http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



3. மர்ம வீரனும் மாகடல் வாணரும்

     உளவாளிகளைப் பிடிப்பதில் நாளது வரை தோல்வியே கண்டிராது தமது திறமையிலும், தந்திரத்திலும் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர்களான கலியனும் மாயனும் அதாவது நரலோக வீரனின் உதவியாட்கள், மர்ம வீரனிடம் சிக்கிய 'மர்மம்' புரியாமல் அவன் காட்டிய வழி நடந்து மருவூர்ப்பாக்கத்தை தாண்டி வில்லிகள் வீதியையும் கடந்து புகாரின் பெரும் பூந்தோட்டமான முல்லை வனத்தையும் நெருங்கிவிட்டனர். மர்ம வீரனோ செல்லும்பாதை நன்கு அறிந்தவனைப் போல இவர்கள் என்ன ஒரு பொருட்டா? என்பதைப் போல அலட்சியமாகச் செல்லுவதையும் கண்ட அவர்கள் வியப்பும் வேதனையும் கொண்டு நொந்த மனதுடன் நடந்தனர். ஆனால் முல்லைவனம் தாண்டியதும் 'அரனார் பள்ளி' என்னும் கடல் நாடுடைய வாணகோவரையர் மாளிகைதான் இருக்கிறது. அவரோ சோழ மாமன்னனின் பேரன்புக்கும் பெருமதிப்புக்குமுரியவர் மட்டுமல்ல, நாளது வரை கடல் கடந்த நாடுகளுக்குச் சோழ ராஜனின் ஒரே பிரதிநிதி என்பது உலகறிந்த உண்மை. அவர் செல்லாத நாடுகள் இல்லை, அறியாத மன்னரோ, பெரு வீரர்களோ இல்லை. காடவர்கோன், பழுவேட்டரையர்கள் எல்லாம் அரசருக்கு உறவினராகவும், சோழ நாட்டில் மகா சக்தி வாய்ந்தவர்களாகவும் இருப்பினும் வாணகோவரையர் சோழ நாட்டில் தனிப் பெருமையும் சக்தியும் வாய்ந்தவர். குறிப்பாக அயல் நாடுகளின் உறவுமுறை, நிலைமை அதாவது கடல் கடந்த நாடுகளின் சோழர் பெருமை இன்றளவும் இறங்காதிருப்பதற்கு இவரே காரணம் என்ற உண்மையை சோழ மன்னர் முதல், சர்வசாதாரண பிரஜை வரை அறிந்திருந்தனர். கடல் கடந்த நாடுகள் விவகாரத்தில் இவர் அசாதாரணமான திறமையும் நெடுங்கால அனுபவமும் வாய்ந்தவர்.

     எனவே, மர்ம வீரன் தங்களை அழைத்துக் கொண்டு அந்தப் பகுதி செல்வதென்பது புலிக்குகைக்குள் எலி புகுந்த கதையே ஆகும். தவிர அவர் எதிரில் நின்று பேசும் சக்தி கூட மன்னருக்கும் காடவர்கோன் போன்ற சில பெருந்தலைகளுக்குமேயுண்டு. அப்படியிருக்க இவனாலும் அவர் எதிர் செல்ல இயலாது. நம்மாலும் நிமிர்ந்து நிற்க முடியாது. இதென்ன கஷ்டம்? என்று மாயனும் கலியனும் மனம் புழுங்கினாலும் மர்ம வீரன் குழம்பியதாகத் தெரியவில்லை!

     எனினும் மவுனமும் குழப்பமும் மாயனை மேலும் மவுனமாக இருக்கவிடவில்லை.

     "இளைஞனே, நீ நடந்து கொள்ளும் முறை உன்னை என்ன பாடுபடுத்தும் என்பதை யோசித்தாயா?" என்று கேட்டான். மர்ம இளைஞன் அப்பாவித்தனமாக, "எந்த முறை நண்பரே?" என்று கேட்டதும் கலியனுக்கு ஆத்திரமே வந்துவிட்டது. "நீ எங்களை இப்படி நடத்தும் முறை நரலோகவீரனுக்குத் தெரிந்தால் நரகத்துக்கே அனுப்பிவிடுவார் உன்னை!" என்று எரிந்து விழுந்தான். மீண்டும் சிரித்துக் கொண்டே இளைஞன் "அப்படியா? நரகத்துக்கு அனுப்புவதென்றால் அது எங்கேயிருக்கிறது நண்பரே? சோழ நாடு முழுவதும் சொர்க்கமாக்கும் என்று பெருமைப்படுத்திக் கொள்ளுபவர்களுக்கு நரகமும் இங்குதான் இருக்கிறது என்று நரலோகவீரர் காட்டுவாராக்கும்? அதனால் தான் அவருக்கு அந்தப் பேர் வந்ததோ?" என்று ஏளனமாகக் கூறியதும் மாயனுக்கு ஆத்திரம் அளவு கடந்துவிட்டது. சட்டென்று பாய்ந்துவிட்டான் அவன் மீது. இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத இளைஞன் ஒரு விநாடி அதிர்ந்து விட்டதால் மாயனுடைய முஷ்டி இருமுறை அவன் முகத்தையும் வைர உடலையும் பதம் பார்த்து விட்டது. எனினும் அடுத்த நொடியே இடது கையினால் மாயனின் கழுத்தில் ஓங்கியடிக்க அவன் 'ஆ' வென்றலறிச் சுருண்டு விழுந்தான். அவன் சற்று நேரம் எழுந்திருக்கவேயில்லை. கலியன் குதிரை மீது இருந்து இறங்கி மாயனைத் தொட்டு எழுப்பினான். அவனோ பிரேதம் போல் கிடப்பதைக் கண்டு கலங்கி விட்டவன் "அடப்பாவி! நீ என்ன செய்துவிட்டாய் என் நண்பனை?" என்று கத்தினாலும் பாய்ந்து விடவில்லை! மர்ம இளைஞன், "அஞ்ச வேண்டாம் நண்பரே, உமது தோழன் உயிர் திரும்பி வரும், தயவு செய்து அவனைக் குதிரை மீது தூக்கி வைத்து நீரும் ஏறிக் கொள்ளும். நீரும் அவர் மாதிரி பாய்ந்தால் அப்புறம்..." மர்ம இளைஞனின் சிரிப்பு கலியனை ஆத்திர மூட்டுவதாக இருந்தாலும் நண்பனைத் தூக்கினான். மர்ம வீரனும் ஒரு கைகொடுத்தான்! குதிரை மீது மாயன் தொங்க விடப்பட்டதும் தன் குதிரை மீது அமரச் சென்ற கலியன் டகடகவென்று குதிரைக் குளம்படி சப்தம் வந்த திசை திரும்பிப் பார்த்தான். வாணகோவரையர் தமது பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்தார்.

     கலியன் முகம் களை கொண்டது. "இனி நீ தொலைந்தாய் இளைஞனே!" என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அவர்கள் வந்துவிட்டனர். கம்பீரமாகத் தமது குதிரை மீது அமர்ந்திருந்த வாணகோவரையரைக் கலியன் தலைதாழ்த்தி வணங்கினான். மர்ம இளைஞனோ குதிரை மீது இருந்தபடியே சற்றே தலைசாய்த்து வணங்கினான். அதைச் சிரக்கம்பம் செய்து ஏற்றுக் கொண்ட கடல் நாடுடையார் "என்ன நடக்கிறது இங்கே கலியா?" என்று கேட்டுவிட்டு குதிரை மீது கிடப்பவனை வியப்புடன் பார்த்தார்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/laxminarayanan/ps/ps3.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs