உலகநாதர் இயற்றிய உலக நீதி
காப்பு
உலகநீதி புராணத்தை உரைக்கவே கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு. நூல்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 1 நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம் நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 2 மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம் மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம் தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம் சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம் வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! 3 குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம் கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம் கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 4 வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம் மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன். மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே! 5 வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம் வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம் சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன் திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே! 6 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |