http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




சுந்தர காண்டம்

7. கிங்கரர் வதைப் படலம்

அனுமனைப் பிடித்து வர இராவணன் ஆணையிடுதல்

அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி
வெருவரு முழக்கும், ஈசன் வில் இறும் ஒலியும், என்ன,
குரு மணி மகுட கோடி முடித் தலை குலுங்கும் வண்ணம்,
இருபது செவியினூடும் நுழைந்தது, அவ் எழுந்த ஓசை. 1

புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,
'வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி,
கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர்' என்றான். 2


அரக்க வீரர் போருக்குச் செல்லுதல்

சூலம், வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு, பிண்டி,
பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார். 3

'நானிலம்அதனில் உண்டு போர்' என நவிலின், அச் சொல்,
தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர், தெரிந்தும் என்னின்,
கானினும் பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி
வானினும் பெரியர்; மேனி மலையினும் பெரியர் மாதோ! 4

திருகுறும் சினத்து, தேவர், தானவர், என்னும் தெவ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார்; 'வசை ஆம், ஈது ஒர்
பொரு குறும்பு ஏன்று, வென்றி புணர்வது; பூ உண் வாழ்க்கை
ஒரு குறுங் குரங்கு!' என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்; 5

கட்டிய வாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத்
தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை
எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக்
கொட்டிய பேரி என்ன, மழை என, குமுறும் சொல்லார்; 6

வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள், மற்றைத்
தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்;
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற
கூனல்வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும் கண்ணர்; 7

சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிசம், சங்கு,
முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முட்கோல்,
பொன் கரக் குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன் குந்தம்,
வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன. 8

பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்;
மின் நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்;
'என்?' என்றார்க்கு, 'என்? என்?' என்றார்; எய்தியது அறிந்திலாதார்;
முன் நின்றார் முதுகு தீய, பின் நின்றார் முடுகுகின்றார். 9

வெய்துறு படையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்;
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர்; மடிக்கும் வாயர்;
கை பரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும்காலை,
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார். 10

'பனி உறு செயலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா!
தனி ஒரு குரங்கு போலாம்! நன்று நம் தருக்கு!' என்கின்றார்;
'இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின்?' என்று இரைத்துப் பொங்கி,
முனிவுறு மனத்தின் தாவி, முந்துற முடுகுகின்றார். 11

எற்றுறு முரசும், வில், நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும்,
சுற்றுறு கழலும், சங்கும், தெழி தெழித்து உரப்பும் சொல்லும்,
உற்று உடன்று ஒன்றாய், ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில்
நல் திரைக் கடல்களோடு மழைகளை, நா அடக்க. 12

'தெரு இடம் இல்' என்று எண்ணி, வானிடைச் செல்கின்றாரும்,
புருவமும் சிலையும் கோட்டி, புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,
ஒருவரின் ஒருவர் முந்தி, முறை மறுத்து உருக்கின்றாரும்,
'விரிவு இலது இலங்கை' என்று, வழி பெறார் விளிக்கின்றாரும். 13




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/sundara/kinkkararvathaipadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs