திருக்கை வழக்கம் திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும். இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி, ஏரெழுபது முதலியவை. கங்கை குலம் தழைக்கும் கை
கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி மங்கை பிரியாமல் வாழும் கை. 1 சந்தனமாக அரைத்த கை
திஙகள் அணி எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க்(கு) அரிய தம்பிரா னுக்(கு) உரைத்த சந்தனக் கை. 2 விதைநெல்லைச் சோறாக்கி வழங்கிய கை
அம்பொன் வளைவாரி வையகமும் வானகமும் போற்ற முளைவாரி வந்த முழுக் கை. 3 கல்லால் அடித்த கை
கிளை வாழக் கச்சித் தலத்(து) அரனைக் கல்லால் எறியமறந்(து) எச்சில் தயிர்ச்சோ(று) எறிந்திடுங் கை. 4 கழுத்தை அரிந்த கை
பச்சை மிகு தேமா வடுக் கமரில் சிந்திற்(று) என்றே கழுத்தை ஆம் ஆம் எனவே அரிந்திடுங் கை 5 மழுவை ஏந்திய கை
வாம மறை ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற(கு) என்றே மோது தடிகொண்டு முடுக்குங் கை 6 சிவபூசை செய்த கை
தீ(து)அகல அஞ்(சு)எழுத்தே ஒன்றாகி, அப்பர்எனத் தோன்றி, அரன் செஞ்சரணத்தே பூசை செய்யும் கை 7 வயிறு கிழித்த கை
வஞ்சியர்பால் தூ(து) அரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல் பேதமறத் தன் வயிறு பீறும் கை 8 பல்லக்கைத் தாங்கிய கை
பூதத்தின் மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத் தக்க சிவிகை கணை தாங்கும் கை. 9 நாகரத்தினத்தை வாங்கிய கை
மைக் கடு வாய் மூக்கில் புகைபுரிந்த மூ(து)அரவின் வாயிடத்து நீக்கிய கை நாக்(கு) அதனில் நீட்டும் கை. 10 தொண்டு புரியும் தங்கக் கை
ஆக்கமுடன் ஏதம் அற்ற கீர்த்தியைக் கொண்டு ஏட்டகத்திலே அடிமைச் சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை. 11 கர்ப்பிணியின் முதுகில் பரிமாறிய கை
மேதினியில் சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை பாலடிசில் தன்னைப் படைக்கும் கை. 12 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |