![]() | மின்னஞ்சல் பயனர் நுழைவு புதியவர் பதிவு |
![]() |
| ||||
தினசரி தியானம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரைமணி நேரம் பரம்பொருளே, பரிபூரணத் தன்மையில் நான் முன்னேற்றம் அடையுமளவு எனது குற்றங்கள் குறையும்; துன்பங்கள் தொலையும். நான் பரிபூரண நிலையை நாடியிருப்பேனாக.
நல்வாழ்வுக்காக என்று நாள்தோறும் அரைமணி நேரம் ஒதுக்கிவை. உயர்ந்த பாங்கைப் பற்றி எண்ணிப்பார். பின்பு அதைப் பழக்கத்தில் கொண்டு வர முயலுக. ஆற்றலும் நல்லறிவும் உண்டாவதற்கு இதுவே உற்ற உபாயம். அவசரம் வேண்டாம்; உன் கடமையை செய். கட்டுப்பாடும் சுயநலத் தியாகமும் வடிவெடுத்தவன் ஆவாயாக.காலமே காலமொரு மூன்றுங் காட்டும்
காரணமே காரணகா ரியங்கள் இல்லாக் கோலமே எனைவாவா என்று கூவிக் குறைவறநின் அருள்கொடுத்தாற் குறைவோ சொல்லாய். -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|