் உளதனையும் நீ இனிது இரு; நட, எம்பால்; 29 'தோல் உள, துகில்போலும்; சுவை உள; தொடர் மஞ்சம் போல் உள பரண்; வைகும் புரை உள; கடிது ஓடும் கால் உள; சிலை பூணும் கை உள; கலி வானின்- மேல் உள பொருளேனும், விரைவொடு கொணர்வேமால்; 30 'ஐ-இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர், ஆணை செய்குநர், சிலை வேடர்-தேவரின் வலியாரால்; உய்குதும் அடியேம்-எம் குடிலிடை, ஒரு நாள், நீ வைகுதி எனின் - மேல் ஓர் வாழ்வு இலை பிறிது' என்றான். 31 மீண்டும் வருகையில் குகனிடம் வருவதாக இராமன் இயம்பல் அண்ணலும் அது கேளா, அகம் நிறை அருள் மிக்கான், வெண் நிற நகைசெய்தான்; 'வீர! நின்னுழை யாம் அப் புண்ணிய நதி ஆடிப் புனிதரை வழிபாடு உற்று எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது' என்றான். 32 குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல் சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்; தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான் அந்தணர்தமை எல்லாம், 'அருளுதிர் விடை' என்னா, இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. 33 'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும், முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்; கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார் இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார். 34 பால் உடை மொழியாளும், பகலவன் அனையானும், சேலுடை நெடு நல் நீர் சிந்தினர், விளையாட; தோலுடை நிமிர் கோலின் துழவிட, எழு நாவாய், காலுடை நெடு ஞெண்டின், சென்றது கடிது அம்மா! 35 சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை, காந்து இன மணி மின்ன, கடி கமழ் கமலத்தின் சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால், ஏந்தினள்; ஒரு தானே ஏற்றினள்; இனிது அப்பால். 36 இராமன் குகனிடம் சித்திரகூடம் செல்லும் வழி பற்றி வினவுதல் அத் திசை உற்று, ஐயன், அன்பனை முகம் நோக்கி, 'சித்திர கூடத்தின் செல் நெறி பகர்' என்ன, பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா, 'உத்தம! அடி நாயேன், ஓதுவது உளது' என்றான். 37 'நெறி, இடு நெறி வல்லேன்; நேடினென், வழுவாமல், நறியன கனி காயும், நறவு, இவை தர வல்லேன்; உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப் பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்; 38 'தீயன வகை யாவும் திசை திசை செல நூறி, தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன்; மேயின பொருள் நாடித் தருகுவென்; வினை முற்றும் ஏயின செய வல்லேன்; இருளினும் நெறி செல்வேன்; 39 செல்லுவென் நெறி தூரம்; செறி புனல் தர வல்லேன்; வில் இனம் உளென்; ஒன்றும் வெருவலென்; இருபோதும்- மல்லினும் உயர் தோளாய்!- மலர் அடி பிரியேனால்; 40 திரு உளம் எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு, ஒருவலென் ஒரு போதும் உறைகுவென்; உளர் ஆனார் மருவலர் எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்; பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன்' என்றான். 41 குகனை அவன் இனத்தாருடன் இருக்க இராமன் பணித்தல் அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்; 'என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந் நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.' 42 'துன்பு உளதுஎனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப் பின்பு உளது; "இடை, மன்னும் பிரிவு உளது" என, உன்னேல்; முன்பு உளெம், ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்; 43 'படர் உற உளன், உம்பி, கான் உறை பகல் எல்லாம்; இடர் உறு பகை யா? போய், யான் என உரியாய் நீ; சுடர் உறு வடி வேலாய்! சொல் முறை கடவேன் யான்; வட திசை வரும் அந் நாள், நின்னுழை வருகின்றேன். 44 'அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன், உம்பி; இங்கு உள கிளை காவற்கு யார் உளர்? உரைசெய்யாய்; உன் கிளை எனது அன்றோ? உறு துயர் உறல் ஆமோ? என் கிளை இது கா, என் ஏவலின் இனிது' என்றான். 45 குகன் விடைபெறுதலும், மூவரும் காட்டிற்குள் செல்லுதலும் பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான், பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்; அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். 46 மிகைப் பாடல்கள் நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால், 'இன்றே நின் பணி செய்திட, இறைவா! நன்றே வந்தனென்; நாய் அடியேன் யான்' என்றே கூவினன்-எயிரினரின் இறையோன். 10-1 வெயில் விரி கனகக் குன்றத்து எழில் கெட விலகு சோதிக் கயில் விரி வயிரப் பைம் பூண் கடுந் திறல் மடங்கல் அன்னான் துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை, 'நாமே எயிலுடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக!' என்றான். 22-1 மறக் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா உறக்க மா மாதும், அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி, 'துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி இறுக்கும்நாள், எந்தை பாதம் எய்துவல்' என்னப் போனாள். 22-2 மற்றவள் இறைஞ்சி ஏக, மா மலர்த் தவிசின் நீங்காப் பொற்றொடி யோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி, இற்றது ஓர் நெஞ்சன் ஆகி, இரு கண் நீர் அருவி சோர, உற்ற ஓவியம் அது என்ன, ஒரு சிலை அதனின் நின்றான். 22-3 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |