http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




யுத்த காண்டம்

7. வருணன் அடைக்கலப் படலம்

வருணன் தோன்றுதல்

எழு சுடர்ப் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும்
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான்,
அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், அஞ்சித்
தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், வழுத்தும் சொல்லான். 1

வருணன் அச்சத்தோடு இராமன் முன்னே வருதல்

'நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன்' என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க,
காய் எரிப் படலை சூழ்ந்த கருங் கடல் தரங்கத்தூடே,
தீயிடை நடப்பான் போல, செறி புனற்கு இறைவன் சென்றான். 2


வந்தனன் என்ப மன்னோ, மறி கடற்கு இறைவன்; வாயில்
சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த நெஞ்சன்,
வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப் படலம் விம்ம,
அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து, அலக்கண் உற்றான். 3

இராமனைத் திருவடியில் விழுந்து, வருணன் அபயம் வேண்டுதல்

'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின்,
கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று கண்டது உண்டோ?
இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி வேறு உண்டோ?
அவயம், நின் அவயம்!' என்னா, அடுத்து அடுத்து அரற்றுகின்றான். 4

'ஆழி நீ; அனலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ? வயங்கு செந் தீச்
சூழுற உலைந்து போனேன்; காத்தருள் - சுருதி மூர்த்தி! 5

'காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை கடையில் செந் தீ
ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது உண்டோ?
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய
வீட்டுவாய்; நினையின், நாயேற்கு இத்தனை வேண்டுமோதான்? 6

'சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருட் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின் வாழ்வே!
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து, உள்ளப் பள்ளப்
புண்டரீகத்து வைகும் புராதனா! போற்றி, போற்றி! 7

'"கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய்! மறையில் கூறும்
எள்ளல் ஆகாத, மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே! காத்தி" என்ற மா கரி வருத்தம் தீர,
புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி! போற்றி! 8

'அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே;
பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே;
என்னை, "நீ இகழ்ந்தது" என்றது எங்ஙனே? ஈசன் ஆய
உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?' 9

பாய் இருள் சீய்க்கும் தெய்வப் பருதியைப் பழிக்கும் மாலை,
மா இருங் கரத்தால், மண்மேல் அடியுறையாக வைத்து,
'தீயன சிறியோர் செய்தால், பொறுப்பதே பெரியோர் செய்கை;
ஆயிர நாமத்து ஐயா! சரணம்' என்று அடியில் வீழ்ந்தான். 10

இராமன் சினம் தணிதல்

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படராநின்ற
உருப் பெறக் காட்டி நின்று, 'நான் உனக்கு அபயம்' என்ன,
அருப்பு அறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா ஆற்றல்
நெருப்பு உறப் பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான். 11

இரந்த போது வாராமல், சினந்த போது வந்த காரணத்தை இராமன் வினாவ, வருணன் தொழுது உரைத்தல்

'ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்; அன்பால்
ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட, எய்திடாதே,
சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக்
கூறுதி, அறிய' என்றான்; வருணனும், தொழுது கூறும்: 12




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/kambar/yuththa/varunanadaikala.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs