http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




3. மர்ம வீரனும் மாகடல் வாணரும்

... தொடர்ச்சி ...

     "உடனே இவனைக் கைது செய்யக் கேட்டுக் கொள்ளுகிறேன். இவன் உளவாளி, எதிரிகளின் கையாள். என்னையும் மாயனையும் ஏமாற்றிவிட்ட நயவஞ்சகன். விடாதீர்கள் இவனை" என்று கத்தினான் கலியன்.

     வாணகோவரையரோ பொறுமையுடன் அவன் கூவுவதைக் கேட்டுவிட்டு, "இளைஞனே இவன் சொல்லுவது உண்மைதானா? நிராயுதபாணியான மாயனை நீ நயவஞ்சகமாக ஏமாற்றி அடித்துப் போட்டாயா?" என்று வெகுளித்தனமாகக் கேட்டதும் கலியனுக்கு ஆத்திரம் கூடிற்றேயன்றிக் குறையவில்லை. ஆயினும் வாணகோவரையர் முன்னே கலியன் எம்மாத்திரம்!

     "கடல்நாடுடையாரே! இவர் சொன்னதில் ஒன்றுதான் உண்மை. மற்றவை அனைத்தும் பொய்" என்று நறுக்கெனப் பதில் கூறினான். இப்போது கலியன் விழித்தான், எது உண்மையென்று இவன் ஒப்புக் கொள்ளுகிறான்?

     "உண்மை என்ன இளைஞனே?"

     "இவருடைய நண்பர் சுருண்டு கிடப்பது!" என்று சாதாரணமாகச் சொன்னதும் அனைவரும் வாய்விட்டுச் சிரித்து விட்டனர். இளநகை பூத்த வாணகோவரையர் "இளைஞனே இவர்கள் வேளைக்காரப் படையினர். நரலோகவீரனின் மெய்க்காவலர்கள். இது தெரியுமா உனக்கு?" என்று கேட்டார்.

     "தெரியும். இவர்கள் சொன்ன பிறகு!"

     "வியப்புக்குரிய பதில் தெரிந்தும் இவர்களுடன் ஏன் வம்பு?"

     "வம்பு விளைவித்தவர்களையல்லவா கேட்க வேண்டும்!"

     வாணகோவரையர் இளைஞனை வியப்புடன் பார்த்து விட்டு, "நல்ல பதில் தான், வம்பு விளைத்தது நீதான், அடித்துப் போட்டது நீதான் என்று கலியன் கூறுகிறானே!"

     "இரண்டும் பொய். தொடர்ந்து வந்தவர்கள் இவர்கள். கத்தியை உருவியவர்கள் இவர்கள், என் மீது பாய்ந்தவர் அதோ கிடப்பவர், வம்பு வார்த்தைகளை வீசியவர் இவர்!" என்று அடுக்குமுறையில் பதில் அளித்தான் இளைஞன். கலியன் இதென்ன வியப்பு? கேவலம் ஒரு உளவாளியுடன் இவ்வளவு நேரம் மதிப்பளித்துப் பேசுகிறாரே கடல்நாடுடையார்! என்று திகைத்தானேயன்றி குறுக்கே பேசவில்லை.

     "இளைஞனே, சுருண்டு கிடப்பவனை எழுப்பி விட முடியுமா?" என்று கேட்ட வாணகோவரையர் எதிரிலேயே கிடப்பவன் கழுத்தில் ஒரு தட்டுத் தட்ட அவன் துள்ளி எழுந்து நின்றான்! பிறகு பரக்கப் பரக்க விழித்தான். எதிரே வாணகோவரையர் நிற்பதைப் பார்த்து கனவா நினைவா வென்று திகைத்து விழித்தான்! கலியனோ இதென்ன ஆச்சரியம் என்று பிரமித்து நின்றான்.

     "நல்லது இளைஞனே! இது என்ன வேடிக்கை! ஒரு தட்டுத் தட்டுகிறாய். அவன் துள்ளியெழுகிறான். எப்படி இது சாத்தியமாகிறது?" என்று வாணகோவரையர் கேட்டதும் அவ்விளைஞன் "இதில் அதிசயம் ஒன்றுமில்லை. இது நிப்பன் நாட்டுச் சண்டை முறை. நரம்பில் அடித்தால் பிடித்துச் சுருள்கிறான். இதே நரம்பில் வேறுமாதிரி அடித்தால் எழுந்திருக்கிறான். அவ்வளவுதான்!" என்றதும் அனைவரும் அவனை அதிசயமாகப் பார்த்தனர். மாயன் தன் உடல் மீது கழுத்து நின்றிருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்த்தான் ஒரு முறை தலையை ஆட்டி! பிறகு அதுகாறும் தான் வாணகோவரையருக்கு வணக்கம் தெரிவிக்க மறந்து விட்டதை நினைத்து சட்டென்று முறைப்படி வணங்கி நின்றான். இருவரையும் மாறி மாறிப் பார்த்த கடல்நாடுடையார், "இந்த இளைஞனை நான் அழைத்துச் செல்கிறேன். நரலோகவீரரிடம் தெரிவியுங்கள். நீங்கள் போகலாம்!" என்று உத்தரவிட்டதும் அவர்கள் 'அப்பாடி! தப்பினோம்!' என்று நினைத்துக் குதிரைகளைத் தட்டி விட்டனர்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/laxminarayanan/ps/ps3a.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs