|
News | |
-PM to open Tamil Nadu's new assembly complex-HC stays TV channels from telecasting Nityananda video -India, Russia sign two nuclear pacts, boost ties -Can't take back retired women officers: Air force, army -No more class 8 board exams in Himachal -Left slams Govt, protests against rising prices -Women's Reservation Bill should be passed without hiccups: Jayalalithaa -Mukesh Ambani, Lakshmi Mittal among world's 5 wealthiest -Israel Restricts Entry to Disputed Jerusalem Holy Place -Suicide blasts kill 45 in Pakistan's Lahore |
-Full convertibility of rupee only gradually: Mukherjee-India to rush 40 ITBP commandos to Afghanistan -Inflation may decline to 6-7 % by second-half of next fiscal -Google Prepares to Stop Censoring in China -Afridi, Akmals in Pakistan's World Twenty20 squad -IPL-III kicks off with grand opening ceremony -Hockey WC: Germany eye hat trick, Australia the title after 24 years -Archery: Tarundeep, Deepika win golds; India finish with 13 medals -5th Commonwealth Boxing Championships kickstarts in Mumbai |
![]() |
சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி
இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி தேசிகருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். தாமிரவர்ணிக் கரையிலுள்ள சிந்து பூந்துறையில் வாழ்ந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணம் கற்றார். இவர் நால்வர் நான்மணிமாலை, சோண சைல மாலை, கூவப் புராணம், பழமலை அந்தாதி, பிட்சாடன் நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மைக் கட்டளைக் கலித்துறை, பிரபுலிங்க லீலைக்கு விருத்தியுரை, வேதாந்த சூடாமணி, நெஞ்சு விடு தூது, சிவஞான பாலைய தேசிகர் தாலாட்டு, தர்க்க பரிபாஷை சதமணிமாலை, சிவப்பிரகாச விகாசம், திருவெங்கை அலங்காரம், திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கைக் கோவை, திருச்செந்தூர் நீரோட்டகயமக அந்தாதி, ஏசுமத நிராகரணம் முதலான பல நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய காலம் பதினேழாம் நூற்றாண்டு. இவர் தம்முடைய முப்பத்திரண்டாம் வயதில் சிவபதம் அடைந்தார். கடவுள் வாழ்த்து
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே! நூல்
என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ நாவிற்கு உதவும் நயந்து. 1 மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர் பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு வில்லோன் மலரோ விருப்பு. 2 தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும் குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால் கன்றினால் கெள்ப கறந்து. 3 பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. 4 நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய் நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல் புல்லினும் திண்மை நிலை போம். 5 காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகாமம் செய்பவே - ஓது கலை எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான் கண்இரண்டும் ஒன்றையே காண். 6 கடலே அனையம் யாம் கல்வியால் என்னும் அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும். 7 உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம் தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு? 8 மெலியோர் வலிய விரவலரை அஞ்சார் வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல் கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே படர் சிறையப் புள் அரசைப் பார்த்து. 9 தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதாது உலகில் நிறை இருளை நீக்கும் மேல் நின்று. 10 |
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |