|
News | |
-Gas pipe link to TN from KG basin by 2012-Karunanidhi flays opposition leaders for criticising budget -Karunanidhi clarifies on lower revenue receipts -Police probing inputs on LTTE cadre entering TN -Sahitya Akademi translating works of Subramania Bharathiar -Jayalalithaa slams fancy announcements -TN: New department for disabled well received -Villupuram-Mayiladuthurai BG line cleared for passenger traffic -State will never give up its rights on Mullaperiyar dam: Karunanidhi -Sugarcane procurement price to go up to Rs.2,000 |
-Cabinet gives approval for ESI benefits to unorganised workers-BJP opposes serving of beef during C'wealth Games -Girija Prasad Koirala dead -Strong earthquake jolts Papua New Guinea coast -Pranab launches IndiaFirst Life Insurance -Dhoni likely to rejoin CSK for Mumbai match -New IPL teams likely to be named on today -Five special teams set up to probe bomb on Bangalore plane incident |
![]() |
| ||||||||||||||
அண்ணாமலை ரெட்டியார்
இயற்றிய
காவடிச் சிந்து
1. விநாயகர் துதி
திருவுற் றிலகுகங்க வரையில் புகழ்மிகுந்து திகழத் தினம்உறைந்த வாசனை, - மிகு மகிமைச் சுகிர்ததொண்டர் நேசனை, - பல தீயபாதக காரராகிய சூரர்யாவரும் மாளவேசெய்து சிகரக் கிரிபிளந்த வேலனை, - உமை தகரக் குழல்கொள்வஞ்சி பாலனை, மருவுற் றிணர்விரிந்து மதுபக் குலம்முழங்க மதுமொய்த் திழிகடம்ப ஆரனை,- விக - சிதசித்ர சிகிஉந்து வீரனை, - எழில் மாகநாககு மாரியாகிய மாதினோடுகி ராதநாயகி மருவப் புளகரும்பு தோளனை, - எனை அருமைப் பணிகொளும்த யாளனை, தெரிதற் கரியமந்தி ரமதைத் தனதுதந்தை செவியில் புகமொழிந்த வாயனை,- இள ரவியில் கதிர்சிறந்த காயனை,- அகல் தேவநாடுகெ டாதுநீடிய சேனைகாவல னாகவேவரு திறலுற்ற சிவகந்த நாதனை,- விரி மறையத் தொளிருகின்ற பாதனை, மருளற் றிடநினைந்து மனதிற் களிசிறந்து மதுரக் கனிவுவந்து கூடவே,- பல விதமுற் றிலகுசிந்து பாடவே,- விரி வாரிநீரினை வாரிமேல்வரு மாரிநேர்தரு மாமதாசல வதனப் பரன்இரண்டு தாளையே - நயம் உதவப் பணிவம்இந்த வேளையே. 2. முருகன் துதி
சீர்வளர் பசுந்தோகை மயிலான்,- வள்ளி செவ்விதழ் அலாதினிய தெள்ளமுதும் அயிலான், போர்வளர் தடங்கைஉறும் அயிலான் - விமல பொன்னடியை இன்னலற உன்னுதல்செய் வாமே. குஞ்சர வணங்கு ஆவல் வீடா - தபடி கொஞ்சிமரு வும்சரச ரஞ்சிதவி சேடா! பைஞ்சர வணம்காவல் வீடா - வளரும் பாலன்என மாலையொடு காலைநினை வாமே. வல்அவுணர் வழியாதும் விட்டு, - வெருள வன்சமர்செய் கந்தனிடம் வழியடிமைப் பட்டு நல்லஉணர் வழியாது மட்டு - மிஞ்சு ஞானபர மானந்த மோனம் அடை வாமே. ஒருதந்த மாதங்க முகத்தான், - மகிழ உத்தம கனிட்டன்என உற்றிடு மகத்தான், வருதந்த மாதங்க முகத்தான் - எவரும் வாழ்த்துகுக நாயகனை ஏத்துதல்செய் வாமே. 3. கழுகுமலை நகர்
தெள்ளுதமி ழுக்குதவு சீலன், - துதி செப்பணாம லைக்கும் அனு கூலன் - வளர் செழிய புகழ்விளைத்த கழுகு மலைவளத்தை தேனே! சொல்லு வேனே. வெள்ளிமலை யொத்தபல மேடை, - முடி மீதினிலே கட்டுகொடி யாடை, - அந்த வெய்யவன் நடத்திவரு துய்யஇர தப்பரியும் விலகும் படி இலகும். வீதிதொறும் ஆதிமறை வேதம், - சிவ வேதியர்கள் ஓதுசாம கீதம் - அதை மின்னுமலர்க் காவதனில் துன்னுமடப் பூவையுடன் விள்ளும், கிள்ளைப் புள்ளும்,
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |