http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




சுந்தர காண்டம்

11. பாசப் படலம்

இளவல் இறந்தது கேட்டு, இந்திரசித்து சினத்துடன் போருக்கு எழுதல்

அவ் வழி, அவ் உரை கேட்ட ஆண்தகை,
வெவ் விழி எரி உக, வெகுளி வீங்கினான் -
எவ் வழி உலகமும் குலைய, இந்திரத்
தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான். 1

அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல்
உரம் சுட, எரி உயிர்த்து, ஒருவன் ஓங்கினான் -
புரம் சுட வரி சிலைப் பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான். 2

ஏறினன், விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு-இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்;
கூறின கூறின சொற்கள் கோத்தலால்,
பீறின நெடுந் திசை; பிளந்தது அண்டமே. 3


ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும், அசனி அஞ்ச;
வேர்த்து, உயிர் குலைய, மேனி வெதும்பினன், அமரர் வேந்தன்;
'சீர்த்தது போரும்' என்னா, தேவர்க்கும் தேவர் ஆய
மூர்த்திகள்தாமும், தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார். 4

தம்பியை உன்னும்தோறும், தாரை நீர் ததும்பும் கண்ணான்,
வம்பு இயல் சிலையை நோக்கி, வாய் மடித்து உருத்து நக்கான்;
'கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குரங்கா ஆற்றல்
எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது?' என்றான். 5

இந்திரசித்தை வந்து சூழ்ந்த படையின் பெருக்கம்

வேல் திரண்டனவும், வில்லு மிடைந்தவும், வெற்பு என்றாலும்
கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும் குணிக்கல் ஆற்றேம்;
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மதச் சிறு கண் யானை,
ஆறு-இரண்டு அஞ்சுநூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே. 6

இராவணன் மாளிகை சென்று, இந்திரசித்து அவனுடன் பேசுதல்

ஆய மாத் தானைதான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத்
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர, தேரின்
'ஏ' எனும் அளவில் வந்தான்; இராவணன் இருந்த, யாணர்
வாயில் தோய் கோயில் புக்கான்;-அருவி சோர் வயிரக் கண்ணான். 7

தாள் இணை வீழ்ந்தான், தம்பிக்கு இரங்குவான்; தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினன், அழுது சோர்ந்தான்;
வாள் இணை நெடுங் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க,
மீளிபோல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பலுற்றான்: 8

'ஒன்று நீ உறுதி ஓராய்; உற்றிருந்து உளையகிற்றி,
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும், அன்னோ!
"சென்று நீர் பொருதிர்" என்று, திறத் திறம் செலுத்தி, தேயக்
கொன்றனை நீயே அன்றோ, அரக்கர்தம் குழுவை எல்லாம்? 9

'கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்றுஇப்
பைங் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதிச் சேனை,
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்!
சங்கரன், அயன், மால், என்பார்தாம் எனும் தகையது ஆமே! 10

'திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்;
"அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல் காட்டி,
புக்கு இனி வென்றும்" என்றால், புலம்பு அன்றி, புலமைத்து ஆமோ? 11

இராவணனிடம் விடைபெற்று, இந்திரசித்து போர்க்குச் செல்லுதல்

'ஆயினும், ஐய! நொய்தின், ஆண் தொழில் குரங்கை, யானே,
"ஏ" எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் என்று ஒன்றும்
நீ இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி' என்னா,
போயினன் -அமரர் கோவைப் புகழொடு கொண்டு போந்தான். 12




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/sundara/pasapadalam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs