|
News | |
-Gas pipe link to TN from KG basin by 2012-Karunanidhi flays opposition leaders for criticising budget -Karunanidhi clarifies on lower revenue receipts -Police probing inputs on LTTE cadre entering TN -Sahitya Akademi translating works of Subramania Bharathiar -Jayalalithaa slams fancy announcements -TN: New department for disabled well received -Villupuram-Mayiladuthurai BG line cleared for passenger traffic -State will never give up its rights on Mullaperiyar dam: Karunanidhi -Sugarcane procurement price to go up to Rs.2,000 |
-Cabinet gives approval for ESI benefits to unorganised workers-BJP opposes serving of beef during C'wealth Games -Girija Prasad Koirala dead -Strong earthquake jolts Papua New Guinea coast -Pranab launches IndiaFirst Life Insurance -Dhoni likely to rejoin CSK for Mumbai match -New IPL teams likely to be named on today -Five special teams set up to probe bomb on Bangalore plane incident |
![]() |
| ||||||||||||||
திருப்பெருந்துறையில்
மாணிக்கவாசகர்
அருளிய
திருப்பள்ளியெழுச்சி (சிவன்)
புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 1 அருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ, நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிறை அருள்பதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகட லே! பள்ளி எழுந்தரு ளாயே! 2 கூவின பூங்குயில்; கூவின கோழி குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவ! நற் செறிகழல் தாளிணை காட்டாய்! திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்! எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 3 இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால்; திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 4 பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 5 பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்பறு கண்ணியர்; மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா! செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே! இப்பிறப்பு அறுத்துஎமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 6 அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு; இவன்அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவளர் பொழில்சூழ் திருஉத்தர கோச மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்; எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே! 7 முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்? பந்தணை விரலியும் நீயும்நின் னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே! செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமு தே! பள்ளி எழுந்தரு ளாயே! 8
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |