http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




கிட்கிந்தா காண்டம்

3. நட்புக் கோட் படலம்

அனுமன் சுக்கிரீவனிடம் சென்று, இராமனின் சிறப்புக்களைக் கூறுதல்

போன, மந்தர மணிப் புய நெடும் புகழினான்,-
ஆன தன் பொரு சினத்து அரசன்மாடு அணுகினான்-
'யானும், என் குலமும், இவ் உலகும், உய்ந்தனம்' எனா,
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான். 1

மேலவன், திருமகற்கு உரைசெய்தான், 'விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்' எனா,
ஆலம் உண்டவனின் நின்று, அரு நடம் புரிகுவான். 2

'மண் உளார், விண் உளார், மாறு உளார், வேறு உளார்,
எண் உளார், இயல் உளார், இசை உளார், திசை உளார்,
கண் உளார் ஆயினும்; பகை உளார், கழி நெடும்
புண் உளார், ஆர் உயிர்க்கு அமுதமேபோல் உளார். 3


'சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன்,
பாழியால் உலகு எலாம் ஒரு வழிப் படர வாழ்
ஆழியான், மைந்தர்; பேர் அறிவினார்; அழகினார்;
ஊழியார்; எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார். 4

'நீதியார்; கருணையின் நெறியினார்; நெறிவயின்
பேதியா நிலைமையார்; எவரினும் பெருமையார்;
போதியாது அளவு இலா உணர்வினார்; புகழினார்;
காதி சேய் தரு நெடுங் கடவுள் வெம் படையினார். 5

'வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள, வில்
கோலி, அக் கொடுமையாள் புதல்வனைக் கொன்று, தன்
கால் இயல் பொடியினால், நெடிய கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு, அரிய பேர் உரு அளித்தருளினான். 6

'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் - நயந்து,
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர்க் கடவுள்தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் - மிதிலை புக்க அனைய நாள். 7

'உளை வயப் புரவியான் உதவ உற்று, ஒரு சொலால்,
அளவு இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால்,
வளையுடைப் புணரி சூழ் மகிதலத் திரு எலாம்
இளையவற்கு உதவி, இத் தலை எழுந்தருளினான். 8

'தெவ் இரா வகை, நெடுஞ் சிகை விரா மழுவினான்
அவ் இராமனையும், மா வலி தொலைத் தருளினான்,
இவ் இராகவன்; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
அவ் விராதனை இராவகை துடைத்தருளினான். 9

'கரன் முதல் கருணை அற்றவர், கடற்படை யொடும்
சிரம் உகச் சிலை குனித்து உதவுவான்; திசை உளார்
பரமுகப் பகை துமித்தருளுவான்; பரமர் ஆம்
அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான்; 10

'ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்,
காயமான் ஆயினான் ஆவனே? காவலா!
நீ அம் மான் நேர்தியால்; நேர் இல் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான். 11

'உக்க அந்தமும், உடல் பொறை துறந்து உயர் பதம்
புக்க அந்தமும், நமக்கு உரை செயும் புரையவோ -
திக்கு அவம் தர, நெடுந் திரள் கரம், சினவு தோள்,
அக் கவந்தனும், நினைந்து அமரர் தாழ் சவரிபோல்? 12

'முனைவரும் பிறரும், மேல், முடிவு அரும் பகல் எலாம்,
இனையர் வந்து உறுவர் என்று, இயல் தவம் புரிகுவார்;
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார்
எனையர் என்று உரைசெய்கேன்? - இரவிதன் சிறுவனே! 13

'மாயையால், மதி இலா நிருதர்கோன், மனைவியைத்
தீய கான் நெறியின் உய்த்தனன்; அவள் - தேடுவார்,
நீ, ஐயா, தவம் இழைத்துடைமையால், நெடு மனம்
தூயையா உடையையால், உறவினைத் துணிகுவார். 14

'தந்திருந்தனர் அருள்; தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி, இன்று இசை தரும்;
புந்தியின் பெருமையாய்! போதரு' என்று உரை செய்தான் -
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான். 15




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/kitkintha/natpukkotpadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs