உய்யவந்ததேவ நாயனார் இயற்றிய திருவுந்தியார்
சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற. 1 பழக்கந் தவிரப் பழகுவ தன்றி உழப்புவ தென்பெணே யுந்தீபற ஒருபொரு ளாலேயென் றுந்தீபற. 2 கண்டத்தைக் கொண்டு கரும முடித்தவர் *பிண்டத்தில் வாராரென் றுந்தீபற பிறப்பிறப் பில்லையென் றுந்தீபற. 3 * பிண்டத்து
*இங்ங னிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ங னிருந்ததென் றுந்தீபற அறிவு மறிவதென் றுந்தீபற. 4 * எங்ங
ஏகனு மாகி யநேகனு மானவன் நாதனு மானானென் றுந்தீபற நம்மையே யாண்டனென் றுந்தீபற. 5 நஞ்செய லற்றிந்த நாமற்ற பின்நாதன் தன்செய றானேயென் றுந்தீபற தன்னையே *தந்தானென் றுந்தீபற. 6 * தந்தென்
உள்ள முருகி *லுடனாவ ரல்லது தெள்ள வரியரென் றுந்தீபற, சிற்பரச் செல்வரென் றுந்தீபற. 7 * யுடனவர்
ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று மீதானத் *தேசெல்க வுந்தீபற விமலற் கிடமதென் றுந்தீபற. 8 * தேசெல
ஆக்கிலங் கேயுண்டா யல்லதங் கில்லையாய்ப பார்க்கிற் *பரமதென் றுந்தீபற பாவனைக் கெய்தாதென் றுந்தீபற. 9 * பரமதன்று
அஞ்சே யஞ்சாக வறிவே யறிவாகத் துஞ்சா துணர்ந்திருந் துந்தீபற துய்ய பொருளீதென் றுந்தீபற. 10 தாக்கியே தாக்காது நின்றதோர் தற்பரன் நோக்கிற் குழையுமென் றுந்தீபற நோக்காமல் நோக்கவென் றுந்தீபற. 11 மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர் சாலப் பெரியரென் றுந்தீபற தவத்திற் றலைவரென் றுந்தீபற. 12 ஓட்டற்று நின்ற வுணர்வு பதிமுட்டித் தேட்டற் றிடஞ்சிவ முந்தீபற தேடு மிடமதன் றுந்தீபற. 13 பற்றை யறுப்பதோர் பற்றினைப் பற்றிலப் பற்றை யறுப்பரென் றுந்தீபற *பாவிக்க வாராரென் றுந்தீபற. 14 * பாவிக்கில்
கிடந்த கிளவியைக் கிள்ளி யெழுப்பி உடந்தை யுடனேநின் றுந்தீபற உன்னையே கண்டதென் றுந்தீபற. 15 உழவா துணர்கின்ற யோகி ளொன்றோடுந் *தழுவாமல் நிற்பரென் றுந்தீபற #தாழ்மணி நாவேபோ லுந்தீபற. 16 * தழுவாது # தாழ்ந்த மணி நாப்போல்
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |