|
News | |
|
-Govt. to consult all before bringing Women's Bill in Lok Sabha -Trouble in BJP over Women's Bill, party decides to issue whip -Gulbarg massacre: SIT summons Narendra Modi -Mamata rules out privatisation of railways -High Court gives TN govt two weeks to decide on Nalini's plea -Bhattal suspended from Punjab Assembly, let off within hours -DMK to train women cadres in governance: Kanimozhi -Sahai calls for tax exemption in food processing units in Tamil Nadu -Carlos Slim richest person in the world -Bomb planted outside store kills 4 in NW Pakistan |
-Aftershocks hit Chile as new president sworn in -Two kidnapped foreign aid workers freed in Haiti -Bharti Airtel gets into digital media business -SBI gets nod from China to lend in local currency -Third edition of Indian Premier League starts today -Knight Riders takes on Chargers in IPL opener -Germany to play Australia in Hockey World Cup final -Germany routs England 4-1 to reach WC final -Australia beat Netherlands 2-1, to meet Germany in the final -Pakistan's hockey team quit after hockey World Cup flop |
![]() |
1 படிப்பு உடம்பை மட்டும் மென்மையாக்குகிறது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அது மனத்தையும் மென்மையாக்குகிறது என்பதை இப்போது நன்றாக உணர்கிறேன். நிலைத்து நிற்கும் உரம் போய்விடுகிறது. இங்கும் அங்கும் பறந்து அலையும் தன்மை வந்து அமைகிறது. மனம், ஒரே இடத்தில் வேரூன்றி வளர்ந்து செழித்திடும் மரம்போல் ஒரு நெறியைப் பற்றி உறுதியாக நின்றால் நல்லதுதான். அல்லது, எங்கெங்குச் சென்றாலும் மாலையில் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்திடும் மாடுபோல், எத்தொழிலைச் செய்தாலும் குறிக்கோளை மறக்காத மனமாக இருந்தாலும் நல்லதுதான். ஆனால், இன்ன திசை, இன்ன போக்கு, இன்ன கூடு என்று வரையறை இல்லாமல் இயன்ற வரையில் பறந்து அலையும் பறவையாக இருந்தால் பயன் என்ன? படிப்பு! பெரும்பாலும் அதன் பயன் இப்படித்தான் முடிகிறது. யாரோ ஒரு சிலர் தான் படித்தும், ஒரு நெறியில் நிற்கவல்ல உரமான நெஞ்சு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் படிப்பைப் பழித்துக் கூறலாம் என்றால், அதுவும் பொருத்தமாகத் தெரியவில்லை. குழந்தை தொட்டிலிலேயே இருக்க வேண்டும் என்று எந்தத் தாயும் விரும்புவதில்லை. படிப்படியாக அது செங்கீரையாடித் தவழ்ந்து எழுந்து நின்று நடந்து ஆடி ஓடி வளரவேண்டும் என்று தான் எந்தத் தாயும் விரும்புகிறாள். குழந்தை தொட்டிலிலேயே கிடந்து, கைக்கு இனிய பொம்மைபோல் இருந்தால் நல்லது என்று எண்ணுவதால் பயன் என்ன? அது வளர்ச்சியை - இயற்கையான வளர்ச்சியைத் - தடுக்க விரும்பும் தவறான மனப்பான்மை ஆகும். பறவையாய்ப் பறக்கும் மனம் பெற்றும் ஒழுங்காக வாழ்க்கை நடத்துவதே சிறந்தது என்று கூறலாம். ஆனால் என்ன செய்வது? ஒழுங்காக வாழ்வது, படிப்புக் குறைந்தவர்களுக்கு எளிதாக இருக்கிறது. என்னைப் போன்றவர்களுக்கு அரிதாக இருக்கிறது. நான் மற்றவர்கள் மதிக்கும்படியாக வாழ்கிறேன். மற்றவர்கள் வாய்திறந்து குற்றம் சாட்ட முடியாது. அவ்வாறு நெறியோடுதான் வாழ்க்கை நடத்துகிறேன். ஆனால், என் மனம் அப்படி இல்லை. அந்த வகையில் தான், படிப்பு இல்லாமலே ஒழுங்காக வாழ்வை நடத்தி அமைதியோடு மகிழும் ஏழை எல்லம்மாவின் வாழ்க்கையைப் போற்றுகிறேன். அவளுக்குப் புத்தகம் பல அறிமுகம் ஆகவில்லை. உலகமும் அவளுக்குத் தெரியாது. வீடு தெரியும்; தெரு ஒருவாறு தெரியும்; குடும்பக் கடமைகள் நன்றாகத் தெரியும். குழந்தைகள் அவளுடைய நெருங்கிய உறவு; கணவனே அவளுடைய பற்றுக்கோடு. இப்படி இருந்தால், அப்படிச் செய்திருந்தால் - இவரை மணக்காமலிருந்திருந்தால், அவரை மணந்து கொண்டிருந்தால் - இப்படிப்பட்ட எண்ணங்களே இல்லாமல் அவள் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறாள். என்னால் அது முடியவில்லையே? ஏன்? என் மனம் பல புத்தகங்களை அவற்றில் உள்ள பல வாழ்க்கைகளை - வாழ்க்கையின் சிக்கல்களைத் - தேவைகளை ஆராய்ந்து அறிந்து உலகத்தில் பலருடைய பழக்கத்தால் பலவகை வாழ்க்கைகளையும் அறிந்து, ஆராய்ச்சி நடத்தப் பழகிவிட்டது. அதனால் அமைதியுற முடியவில்லை. ஒரு நெறியைப் பற்றிக் கொண்டு மற்றவற்றை மறக்க முடியவில்லை. நெஞ்சில் ஒரு முள் : 1 |
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |