http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்

இயற்றிய

திருக்களிற்றுப்படியார்

... தொடர்ச்சி ...

மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே என்ன வரும் இரண்டும் - சொல்லில்
சிவதன்ம மாம் அவற்றிற் சென்றதிலே செய்வாய்
பவகன்மம் நீங்கும் படி. 16

ஆதியை அர்ச்சித்தற்(கு) அங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும் - வேதியனே!
நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை
மெல்வினையே என்றதுநாம் வேறு. 17

வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க - இரங்காதே
கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை
வல்வினையே என்றதுநாம் மற்று. 18

பாதகம் என்றும் பழியென்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக்
கண்டு ஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
சண்டீசர் தன்செயலால் தான். 19

செய்யில் உகுத்த திருப்படி மாற்றதனை
ஐயஇது அமுது செய்கென்று - பையஇருந்து
ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி யறுத்தவரை
நாட்டியுரை செய்வதென்னோ நாம். 20


செய்யும் செயலே செயலாகச் சென்றுதமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - ஐயா
உழவும் தனிசும் ஒருமுகமே ஆனால்
இழவுண்டோ சொல்லாய் இது. 21

ஆதார யோகம் நிராதார யோகம் என
மீதானத்(து) எய்தும் விதியிரண்டே - ஆதாரத்(து)
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்(று)
ஆக்காப் பொருளேஒன் றாம். 22

ஆக்கி ஒருபொருளை ஆதாரத்(து) அப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் - பார்க்கில்
இவனாகை தான் ஒழிந்திட்(டு) ஏகமாம் ஏகத்(து)
அவனாகை ஆதார மாம். 23

கொண்ட(து) ஒரு பொருளைக் கோடிபடக் கூறுசெயின்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும் - கொண்ட
இருபொருளும் அன்றியே இன்ன(து) இது வென்னாது
ஒருபொருளே ஆயிருக்கும் உற்று. 24

அஞ்செழுத்து மேஅம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்(து) - அஞ்செழுத்தை
ஓதப்புக்(கு) உள்ள மதியும் கெடில் உமைகோன்
கேதமற வந்தளிக்கும் கேள். 25

ஆக்கப் படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றோடும் தாக்காதே - நீக்கி உடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம். 26

காண்கின்றது ஓர்பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் - காண்கின்றார்
காண்பானும் காணப் படும்பொருளும் அன்றியே
காண்கையினால் கண்டனரே காண். 27

பேசாமை பெற்றதனில் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும்பெருமான் - பேசாதே
எண்ணொன்றும் வண்ண மிருக்கின்ற யோகிகள்பால்
உள்நின்றும் போகான் உளன். 28

ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடம் சிவமாம் - நாட்டற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம். 29

பற்றினுள் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து
பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப்
பற்றுவிடில் அந்நிலையே தானே பரமாகும்
மற்றும் இது சொன்னேன் மதி. 30




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/meikandasathirangal/thirukalitruppadiyar2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs