http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


திருவதிகை மனவாசகங் கடந்தார்

அருளிய

உண்மை விளக்கம்

     உண்மை விளக்கம் என்பது, மெய்கண்ட சாத்திரங்கள் என வழங்கப்படும் சைவ சித்தாந்த நூல்களுள் ஒன்றாகும். இது சிவஞான போத ஆசிரியரான மெய்கண்ட தேவரின் மாணவர்களில் ஒருவரான திருவதிகை என்னும் ஊரைச் சேர்ந்த மனவாசகம் கடந்தார் என்பவரால் இயற்றப்பட்டது. வினா விடை வடிவில் அமைந்த இந்நூல் 53 வெண்பாப் பாடல்களால் ஆனது.

காப்பு

வண்மைதரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா
உண்மைவிளக்கம் உரைசெய்யத் - திண்மதம்சேர்
அந்திநிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்
பந்தம் அறப் புந்தியுள் வைப்பாம் 1

நூல்

பொய்காட்டிப் பொய் அகற்றிப் போதானந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய்! விண்ணப்பம் - பொய்காட்டா
மெய்யா! திருவெண்ணை வித்தகா! சுத்தவினா
ஐயாநீ தான் கேட்டு அருள். 2

ஆறாறு தத்துவம் ஏது? ஆணவம் ஏது? அன்றே தான்
மாறா வினை ஏது? மற்று இவற்றின் - வேறு ஆகா
நான் ஏது? நீ ஏது? நடம் அஞ்செழுத்துத்
தான் ஏது? தேசிகனே! சாற்று. 3


உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உந்தனக்கு
வள்ளல் அருளால் அன்று வாய்மலர்ந்து - தெள்ளியசீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ் புதல்வா! உற்று. 4

நாற்கோணம் பூமிபுனல் நண்ணும் மதியின்பாதி
ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் - ஆக்கும்
அறுகோணம் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாயம் ஆம் இவற்றால் உற்று. 5

பொன்பார் புனல்வெண்மை பொங்கும் அனல்சிவப்பு
வன்கால் கருமைவளர் வான்தூமம் - என்பார்
எழுத்து லவரய அப்பாராதிக்கு என்றும்
அழுத்தமதாய் நிற்கும் அது. 6

குறிகுலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா
அறுபுள்ளி ஆர் அமுத விந்துப் - பிறிவு இன்றி
மண்புனல்தீக் கால்வானம் மன்னும் அடைவேஎன்று
ஒண்புதல்வா! ஆகமம் ஓதும். 7

பார் ஆதி ஐந்தும் பன்னும் அதி தெய்வங்கள்
ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் - ஓர் ஓர்
தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றம் முதல் ஐந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார். 8

படைப்பன் அயன் அளிப்பன் பங்கயக்கண் மாயன்
துடைப்பன் உருத்திரனும் சொல்லில் - திடப்பெறவே
என்றும் திரோபவிப்பர் ஈசர் சதாசிவரும்
அன்றே அநுக்கிரகர் ஆம். 9

மண்கடினமாய்த் தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதம் ஆம்
ஒண்கனல் சுட்டு ஒன்றுவிக்கும் ஓவாமல் - வண்கால்
பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து. 10

உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் - மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே ஆம். 11

ஞானேந் திரியங்கள் நன்றாய்க் உரைக்கக்கேள்
ஊனம் மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம்
சத்தாதியை அறியும் தானம் செவிதோல்கண்
அத்தாலு மூக்கு என்று அறி. 12

வானிடமாய் நின்றுசெவி மன்னும் ஒலியதனை
ஈனமிகும் தோல்கால் இடமாக - ஊனப்
பரிசம் தனை அறியும் பார்வையில்கண் அங்கி
விரவி உருவம் காணுமே. 13

நன்றாக நீர் இடமாக நாஇரதம் தான் அறியும்
பொன்றா மணம்மூக்கும் பூ இடமா - நின்று அறியும்
என்று ஓதும் அன்றே இறை ஆகமம் இதனை
வென்றார் சென்றார் இன்ப வீடு. 14

கண்நுதல் நூல் ஓதியிடும் கன்மேந்திரியங்கள்
எண்ணும் வசனாதிக்கு இடமாக - நண்ணியிடும்
வாக்குப் பாதம்பாணி மன்னு குதம் உபத்த
மாக்கருதும் நாளும் அது. 15




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/meikandasathirangal/unmaivilakkam.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs