|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
சிலையெழுபது கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி. 1070-1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பாயிரம்
கணபதி துதி
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத் துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந் தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொழுவாம். 1 நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்
முந்துநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற் போந்த சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப இந்தணி சடிலத் தெம்மா னீணைக்கழல் பராஅ யிசைத்தான் செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். 2 நூலரங்கேறிய கச்சித்தலச் சிறப்பு
மெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந் தலங்கண் மிகவெனினும் இச்சித் தவர்குங் குறைவெயின்முன் னிமம்போற் கடிதற் கியலாவே பச்சை வண்ணத் திருமாலும் பவளவண்ணச் சோதியும் வாழ் கச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத் தலங்கள் காணேமால். 3 சம்புகோத்திரச் சிறப்பு
சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம்வ ழாதோர் சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர் மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு கோத்திர வரசர்க் கொப்புக் கூறுவதெவரை மாதோ. 4 குலோற்பவச் சிறப்பு
திங்கண்மும் மழைபிலிற்றச் செழித்துயிர்க ணனிமல்க அங்கமோ ராறுமாறை யந்தணரா குதியோங்கத் துங்கமனு நெறிதழைப்பத் துகளறுவன் னியினின்றும் பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தானால். 5 வன்னியர் குலச் சிறப்பு
விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி உதிகுலத்தோ ராதலினா லுயர்குலத்தோ ராமிவர்க்கத் துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும் நதிகுலத்தோர் களுமெங்ஙன் நாட்டினிலொப் பாவாரே. 6 வன்னியர் குலச் சிறப்பு
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர் நிறைக்குலத்தி லுதித்தாலென் நிதிபடைத்தா லென்னான்காம் முறைக்குலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே. 7 குலத்தலைவர் படைச் சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார் நடையுடையார் மிடியுடைய நாவலர்மாட் டருள்கொடையார் குடையுடையார் மலையன்னர் குன்றவர்பல் லவர்மும்முப் படையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே. 8
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|