|
|
"சென்னைநூலகம்.காம்" உலகின் தலைசிறந்த இணைய தமிழ் நூலகமா?
"ஆம்" என்றால் அதற்கான காரணத்தையும்
"இல்லை" என்றால் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும்
ஆகவே உங்கள் கருத்துக்களுடன் உங்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவும். |
மதுரைக் கலம்பகம்
காப்பு
கட்டளைக் கலித்துறை
புந்தித் தடத்துப் புலக்களி றோடப் பிளிறுதொந்தித் தந்திக்குத் தந்தை தமிழ்க்குத வென்பதென் றண்மலர்தூய் வந்திப் பதுந்தனி வாழ்த்துவ தும்முடி தாழ்த்துநின்று சிந்திப் பதுமன்றிச் சித்தி விநாயகன் சேவடியே. 1 நூல்
மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
தரவு
மணிகொண்ட திரையாழி சுரிநிமிர மருங்கசைஇப் பணிகொண்ட முடிச்சென்னி யரங்காடும் பைந்தொடியும் பூந்தொத்துக் கொத்தவிழ்ந்த புனத்துழாய் நீழல்வளர் தேந்தத்து நறைக்கஞ்சத் தஞ்சாயற் றிருந்திழையும் மனைக்கிழவன் றிருமார்வு மணிக்குறங்கும் வறிதெய்வத் தனக்குரிமைப் பணிபூண்டு முதற்கற்பின் றலைநிற்ப அம்பொன்முடி முடிசூடு மபிடேக வல்லியொடும் செம்பொன்மதிற் றமிழ்க் கூடற் றிருநகரம் பொலிந்தோய் கேள். தாழிசை
விண்ணரகம் பிறவரசுஞ் சிலரெய்த விடுத்தொருநீ பெண்ணரசு தரக்கொண்ட பேரரசு செலுத்தினையே. 1 தேம்பழுத்த கற்பகத்தி னறுந்தெரியல் சிலர்கமைத்து வேம்பழுத்து நறைக்கண்ணி முடிச்சென்னி மிலைச்சினையே. 2 வானேறுஞ் சிலபுள்ளும் பலரங்கு வலனுயர்த்த மீனேறோ வானேறும் விடுத்தடிக ளெடுப்பதே. 3 மனவட்ட மிடுஞ்சுருதி வயப்பரிக்கு மாறன்றே கனவட்டந் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே. 4 விண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பொருநைத் தண்ணாறு குடைந்துவையைத் தண்டுறையும் படிந்தனையே. 5 பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம் வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே. 6 அராகம்
அவனவ ளதுவெனு மவைகளி லொருபொருள் இவனென வுணர்வுகொ டெழுதரு முருவினை. 1 இலதென வுளதென விலதுள தெனுமவை அலதென வளவிட வரியதொ ரளவினை. 2 குறியில னலதொரு குணமில னெனநினை அறிபவ ரறிவினு மறிவரு நெறியினை. 3 இருமையு முதவுவ னெவனவ னெனநின தருமையை யுணர்வுறி னமிழ்தினு மினிமையை. 4 தாழிசை
வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்துகரை செய்கைக்கென் றறியேமாற் றிருமுடிமண் சுமந்ததே. 1 அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட்செய்யு மன்னையவள் தரும்பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே. 2 முலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே மலைகொண்ட புயத்தென்னீ வளைகொண்டு சுமந்ததே. 3 ஊன்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத்தோர் மீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையிற் பட்டன்றே. 4 அம்போதரங்கம்
முச்சீர் போகமாய் விளைந்தோய் நீ, புவனமாய்ப் பொலிந்தோய் நீ, ஏகமா யிருந்தோய் நீ, எண்ணிறந்து நின்றோய் நீ.
|
எமது வலைதளங்கள் |
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |
| ||||||||||||||
|
|
|
|