கேடு
வெள்ளைத் துணியில் வீழ்ந்த புள்ளி முன்நின்று புலப்படுவது போன்று என் உள்ளத்தில் உதிக்கும் சிறு குற்றமும் எனக்குத் தென்படுக.
தகவிலான் ஒருவன் தன்னிடத்துள்ள சிறு குற்றத்தைக் குற்றமாக மதிப்பதில்லை. பிறரிடத்திலுள்ள பெருங் குற்றத்தைக் காட்டித் தருவதைவிடத் தன்னிடத்துள்ள சிறிய கேட்டைக் களைவது மேல். கேட்டில் பெரியது, சிறியது என்ற பாகுபாடு கிடையாது. சட்டியினுள் சிறு துவாரமிருந்தாலும் அது சமைப்பதற்கு உதவாது. தன் குற்றம் களையாதவன் குணவான் ஆகான்.
கேடிலியை நாடுபவர் கேடிலாரே.
-நன்மொழி
குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.