http://www.chennailibrary.com

News
-No new taxes in TN deficit budget for 2010-11: Anbazhagan
-TN asks Centre to formulate schemes in consultation with States
-TN urges Centre to expeditiously execute Sethu project
-BJP criticises Mani Shankar Aiyar's nomination to Rajya Sabha
-No opposition in Congress to Foreign Education Bill: Sibal
-Chidambaram to visit Britain to discuss anti-terror cooperation
-Govt to consult all political parties on civil nuclear Bill
-Togadia to visit Kandhamal despite ban
-Sops galore in Tamil Nadu’s please-all Budget
-Kerala opposition protest over leakage commission on kerosene
-DA case against Jayalalithaa: Apex court refused to stay trial
-RBI hikes key rates, home loan rates likely to go up
-No calculator for dyslexic student: Apex Court
-British Airways cabin crew to go on strike
-Cabinet approves death penalty for hijacking
-India will have “full access” to information on Headley: U.S.
-RBI’s annual monetary policy on April 20
-World Bank provides $1.05 bn to improve education in India
Our CDs : -- -- -- Our Books : -- --

எமது வலைதளங்கள்




கோதை நாய்ச்சியார் தாலாட்டு

     ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் வளர்ப்பு புதல்வியான ஆண்டாள் என்று அழைக்கப்படும் கோதை நாய்ச்சியாரின் வரலாற்றினை 316 செய்யுள் அடிகளுள் எடுத்துக் கூறுகிறது இந்நூல். காப்புச் செய்யுள் திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கநாதப் பெருமாள் மீது பாடப்பட்டுள்ளது. இந்நூல் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

காப்பு

சீரார்ந்த கோதையர்மேல் சிறப்பாகத் தாலாட்டப்
பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று
காராந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில்
ஏரார்ந்த சேனையர்கோன் இணையடியுங் காப்பாமே.

தென்புதுவை விட்டுசித்தன் திருவடியை நான்தொழுது
இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத்
தெங்கமுகு மாவாழை சிறந்தோங்கும் சீரங்கம்
நம் பெருமாள் பாதம் நமக்கே துணையாமே.

நூல்

சீரார்ந்த கோயில்களுஞ் சிறப்பான கோபுரமும்
காரார்ந்த மேடைகளுங் கஞ்சமலர் வாவிகளும்
மின்னார் மணிமகுடம் விளங்க வலங்கிருதமாய்ப்
பொன்னாலே தான்செய்த பொற்கோயில் தன்னழகும்
கோபுரத்து வுன்னதமுங் கொடுங்கை நவமணியும் 5

தார்புரத் தரசிலையுஞ் சந்தனத் திருத்தேரும்
ஆராதனத் தழகும் அம்மறையோர் மந்திரமும்
வேத மறையோரு மேன்மைத் தவத்தோருங்
கீத முறையாலே கீர்த்தனங்கள் தாமுழங்கப்
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணனை 10

ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்கக்
கச்சு முலைமாதர் கவிகள் பலர்பாட
அச்சுதனார் சங்கம் அழகாய்த் தொனிவிளங்கத்
தித்தியுடன் வீணை செகமுழுதுந் தான்கேட்க
மத்தள முழங்க மணியும் அந்தத் தவிலுடனே 15

உத்தமர் வீதி உலாவியே தான் விளங்க
பேரிகையும் எக்காளம் பின்பு சேகண்டி முதல்
பூரிகை நாதம் பூலோகம் தான் முழங்கத்
தும்புருவும் நாரதரும் துய்ய குழலெடுத்துச்
செம்பவள வாயால் திருக்கோயில் தான்பாட 20

அண்டர்கள் புரந்தரனும் அழகு மலரெடுத்துத்
தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த
வண்டுகளும் பாட மயிலினங்கள் தாமாடத்
தொண்டர்களும் பாடித் தொழுது பணிந்தேத்தப்
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாடச் 25

செண்பகப்பூ வாசனைகள் திருக்கோயில் தான்வீச
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர்தூவச்
சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தாம்போடக்
குன்றுமணி மாடங்கள் கோபுரங்கள் தான்துலங்கச்
சென்றுநெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க 30

அன்னம் நடைபயில அருவை மடலெழுதச்
செந்நெல் குலைசொரியச் செங்குவளை தான்மலரக்
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கச்
சுரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ள 35

தேன்குடங்கள் விம்மிச் செழித்து வழிந்தோடச்
செந்நெல் விளையச் செகமுழுதும் தான்செழிக்கக்
கன்னல் விளையக் கமுகமரம் தான்செழிக்க
வெம்புலிகள் பாயு மாமேரு சிகரத்தில்
அம்புலியைக் கவளமென்று தும்பி வழி மறிக்கும் 40

மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான்விளையக்
கம்மாய்கள் தாம்பெருகிக் கவிங்கில மழிந்தோட
வாழையிடை பழுத்து வருக்கைப் பலாப்பழுத்துத்
தாழையும் பழுத்துத் தலையாலே தான்சொரியப்
புன்னையும் மலரப் புனத்தே கிளிகூவ 45




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/mis/kothainachiyarthalattu.html

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
இலவச தமிழ் நூல்கள்


ஆன்மீகம்
தினசரி தியானம்
சென்னை நூலகம் தேடல்
Custom Search
இலக்கிய தகவல்கள்
சமையல்அறை.காம்
தமிழ்திரைஉலகம்.காம்
இன்பசுற்றுலா.காம்
சிறுவர்உலகம்.காம்