முனைப்பாடியார்

இயற்றிய

அறநெறிச்சாரம்

     இந்நூலை எழுதியவர் அருக சமயத்தைச் சார்ந்த முனைப்பாடியார் ஆவார். இந்நூலில் 226 பாடல்கள் உள்ளன. அருக சமயக் கருத்துக்கள் இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அறத்தையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்தும் சிறந்த நீதி நூலாக இந்நூல் விளங்குகிறது.

இறை வணக்கம்

தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவின்
துதித்து ஈண்டற நெறிச் சாரத்தைத் தோன்ற
விரிப்பன் சுருக்காய் விரைந்து. 1

நூல் பாயிரம்

மறவுரையும் காமத்துரையும் மயங்கிப்
பிறவுரையும் மல்கிய ஞாலத் - தறவுரை
கேட்கும் திருவுடையாரே பிறவியை
நீக்கும் திருவுடையார். 2


27 நட்சத்திரக் கோயில்கள்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

ரத்தம் ஒரே நிறம்
இருப்பு இல்லை
ரூ.315.00
Buy

கூண்டுக்கு வெளியே
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

கிழிபடும் காவி அரசியல்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

கச்சத்தீவு
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

இறுதி இரவு
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

தமிழகத் தடங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ்நாட்டு வரலாறு
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

பிறகு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

இந்து மதம் : நேற்று இன்று நாளை
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

வரப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

The Greatness Guide
Stock Available
ரூ.270.00
Buy

காகித மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

மோடி மாயை
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

சிலைத் திருடன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

ஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

அசடன்
இருப்பு உள்ளது
ரூ.1225.00
Buy

உன் சீஸை நகர்த்தியது நான்தான்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடன்

உரைப்பவன் கேட்பான் உரைக்கப்படுவது
உரைத்ததனால் ஆய பயனும் - புரைப்பின்றி
நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு. 3

அறம் கொல்வோன் இயல்பு

அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் - துறங்தடங்கி
மன்னுயிர்க்கு உயந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்டான். 4

அறம் கூறத் தகுதியற்றவன் குணம்

பிள்ளைபேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி
வெள்ளைகளிவிடமன் வேட்கையான் - தெள்ளிப்
புரைக்கப் பொருளுணர்வான் என்று இவரே நூலை
உரைத்தற்குரிமையிலாதார். 5

அறம் கேட்பதற்கு உரியவர் குணம்

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் - படுமாற்றால்
ஒப்புரவு செய்தாண்டுறுதிச் சொல்சேர்பவன்
தக்கான் தரும் உரைக்கு. 6

அறநூலைக் கேட்கத் தகுதியற்றவர்கள்

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
என்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம். 7

நல்லற இயல்பு

வினை உயிர்கட்கு வீடு இன்ன விளக்கித்
தினையனைத்தும் தீமையின்றாகி - நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்த்துலகினோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டு மிடத்து. 8

அறத்தின் போலி

ஆவட்டை போன்றறியாதாரை மயக்குறுத்திப்
பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய்க் - காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவாதனவே
தருமத்துப் போலிகல் தாம். 9

அறவுரையின் பயன்

புல்ல உரைத்தல் புகழ்தல் பொருள் ஈதல்
நல்வர் இவரென்று நட்பாடல் - சொல்லின்
அறங்கேள்வியால் ஆம்பயன் என்று உரைப்பர்
மறங்கேள்வி மாற்றியவர். 10

கேட்டதனால் ஆய பயன்

காட்சி ஒழுக்கொடு ஞானம் தலைநின்று
மாட்சி மனை வாழ்தல் அன்றியும் - மீட்சியில்
வீட்டுவகம் எய்தல் என இரண்டே நல்லறம்
கேட்டதனால் ஆய பயன். 11

நூல்

பத்து அறம்

மெய்ம்மை, பொறையுடைமை, மேன்மை, தவம், அடக்கம்,
செம்மை, ஒன்றின்மை, துறவுடைமை - நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம் பத்தும் ன்ற குணம். 12

அறத்தினும் சிறந்தது இல்லை.

தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி
இனத்துள் இறைமையும் செய்து - மனக்கினிய
போகந் தருதலால் பொன்னே! அறத்துணையோடு
ஏகமா நண்பொன்றுமில். 13

அறமே துணை

ஈட்டிய ஒண்பொருளும் இல்லொழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் - மூட்டும்
எரியின் உடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட!
தெரியின் அறமே துணை. 14

உலகத்து அறம்

நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கு - யாப்புடைக்
காழும் கிடுகும்போல் நிற்கும் கயக்கின்றி
ஆழிசூழ் வையத்தறம். 15

இளமையில் அறம் செய்க

இன்சொல் விளநிலமா, ஈதலே வித்தாய்
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய். 16

படுத்தவன் எழுதல் அரிது

காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைபிடித்துச்
சாலச் செய்வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தேன் எழுதல் அரிதால் மற்றென்கொல்
அறங்காலை செய்யாதவாறு. 17

புன்மை பெரிது புறம்

சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்து
நின்ற நாள் யார்க்கு உணர்வரிது - என்றொருவன்
நன்மை புரியாது நாளுவப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம். 18

அஞ்சாது நல்லறம் செய்

கோட்டு நாளிட்டுக்குறையுணர்ந்து வாராதால்
மீட்டொரு நாளடையும் தாராதால் - வீட்டுதற்கு
வஞ்சஞ்செய் குற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சாது அமைந்திருக்கல் பாற்று. 19

தருமம் தலை நிற்றல் நன்று

இன்றுள்ளோர் இன்றேயும் மாய்வர் அவருடைமை
அன்றே பிறருடைமை யாயிருக்கும் - நின்ற
கருமத்தார் அல்லாத கூற்றின் கீழ் வாழ்வார்
தருமந்தலை நிற்றல் நன்று. 20

தூங்காது அறம் செய்க

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத்
துணிந்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு. 21

அறமே உயிர்க்கு அரணாகும்

மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும் - ஆற்ற
அறவரண மாராய்ந் தடையின் அஃதல்லால்
பிறவரணமில்லை உயிர்க்கு. 22

வருந்தியும் அறம் செய்க

திருத்தப்படுவது அறக்கருமம் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஏமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு. 23

அறம் விரைந்து செய்க

முன்னே ஒருவன் முடித்தான்தன் துப்பெல்லாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் - முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து. 24

துஞ்சாத் துயரம் தருவது

குறைக்கருமம் விட்டுரைப் பிற்கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கோர்
நெஞ்சே மாப்பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும். 25

அறம் செய்யாது உறங்குவது ஏன்?

அறம்புரிந்தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்ன? - மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மையால். 26

அறனழித்து வதொன்றில்லை!

பாவம் பெருகப் பழி பெருகத் தன்னோம்பிப்
ஆவதொன்றில்லை அறனழித்துப் - பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறவுண்ணும் ஆற்றவு நின்று. 27

அறம் செய்ய மறவேல்

முற்செய் வினையின் பயன்துய்த்து உலந்தால்
பிற்செய் வினையின் பின் போகலால் - நற்செய்கை
ஆற்றும் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே
கூற்றங் குழல் பிரியாமுன். 28

இயல்வது கரவேல்

திரையவித்து நீராடலாகா உரைப்பார்
உரையவித்தொன்றும் சொல் இல்லை - அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகாதுளவரையால்
செய்வதற்கே ஆகுந்திரு. 29

மூடனுக்கு நீதி கூறாதே

கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லை மற்றொன்றும் அறன் உணர்தல் - நல்லாய்
நறுசெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவையுணருமாறு. 30

கடையவனும் அறவுரை கேளான்

வைகலும் நீருட்கிடப்பினும் கல்விக்கு
மெல்வென்றல் சால அரிதாகும் - அஃதேபோல்
வைகலும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்குக்
கல்லினும் வல்லென்னும் நெஞ்சு. 31

உன்னோடு வாழ்தல் அரிது

அற்ற பொழுதே அறநினைத்தி யாதொன்றும்
பெற்றபொழுதே பிறநினைத்தி - எற்றே
நிலைமையில் நன்னெஞ்சே! நின்னோடு வாழ்க்கை
புலை மயங்கி யனை துடைத்து. 32

உடலின் அழிவை அறிக

ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட - திருவாரை
வீணாள் படாமை நீ துன்பம் பொய்யேயாக
வாணாள் படுவது அறி. 33

திறவுரை தேறாதவர்

கயத்திடை உய்த்திடினும் கன்னனையா தென்றும்
பயற்றுக் கறிவேவாது அற்றால் - இயற்றி
அறிவுரை கேட்ட விடத்தும் அனையார்
திறவுரை தேறாதவர். 34

உள்ள நாள் நல்லறம் செய்க

உள்ள நாள் நல்லறம் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாள் பேயென்றிடங் கடிந்து - தொல்லை
இடைக்கடையும் ஆற்றார் இறந்தார்க்கு நின்றார்
கடைத் தலை வைத்தீயும் பலி. 35

வயிற்றின் கொடுமை

ஒரு நாளும் நீதரியாய் உண்ணென்று சொல்லி
இரு நாளைக்கு ஈந்தாலும் ஏலாய் - திருவாளர்
உன்னோடு உறுதி பெரிதெனினும் இவ்வுடம்பே
நின்னோடு வாழ்வதல் அரிது. 36

அறத்திற்கு அறிவு துணை

கட்டளை கோடித் திரியிற் கருதிய
இட்டிகையும் கோடு மதுபோலும் - ஒட்டிய
காட்சி திரியின் அறந்திரியும் என்றுரைப்பர்
மாட்சியின் மிக்கவர்தாம். 37

அறநூல் தரும் ஆறு

தலைமகனும் நூறும், முனியும், பொருளும்
தொலைவின் துணிவோடு பக்கம் - மலைவின்றி
நாட்டி இவ்வாறும் உரைப்பரே நன்னெறியைக்
காட்டி அறம் உரைப்பார். 38

நல்ல அறம் நம்பு

இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறத்தானும் இஃதே சென்றாற்றத் துறந்தார்கள்
தம்பாலே வாங்கி உரைத்தனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம். 39

அகத்தூய்மையும் அருளுமே அறமாகும்

ஒன்றோடொன்று ஒவ்வாத பாசண்டத்துள் எல்லாம்
ஒன்றோடொன்று ஒவ்வாப் பொருள் தெரிந்து - ஒன்றோடொன்று
ஒவ்வா உயிரோம்பி உள்தூய்மை பெற்றதே
அவ்வாயதாகும் அறம். 40

பிறப்பறுக்கும் மெய்ந்நூல்

நிறுத்தறுத்துச் சுட்டுரைத்துப் பொன் கொள்வான்போல்
அறத்திறனும் ஆராய்ந்துள் புக்கால் - பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்படல் ஆகுமற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு. 41

விரும்பியதில் குற்றம் தோன்றா

காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாததாகும், உவப்பதன்கண்
குற்றமே தோன்றாக் கெடும். 42

துறந்தார் கொண்ட வேடம்

துறந்தார் துறந்திவரென்று அறியவாகும்
துறந்தவர் கொண்டொழுகும் வேடம் - துறந்தவர்
கொள்ப கொடுப்ப வற்றால் காணலாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை. 43

தேவருலகுக்கு உரியோர்

இந்தியர்க்கு ஒல்கா இருமுத்தொழில் செய்தல்
சிந்தை தீரப்பியத்தின் மேலாக்கல் - பந்தம்
அரிதவிவை எய்தும் ஆறு ஒழுகுவார்க்கே
உரிதாகும் உம்பா உலகு. 44

முனிவர் தொழில்

அழல் அடையப்பட்டான் அதற்கு மாறாய
நிழலாகி தன்னியல்பே நாடும் - அழலது போல்
காமாதியால் ஆங்கடு வினைக் கட்டழித்துப்
போமாறு செய்வார் புரிந்து. 45

ஒழுக்கம் உயர்வு தரும்

வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
வெப்பமே என்னார் விதி அறியார் - வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
துண்ப்பதூஉம் தூயஒழுக்கு. 46

பொய்ந்நூல்

தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர் - பித்தரவர்
நூல்களும் பொய்யே அந்நூல் விதியின் ஏற்பவரும்
மால்கள் என உணரற் பாற்று. 47

நற்கதி மார்க்கம்

குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டுத் தம்முன்
தெருட்டி வழி சொல்லிச் சேறல் - திருட்டேட்டம்
மாறு கொளக் கிடந்த மார்க்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பார் இயல்பு. 48

அறம் உரைப்பார் கேட்பார்

அற்றறியும் காரணத்தை ஆராய்ந்தறவு ரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே - மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடையாளரே
கேட்பர் கெழுமியிருந்து. 49

விடு அடையும் நெறி

உருவும் ஒழுக்கமும் நூலும் பொருளும்
பொருவில் தலைமகனோடின்ன - ஒருவரது
கண்டு கருதித் கயத்தறத் தேர்ந்த பின்
கொண்டு வீடேற்க அறம். 50

வீடு அடைவோன்

நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நெய்யலாம்
சால்பின்மை காட்டும் சவர்ச் செய்கை பால்வகுத்துப்
பட்டிமையாவாகா பரமார்த்தம் பற்றின்மை
ஓட்டுவான் உய்ந்து போவான். 51

பூனையை இல் எலி காத்தது போலாம்

புனைபடை கண்டஞ்சித் தற்காப்பான் தன்னை
வினைகடியும் என்றடி வீழ்தல் - கனையிருட்கண்
பல்லெலி தின்னப் பறைந்திருந்த பூனையை
இல்லெலி காக்கும் என்றற்று. 52

ஆசை உடையவன் ஆசான் ஆகான்

மாடமும் மண்ணீடுங் கண்டடக்கம் இல்லாரைக்
கூடிவழிபடும் கோளமை - ஆடரங்கின்
நோவகமாய் நின்றானோர் கூத்தனை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்றதுடைத்து. 53

நாறாமவரனையர்

நாற்றம் ஒன்று இல்லாத பூவொடு சாந்தினை
நாற்றந்தான் வேண்டியது போலும் - ஆற்ற
மறுவது சீலமும் நோன்பு மில்லாரை
உறுபயன் வேண்டிக் கொளல். 54

நற்குணமில்லானிடம் நலம் கேட்காதே

பால்கடல் சூழ் வையத்து மையாதாங் காத்தோம்பிப்
பால் கருதியன்ன துடைத்தென்பர் - மேல்வகுத்து
மன்னிய நற்குண மில்லாரைத் தாம் போற்றிப்
புண்ணியங்கோடும் எனல். 55

நல்லவனும் உண்ணுமோ நஞ்சு

உடங்கமிழ்தங் கொண்டான் ஒருவன் பலரும்
விடங்கண்டு நன்றிதுவே என்றால்-மடங்கொண்டு
பல்லவர் கண்டது நன்றென்று அமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு. 56

ஞானியாவர்

தன்னையும் தன்னில் பொருளையும் - பட்டாங்கில்
பன்னி அறமுரைக்க வல்லாரை - மன்னிய
சிட்டரெனச் சிட்டன் தேற்றுவ தல்லாரைச்
சிட்டரென்று ஏத்தல் சிதைவு. 57

எறிகதிர் முள் நீள் சுடர்

எத்துணை கற்பினும் ஏகான்ம வாதிகள்
புத்தியும் சொல்லும் பொலிவிலவாய் - மிக்க
அறிவனூர் கற்றார் அலவெனவே நிற்கும்
எறிகதிர் முன் நீள் சுடரே போன்று. 58

பிறவியை அறுப்பவர்

அவ்வி நயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதின் நீக்கிச் சினம் கடிந்து - கவ்விய
எட்டுறுப்பினாய இயல்பின் நற்காட்சியார்
சுட்டறுப்பர் நாற்கதியில் துன்பு. 59

அவ்விநயம் ஆறு

அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்க பாசண்டமே தீத்தெயவம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றாதவர். 60

அறுவகைப் பெரியோர்

மன்னனுடன் வயிறுமாண்புடைத்தாய், தந்தை
முன்னி முடிக்குமுனி, ஆசான் - பன்னியம்
காயகுரவர் இவரென வையத்துத்
தூய குலஞ்சாதி யார்க்கு. 61

அறிவில்லாதவர்கள்

கண்டதனைத் தேறாதவனும் கனாக்கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் - பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வரே வையத்துக்
கேள்விற்பக் கொள்ளா நின்றார். 62

அறியாமையின் தோற்றம்

தோல்காவி சீரைத்துணிகீழ் விழவுடுத்தல்
கோல்காக்கரகம் குடை, செருப்பு, - வேவொடு
பல்வென்பு தாங்குதல் பாசண்டி மூடமாய்
நல்ல வரால் நாட்டப்படும். 63

போலி வேடம்

ஆவரணம் இன்றி அடுவாளும் ஆனைதேர்
மாவரணம் இன்றி மலைவானும் - தாவில்
கழுதை இலண்டம் சுமந்தானும் போலப்
பழுதாகும் பாசண்டி யார்க்கு. 64

செருக்கு எட்டு

அறிவுடைமை மீக்கூற்றம் ஆனகுலனே
உறு வலி நற்றவம் ஓங்கிய செல்வம்
பொறிவனப்பின் எம்போல்வார் இல்லென்னும் எட்டும்
இறுதிக் கண் எமாப்பில். 65

ஆறுவது சினம்

உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்றுண்ண
இழந்திழந்தெங்கணும் தோன்றச் - சுழன்றுழன்ற
சுற்றத்தாரல்லாதார் இல்லையால் நன்னெஞ்சே!
செற்றத்தால் செய்வதுரை. 66

புற்களைந்து நெற்பயன் கொள்

உயிரும் உடம்பும் பிரிவுண்மை உள்ளிச்
செயிரும் சினமுங் கடிந்து - பயிரிடைப்
புற்களைந்து நெற்பயன் கொள்ளும் ஒருவன்மேல்
நற்பயன் கொண்டிருக்கற் பாற்று. 67

நற்காட்சி உறுப்புகள்

ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கல் நிறுத்துதல் - மெய்யாக
அன்புடைமை, ஆன்ற அறவிளக்கம் செய்தலோடு
என்றிவை எட்டாம் உறுப்பு. 68

பெறற்கரிது உடம்பு

மக்கள் உடம்பு பெறற்கரிது பெற்றபின்
மக்கள் அறிவும் அறிவரிது - மக்கள்
அறிவதறிந்தார் அறத்தின் வழுவார்
நெறிதலை நின்றொழுகுவார். 69

ஒழுக்கமே உயர்வு

பிறந்த இடநினைப்பின் பேர்த்துள்ளல் ஆகா
மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே! - சிறந்த
ஒழுக்கத்தோ டொன்றி உயப்போதி யன்றே
புழுக்கூட்டுப் பொச்சாப்புடைத்து. 70

கற்றார் நெறி

தேசுந்திறனறிந்த திட்பமுந்தேர்ந்துணர்ந்து
மாசு மனத்தகத் தில்லாமை - ஆசின்றிக்
கற்றல் கடனறிதல் கற்றாரினத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி. 71

கற்க நிற்க

எப்பிறப்பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட்பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின். 72

கல்விக்கு அழகு

கற்றதுவும் கற்றொரு பால்நிற்பக் கடைப்பிடியும்
மற்றொருபால் போக மறித்திட்டுத் - தெற்றென
நெஞ்சத்துட்டீமை பொழுதருமேல் - இன்னிதே
கஞ்சத்துட் கற்பட்டாற் போன்று. 73

மதிப்புறத்திற்பட்ட மறு

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகத் தாக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு. 74

மூடரை விலக்கு

பற்றொரு செற்றம் பயமின்றிப் பல்பொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன - கற்றும்
கடையாய செய்தொழுகும் காரறிவினாரை
அடையார் அறிவுடையார். 75

திருமகள் வாழ்விடம்

நல்வினைப்பின் அல்லால் நறுந்தாமரையாளும்
செல்லாள் சிறந்தார்பின் ஆயினும் - நல்வினைதான்
ஒத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒரு பொழுது மில். 76

தீதும் நன்றும் பிறர் தரவாரா

தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானும் தானெறி நில்லானேல் - தன்னை
இறைவனாச் செய்வானும் தானேதான் தன்னைச்
சிறுவனாச் செய்வானுந்தான். 77

நிறை உடையவனாகுக

அஞ்சினாயேனும் அடைவது அடையுங்காண்
துஞ்சினாயேனும் வினைவிடா - நெஞ்சே!
அழுதாய் எனக் கருதிக் கூடற்றொழியா தாற்றத்
தொழுதேன் நிறையுடையையாகு. 78

தற்புகழ்ச்சி வேண்டாம்

பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சில கற்றார் கண்ணும் உளவாம் பல கற்றார்க்கு
அச்சாணி யன்ன தோர் சொல். 79

பொறுமையே மேல்

தன்னை ஒருவன் இகழ்ந்துரைப்பின் தானவனைப்
பின்னை உரையாப் பெருமையான் - முன்னை
வினைப்பயனும் ஆயிற்றாம் என்றதன் கண் மெய்ம்மை
நினைத்தொழில் நெஞ்சினோய் இல். 80

எண்ணாது சொல்லும் இழுக்கு

நம்மைப் பிறர் சொல்லும் சொல்லிவை நாம் பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கிவை என்றெண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யாரோ
களைகண தில்லாதவர். 81

பொறுமையே தவம்

எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச் சொல் தன்னெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுகல் ஆற்றின்
பிறிதென்னும் வேண்டா தவம். 82

முற்பகல் செய்யின் பிற்பகல் வரும்

பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை இல்லை
பிறர்க்கின்னாது என்று பேரிட்டுத் - தனக்கின்னா
வித்தி விளைத்து வினை விளைப்பக் காண்டலிற்
பித்தும் உளவோ பிற. 83

தேவர் விழித்திமையார்

முன்னின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கன்னின்று உருகக் கலந்துரைத்துப் - பின்னின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையார் நின்ற நிலை. 84

குடிகெடுக்கும் குடி

ஒளியும் ஒளிசான்ற செய்கையும் சான்றோர்
தெளிவுடையார் என்று உரைக்கும் தேசும் - களியென்னும்
கட்டுரையால் கோதப்படுமேல் இவையெல்லாம்,
விட்டொழியும் வேறாய் விரைந்து. 85

இருளாம் ஒருங்கே

ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் - சூது
பொரும் என்னும் சொல்லினால் புல்லப்படுமேல்
இருளாம் ஒருங்கே இவை. 86

மானம் இழந்து வாழாதே

தனக்குத் தகவல்ல செய்தாங்கோர் ஆற்றால்
உணற்கு விரும்புங்குடரை - வனப்புற
ஆம்பற்றான் வாடலேபோல அகத்தடக்கித்
தேம்பத்தாம் கொள்வது அறிவு. 87

பொய்மேல் கிடவா நா

பொய்ம்மேல் கிடவாத நாவும் புறனுரையைத்
தன்மேல் படாமைத் தவிர்ப்பானும் - மெய்ம்மேல்
பிணிப்பண் பழியாமை பெற்ற பொழுதே
தணிக்கு மருந்து தலை. 88

பிறனில் விழையேல்

அறனும் அறனறிந்த செய்கையும் சான்றோர்
திறனுடையன் என்று உரைக்கும் தேசும் - பிறனில்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப்படுமேல்
இழுக்காம் ஒருங்கே இவை. 89

சாவாய் நெஞ்சமே!

சாவாய் நீ நெஞ்சமே! சல்லிய என்னை நீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்கொட்டாய் - ஓவாதே
கட்டழித்துக் காமக் கடற்கு என்னை ஈர்ப்பாயே
விட்டெழுங்கால் என்னுவாய் சொல். 90

பழிபாவம் பாராய்

பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றிக்
கழிபெரும் காமநோய் வாங்கி - வழிபடாது
ஓடுமனனே விடுத்தென்னை விரைந்து நீ
நாடிக்கொள் மற்றோரிடம். 91

மக்களும் மக்கள் அல்லார்

மக்களும் மக்களல்லாரும் என இரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம் - மக்கள்
அளக்கும் கருவிமற்று ஒண் பொருள் ஒன்றோ
துளக்குறு வெள்வளையார் தோள். 92

நட்டார் எனப்படுவார்

இம்மை அடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் - மெய்ம்மையே
பட்டாங்கு அறமுரைக்கும் பண்புடையாளரே
நட்டாரெனப்படுவார். 93

பெருநட்பாளர்

நட்டார் எனப்படுவார் நாடுங்கால் வையத்துப்
பட்டாம் பல பிறப்புத் துன்பம் என்று - ஒட்டி
அறநெறி கைவிடாது ஆசாரங்காட்டிப்
பிறநெறி பேர்க்கிற்பவர். 94

பிறவாநெறி தருவோர்

நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்
விட்டாரை யல்லால் கொளல் வேண்டா - விட்டார்
பொறி சுணங்கு மென்முலைப் பொன்னன்னாய்! உய்ப்பர்
மறி தர வில்லாக் கதி. 95

தாயனைய பெரியர்

காவொடு கையமுக்கிப் பிள்ளையை வாய்நெறித்துப்
பாலோடு நெய் பெய்யும் தாயனைவர் - சால
அடக்கத்தை வேண்டி அறன் வலிது நாளும்
கொடுத்துமேற் கொண்டொழுகுவார். 96

பெரியோரால் செல்வம் பெருகும்

கழியும் பகலெல்லாம் காலை எழுந்து
பழியொடு பாவம் படாமை - ஒழுகினள்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருள் எல்லாம் தொக்கு. 97

தீயநட்பு கள்ளரே!

காய உரைத்துக் கருமம் சிதையாதார்
தாயரோடு ஒவ்வாரோ தக்கார்க்கு - வாய்பணிந்து
உள்ளமுருக உரைத்துப் பொருள் கொள்வார்
கள்ளரோடு ஒவ்வாரோதாம். 98

கண்ணில்லான் சென்றகாடு

அறுதொழில் நீத்தாரை மெச்சாதவற்றோடு
உறுநரைச் சார்ந்துய்யப் போதல் - இறுவரைமேல்
கண்ணின் முடவன் துணையாக நீங்கானம்
கண்ணிலான் சென்றதுடைத்து. 99

துறந்தெழுவார் தூயர்

குற்றத்தை நன்றென்று கொண்டு குணமின்றிச்
செற்றமுதலா உடையவரைத் - தெற்ற
அறிந்தாரென்று ஏத்தும் அவர்களைக் கண்டால்
துறந்தெழுவர் தூய்க் காட்சியார். 100

கொன்றூண் நுகரும் கொடுமை

கொன்றூண் நுகரும் கொடுமையை உள் நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே
படுத்தானாந்தன்னைத் தவம். 101

வடுவன்றோ செய்யும் வழக்கு

தம்புண்கழுவி மருந்திடுவர்தாம் பிறிதின்
செம்புண் வறுத்த வறைதின்பர் - அந்தோ!
நடு நின்றுலக நயனிலா மாந்தர்
வடுவன் றோ செய்யும் வழக்கு. 102

அறங்கூறும் நா

அறங்கூறு நாவென்ப நாவும் செவியும்
புறங் கூற்ருக் கேளாத என்பர் - பிறன் தாரத்து
அற்றத்தை நோக்காத கண்ணென்ப யார் மாட்டும்
செற்றத்தைத் தீர்ந்ததாம் நெஞ்சு. 103

தம்விழைவார்க்கில்லை தவம்

பெண்விழை வார்க்கில்லை பெருந்தூய்மை பேணாதூன்
உண்விழை வார்க்கில்லை உயிரோம்பல் - எப்பொழுதும்
மண் விழைவார்க்கில்லை மறமின்மை மானாது
தம் விழைவார்க்கில்லை தவம். 104

கல்லான் கடைசிதையும்

கல்லான் கடைசிதையும் காமுகன் கண் காணான்
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் - நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும்
நடுக்கமும் நன்மகிழ்வு மில். 105

தானத்தின் மிக்க தருமம்

தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தின் மிக்க உசாத்துணையும் - மானம்
அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉமில்லை
பழியாமல் வாழும் திறம். 106

உயர்முக்குணம்

தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுதாற்றும் ஆற்றலும் - காய்விடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இம்மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை. 107

விழுப்பொருட்கண் செமை

வெம்மை உடையது அடிசில், விழுப்பொருட்கண்
செம்மை உடையதாம் சேவகம் - தம்மைப்
பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்முன்றும்
உறவருவதோர்வதாம் ஓர்ப்பு. 108

ஊர் பகை விடுக

ஒறுப்பாரை யான் ஒறுப்பான்; தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப - ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்
ஊர் பகை நின்கண் ஒறு. 109

இல்லார் பின் சென்ற நிலை

குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் - வினைப்பயன்கொல்
கல்லார் குலமில்லா பொல்லார் தறுகட்பம்
இல்லார்பின் சென்ற நிலை. 110

ஓதுமின் ஓதி அடகுமின்

வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்
கூதற்குக் கூதிரனைத்து. 111

அன்னமொடுங்கில் ஐந்தும் ஒடுங்கும்

இறையிறையின் சந்தித்தென்பொடூஉன் சார்த்தி
முறையின் நரம்பெங்கும் யாத்து - நிறைய
அவாப் பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச் சுருக்கில் பூட்டா விடும். 112

பூசிப்பொதிந்த புலாலுடம்பு

ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
பூசிப்பொதிந்த புலாலுடம்பு - ஊசல்
கயிறு அற்றால் போலக் கிடக்குமே அற்றத்
தெயிறுற்றிடை முரிந்தக் கால். 113

கூற்றம் கொடுத்த நாள்

மறைந்தொருவன் வாழும் இம்மாயமா வாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேல் இல்லை - செறிந்தொருவன்
ஊற்றம் இறந்துறுதி கொள்ளாக்கால் ஓகொடிதே
கூற்றம் இடை கொடுத்த நாள். 114

கற்றறிந்தார் துஞ்சார்

தோற்றமும் சம்பிரதமும் துப்புரவும் சம்பிரதம்
கூற்றமும் கொள்ளுங்கால் சம்பிரதம் - தோற்றம்
கடைப்பட்டவாறு அறிந்து கற்றறிந்தார் துஞ்சார்
படைப்பட்ட நாயகனே போன்று. 115

வித்துண்பார் வாழ்க்கை

தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவுந்துயிலும் உறீஇப் - பருவந்து
பத்தெட்டு நாளைப் பயனிலா வாழ்க்கைக்கு
வித்துக்குற்றுண்பார் பலர். 116

மதியிழா மாந்தர் மறப்பர்

பிறப்பிறப்பு மூப்புப் பிணியென்று இந்நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் - குறைகூடாச்
செல்வம் கிளைபொருள் காமம் என்றிந் நான்கும்
பொல்லாப் பொறியறுக்கப்பட்டு. 117

பருந்துக்கிரையாம் உடம்பு

மூப்புப் பிணியே தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சகலெவாய் - நோக்கீர்
பருந்துக்கிரையா மிவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு. 118

துன்பத்துள் துன்பம்

நீக்கருநோய் மூப்புத் தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடென்றைந்து களிறுழக்கப் - போக்கரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்தெய்தும்
இன்பத்தியல் பறியாதார். 119

இறத்தலே உறுதி! துறத்தலே மேல்!

எக்காலும் சாதல் ஒரு தலையே யான் உனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன் - மக்க
அறிவனை வாழ்த்தி அடலித்துணையாத்
துறத்தல் மேல் சார்தல் தலை. 120

சுழன்றாடும் பிறப்பு

அங்கம் அறவாடி அங்கே படமறைந்து
அங்கே ஒரு வண்ணம் கோடலால் என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
சுழன்றாடு தோற்றப் பிறப்பு. 121

விலங்குகளே நல்லன

இக்காலத் திவ்வுடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை - மெச்சாது
அலந்து தம் வாய்வந்த கூறும் அவரின்
விலங்குகள் நல்ல மிக. 122

கண்ணில் கண்டுங் கருதாதே

எண்ணற் கரிய இடையூறு உடையதனைக்
கண்ணினாற் கண்டுங் கருதாதே - புண்ணின் மேல்
வீக்கருவி பாய இருந்தற்றால் மற்றதன்கண்
தீக் கருமஞ் சோர விடல். 123

புன்தோல் வேய்ந்த புலால்

நெடுந்தூணிரு காலா நீண்முதுகு தண்டாக்
கொடுங்கால் விலா வென்பு கோலி - உடங்கிய நற்
புன்தோலால் வேய்ந்த புலால்வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழையவர். 124

துன்பக் குரம்பை

அன்பு காலாக இருதோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்றறாத் - துன்பக்
குரம்பை உடையார் குடி போக்கு நோக்கிக்
கவர்ந்துண்ணப் போந்த கழுகு. 125

நில்லா துலகு

ஒரு பாகன் ஊறுங்களிறு ஐந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின் - தருகாலால்
பேர்த்தூன்ற லாகாப் பெருந்துன்பங் கண்டாலும்
ஓர்த்தூன்றி நில்லாதுலகு. 126

உடன் வருவன

நீத்தொழிந்த ஆறைத் தடக்கிப் பின் நிச்சயமே
வாய்த்தமைந்த வாயில் பெண் ஆணையும் - கூத்தற்கு
வாளேறு ஓசை விளைநிலம் இவ்வல்லால்
கேளாய் உடன் வருவதில். 127

சில் நாள் பல் பிணி

வாழ்நாளில் பாகம்துயில் நீக்கி மற்றவற்றுள்
வீண்நாள் இடர் மூப்பு மெய்கொள்ளும் - வாழ்நாளுல்
பன்னோய் கலற்றுப் பரிந்து குறையென்னை
அன்னோ அளித்திவ்வுலகு. 128

தவத்தோடு தானம்புரி

உடம்புங்கிளையும் பொருளும் பிறவும்
தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் - அடங்கித்
தவத்தோடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தம் கழிகின்ற நாள். 129

வயிற்றுப் பெருமான் பொருட்டு

போற்றியே போற்றியே என்று புதுச் செல்வம்
தோற்றியார் கண்ணெல்லாம் தொண்டேபோல் - ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பலவுரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு. 130

பற்றுச் செய்தென்னப் பயன்?

புகா உண்பார் அல்லுண்ணார் போகுந்துணைக்கண்
தவாவினை வந்தடையக் கண்டும் - அவாவினைப்
பற்றுச் செய்தென்னை பயமின்றால் நன்னெஞ்சே
ஒற்றி உடம்போம்பு தற்கு. 131

அழுக்குடம்பு தன்னை அறிவாய்

புழுப்போல் உவர்ப்பூறிப் பொல்லாங்கு நாறும்
அழுக்குடம்பு தன்னுள் வளர்ந்தாய் - விழுத்துமிழ்ந்து
இன்ன நடையாய் இறக்கும் வகையினை
நன்னெஞ்சே! நாடாய் காண்நற்கு. 132

தேம்பி விடுதலே நன்று

ஒழுக்கமிலனாகி ஓர்த்துடையனேனும்
புழுப்பொதிந்த புண்ணிற்கொடிதாம் - கழுக்கிரையை
ஓம்பின் மற்றென்னை உறுதிக்கண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று. 133

மெய்க்கண்டார் நெஞ்சு

முடையுடை அங்ஙணம் நாடோ றும் உண்ட
கடைமுறைவாய் போதரக் கண்டுந் - தடுமாற்றில்
சாவாப் பிறவா இச்சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய்கண்டார் நெஞ்சு. 134

கற்றறிந்தார் கடன்

வயிறு நிறைக்குமேல் வாவின் மிக் கூறிச்
செயிரிடைப் பாடெய்துமாம் சீவன் - வயிறு மோர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன். 135

அளவோடு உண்

புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே
சவங்களைச் சார் ஒழுகல் - புலன்கள்
ஒறுக்கும் பருவத்து சாத்துணையும் ஆகா
வெறுத்து நீ உண்டல் கடன். 136

மீதூண் விரும்பேல்

புகாப்பெருக ஊட்டிற் புலன்கண் மிக்கூறி
அவாப்பெருகி அற்றந் தருமால் - புகாவுமோர்
பெற்றியான் ஊட்டிப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன். 137

ஒறுக்கிலேன் ஊர் பசை

ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை,
ஒறுக்கிற்பேன் என்றுரைப்பையாகில் - கறுத்தெறிந்த
கற்கறித்துக் கற்கொண்டெறிந்தாரைக் காய் கல்லா
பற்கழல் நாய் அன்ன துடைத்து. 138

துறவித் துணை கொள்

உள்ளப் பெருங்குதிரை ஊர்ந்து வயப்படுத்திக்
கள்ளப் புலனைந்துங் காப்பமைந்து - வெள்ளம்
பிறவிக் கண் நீத்தார் பெருங்குணத் தாரைத்
துறவித்துணை பெற்றக் கால். 139

பொறியிலியே போ

பரிந்தெனக்கோர் நன்மை பயப்பாய் போல் நெஞ்சே!
அரிந்தென்னை ஆற்றவுந்தின்னல் - புரிந்துநீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறியிலி போ. 140

எய்தா நலனில்லை

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை - தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடிபடுக்கப்பட்ட களிறு. 141

உள்ளம் அறப் பெறுக

உள்ளூர் இருந்துந்தம் உள்ளமறப் பெற்றாரேல்
கள்ளவிழ் சோலையாங் காட்டுளார் - காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடு வூருளார். 142

துறக்கம் திறக்கும் தாழ்

நின்னை யறப்பெறுகிற்கிலேன் நன்னெஞ்சே
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன் - நின்னை
அறப்பெறுகிற் பேனேல் பெற்றேன் மற்றீண்டே
துறக்கம் திறப்பதோர் தாழ். 143

தோழன்மார் ஐவர்

ஆதன் பெருங்களியாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர் - தோழர்
வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன். 144

அருட்கண் நிற்பது அறிவு

தன்னொக்கும் தெய்வம் பிறிதில்லை தான் தன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை
எழுத்தெண்ணே நோக்கி இருமையுங்கண்டாங்கு
அருட்கண்ணே நிற்பதறிவு. 145

அஞ்சித் துஞ்சார்

தடுமாற்றம், அஞ்சிய தன்மை உடையார்
விடுமாற்றந் தேர்ந்தஞ்சித் துஞ்சார் - தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார்தம் ஐம்புலனும்
ஆரும் வகை யாதாங்கொல் என்று. 146

பாவம் வருதலும் உண்டு

ஆர்வில் பொறியைந்திற்கு ஆதி இரு வினையால்
தீர்வில நீ கோதாகி சேர்விக்குந் - தீர்வில்
பழியின்மை எய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலும் உண்டு. 147

தாமரை இலை நீர் போல

அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின் கண் நீர் நிலாதாகும் - அலைவில்
புலன்களின் நிற்பினும் பொச்சாப்பிலரே
மலங்கடிவு ஆளாதவர்க்கு. 148

பற்றின்றி அறம் செய்க

பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்கண் நில்லாது அறஞ் செய்க - மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப் பிறந்த ஊர் நாடிக்
கன்றுடைத் தாய் பேரல்வரும். 149

இன்பமும் துன்பமும் ஒன்றே

பேறழிவு சாவி பிறப்பின்பத் துன்பம் என்று
ஆறுள அந்நாள் அமைந்தன - தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மாது
இவையிவை என்று உணரற் பாற்று. 150

தானே தனக்குக் கரி

தானே தனக்குப் பகைவனும் நட்பினும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வனைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி. 151

சிறந்தார் பிறரில்லை

செய்வினை யல்லால் சிறந்தார் பிறரில்லை
பொய்வினை மற்றைப் பொருள் எல்லாம் - மெய்வினவில் விளவி
தாயார் மனைவியார் தந்தையார் மக்களார்
நீயார் நினைவாழி நெஞ்சு! 152

உடம்பு மண்

உயிர் திகிரியாக உடம்பு மண்ணாகச்
செயிர் கொள் வினைகுயவனாகச் - செயிர்தீரா
எண்ணருநல் யாக்கைக் கலம் வனையும் மற்றதனுள்
எண்ணருநோய் துன்பம் அவர்க்கு. 153

புண்ணியத்தைச் செய்

முற்பிறப்பில் தாம் செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந்தின் புறா நின்றவர் - இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம் கடிந்தறத்தை
முன்னி முயன்றொழுகல் பாற்று. 154

மறுமைக்கு அமற செய்

அம்மைத் தாஞ்செய்த அறத்தின் வருபயனை
இம்மைத் துய்த்தின் புறா நின்றவர் - உம்மைக்கு
அறம் செய்யாது ஐம்புலனும் ஆற்றுதல் நல்லார்
கறந்துண்டு அஃது ஓம்சாமையாம். 155

பிறந்த பிறப்பால் அறிக

இறந்த பிறப்பிற்றாம் செய்த வினையைப்
பிறந்த பிறப்பால் அறிக - பிறந்திருந்து
செய்யும் வினையால் அறிக இனப்பிறந்து
எய்தும் வினையின் பயன். 156

கூலிக்கு அழுத குறை

தாய்தந்தை மக்கள் உடன் பிறந்தோர் சுற்றத்தார்
ஆய்வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன்கண்
மேலைப் பிறப்பும் இதுவானால் மற்றென்னை
கூலிக் கழுத குறை. 157

மனை வாழ்க்கை நன்று

வினைகாத்து வந்த விருந்தோம்பி, நின்றான்
மனை வாழ்க்கை நன்று தவத்தின் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லன் விருந்தோம்பிச்
சொல்லெதிர் சொல்லான் எனில். 158

பெண் என்பாள்

கொண்டான் குறிப்பொழுகல், கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை - விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போடு உணர்வுடையாள் பெண். 159

நல்லறத்தில் நிற்பார்

மடப்பதூஉம் மக்கட் பெறுவதூஉம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லாருஞ் செய்வர் - படைத்ததனால்
இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதாம் நல்லறத்தே
நிற்பாரே பெண்டிரென்பார். 160

வாழ்க்கை முனியாது

வழிபாடுடையளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங் - கெதிருரையாது
ஏத்திப் பணியுமேல் இல்லாளை ஆண்மகன்
போற்றிப் புனையும் புரிந்து. 161

கோற்றொடியாள் கோள் அழியும்

தலைமகனில் தீர்ந்துறைதல் தான் பிரிதல் சேர்தல்
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் கலனணிந்து
வேற்றூர்ப் புகுதல் விழாக் காண்டல் நோன்பிடுதல்
கோற்றொடியாள் கோள் அழியுமாறு. 162

பின் செல்லும் கூற்று

அயலூர் அவன்போக அம்மஞ்சல் ஆடிக்
கயலேர் கண் ஆர எழுதிப் - புயலைம்பால்
வண்டோ ச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோ ச்சி பின் செல்லுங் கூற்று. 163

மருவிய காதல் மனை

மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரும் பூண்டுய்ப்பின் அல்லால் - ஒருவரால்
இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான் சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று. 164

இல்வாழ்க்கை இயல்பு

பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும், நோக்காது பொய்யொரீஇ - நிச்சலுங்
கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு. 165

இல்வாழ்க்கை என்பதிருள்

விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக்கவரையும் பேணான் - பிரிந்துபோய்க்
கல்லான் கடுவினை மேற்கொண்டொழுகுமேல்
இல்வாழ்க்கை என்பதிருள். 166

வீழ்வார்க்கு வீழ்வார் துணை

அட்டுண்டு வாழ்வார்க் கதிதிகள் எஞ்ஞான்றும்
அட்டுண்ணா மாட்சி உடையவர் - அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை. 167

அறஞ்செய்வதே வாழ்க்கை

நொறுங்கு பெய்தாக்கிய கூழார உண்டு
பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கை மற்றெல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளீஇ யற்று. 168

நன்மை தராதது பயனில்லை

உப்புக்குவட்டின் மிசையிருந்து உண்ணினும்
இட்டுணாக் காலத்துக் கூராதாம் - தொக்க
உடம்பும் பொருளும் உடையானோர் நன்மை
தொடங்காக்கால் என்ன பயன். 169

ஈந்து உண்

பெற்ற நாள் பெற்றநாள் பெற்றதனுள் ஆற்றுவதொன்று
இற்றைநாள் ஈத்துண்டு இனிதொழுகள் - சுற்றும்
இதனில் இலேசுடை காணோம் அதனை
முருகனின் இடை தெரியுங்கால். 170

மறுமை காண்பார்

கொடுத்துக் கொணர்ந்தறம் செல்வங் கொடாது
விடுத்துத் தம் வீறழிதல் கண்டிர் - கொடுப்பதன்கண்
ஆற்ற முடியாதெனினுந்தாம் ஆற்றுவார்
மாற்றார் மறுமை காண்பார். 171

பகுத்துண்டு வாழ்தல்

பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாட்செறித்து
விட்டொழிவ தல்லால் அவ்வெங் கூற்றம் - ஒட்டிக்
கவாய்க் கொடுமை செய்யாது கண்டது பாத்துண்டல்
புலாற் குடியலால் ஆய பயன். 172

அறிவார் தொழில்

தண்டாமம், பொய், வெகுளி, பொச்சாப்பு, அழுக்காறென்று
ஐந்தே கெடுவார்க்கியல்பு என்ப பண்பாளர்!
ஈதல், அறிதல், இயற்றுதல், இன்சொல், கற்று
ஆய்தல் அறிவார் தொழில். 173

நீத்தாற்றின் நின்ற நிலை

நீத்தாற்றின் நின்ற நிலையினோர் உண்டக்கால்
ஈத்தாற்றினாகும் உயப்போவார் - நீத்தாற்றிற்
பெற்றிப் புணையன்னார் பேர்த்துண்ணா விட்டக்கால்
எற்றான் உயப்போம் உலகு. 174

உண்டீத்து வீழ்வார்

கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுத்தீர்ந்தார் உண்ணின் பெறலாம் - கொடுது; தாரைக்
கொண்டு உய்யப் போவார் குணம் உடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு. 175

ஈதல்தலை

அடங்கி அடங்கினார்க்கு ஈதல்தலையே அடங்காது
சுடங்கினார்க்கு ஈதல் இடையே - நுடங்கிடையாய்
ஏற்பானும் தானும் அடங்காக்கால் அஃதென்ப
தோற்பாவைக் கூத்தினுள் போர். 176

உண்டி கொடுப்பதே உயர்கொடை

வாழ்நாள் உடம்பு வலிவனப்புச் செல்கதியும்
தூமாண் நினை ஒழுக்கம் காட்சியும் - தாமாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண் கொடையோடு
ஒன்றுங் கொடை ஒப்பதில். 177

கதிப்பயன்

பரப்பு நீர் வையகத்துப் பல்லுயிர்கட் கெல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப்பயனும்
தம்மைத் தலைப் படுத்தலால். 178

வானகத்து வைப்பு

செல்வத்தைப் பெற்றார்சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு - நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு. 179

மேலுலக வாயில்

ஒன்றாக நல்லது உயிரோம் பல் ஆங்கதன்பின்
நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல் - என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து. 180

முடிக்கும் கருமம் பல

சோரப் பசிக்கு மேல் சோற்றூதிர்ப் பாகன்மற்று
ஈரப்படினும் அது வூரான் - ஆரக்
கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல. 181

தம்முடைமை பற்று விடுதல் இலர்

ஈவாரின் இல்லை உலோபர் உலகத்தில்
யாவருங் கொள்ளாத வாறெண்ணி - மேவரிய
மற்றுடம்பு கொள்ளும் பொழுதோர்ந்து தம்முடைமை
பற்று விடுதல் இலர். 182

வழங்காத பான்மையார்

இட்டக் கடைத்தரார் ஈண்டும் பலிமரீஇப்
பட்ட வழங்காத பான்மையார் - நட்ட
சுரிகையாற் கானும் சுலாக் கோவாற் கானும்
சொரிவதாம் ஆபோற் சுரந்து. 183

நாடி உரையாய் நயந்து

கொடுப்பான் வினையல்லன் கொள்வானும் அல்லன்
கொடுக்கப் படும்பொருளும் அன்றால் - அடுத்தடுத்து
நல்லவை யாதாங்கொல் நாடியுரையாய் நீ
நல்லவர் நாப்பண் நயந்து. 184

மன்னுயிர் ஓம்பும் தனகத்து

அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கிப்
பொறியைந்தும் வெல்லும் வாய்போற்றிச் - செறிவினான்
மன்னுயிர் ஓம்புந் தகைத்தே காண் நன் ஞானந்
தன்னை உயக்கொள்வது. 185

அரிய துணிவதாம் மாண்பு

சோறியாரும் உண்டோ ? சொல்லியாரும் சொல்லாரோ?
ஏறியாரும் வையத்துள் ஏறாரோ? - தேறி
உரியதோர் ஞானங் கற்றுள்ளந் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு. 186

கொள்வானும் கொடுப்பானும்

கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின் - அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை என்பரே
வென்றார் விளங்க விரித்து. 187

ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம்

பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படுதெண்ணீர் அமுதமாம் - ஓம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோல்
களியாம் கடையாயார் மாட்டு. 188

எண்ணப்படுவது வீடே

கொடுக்கப்படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப்படுவது அருளே - அடுத்தடுத்து
உண்ணப்படுவது நன் ஞானம் எப்பொழுதும்
எண்ணப்படுவது வீடு. 189

இம்மைப் புகழே தலைப்படு

இந்தியக் குஞ்சரத்தை ஞான இருங்கயிற்றால்
சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பர்
இம்மை புகழும் இனிச் செல்கதிப்பயனும்
தம்மைத் தலைப்படுத்துவார். 190

போகின்றதாகும் பிறப்பு

உணர்ச்சியச்சாக உசாவண்டியாகப்
புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி - உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையனாகுமேல்
பேர்கின்றதாகும் பிறப்பு. 191

மற்றீண்டு வாரா நெறி

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்குறுதி உயிரோம்பி வாழ்தல்
அறிவிற், கறிவாவ தெண்ணின் மறுபிறப்பு
மற்றீண்டு வாரா நெறி. 192

கூற்றங்குறுகா இடம்

உயிர்வித்தி ஊன் விளைத்துக் கூற்றுண்ணும் வாழ்க்கைச்
செயிர்வித்திச் சீலந்தின்று என்னை செயிரினை
மாற்றிமறுமை புரிகிற்பின் காணவாங்
கூற்றம் குறுகா இடம். 193

கைவிளக்கேற்ற அறிவுடைமை

இருளே உலகத்து இயற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை - கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சேத் தருளுடைமை நெய்பயந்த
மேலுலகம் எய்துபவர். 194

விட்டு நெறிஎன்பர்

ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு வீட்டு நெறியென்பர் - நீர் புகப்
பட்டிமை புக்கான் அடங்கினன் என்பது
கெட்டார் வழிவியக்குமாறு. 195

அருளால் அறம் வளரும்

அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள் வளரும் நாளும் - தெருளா
விழைவின்பத்தால் வளரும் காமமக்காம
விழைவின்மை யால்வளரும் வீடு. 196

கட்டுரை கேட்பதே செவி

பண்ணமை யாழ்குழல் கீதமென்றின்னவை
நண்ணி நயப்ப செவியல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொன்னீக்க விண்ணின்பம் வீட்டோடு
கட்டுரை கேட்ப செவி. 197

நுண்ணூல் உரை கேட்பதே செவி

புண்ணாகப் போழ்ந்து புலால் பழிப்பத்தாம் வளர்ந்து
வண்ணப் பூண்பெய்வ செவியல்ல - நுண்ணூல்
அறவுரை கேட்டுணர்ந்து அஞ்ஞானநீக்கி
மறவுரை விட்ட செவி. 198

சுவைப்பதே செவி

கண்டவர் காமுறூஉங் காமருசீர் காதிற்
குண்டலம் பெய்வ செவியல்ல - கொண்டுலகில்
மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச்
சூன்று சுவைப்ப செவி. 199

நற்காட்சி காண்பனவே கண்

பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணி போன்றெங்கும்
இருளறக் காண்பன கண்ணல்ல - மருளறப்
பொய்க்காட்சி நீக்கிப் பொருவறு முக்குடையான்
நாற்காட்சி காண்பன கண். 200

இலங்கிதழ் மோப்பதா மூக்கு

சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்தின்புறுவன மூக்கல்ல - வேந்தின்
அலங்குசிங் காதனத் தண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதாமூக்கு. 201

நின்று துதிப்பதாம் நா

கைப்பன கார்ப்புத் துவர்ப்புப் புளிமதுரம்
உப்பிரதங் கொள்வன நாவல்ல - தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டுவந் தெப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா. 202

அறவுரை கேட்ப நடப்பதே கால்

கொல்வதூஉங் கள்வதூஉம் அன்றிப் பிறர் மனையிற்
செல்வதூஉஞ் செய்வன காலல்ல - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர் பாற்சென்று
அறவுறை கேட்பிப்ப கால். 203

திருவடிகளை வணங்குவதே தலை

குற்றம் குறைத்துக் குறைவின்றி மூவுலகின்
அற்றம் மறைத்தாங்கு அருள்பரப்பு - முற்ற
உணர்ந்தானைப் பாடாத நாவல்ல; அல்ல
சிறந்தான்றாள் சேராதலை. 204

உடன் பிறந்த மூவர்

உடன்பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
இடங்கொண்டு சின்னாள் இருப்பர் - இடங்கொண்ட
இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன்பின் சிறந்து. 205

கற்பிளப்பில் தீ

கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்கும் குரோதத்தை - வெட்டெனக்
காய்த்து வரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
மோக்கமுடி வெய்துவார். 206

இன்ப நெறி

நல்வினை நாற்கால் விலங்கு, நவை செய்யும்
கொல்வினை அஞ்சிக் குயக்கலம் - நல்ல
உறுதியும் அல்லவும் நாட்பேர் மரப்பேர்
இறுதியில் இன்பநெறி. 207

ஈண்டு வாரா நெறி

பறவை அரும் பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்கண் ஊன் உண் விலங்கு - சிறியன
தீர்ப்புட் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்தீண்டு வாரா நெறி. 208

விழுச் சார்வு வேண்டுபவர்க்கு

உட்கப் படுமெழுத்து ஓரிரண்டாவதே
நட்கப் படுமெழுத்தும் அத்துணையே - ஒட்டி
இழுக்காவெழுத் தொன்றிமிழ் கடல் தண்சேர்ப்ப
விழுச்சார்வு வேண்டு பவர்க்கு. 209

எல்லாம் ஒருங்கு உறும்

முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓரிடத்துத்
தப்பிய பின்றைத்தம் பேரொழித்து - அப்பால்
பெறு பெயரைக் காயப் பெறுபவேல் வையத்து
உறுமவனை எல்லாம் ஒருங்கு. 210

உடம்பிடுதல் நன்று

ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
மனையின் அகன்றுபோய் மாபெருங்காட்டின்
நனையில் உடம்பிடுதல் நன்று. 211

மெய்ச் சுற்றம்

நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி - அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத்தாரில் எனக்கு. 212

கடும் பகையாக உழலும்

மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
ஒக்க உடன்பிறந்தார் என்றிவர்கள் - மிக்க
கடும்பகையாக உழலும் உயிர்தான்
நெடுந்தடுமாற்றத்துள் நின்று. 213

உடலே கருவி

அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர் ஈன்றாங்கு
அளற்றுடம்பா மெனினும் நன்றாம் - அளற்றுடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றவை
தன்னால் தலைப்படுதலான். 214

பகை வளர்ப்பார்

தேற்றமில்லாத ஒருவனைப் பின்னின்றாங்கு
ஆற்ற நலிவர் இரு நால்வர் - ஆற்றவும்
நல்லார்போல் ஐவர் பகைவளர்ப்பார் மூவரால்
செல்லும் அவன்பின் சிறந்து. 215

கண்டுணர்ந்தார்க்கே காணும்

அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
இருவினையும் நின்ற வினையும் - திரிவின்றிக்
கண்டுணர்ந்தார்க்கல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டுரைப்பான் நிற்றல்குதர். 216

கருதியவை கூடல் எளிது

ஆதியின் தொல்சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியும் கேட்டும் உணர்ந்தவர்க்குச் சோதி
பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது. 217

அறிந்தான் வீடு எய்தும்

எந்நூல் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து - மெய்ந்நூல்
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடெய்தும்
திறநெறிச்சாரந் தெளிந்து. 218

சிவனையே சிந்திக்கவும்

அவன் கொல் இவன்கொல் என்றையப் படாதே
சிவன் கண்ணே செய்ம்மின்கள் சிந்தை - சிவன்றானும்
நின்று கால் சீக்கும் நிழறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து. 219

வீட்டின்பம் நல்குவான்

முனைப்பாடி யானைச் சூர்முக்குடைச் செல்வன்
தனைப்பாடி வந்தேற்குந் நந்த பரிசில்
வினைப்பாடு கட்டழிந்து வீட்டின்பம் நல்கி,
நினைப்பாடி வந்தோர்க்கு நீமிக வென்றான்
நிறை விளக்கு போலிருந்து. 220

ஞான வளரொளியான்

அருள் வட்டமாக அறிவுகதிராய்ப்
பொருள் வட்டமெல்லாம் விளக்கி - இருள்வட்டம்
மாற்றும் அறிவான ஞான வளரொளியான்
வேற்றிலிங்கத் தோன்றும் வென்று. 221

உலகமூடம்

மாமாங்க மாடல் மணற்குலித்தல், கல்லிடுதல்
தாமோங்குயர் வரைமேல் சாவீழ்தல் - காமங்கொண்டு
ஆடு எருமை அறுத்தல் இவை உலக
மூடம் என உணரற் பாற்று. 222

ஆத்தன் துணிவு

சக்கரன் நான்முகன் சங்கரன் பூரணன்
புத்தன் கபிலன் கணாதரன் என்று - எத்திறத்து
ஏகாந்தவாதிகள் எண்கேட்ட ஆதன்போல்
ஆகாதாம் ஆத்தன் துணிவு. 223

அடுப்பேற்றி ஆமை தீந்தற்று

கடம்பன் தான் தன்னொடுகாம்படுதோள்வள்ளி
உடம்பினுங் கூட்டம் அது உவந்து கேட்பர் - அடங்கிக்
கொடுத்துண்மின் கொண்டொழுக்கம் காணுமினென்பார் சொல்
அடுப்பேற்றி ஆமைதீந்தற்று. 224

நில்லாதுடம்பு

நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்றிவை
தன்னால் முடித்தறான் இல்லையேல் - பொன்னேபோல்
ஆவட்டஞ் செய்த அணிகலந்தே யகிற்போல்
வாய்வட்ட நில்லாதுடம்பு. 225

விலங்காமல் காக்க!

நாவிறகிற் கண்ணிலதே யெனினும் நன்பொருளின்
பேரிறையான் உண்பெயரில் பிற்சிறக்கும் - ஓரிரண்டு
இறகிற் கண்ணுளதே எனினும் அதனை
வெருண்டு விலங்காமல் கா. 226
சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - Unicode - PDF
     கள்வனின் காதலி - Unicode - PDF
     சிவகாமியின் சபதம் - Unicode - PDF
     தியாக பூமி - Unicode - PDF
     பார்த்திபன் கனவு - Unicode - PDF
     பொய்மான் கரடு - Unicode - PDF
     பொன்னியின் செல்வன் - Unicode - PDF
     சோலைமலை இளவரசி - Unicode - PDF
     மோகினித் தீவு - Unicode - PDF
     மகுடபதி - Unicode - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
     கபாடபுரம் - Unicode - PDF
     குறிஞ்சி மலர் - Unicode - PDF
     நெஞ்சக்கனல் - Unicode - PDF
     நெற்றிக் கண் - Unicode - PDF
     பாண்டிமாதேவி - Unicode - PDF
     பிறந்த மண் - Unicode - PDF
     பொன் விலங்கு - Unicode - PDF
     ராணி மங்கம்மாள் - Unicode - PDF
     சமுதாய வீதி - Unicode - PDF
     சத்திய வெள்ளம் - Unicode - PDF
     சாயங்கால மேகங்கள் - Unicode - PDF
     துளசி மாடம் - Unicode - PDF
     வஞ்சிமா நகரம் - Unicode - PDF
     வெற்றி முழக்கம் - Unicode - PDF
     அநுக்கிரகா - Unicode - PDF
     மணிபல்லவம் - Unicode - PDF
     நிசப்த சங்கீதம் - Unicode - PDF
     நித்திலவல்லி - Unicode - PDF
     பட்டுப்பூச்சி - Unicode - PDF
     கற்சுவர்கள் - Unicode - PDF
     சுலபா - Unicode - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
     அனிச்ச மலர் - Unicode - PDF
     மூலக் கனல் - Unicode - PDF
     பொய்ம் முகங்கள் - Unicode - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - Unicode - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
     வேருக்கு நீர் - Unicode - PDF
     கூட்டுக் குஞ்சுகள் - Unicode
     சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
     புதிய சிறகுகள் - Unicode
     பெண் குரல் - Unicode - PDF
     உத்தர காண்டம் - Unicode - PDF
     அலைவாய்க் கரையில் - Unicode
     மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF
     கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
     மாணிக்கக் கங்கை - Unicode
     குறிஞ்சித் தேன் - Unicode - PDF
     ரோஜா இதழ்கள் - Unicode
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
     வாடா மல்லி - Unicode - PDF
     வளர்ப்பு மகள் - Unicode - PDF
     வேரில் பழுத்த பலா - Unicode - PDF
     சாமியாடிகள் - Unicode
     மூட்டம் - Unicode - PDF
     புதிய திரிபுரங்கள் - Unicode - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108) - Unicode
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - Unicode - PDF
     பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
     வெள்ளை மாளிகையில் - Unicode
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode
பாரதியார்
     குயில் பாட்டு - Unicode
     கண்ணன் பாட்டு - Unicode
     தேசிய கீதங்கள் - Unicode
பாரதிதாசன்
     இருண்ட வீடு - Unicode
     இளைஞர் இலக்கியம் - Unicode
     அழகின் சிரிப்பு - Unicode
     தமிழியக்கம் - Unicode
     எதிர்பாராத முத்தம் - Unicode
மு.வரதராசனார்
     அகல் விளக்கு - Unicode
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - Unicode - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
     பஞ்சும் பசியும் - Unicode
     புயல் - Unicode
விந்தன்
     காதலும் கல்யாணமும் - Unicode - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - Unicode - PDF
     பனித்துளி - Unicode - PDF
     பூவும் பிஞ்சும் - Unicode - PDF
     தனி வழி - Unicode - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - Unicode - PDF
     வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
     விசிறி வாழை - Unicode - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு - Unicode
     சர்மாவின் உயில் - Unicode
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதன - Unicode
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி - Unicode
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - Unicode - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல் - Unicode
கௌரிராஜன்
     அரசு கட்டில் - Unicode - PDF
     மாமல்ல நாயகன் - Unicode - PDF
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - Unicode - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை - Unicode
     பதிற்றுப் பத்து - Unicode
     பரிபாடல் - Unicode
     கலித்தொகை - Unicode
     அகநானூறு - Unicode
     ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை - Unicode
     பொருநர் ஆற்றுப்படை - Unicode
     சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
     பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
     முல்லைப்பாட்டு - Unicode
     மதுரைக் காஞ்சி - Unicode
     நெடுநல்வாடை - Unicode
     குறிஞ்சிப் பாட்டு - Unicode
     பட்டினப்பாலை - Unicode
     மலைபடுகடாம் - Unicode
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
     திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
     கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
     திருக்குறள் (உரையுடன்) - Unicode
     நாலடியார் (உரையுடன்) - Unicode
     நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
     ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
     பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
     ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
     திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம் - Unicode
     மணிமேகலை - Unicode
     வளையாபதி - Unicode
     குண்டலகேசி - Unicode
     சீவக சிந்தாமணி - Unicode
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம் - Unicode
     நாககுமார காவியம் - Unicode
     யசோதர காவியம் - Unicode
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை - Unicode
     திருவிசைப்பா - Unicode
     திருமந்திரம் - Unicode
     திருவாசகம் - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார் - Unicode
     திருவுந்தியார் - Unicode
     உண்மை விளக்கம் - Unicode
     திருவருட்பயன் - Unicode
     வினா வெண்பா - Unicode
கம்பர்
     கம்பராமாயணம் - Unicode
     ஏரெழுபது - Unicode
     சடகோபர் அந்தாதி - Unicode
     சரஸ்வதி அந்தாதி - Unicode
     சிலையெழுபது - Unicode
     திருக்கை வழக்கம் - Unicode
ஔவையார்
     ஆத்திசூடி - Unicode
     கொன்றை வேந்தன் - Unicode
     மூதுரை - Unicode
     நல்வழி - Unicode
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம் - Unicode
     கந்தர் கலிவெண்பா - Unicode
     சகலகலாவல்லிமாலை - Unicode
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம் - Unicode
     திருக்குறும்பலாப்பதிகம் - Unicode
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
     திருக்குற்றால மாலை - Unicode
     திருக்குற்றால ஊடல் - Unicode
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி - Unicode
     கந்தர் அலங்காரம் - Unicode
     கந்தர் அனுபூதி - Unicode
     சண்முக கவசம் - Unicode
     திருப்புகழ் - Unicode
     பகை கடிதல் - Unicode
நீதி நூல்கள்
     நன்னெறி - Unicode - PDF
     உலக நீதி - Unicode
     வெற்றி வேற்கை - Unicode
     அறநெறிச்சாரம் - Unicode - PDF
     இரங்கேச வெண்பா - Unicode
     சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை - Unicode
உலா நூல்கள்
     மருத வரை உலா - Unicode - PDF
     மூவருலா - Unicode - PDF
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF
இரட்டை மணிமாலை நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
     நெஞ்சு விடு தூது - Unicode - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை - Unicode
     சிதம்பர மும்மணிக்கோவை - Unicode
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம் - Unicode
     மதுரைக் கலம்பகம் - Unicode
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை - Unicode
     திருவெம்பாவை - Unicode
     திருப்பள்ளியெழுச்சி - Unicode
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
     முத்தொள்ளாயிரம் - Unicode
     காவடிச் சிந்து - Unicode
     நளவெண்பா - Unicode
ஆன்மீகம்
     தினசரி தியானம் - Unicode
வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)