http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




கிட்கிந்தா காண்டம்

8. தாரை புலம்புறு படலம்

தாரை செய்தி கேட்டு வந்து, வாலிமேல் வீழ்ந்து அழுதலும்

வாலியும் ஏக, யார்க்கும் வரம்பு இலா உலகில் இன்பம்
பாலியா, முன்னர் நின்ற பரிதி சேய் செங் கை பற்றி,
ஆல் இலைப் பள்ளியானும், அங்கதனோடும், போனான்;
வேல் விழித் தாரை கேட்டாள்; வந்து, அவன் மேனி வீழ்ந்தாள். 1

குங்குமம் கொட்டி என்ன, குவி முலைக் குவட்டுக்கு ஒத்த
பொங்கு வெங் குருதி போர்ப்ப, புரி குழல் சிவப்ப, பொன் - தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் - அகன்ற செக்கர்,
வெங் கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள். 2

வேய்ங் குழல், விளரி நல் யாழ், வீணை, என்று இனைய நாண,
ஏங்கினள்; இரங்கி விம்மி உருகினள்; இரு கை கூப்பித்
தாங்கினள் தலையில்; சோர்ந்து, சரிந்து தாழ் குழல்கள் தள்ளி,
ஓங்கிய குரலால் பன்னி, இனையன உரைக்கலுற்றாள்: 3


தாரையின் புலம்பல்

'வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன்,
கரை சேரா இடர் வேலை கண்டிலேன்;
உரை சேர் ஆர் உயிரே! என் உள்ளமே!
அரைசே! யான் இது காண அஞ்சினேன். 4

'துயராலே தொலையாத என்னையும்,
பயிராயோ? பகையாத பண்பினாய்!
செயிர் தீராய், விதி ஆன தெய்வமே!
உயிர் போனால், உடலாரும் உய்வரோ? 5

'நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின்,
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி, தாம்
அறியாரோ நமனார்? அது அன்று எனின்,
சிறியாரோ, உபகாரம் சிந்தியார்? 6

'அணங்கு ஆர் பாகனை ஆசைதோறும் உற்று,
உணங்கா நாள் மலர் தூய், உள் அன்பினால்
இணங்கா, காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது, இத் துணை வைக வல்லையோ? 7

'"வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய்!
தரை மேலாய்! உறு தன்மை ஈது?" எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும், ஒன்று
உரையாய், என்வயின் ஊனம் யாவதோ? 8

'நையா நின்றனென், நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திரு நாடு மேவினாய்;
ஐயா! நீ எனது ஆவி என்பதும்,
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா! 9

'செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் என்னின்,
மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்;
இருவேமுள் இருவேம் இருந்திலேம். 10

'"எந்தாய்! நீ அமிழ்து ஈய, யாம் எலாம்
உய்ந்தேம்" என்று, உபகாரம் உன்னுவார்,
நந்தா நாள்மலர் சிந்தி, நண்பொடும்
வந்தாரோ எதிர், வான் உளோர் எலாம்? 11

'ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான்,
வாயால் ஏயினன் என்னின், வாழ்வு எலாம்
ஈயாயோ? அமிழ்தேயும் ஈகுவாய்! 12




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/kitkintha/thaaraipulamburupadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs